CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!கனவு

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். இடது மார்புக்கு மிக நடுவே...சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான் குறிக்கோளில்...என்னால் உணர முடிந்தது. தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது.

"டேய்..! எந்திரி..மணி எட்டாகுது..."

சே..! பயங்கரமான கனவு.

"என்னடா இன்னைக்கி யுனிவர்சிட்டி போகனும்னு சொன்னியே, மணி எட்டச்சு..போகலயா..?

அம்மதான்..பயங்கரமாக உலுக்கி எழுப்பி கொண்டிருந்தாள். ஒரு வழியாக கண் விழித்தேன். இரவு அதிக நேரம் டிவி பார்த்ததில் கண் எரிச்சலை கிளப்பியது இப்படித்தான் அடிக்கடி என் கனவுகளில் நான் கொல்லப்படுகிரேன். ஆனால் இறப்பதற்க்கு முன்னமே கனவு முடிந்து போகிறது அல்லது முடிக்கப்படுகிறது. இவ்வாறு நான் யோசிக்க தொடங்கியதும், யுனிவர்சிடி போக வேண்டும் என்பது ஞாபகம் வந்தது. கொஞ்சம் லைப்ரேரியில் வேலை இருக்கிறது.

நான் அடிப்படையில் இயற்பியல் படிக்கும் மாணவன். ஏற்கனவே பி.எஸ்.சியில் மூன்று வருடம் குப்பை கொட்டியாகி விட்டது, போததென்று இந்த இரண்டு வருடமாக எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அதிகமான குவாண்டம் கொள்கைகளையும், ரிலெட்டிவிட்டி தத்துவங்களையும் எழுதியோ படித்தோ கொண்டிருக்கிறேன். யுனிவர்சிட்டியில் முக்கியமாக சில புத்தகங்ளை தேட வேண்டும். இன்று அவள் நிச்சயம் வருவாள்.

நீங்கள் நினைத்தது சரிதான். அவளை பார்பதற்க்காகதான் நான் லைப்ரேரி செல்கிறேனென்று. இந்த இரண்டு வருடமாக எனக்கு அவளைத் தெரியும், நீங்கள் நினைப்பதை விட அவள் மிக அழகானவள். இப்பொதைக்கு அவளைப் பற்றி இது போதும்.

கொஞ்சம் என்னைவிட அதிகம் சிந்திப்பவள். வருங்காலத்தில் யுரேனியத்தில் பி.எச்.டி பண்ணும் ஆர்வத்தில் இருக்கிறாள். நான் அவளுக்கக சில புத்தககங்களை தேடிக்கொடுக்கவே செல்கிறேன்.

இந்த நான்கு பாரா முடிவதற்க்குள் நான் குளித்தாகிவிட்டது.

"டேய்..! தோசையிலே முட்டை விடட்டும..?" அம்மா கேட்டாள்.

"சரி..ஏதோ...பண்ணு..." கொஞ்சம் சலித்துக்கொண்டேன். தோசை சூடாகவே இருந்தது. அப்பா வழக்கம் போல சன் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் வேகமாக சாப்பிட்டு முடிந்ததும், கருப்பு கலர் டி சர்ட் அணிந்து கொண்டேன். முனிச்சாலை ஸ்டாப்பில் நின்று கொண்டால் 21ம் நம்பர் வருமா என்பது சந்தேகம் தான். பெரியார் நிலையம் செல்வது தான் சரி. யோசித்துக்கொண்டிருக்கும் போதெ கூட்டம் குறைவாக 4ம் நம்பர் வந்தது. எனக்காகவெ ஒரு ஜன்னல் ஓரம் காலியாக இருந்தது.

டிக்கெட் வாங்கி முடிந்ததும் எனது எண்ணங்களை தொடர்ந்தேன். கடந்த சில மாதங்களாக இந்த கனவு அடிக்கடி வருகிறது. அவன்... நீள முகம், லேசான மீசை, பான்பராக் பற்கள், கொஞம் அதிகமான மூக்கு, அரைகுரையாக வளர்ந்த தாடி, எப்போதும் எதாவது ஆயுதங்களுடன் என்னை எதிர்கொள்கிறான். சில சமயம் வில் போன்ற, கொஞ்சம் துப்பாக்கி கலந்த, ஆங்கிலப்படங்களில் மட்டுமே பார்த்த....அம்புகள் பொருத்தி என்னை குறி பார்கிறான்.

இப்படி சில கனவுகள் நிஜ வாழ்க்கையில் நிஜமாகிறது என்பதை எங்கேயோ படித்ததாக
ஞாபகம். என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி நடக்குமா...? வயிற்றை கலக்கியது...

இன்று அவளுக்காக புத்தகம் தேடும் போது, சைக்கலாஜி பிரிவில் கனவுகள் பற்றி எதாவது புத்தகம் தேட வேண்டும். பஸ் ஸ்டாண்டில் நுழைந்து கொண்டிருந்தது பஸ். பஸ்ஸை விட்டிறங்கி, ரோட்டை கடந்து, மறு பக்கமுள்ள பல்கலைகழகம் செல்லும் நிறுத்தத்திற்க்கு சென்ற போது, சரியாக 21ம் நம்பர் வந்தது...வாழ்க்கையில் முதன்முறையாக இவ்வளவு சீக்கிரம் பஸ் கிடைத்ததை நினைத்துகொண்டேன்.

கனவுகள் நம் வாழ்க்கையின் மிச்சங்களா..!? நம் உள்மனத்தின் பிரதிபலிப்பா...? நம் வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக உயிரூட்டப்பட்டு கனவாக மாறுகிறது. கனவுகளில் வண்ணங்கள் உண்டா? கனவுகளில் வரும் முகங்களோ, உருவமோ நிஜமாக இருக்க முடியுமா? ஆழ்ந்த உறக்கங்களில் கன்வுகள் வருவதில்லை என்றும், ' நான்ரெம்' எனப்படும் பாதி நிலை உறக்கங்களில் கனவுகள் தோன்றுகிறது என்றும் சில புத்தகங்காளில் படித்திருக்கிறேன்.

ஒரு இயற்பியல் மாணவன் சைக்கலாஜி ப்ற்றியோ, கனவுகள் பற்றியோ படிப்பது அவசியம் தானா என்பது நீங்கள் கேட்க கூடிய கேள்வி தான். ஆனால் அடிப்படையில் படிக்கும் ஆர்வம் என்பது இயற்பியல் படிக்கும் மாணவனுக்கு கொஞம் அதிகம் தான் என்பது என் கருத்து.

பஸ் நாடார் காலேஜை கடந்து கொண்டிருந்தது. இன்று ஞாயிற்று கிழமையாதலால் பஸ்ஸில் அதிகம் கூட்டமில்லை. மார்கழி மாதமாக இருப்பதால் கொஞம் மேக மூட்டமாகவே இருந்தது. குளிர்காற்றும் வீசியது.

பஸ்ஸை விட்டு இறங்கியதும் எதிர் கடையில் அவள்..மிராண்டா குடித்து கொண்டிருந்தாள்...(எந்த இளிச்சவாயன் மாட்டினானோ..?) உடனே ஒரு கவிதை தோன்றியது....அடக்கிக் கொன்டேன். என்னைப் பார்த்ததும் சிரித்தாள் (சிரித்தாளா...?)

"என்னடா...!(செல்லமாக தான்..) இவ்வளவு லேட். எங்கேயாச்சும் நின்னு தம் அடிச்சுட்டு வர்றியா...?".

நான் புகை பிடிப்பதே இல்லையென்பதும், வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை என்பதும், அவளுக்கு தெரிந்திந்தும், ஒவ்வொரு தடவை என்னை பார்க்கும் பொதும் இந்த கேள்வியை கட்டயமாக கேட்கிறாள் (ஒரு வேளை என்ன தம் அடிக்க சொல்கிறாளா..?)

பாட்டில் காலியானதும் கடைக்கராரிடம் கொடுத்துவிட்டு, எனக்கு முன்னாடி நடந்தாள்.

"பணம் கொடுக்கலை..?" என் கைகளில் சாக்லேட்டை திணித்துக்கொண்டே "ரமேஷ் கொடுத்துட்டான்.." சாதரணமாக சொன்னள் (பாவம்! சோடப்புட்டி...!!).

"உருகிப்போச்சு...உன் உடம்பிலே உஷ்ணம் அதிகம்..." அவள் கைப்பைக்கும், மார்புக்கும் நடுவில் சாக்லேட் வைத்திருந்தை, நினைத்துக் கொண்டே நான் சொன்னதை கேட்டு முறத்திருப்பாள். நான் பார்க்கவில்லை. வேறு எங்கெயோ, எதுவோ பெரிதாக தெரிந்ததை பார்த்துக்கொன்டிருந்தேன்.

"டேய்...மாக்கான்! இன்னைக்கி விட்டுக்கு சீக்கிரம் போகணும். பொண்னு பார்க்க வர்றாங்க..." சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தாள். அவள் உதட்டோரத்தில் ஒட்டியிருந்த சாக்லேட் என்னை என்னவோ செய்தது.

"சரி உன்னோட கனவு...என்னச்சு?" இவளிடமும் சொல்லியாகி விட்டது. என் கனவுகளைப்பற்றி என்ன அக்கரையாக கேட்கிறாள்.

"டேய் மக்கு..கனவுங்கிறது நம்ம மனசுலே நினைக்கிற அதிகபட்ச ஆசைகளும், தினசரி வாழ்கையில் நடக்கிற நிகழ்சிகளும் கலந்து வர்றது தான்டா. நீ படுக்குறதுக்கு முன்னாடி எதாச்சும் இங்கிலிஷ் படம் பார்த்திருப்பே. அதுல வர்ற, ஒத்த கண்ணனோ, மொட்டதலையனோ உன்னை கொல்ல வந்திருப்பான். இதையெல்லம் மனசுலே போட்டு, புலம்பிக்கிட்டு இருக்கதே...லைப்புல அடுத்து என்ன பண்ணபோரேங்கிறைதை பற்றி யோசி...எங்க வீட்டுல வேற என்னை மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சுட்டங்க..." எதுவோ எனக்கு உறைக்க ஆரம்பித்தது. யோசிக்கனும்!. "என்னடா...எதுவும் பேச மாட்றே..." என் தலையை கலைத்து விட்டாள். முடிவு செய்து கொண்டேன்.

"சரி...சிக்கிரம் போய் அந்த கிளசிக்கல் மெக்கானிக் புக் வந்துருச்சான்னு கேட்டு வா...ஆத்தர் கோல்டுஸ்மித்டா....ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். வேற எந்த புக்குலேயும் புரிய மாட்டேங்குது." லைப்ரேரியனை நோக்கி சென்று கொண்டிருத்தேன்.

கோல்டுஸ்மித் வந்திருந்தது. எடுத்து வைத்து விட்டு, சைக்கலாஜி பக்கம் சென்றென். 'டிரீம் அனாலிஸிஸ்' புது அட்டையுடன் இருந்தது. ஆசிரியர் ஏதோ ரஷ்ய பெயராக இருந்தது புரியவில்லை.
'கனவுகல் நிஜத்தின் நாடகங்கள். இரவின் கருப்புத் திரைப்படங்கள். கற்பனையின் காட்சி தத்ரூபங்கள். உள் மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்.....'
கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தில் பாதி வார்த்தைகள் நானாக யுகித்து படித்து கொண்டிருந்தேன். லேசாக தாகம் எடுத்தது. ஜன்னல் ஓரம் இருந்த பிரிட்ஜை திறக்கும் போது....அங்கே ஜன்னலுக்கு வெளியே...

மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். என் நெற்றிப்பொட்டுக்கு நடுவே...இரண்டு புருவங்களுக்கு மத்தியில்...மிக தெளிவாக...இம்மியளவும் பிசகாமல்...கூடவே என்னை எதுவோ பயங்கரமாக உலுக்கிக் கொண்டிருந்தது.


1 கருத்துரைகள்:

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ், சூப்பர் கதை - ம்ம்ம்ம் - ரசித்தேன் - நான் நாடார் காலேஜ்லே படிச்சிருக்கேன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1