CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்!!!

     
"அமெரிக்கர்களில் ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார்' என, அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 14.3 சதவீத மக்கள் வறுமையில் வாழ்வதாகவும், இது 2008ல் இருந்த அளவான 13.2 சதவீதத்தை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட புள்ளி விவரம்: சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 4.36 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதாவது, ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார். கடந்த 2008ல் நடந்த கணக்கெடுப்பில் 3.98 கோடி பேர் வறுமையில் வாழ்ந்தனர். தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
             ஒபாமா அதிபராக பதவியேற்ற காலக்கட்டத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, மாதந்தோறும் 7 லட்சம் பேர் வேலை இழந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அவர்கள் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு, கூடாரங்கள் அமைத்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்!!!"இந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்


இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன. பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன.

       புதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால் லாபம் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை. "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று எதற்காக கவிஞர் பாடினாரோ தெரியவில்லை. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. 

           "தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து கொள்ளடா' என கூறத்தோன்றுகிறது. அப்படி என்னங்க நடந்துட்டுது... என அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள், ஒருமுறை தமிழ் இணையதளங்களில் உலா வந்தால் போதும், அழுதே விடுவார்கள். மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது. இணையதளங்களில் தேடும் எந்திரத்தில் தமிழில் ஒரு எழுத்தை அடித்தால் போதும், வார்த்தைகளும் விஷயங்களும் தமிழையே அவமானப்படுத்துகின்றன. 
           இந்தத் "தூய' தமிழால் நாட்டுக்குத்தான் கேடு. காரணம் அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே. இதைச் செய்வதால் இவர்களுக்கு என்ன திருப்தியோ அல்லது என்ன லாபமோ? இப்படிப்பட்ட தமிழ் இணையப்பக்கங்களை பெண்களும், சிறுவர்களும் பார்த்தால் என்ன ஆவார்கள்? இதுபோன்ற இடுகைகளை இணையதளங்களில் வெளியிடுபவர்களுக்கு தாய், சகோதரிகள் இருக்கிறார்களா இல்லையா?   இந்த இணையதளங்களில்தான் இன்று இளையதலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. பொது அறிவு வளரும் என்று யாராவது நினைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினால் பிள்ளைகள் விரைவாகவே வீணாகிவிடுவார்கள்.
            இப்படி இளைஞர்களை வளைத்துப்போட இத்தகு வலைத்தளங்கள் ஏராளமாகப் பெருகி வருவது புற்றுநோயைவிடக் கொடுமையானதாகும். இவற்றை யார் தடைசெய்வார்கள்.இதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சரி, இதை ஏன் பார்க்கிறீர்கள், இதைவிட நல்ல விஷயங்களே உங்கள் கண்ணுக்குப் படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர்.  நிச்சயமாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிமுகம். எனவே வலைக்குள் நுழைபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பிற தகவல்களுக்குள் தாராளமாக நுழைவதே சாலச்சிறந்தது. 
             தமிழில் தலைசிறந்த வலைப்பூக்கள் வகைவகையாகப் பூத்திருக்கின்றன.  அதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே நமது அவா.கிட்டத்தட்ட ஒரு நண்பனாய், ஆசிரியனாய் உதவக்கூடிய இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. தமிழிலேயே கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பிளாக்குகள் உள்ளன. இவை பெரும்பாலும் நாகரிகமாகவும், நகைச்சுவையாகவும் காணப்படுகின்றன.   தாராளமாகத் தங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். 
                அரசியல், தனிமனித துவேஷங்களைத் தவிர்த்து நிறையப் பூக்கள் உற்சாகத்தை அளிக்கின்றன.இது தவிர இல்லத்தரசிகளுக்கு சிறந்த சமையல், ஆலோசனை, மருத்துவத் தகவல்கள் ஏராளமாக விரவிக்கிடக்கின்றன.  கணினி பயில விரும்புபவர்கள் ஒரு பைசாகூடச் செலவழிக்காமல் ஆன்லைனிலேயே தங்களுடைய பாடங்களைப் பயிலலாம். இதேபோல ஓவியம், பொறியியல் சந்தேகங்கள், விளையாட்டுகள், புதிர்கள், கதை, கவிதைகள், தரமான கட்டுரைகள் என இணையதளங்கள் விரவிக்கிடக்கின்றன.  
            எந்தச் சந்தேகமாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறது இணையதளம் என்ற அளவுக்கு, அத்தனைக்கும் தேவையான ஒன்றாக இவை உள்ளன. அதைத் தவறான வழியில் பயன்படுத்துவதால் இளையதலைமுறையினரின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதே இணையதளங்களில் வைரஸ்களைப் பரப்பி, குழப்பம் விளைவிப்பவர்கள் பலர் உள்ளனர். மேலும் இணையதளத்தின் பயன்பாடு ஓர் எல்லையோடு இருப்பதே சரியானது.அதைவிடுத்து பல துன்பங்களுக்கும் தூண்டுகோலாக அமைந்துவிடுகின்றன. 
           ஆன்லைன் திருமணத் தகவல் நிலையங்கள், பேஸ்புக், ஆர்குட் என சிக்கிச் சீரழிபவர்களின் எண்ணிக்கை ஏராளம். எனவே, அதைக் கருத்தில்கொண்டு இணையங்களில் உலாவருவது நல்லது. இல்லாவிட்டால் துன்பத்தின் வாசலுக்கே செல்ல நேரிடும். மேலும் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளையும் இலவசமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம். பல்வேறு இதழ்கள், பத்திரிகைகள் தங்கள் சேவையை இலவசமாகவே செய்துவருகின்றன.  இவற்றில் ஒரு சில மட்டுமே சந்தா செலுத்துமாறு கூறுகின்றன. 
           எதுவாக இருந்தாலும் தேடுதல் எந்திரத்தில் மிக ஜாக்கிரதையாகக் கையாண்டு தேவையான விஷயங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, இளைஞர்களுக்கு வலைவீசும் வலைத்தளங்களை புறக்கணிப்பதே சிறந்தது.
மேலும் வாசிக்க... "இந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்"உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா?


               உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா? நம்ம photofunia இருக்கு. இதுல ஏகப்பட்ட பிரேம் எபெக்ட் இருக்கு. உதாரணத்துக்கு படத்தை பாருங்க.

இதுல ஏதாவது ஒரு எபெக்ட் தேர்ந்தேடுத்துக்கங்க, கீழே படத்துல இருக்குற மாதிரி ஓபன் ஆகும்.
 இதுல choose file - ல செலக்ட் செய்து உங்க படத்தை add பண்ணுங்க. அப்புறமா உங்களோட சூப்பர் எபெக்ட் படத்தை பார்த்து பார்த்து ரசிங்க.

இங்க உங்களுக்காக சில சாம்பிள்ஸ்....


photofunia url : http://www.photofunia.com/photofunia..
மேலும் வாசிக்க... "உங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விருப்பமா?"குறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா?         ஏதாவது ஒரு கடவுளின் பெயரைப் போட்டு, அந்தக் கடவுளுக்கான மந்திரங்களையும் குறிப்பிட்டு வரும் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பி வைத்தால் 24 மணி நேரத்தில்  நல்ல காரியம் கிட்டும். "அசட்டையாக இருந்து அழித்துவிட்டாலோ, அனுப்பாமல் விட்டாலோ அவ்வளவுதான். சோதனை தொடங்கிவிடும்'.  ஒரு காலத்தில் துண்டுப்பிரசுரமாக வந்த இந்தச் செய்தி, இப்போது நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப "நன்கு வளர்ந்து' செல்போன்களில் குறுஞ்செய்திகளாக வரத் தொடங்கியிருக்கின்றன.       

               ஏதாவதொரு சாமியாரின் பெயரைப் போட்டு, "இத்தோடு உங்களின் கஷ்டகாலம் நீங்கியது, இவர் உங்களை ரட்சிப்பார். இந்தச் செய்தியை 20 பேருக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த 30 நிமிஷங்களில் நல்லது நடக்கும், நம்புங்கள்' இதுவும் ஒரு வகை.    பள்ளி, கல்லூரித் தேர்வுக் காலங்களில் "சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்' போலவே ஒரு குறுஞ்செய்தி உண்டு. ஏதாவதொரு கடவுளின் பெயருடன் "ஐ லவ் யு' சேர்த்து, "இந்தக் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பிவைத்தால் பரீட்சையில் தேர்வாகிவிடலாம்'.  பயந்து போய் தன்னிடமுள்ள அத்தனை எண்களுக்கும் இவற்றை அனுப்பிவைக்கும் பரிதாபமான மாணவ, மாணவிகள் ஏராளம். படிக்கிற நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களிடமிருந்து பதில், வசவு எல்லாவற்றையும் வாங்கிக் கட்டிக் கொண்டு தேர்வு எழுதும் அறைக்குச் சென்றால்...?  

             அடுத்து அறிவியல்பூர்வமான அச்சுறுத்தல் (!) "சில செல்போன் எண்களைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து வரும் அழைப்புகளை சட்டை செய்யாதீர்கள். அவற்றை எடுத்துப் பேசினால், வைரஸ் உங்களின் செல்போன்களுக்குள் புகுந்து, செயலிழக்கச் செய்துவிடும்' என்ற குறுஞ்செய்தி பலரையும் அச்சுறுத்தியது.  அந்தக் குறுஞ்செய்தியில், பலருக்கும் இதை அனுப்பி வையுங்கள். யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற "அக்கறை' வேறு. அந்தச் செய்தியிலிருந்த எந்தவொரு எண்ணும் செயல்படாத எண் என்பது தொடர்பு கொண்டு பார்த்தால்தான் தெரியும். வைரஸ் பயம் காரணமாக எவரும் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுவதில்லை.  "அறிவியல்' என்றவுடன் சுலபமாக நம்பி விடுகின்றனர். ஏனென்றால், நம்மில் கணினி வைத்திருப்பவர்களுக்கு "சாஃப்ட்வேர் வைரஸ்', "ஹார்டுவேர் வைரஸ்' ஏற்கெனவே அறிமுகம். 

             இன்னும் சில குறுஞ்செய்திகள், "இரவு 11 மணி முதல் 12 மணி வரை விண்ணிலிருந்து செல்போன்களைத் தாக்கும் கதிர்கள் இறங்குகின்றன. அந்த நேரத்தில் செல்போன்களை அணைத்து வையுங்கள். மறக்காமல் (யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்) நண்பர்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பிவையுங்கள்' என்கிறது.  இதுபோன்ற குறுஞ்செய்திகள் இன்னும் வலுவைச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது ஒரு பிரபல ஆங்கில நாளிதழையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன. "மேலும் விவரங்களுக்கு நேற்றைய நாளிதழைப் பாருங்கள்- நாசா அறிவித்திருக்கிறது'. சம்பந்தப்பட்ட நாளிதழில் பணியாற்றுவோருக்கே இந்த குறுஞ்செய்திகள் செல்லும்போது அவர்களுக்கும் பேரதிர்ச்சி.

                இன்னொன்று, ஏதாவதொரு வலைப்பூவின் முகவரியைப் போட்டு வரும் குறுஞ்செய்திகள். "அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த வலைப்பூவின் உரிமையாளர் உங்களின் செல்போனுக்கு ரூ. 72.81 பைசா "டாப் அப்' செய்வார். அடுத்த இரு நிமிஷங்கள் கழித்து கணக்கிலுள்ள மீதித் தொகையைச் சரிபாருங்கள்'. சரிபார்த்தால் என்ன இருக்கும்? எதுவும் இருக்காது. இதுவரை இருந்த தொகையும் குறுஞ்செய்தி அனுப்பிய வகையில் கழிந்து காலியாகியிருக்கும். 

              எங்கிருந்து இவை வருகின்றன என்பதை அத்தனை சுலபமாகக் கண்டறிந்து நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால், நமக்கு வரும் செய்தி கட்டாயம் நமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே அனுப்பி வைக்கப்படுகிறது. அதிகபட்சம் அவர்களைக் கடிந்து கொள்ளத்தான் முடியும். அவர்களுக்கும் கிட்டத்தட்ட நண்பர்கள்தான் அனுப்பிவைக்கின்றனர். இப்படியே விசாரித்து, விசாரித்துச் சென்றாலும் அனுமார் வாலைப் போல நீள்கிறது விசாரணை.  ஒரு கட்டத்தில் விசாரணை துண்டித்துப் போய்விடும். ஏனென்றால், பெரும்பாலானவர்கள் வந்த குறுஞ்செய்தியை சேமித்து வைத்திருப்பதில்லை. ஏதாவதொரு செல்போனில் அது வந்த வழி அழிந்து போயிருக்கும்.  வியாபார நோக்கில் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களே இதுபோன்ற குறுஞ்செய்திகளைப் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டையும் உறுதி செய்ய முடியவில்லை. 

               மக்களின் நம்பிக்கை, மூடநம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாவற்றையும் பயன்படுத்தி செய்யப்படும் இதுவும் ஒருவகையில் மோசடிதான்.   ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நமக்கு வரும் செய்திகளை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு அனுப்பிவைப்பது அபத்தம் மட்டுமல்ல, அநாகரிகமும்கூட. பெரும்பாலான இளைஞர்கள் பொழுதுபோக்காகவே இதைச் செய்கின்றனர்.  அடுத்து பரிதாபப்படுபவர்களுக்காக. குறுஞ்செய்தியின் தொடக்கமே, "அசட்டையாக இருந்து அழித்துவிடாதீர்கள்' என்பதுதான். 

        "இருதய அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதுக் குழந்தைக்கு மருத்துவச் செலவுக்காக நிதி தேவைப்படுகிறது. இந்தக் குறுஞ்செய்தியை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் போதும். அதன்மூலம் தலா பத்து பைசா பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குச் சென்றடையும்'.÷இப்படி எத்தனை பத்து பைசாக்கள் சேரும்? திட்டமிட்டு செய்யப்படும் இந்த வியாபார உத்தியை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்.  

             அடுத்து பாசத்துக்காக... "ஐ லவ் மை மம்மி'. இதை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் அம்மா - மகள் உறவு, அம்மா - மகன் உறவு செழிக்குமாம். குறுஞ்செய்தி அனுப்பினால் இந்த உறவுகள் செழிக்குமா என்ன? 
மேலும் வாசிக்க... "குறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா?"பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள். (பாகம் - 2)

அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.


Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
               
              பாகம் - 1 ஐ படிக்க இங்கே  கிளிக்கவும். 

எப்படி எங்க தமிழு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே...

இதுல  ஏதாவது விட்டு போயிருந்தா பின்னூட்டத்தில் எழுதுங்க...

பிடிச்சிருந்தா உங்க ஓட்டை  போட்டுட்டு போங்க... அப்பத்தான் நிறைய நண்பர்கள் படிக்க முடியும்.
மேலும் வாசிக்க... "பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2"நயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீடியோவை பாருங்களேன்...

  
          நடிகை நயன்தாராவை ஒரு நடிகர் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அந்த நடிகருக்கு நயனிடம் எப்படி காதலை சொல்வது, நயனை எப்படி கரெக்ட் செய்வது என்றும் தெரியவில்லை.
     
     அவரு எப்படி கரெக்ட் பண்றாருன்னு, எப்படி கஷ்டப்படுறார்னு இந்த வீடியோவை பாருங்களேன்...


என்ன பாத்துடீங்களா? எப்படி நம்ம ஹீரோ, எப்படியோ காதலை சொல்லிட்டாரு....
மேலும் வாசிக்க... "நயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீடியோவை பாருங்களேன்..."உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய விஜய்


காவலன் படம் என் வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும் என்று விஜய் கூறியது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்தில் அப்படி என்ன வித்தியாசம்?

இதுபற்றி காவலன் படத்தின் இயக்குநர் சித்திக் கூறுகையில், "இந்தப் படத்தின் கதை மிக வலுவானது. ஊரில் உள்ள பெரிய தாதாவான ராஜ்கிரண் மனம் திருந்தி அமைதியா வாழ விரும்புகிறார். அப்போது தன் மகள் அசினுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக விஜய்யை காவலனாக நியமிக்கிறான். இந்த காவலன் பின்னர் காதலனாகிறார்... தாதாவின் சம்மதத்துடன் கணவனாகிறாரா என்பதுதான் கதை.

படத்துக்காக விஜய் மிகவும் சிரத்தையெடுத்து வித்தியாசமான நடிப்பைத் தந்துள்ளார். இதில் அவர் கேரக்டர் பெயர் பூமி நாதன். இந்த பூமி மாதிரி எல்லாரையும் அவர் தாங்குவார் என்று அர்த்தம் கொள்ளலாம்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் விஜய்க்கு வித்தியாசமான கெட்டப்பைத் தந்துள்ளோம்.

ஒரு பாடலில் முழுக்க வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் (செம்பட்டை கலர் முடி!) வருகிறார்..' என்றார்.

சித்திக் சீரியஸாக சொல்கிறாரா.. கலாய்க்கிறாரா?' விஜய் ரசிகர்கள்தான் சொல்லணும்!
மேலும் வாசிக்க... "உலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய விஜய்"

பசியின் அருமை! - சிறுகதை

      அல்லியூர் எனும் கிராமத்தில் ராஜாமணி என்பவர் வாழ்ந்து வந்தார். பெரும் செல்வந்தரான அவருக்கு ஏராளமான நிலபுலன்கள், தோட்டம், வீடு என சகலமும் இருந்தது.  
       இத்தனை வசதிகள் இருந்தும் அவருக்கு ஊரில் கெட்டப் பெயரே இருந்தது. காரணம் அவரது கஞ்சத்தனம்தான்.  தன்னிடம் உழைப்பவர்களுக்குக் கூட நியாயமாக தர வேண்டிய கூலியைக் கூட இழுத்தடிப்பார். அப்படியே தரும் போதும் முக சுளிப்போடும், ஒருவித எரிச்சலை வெளிப்படுத்தியே கொடுப்பார்.  இதனால் அவரிடம் கூலி வேலைக்கு செல்ல ஊர் மக்கள் அஞ்சுவார்கள். 
        அப்படிப்பட்ட ஒருவரிடம் ஒருநாள் பிச்சைக்காரன் ஒருவன் வீடு தேடி வந்து அன்னம் கேட்டான்.  முகத்தில் நீண்ட தாடியும், தலையில் கொண்டையுமாய் காணப்பட்டான். நெற்றி நிறைய விபூதிப் பட்டையும் தீட்டியிருந்தான்.  பார்ப்பதற்கு ஆண்டியைப் போல இருந்தாலும் சிறந்த பக்திமானைப் போல இருந்தான்.  ""ஐயா... சாமி, பசி வயித்தக் கிள்ளுது. ஏதாச்சும் சாதம் இருந்தா போடுங்க சாமி'' என்றான். கையில் திருவோடு இருந்தது.  அப்போதுதான் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ராஜாமணி ஆண்டியைக் கண்டதும் கோபமானார்.  ""காலங்கார்த்தாலே உன் மூஞ்சியிலே முழிச்சா வெளங்குனாப்பல இருக்கும். போய்யா...'' என்று விரட்டினார். 
         ""சாமி... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. ஏதாவது பழசு இருந்தாக் கூட பரவாயில்லை...'' என்றான்.  ""பழசுமில்ல... புதுசுமில்ல... மொதல்ல எடத்தை காலிபண்ணு. வந்துட்டானுங்க... இவனுகளுக்கு பிச்சைப் போட்டே ஓய்ஞ்சு போகணும் போல...'' என்றவர் வீட்டுக்குள் மறுபடி நுழைந்து கதவை சாத்தினார்.  ஆண்டிக்கு அவரது செயல் மனதைக் காயப்படுத்தியது. பசியின் கொடுமை அறியாதவன். அதனால்தான் இப்படி கர்ணக் கொடூரமாக நடந்து கொள்கிறான்.  ""இல்லை என்று சொல்பவன் இல்லாதவனாகவே ஆவான். ஒரு நாள் பசி என்றால் என்னவென்று உணர்வாய்...'' என்று சொல்லிவிட்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.  
              ஆண்டி சொன்னது ராஜாமணியின் காதிலும் விழுந்தது.  இந்தப் பிச்சைக்காரனின் சாபம் என்னை என்ன செய்யும்? கை நிறைய பணம். வீட்டில் தேவையான அளவுக்கு அரிசி மற்றவகை தானியங்கள். எனக்கு எதற்கு பசியின் கொடுமை வரப் போகிறது என நினைத்துக் கொண்டார்.  ஆறுமாதம் ஓடி விட்டது. ஒரு நாள் ராஜாமணி தனது வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் ஆறு ஓடிக் கொண்டிருந்தது.  கடந்த ஒருவாரமாக அவர் வெளியூர் சென்ற போது பெய்த மழையில் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது.  
                 அவருக்கு ஆற்றின் ஆழம் தெரியும். மெதுவாக சைக்கிளை தள்ளிக் கொண்டே ஆற்றைக் கடந்து விடலாம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.  சைக்கிளை உருட்டிக் கொண்டே ஆற்றில் இறங்கிவிட்டார். பாதிதூரம் கடந்து விட்ட நிலையில் ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்து வெள்ளம் அதிகமாகியது.  எதிர்பாராத சூழலை சமாளிக்க முடியாத ராஜாமணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.  ஆற்று நீரின் ஓட்டத்தில் சிக்கி தவித்து வெள்ளத்தோடு வெள்ளமாய் சென்று கொண்டிருந்த போது எதிரே உயரமாய் ஒரு பாறையைக் கண்டுவிட்டார்.  நீரின் போக்கிலே போய் பாறையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறிவிட்டார். பின்னர் பாறை மீது அமர்ந்தார். உடை முழுவதும் ஈரமானதால் குளிரால் நடுங்கினார்.  
                 ""ஆண்டவனே... என்னைக் காப்பாற்று!'' என்று வேண்டினார்.  ஆற்று வெள்ளம் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருந்தது. மனமெங்கும் பயம். உடலில் குளிர் நடுக்கம். பொழுது வேறு இருட்டிக் கொண்டிருந்தது.  அவ்வப்போது சிறு தூறலும் பெரும் மழையுமாக பெய்து மேலும் அவரை வாட்டியது.  ஆற்று வெள்ளம் குறைவதாக தெரியவில்லை. பாறை மீது தனியாக உட்கார்ந்து கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தார்.  
              இருள் சூழ்ந்து விட்டது. பயம், பசி வேறு வாட்டியது. நேரம் ஆக ஆக உயிரை விட பசியின் கொடுமை தெரிய வந்தது.  வாழ்க்கையில் ஒரு நாள் கூட பட்டினி கிடந்து பழக்கமில்லாதவர். முதன்முதலாக பசி என்றால் என்னவென்று உணர்ந்தார்.  அன்றொரு நாள் ஆண்டி கொடுத்த சாபம் அவரது நினைவுக்கு வந்தது. அவருக்கு தனது தவறு புரியலாயிற்று.  ""இறைவா... என்னை இந்தச் சூழ்நிலையில் இருந்து காப்பாற்று. இனி யாரையும் நான் உதாசீனப்படுத்த மாட்டேன். பசி என்று வந்தவருக்கு அன்னமிட்டு உபசரிப்பேன். என்னைக் காப்பாற்று'' என்று மனமுருக வேண்டினார்.  
                விடியும் வரை ஓடிய வெள்ளம் பொழுது புலர்ந்த போது முழங்கால் அளவாக தண்ணீர் வடிந்திருந்தது.  ராஜாமணி பாறையில் இருந்து இறங்கி நடக்கலானார். மழை வெள்ளத்தில் சைக்கிள் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. மெதுவாக நடந்து ஊர்ப் போய்ச் சேர்ந்தார்.  அதன் பிறகு அவரது செய்கைகள் எல்லாம் முற்றிலும் மாறியிருந்தன. அவரது மாற்றத்திற்கான காரணம் புரியாமலேயே ஊர் மக்கள் வியந்து போனார்கள்.
மேலும் வாசிக்க... "பசியின் அருமை! - சிறுகதை"பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்று அழைத்திருப்பார்கள்.

அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு

எப்படி எங்க தமிழு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்பத்தமிழ் வந்து பாயுது காதினிலே...

பாகம் - 2  இன்னும் சில நாட்களில்...

பிடிச்சிருந்தா உங்க ஓட்டை  போட்டுட்டு போங்க... அப்பத்தான் நிறைய நண்பர்கள் படிக்க முடியும்.
மேலும் வாசிக்க... "பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1"உங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது ?

        அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில், செல்போனில் சிக்னல் கிடைக்காததால்  செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களை எல்லாம் நகைச்சுவை நடிகர் ஒருவர் திட்டித் தீர்ப்பது போன்ற ஒரு காட்சி. பார்ப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும், செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை அது. 

      அன்றாட வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டதைப்போல பெரும் இம்சையாகவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட செல்போனில் ரீசார்ஜ் செய்யும் வசதி  வந்துவிட்டது. ஆனால், பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல அது. சட்டைப்பையில் 5 ரூபாயைக்கூட வைத்திருக்கவிடாமல் பறித்துக் கொள்ள செல்போன் நிறுவனங்கள் வகுத்துள்ள உத்தியாகத்தான் கருத வேண்டும். 

       மக்களின் செல்போன் மோகத்தைப் பயன்படுத்தி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெரும் கொள்ளையே அடிக்கின்றன. செல்போன் எண்களை வணிக நிறுவனங்களுக்குத் தந்து தேவையற்ற அழைப்புகளுக்கு வழிவகை செய்வது ஒருபுறம் என்றால், சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் காசு பறிப்பது மற்றொரு புறம். ரிங்டோனை தேர்வு செய்யக் கட்டணம், அதைப் பதிவிறக்கம் செய்யக் கட்டணம். 


      "விருப்பமானவங்க கால் செய்யும்போது அவங்க விரும்பும் பாடலைக் கேட்கச் செய்யுங்க' என்று விளம்பரம் செய்து காலர் டியூனை செயலாக்கம் செய்யக் கட்டணம் என எதற்கெடுத்தாலும் கட்டணம்தான். பேலன்ஸில் உள்ள தொகையில் திடீர் திடீரென |30 குறையும். வாடிக்கையாளர்  சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டால், "எஸ்.எம்.எஸ். பேக் உங்கள் எண்ணுக்கு தவறுதலாகத் தேர்வாகிவிட்டது. அடுத்த மாதம் இந்தச் சேவையை நீக்கிவிடுகிறோம்' என்பார்கள்.

       கட்டணம் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டால் குறைந்தது குறைந்ததுதான் என வருத்தமேயின்றிச் சொல்வார்கள். பிடித்தமானவர்கள் போன் செய்யும்போது காலர் டியூனால் மகிழ்விக்கலாம் என்றால், "இந்த காலர் டியூனை காப்பி பண்ண எண் ஒன்றை அழுத்துங்கள்' என்ற விளம்பரத்தைத்தான் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும்.  சில நிறுவனங்கள் தங்களுக்குச் செல்போன் கோபுரம் இல்லாத பகுதியில் இணைப்புக் கிடைக்காததை மறைத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றன. 

     50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 42.50 ரூபாய்க்குத்தான் பேசலாம். எப்பேர்ப்பட்ட பகல் கொள்ளை இது. முழுத் தொகையும் கணக்கில் ஏறும் வசதி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆலோசனை செய்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் "மனசு வைத்தால்' மட்டும் அவ்வப்போது முழு "டாக் டைம்' வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். 

      அது மட்டும் செல்போன் நிறுவனங்களுக்கு கட்டுபடி ஆகிறதா என்ன? "ஆட்-ஆன்' எண்களைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பேசுங்கள் என்ற சலுகையை அனைத்து நிறுவனங்களுமே அளிக்கின்றன. ஆனால், அதற்கு மாதந்தோறும் தனி வாடகை. 

        50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, குறைந்த அழைப்புக் கட்டணத்தில் பேச வேண்டுமானால் தனியாக ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக ஏமாற்றுகின்றன. இப்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணையதள சேவையிலும் இறங்கியுள்ளன. அதிலும் செல்போன் பயன்படுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.

        இலவச "டவுண்லோட்', "அன்லிமிடெட் பிரவுசிங்' என்றெல்லாம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தாலும் "பேலன்ஸ்' தொகை மொத்த மொத்தமாக காலியாவதுதான் மிச்சம். காரணம் கேட்டால் உரிய பதில் கிடைக்காது. மாதந்தோறும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை.

        இதனால், செல்போனில் பேசும்போது தெளிவாகக் கேட்காதது, பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் இணைப்புத் துண்டிக்கப்படுவது என பல சிரமங்கள். மொத்தத்தில் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சேவையைப் பொறுத்தவரை தொடர்பு எல்லைக்கு வெளியேதான் உள்ளன.
மேலும் வாசிக்க... "உங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது ?"

சூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.  டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹசியும், முரளி விஜயும் களமிறங்கினர். ஹசி 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முரளி விஜய் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஹாஸ்டிங்ஸின் பந்து வீச்சில் கெய்னியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 10 ரன்களுக்கும், கேப்டன் தோனி 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.÷20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.  163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய விக்டோரியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஃபிஞ்ச்சும், ஹோட்ஜும் களமிறங்கினர். ÷ஃபிஞ்ச் அபாரமாக ஆடி 17 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். ஹசி 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 162 ரன்களுக்கு விக்டோரியா அணி ஆல் அவுட் ஆனது. இதனால் ஆட்டம் டிராவானது. இதையடுத்து சூப்பர் ஒவர் வழங்கப்பட்டது.
சூப்பர் ஓவர்: முதலில் விக்டோரியா அணி பேட் செய்தது. சென்னையின் அணி சார்பில் அஸ்வின் பந்து வீசினார். 6 பந்துகளில் அந்த அணி 23 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் ஹசி 3 சிக்ஸர்களை விளாசினார்.÷இதையடுத்து பேட் செய்த சென்னை அணியால் 13 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து விக்டோரியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மேலும் வாசிக்க... "சூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி"போதையில் வீழும் பேதைகள்...

       "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்றும், "ஒரு கையில் மதுவும், மறுகையில் மாதுவும் சேர்ந்திருக்கும் வேளையிலே என் ஜீவன் பிரிய வேண்டும்' என்றார் கவியரசர். மது மயக்கத்தில் அவரால் எழுதப்பட்டு இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் ஏராளம், ஏராளம். மது உள்ளிட்ட போதைப் பழக்கத்தால் அவர் பட்ட வேதனைகள் அதிகம். 

           சென்ற நூற்றாண்டில் நம்மிடையே தோன்றி மறைந்த ஆன்மிகப் பெரியவர் ரமணர், போதைப் பழக்கம் பற்றி விளக்கும்போது, ""யோகாப்பியாசத்திற்காக போதை வஸ்துகளை உபயோகிப்பதில் சிறிது பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருள் உடல் முழுவதையும் உருக்கி,பாற்கடலில் மிதக்கும் உணர்வைக் கொடுக்கும். ஆனால் சில காலத்துக்குப் பிறகு, போதைப் பழக்கம் மிருகத்தனமாகவும், ஞானத்திற்குப் பெரிய தடையாகவும் ஆகிவிடும். தவிர போதை வெறியைத் தணிக்க எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அதனால் அதன்மேல் ஆசை வைக்காமல் இருப்பதே நல்லது. எல்லா போதைப் பொருள்களுமே விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் நாம் உள்ளதுபோல் இருப்பதே மேலானது.

             ஆன்ம விசாரத்தின் மூலம் ஸ்வரூபத்தை அடைய முயற்சிப்பது அது சற்று கடினமானதாக இருந்தாலும் அது ஒன்றுதான் பத்திரமான, ஆபத்தற்ற பாதை'' என்றார்.

           அண்மையில் போதை மருந்து உட்கொண்டதாக தெலுங்கு திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, அதன் தாக்கம் தமிழ்த் திரையுலகு வரை எதிரொலித்தது. ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டிலும் இந்த விவகாரம் நாற்றமெடுத்தது.

           குங்பூ எனும் தற்காப்புக் கலையை, தனியொரு மனிதனாக ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் ஹாலிவுட் வரை எடுத்துச்சென்று, 32 வயதுக்குள்ளாகவே உலகப்புகழ் பெற்றவர் புரூஸ் லீ. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தத்துவ பாடப்பிரிவு மாணவர், சிறந்த சிந்தனையாளர். 

            அவருக்கு 33-வது வயதிலேயே ஏற்பட்ட மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஹாங்காக் அரசாங்கம் மரண விசாரணைக்கு உத்தரவிட்டு, 1973-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை தொடங்கியது. விசாரணையில் அவருடைய மனைவி லிண்டா லீ சாட்சியம் அளித்தபோது, சில மாதங்களுக்கு முன்பு அபின் வகையைச் சேர்ந்த கான்னபிஸ் எனும் போதை வஸ்துவை சிறிதளவு புரூஸ்லீ உட்கொண்டதாகத் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையும், அவரது குடலில் சிறிதளவு கான்னபிஸ் படிமங்கள் இருந்ததை உறுதிப்படுத்தியது.

          இதையடுத்து, போதைப் பழக்கத்தால் அவர் மரணமடைந்தாரா என்ற கோணத்தில் அமெரிக்க மற்றும் நியூசிலாந்து மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, உலகம் முழுவதிலும் உள்ள தற்காப்புக்கலை வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

          கடவுளின் கையால் ஒரு கோலும், கடவுளின் காலால் ஒரு கோலும் அடித்து, ஆர்ஜென்டீனாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத் தந்ததன் மூலம் கால்பந்தாட்ட ரசிகர்களால் இன்றளவும் கடவுள் என்று அழைக்கப்படும் வீரர் டீகோ மாரடோனா. அவரைக்கூட இந்தக்  கொடிய பழக்கம் விட்டுவைக்கவில்லை.

            நமது தேசப்பிதா காந்தியின் மூத்த புதல்வர் ஹரிலால் காந்தி போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் தானே, அன்னை கஸ்தூரிபாய் மரணப்படுக்கையில் இருந்தபோதும் சரி, உலகத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தந்தை காந்தியின் இறுதிச்சடங்கிலும் சரி, ஒரு மகனுக்குரிய கடமையைக்கூட செய்யமுடியாமல் போனது? கடைசிவரை அவரால் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் இறந்ததும் கசப்பான உண்மைதானே.

           கடந்த சில ஆண்டுகளாகவே, சிறுவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதாகச் செய்திகளைப் படிக்க நேரிடுகிறதே? கடந்த 7-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் பேசும்போது, ""ஊக்க மருந்தால் இதுவரை மல்யுத்த வீரர்கள் 5 பேர் உள்ளிட்ட 18 வீரர்களுக்கு காமன்வெல்த் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார். 

           கடந்த புதன்கிழமை, நீச்சல் வீராங்கனைகள் இருவர் உள்ளிட்ட 4 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியது பி-சாம்பிள் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. 

        எல்லாவற்றுக்கும் மேலாக அர்ஜுனா விருது பெற்றவரும், சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாகக் கருதப்படுபவருமான சானுவும் இந்தப் புகாரில் சிக்கியுள்ளார்.ஊழலால் ஏற்கெனவே நன்றாகப் பற்றி எரியும் "காமன்வெல்த்' தீயில், தடகள வீரர்கள் ஊக்க மருந்தையும் ஊற்ற வேண்டாம். 

         ஆகவே, இந்தியத் தடகள வீரர்களே, ஊக்கமதைக் கைவிட்டாலும் பரவாயில்லை, ஊக்கமருந்து உட்கொண்டு காமன்வெல்த் விளையாட்டில் தோன்றலின் தோன்றாமை நன்று!
நன்றி: தினமணி 
மேலும் வாசிக்க... "போதையில் வீழும் பேதைகள்..."தேசிய விருதுகளை அள்ளியது "பசங்க' படம்

சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 57-வது தேசிய விருதுகள்  அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான தேசிய விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்துள்ளது. தமிழ் படமான பசங்க படம் விருதுகளை அள்ளியது. சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு விருது கிடைத்துள்ளது.2009-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுக் குழுத் தலைவர் ரமேஷ் சிப்பி, விருது விவரங்களை தில்லியில் புதன்கிழமை அறிவித்தார்.
     ஹிந்தியில் வெளிவந்த பா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது. பால்கி என்னும் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.3-வது முறையாக தேசிய விருது அமிதாப்புக்கு கிடைத்துள்ளது. அவர் ஏற்கெனவே அக்னி பாத், ஹம் படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார். 

சிறந்த பின்னணி இசை:

         சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி, சரத்குமார் நடித்த பழஸிராஜா படத்தில் சிறந்த பின்னணி இசைக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.தேசிய விருதை 4-வது முறையாக தட்டிச் சென்றுள்ளார் இளையராஜா. ஏற்கெனவே சாகர சங்கமம் (தெலுங்கு), சிந்து பைரவி (தமிழ்), ருத்ர வீணை (தெலுங்கு) படங்களுக்காக அவர் தேசிய விருதை வென்றுள்ளார். 

சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது:

பசங்க படம் தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த மாநில மொழித் திரைப்படமாக பசங்க படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த சிறுவர்கள் ஜீவா, அன்புக்கரசு ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது கிடைத்துள்ளது.இதே படத்துக்கு சிறந்த வசனகர்த்தா விருதும் கிடைத்துள்ளது. படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்தான் இந்த படத்துக்கு வசனம் எழுதினார். அவருக்கு ரூ.50 ஆயிரம் சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது. பாண்டிராஜுக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த படத்துக்கான விருது:
 
         மலையாளத்தில் வெளிவந்த குட்டி ஸ்ராங் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. மேலும் இந்தப் படம் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வசப்படுத்தியுள்ளது. படத்தின் நாயகன் மம்முட்டி. படத்தை ஷாஜி என். கருண் இயக்கியிருந்தார். 

சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது:
 
       ஆமீர் கான், மாதவன் நடித்திருந்த த்ரீ இடியட்ஸ் படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதும் அந்த படத்துக்குக் கிடைத்துள்ளது. 

சிறந்த இசையமைப்பாளர்:  
            சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) விருது தேவ் டி படத்துக்கு இசையமைத்த அமித் திரிவேதிக்கு கிடைத்துள்ளது.சிறந்த நடிகை: பெங்காலி மொழிப் படமான அபோ ஹவா படத்தில் சிறப்பாக நடித்திருந்த அனன்யா சட்டர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது.  

சிறந்த இயக்குநர்: 
           படத்தை இயக்கிய ரிதுபர்ணா கோஷ், சிறந்த இயக்குநராக தேர்வாகியுள்ளார்.பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளிவந்த வெல் டன் அபா படம் சமூக அக்கறையை சிறப்பாக பிரதிபலிக்கும் படமாக தேர்வு செய்யப்பட்டது. 
சிறந்த பின்னணி பாடகி:
          சிறந்த பின்னணி பாடகிக்கான விருது (படம்: ஹவுஸ்புல்) நிலாஞ்சனாவுக்கும், 
சிறந்த பாடகருக்கான விருது:
            (படம்: மகாநகர்) ருபம் இஸ்லாமுக்கும் வழங்கப்படவுள்ளது. 
சிறந்த பாடலாசிரியர்: 
            சிறந்த பாடலாசிரியருக்கான விருது ஸ்வானந்த கிக்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.துணை நடிகர், நடிகை: லாகூர் படத்தில் நடித்ததற்காக பரூக் ஷேக்குக்கு சிறந்த துணை நடிகர் விருதும், பா படத்தில் நடித்ததற்காக அருந்ததி நாகுக்கு சிறந்த துணை நடிகை விருதும் வழங்கப்படவுள்ளது.
மேலும் வாசிக்க... "தேசிய விருதுகளை அள்ளியது "பசங்க' படம்"நடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.

பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி 64 வயசுல டைரக்டர் ஆகியிருக்கிறார். இவர் இயக்கப் போகும் புதிய படத்தின் பெயர் வேலிக்காத்தான். அவர் மீடியாவுக்கு எழுதிய கடிதம் இங்கே.... 
            அன்றைய பாரதிராஜாவிலிருந்து இன்றையபாண்டியராஜன் வரை எல்லா இயக்குனர்களுடனும் இணக்கமான பழக்கம் உண்டு.இருந்தாலும் நான் இயக்குனர் ஆகவில்லை. “24” வயதில் இயக்குனராக வேண்டுமென்று வேட்கையோடு இருந்த நான் “64” வயதில் வேகமுள்ளஇயக்குனராய் அறிமுகமாகிறேன்.எழுதப்பட்டது அதுவென்றால் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். வருங்கால இளம்இயக்குனர்களே..“20”-ல் ஆசைப்பட்டு“20” லியே இயக்குனராகிவிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.“20”-ல் ஆசைப்பட்டு“60” ல் வாய்ப்பு கிடைத்தாலும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். மூச்சு உள்ளவரைமுயற்ச்சியை கைவிடாதீர்கள்.வெற்றி நிச்சியம்
“64” வயதில் இயக்குனராகி நானே கம்பெனி ஆரம்பித்துஇசைஞானி இளையராஜாவின்வாழ்த்துக்களோடு என் இயக்குனர் பயணத்தை ஆரம்பிக்கிறேன். “வண்டிச்சக்கரம்”வாழ்வு அளித்ததால் சக்கரத்தை நம்பி “சக்கரா கின்¢யேஷன்ஸ்” அதாவது சக்கரா படைப்புகள் என்ற பெயா¢ல் படக் கம்பெனி ஆரம்பித்து என் எழுத்து, இயக்கத்தில் வினுசக்கரவர்த்தியின் “வேலிக்காத்தான்” என்று விளம்பரப்படுத்தியிருக்கிறேன்.
எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிய முறையில்பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்கள், சினிமாத்துறையின் எல்லா துறை நண்பர்கள், எல்லா சங்க சக நண்பர்களின் மானசீக ஆசீர்வாதத்தோடு பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். விரைவில் பாடல்கள் பதிவாகி வந்துவிடும். அடுத்து படபிடிப்பு ஆரம்பித்துவிடும்.முதலில் எல்லா பாடல் காட்சிகளையும்பதிவு செய்வதாக முடிவு.அடுத்து கதை காட்சிகளின் பதிவு ஆரம்பித்து நல்ல முறையிலே முடியும்.
வினுசக்கரவர்த்தியின் "வேலிக்காத்தான்' என்பது என் சொந்தக் கம்பெனி,"சக்கரா கின்¢யேஷன்சின்” சொந்தப் படம்.கதையை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி இந்த படத்தை செய்துமுடிக்கிறேன்.என் பக்க பலம் இசைஞானியின்இனிய பாடல்கள். கதை, திரைக்கதை,வசனம், தய£ரிப்பு, இயக்கம் வினுசக்கரவர்த்தி.
இசை இசைஞானி இளையராஜா.ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலிருந்துஇன்றைய என் "வேலிக்காத்தான்” வரை ஒரு முப்பத்துமூன்று வருடம் மரியாதைக்குரிய தொடர்பு தொடர்கிறது. ஆழ்ந்த தியானத்தோடு, ஆழ்ந்த ஞானத்தோடு அற்புதமான ஆறு பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கிறார். நா. முத்துகுமார், கவிஞர் முத்துலிங்கம், பழனிபாரதி, கபிலன், சினேகன்என்று கவிஞர்கள் தங்கள் பாடல் வரிகளை என் படத்திற்க்காக பதிவு செய்கிறார்கள்.
கதாநாயகன், கதாநாயகி இருவரும் புது முகங்கள்.ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.என் அன்புக்காகவும், நட்புக்காகவும் பல இயக்குனர்கள், பல படைப்பாளிகள், பல பண்பட்ட நடிகர்,நடிகைகள் எனக்காக உழைத்துத்தர உறுதி அளித்திருக்கிறார்கள். எல்லா தரப்பு மக்களும், ரசிகர்களும்"வேலிக்காத்தான்” வெற்றியடைய வாழத்துங்கள், ஆசிர்வதியுங்கள். இவ்வாறு தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் வினு சக்கரவர்த்தி.
மேலும் வாசிக்க... "நடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்."தமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா?


         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓடும் அனைத்து ரக வாகனங்களிலும் தமிழ் எண் பலகை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், எண்களை அனைவரும் அறியும் வகையில் தமிழ் எண்களைப் பள்ளி பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும்.


         தமிழ்ச் செம்மொழியை பாடத்திட்டத்தில் சேர்க்க நினைக்கும் தமிழக அரசு, தமிழ் எண்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள பல மாநில மொழி நூல்களின் பக்கங்கள், அம்மொழியிலான எண்களிலேயே உள்ளது.


         ஆனால் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் தமிழ்ப் பாடநூலின் பக்கங்களில்கூட தமிழ் எண்கள் இல்லை. தமிழறிஞர்கள் தவிர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாத நிலையே உள்ளது. இதற்குக் காரணம் தமிழ் எண்கள் எந்தப் பாடத்திட்டத்திலும் இல்லை.


         இருப்பினும் இந்திய வாகனச் சட்டம் 1989-ல் மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று கூறுகிறது. தமிழ்ப் பற்றாளர்கள் சிலர் வாகனச் சட்டத்தை மேற்கோள் காட்டி வாகன எண் பலகை தமிழில் தான் எழுத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஒரு எண் பலகையை மாநில மொழியிலும், மற்றொரு எண் பலகையை ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம்.


          மாநில மொழியில் எழுதலாம் என்று சட்டமே சொல்லும்போது, ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று கூறுபவர்கள் தாய்மொழிப் பற்று இல்லாதவர்கள் என்று தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. வாகனங்களுக்கு இலவசமாகத் தமிழிலும் எண் பலகை எழுதித் தருகின்றன. சட்டம் இருக்கிறது என்று கூறி தமிழ் எண் பலகைகளை தங்கள் வாகனங்களில் பயன்படுத்தும் தமிழ்ப் பற்றாளர்கள், தமிழ் எண்களை எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


           வாகனங்களில் எண் பலகை ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு மாநிலத்திலிருந்து, எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அங்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமேயானால், வாகன எண்ணைக் குறிக்க வசதியாக இருக்கும். மாநில மொழிகளில் எழுதினால் வேறு மாநிலத்தவர் படிப்பது சிரமமாக இருக்கும். குற்றங்களோ, விபத்துகளோ ஏற்பட்டால் அவற்றைக் கண்டுபிடிப்பது சிரமம்.


             அதனால் நாடு முழுவதும் மாநில மொழிகளில் வாகனங்களுக்கான எண் பலகை எழுதுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஒரு எண் பலகையை மாநில மொழியில் எழுதலாம் என்ற சட்டம் இருந்தாலும், தமிழ் எண்கள் எந்தப் பள்ளியில் கற்றுத் தரப்படுகிறது? எந்தப் பள்ளியிலும் கற்றுத் தராதபட்சத்தில் அதை யாரால் படிக்க முடியும்? மற்ற மாநில மொழிகளில் உள்ள எண்கள், அங்குள்ள பள்ளியில் கற்றுத் தரப்படுகிறது. 


             தமிழகத்தில் அவ்வாறு இல்லை. இந்தத் தமிழ் எண்களைப் பற்றி போக்குவரத்துக் காவல்துறையினருக்கே தெரியாது. குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களின் எண்களை அவர்கள் எப்படிக் குறிக்க முடியும். ஏற்கெனவே போக்குவரத்துக் காவலர்கள் விதவிதமான ஆங்கில எழுத்துருக்களால், வாகன எண்களைக் குறிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.


               தமிழ் அறிஞர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் தமிழ் எண்களைக் குறிப்பதற்காக, தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து போக்குவரத்துக் காவலர்களாக நியமிக்க முடியாது என்று பொதுநல நோக்கர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


            தமிழ் அமைப்புகள் தமிழில் எண் பலகை வேண்டும் என்று வலியுறுத்தும் எண்ணமும், அவர்களின் தாய்மொழிப் பற்றும் போற்றுதலுக்குரியது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழில் எண் பலகை வேண்டும் என்று போராடும் தமிழ் அமைப்புகளை, அந்த எழுத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


             இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, தமிழை முதல் மொழியாகக் கொண்டு ஆளும் மாநிலங்கள், தங்கள் பள்ளிப் பாடத் திட்டத்தில் தமிழ் எண்களைச் சேர்க்க வேண்டும். தமிழ் எண்களை அனைவரும் அறிந்து கொண்டால், தமிழில் எண்கள் வேண்டாம், ஆங்கிலத்தில்தான் வேண்டும் என்று யாரும் குரல் எழுப்ப மாட்டார்கள். பாடத் திட்டத்தில் தமிழ் எண்கள் சேர்க்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்காக தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க... "தமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா?"தொலைக்காட்சி சானல்கள் அவசியமா?

           
            அப்பப்பா மூச்சு முட்டுகிறது... தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்காக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சானல்களின் பெயர்களை ஒரு முறை சொல்லிப்பார்க்கும் போதுதான் நமக்கு இந்தப் பிரச்னை. சன்,கே டிவி, ஆதித்யா, ஜெயா, ராஜ், கலைஞர், ஜீ, ஸ்டார் விஜய், பொதிகை, வசந்த், பாலிமர், மெகா, தமிழன், கேப்டன், மக்கள் தொலைக்காட்சி என இன்று சுமார் 35-க்கும் அதிகமான சானல்கள் தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன. இவற்றின் எண்ணிக்கை விரைவில் லிம்கா அல்லது கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு உயரும் என நம்பலாம். 

          இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் இத்தனை சானல்கள் தமிழில் ஒளிபரப்பாகின்றன என்றால், அந்தப் பெருமையைச் சொல்லி சிலாகிக்காமல் இருக்க முடியாது.  முன்பெல்லாம் இலங்கை ரூபவாஹிணியில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் தமிழ்ப்  படங்களைக்கூட ஓய்வாக இருந்தால் மட்டுமே பார்ப்பதும், அதுவும் அடுத்த வீட்டுக்குச்  சென்று பார்ப்பதற்கு சங்கடப்பட்டு தவிர்த்து விடுவதும் நம் பழக்கமாக இருந்தது. 

            பிறகு மைய அரசின் ஒளிபரப்பில் மண்டல ஒளிபரப்பாக தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பிறகு தொலைக்காட்சியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், அதை அவசியப்படும்போது அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குச் சென்று பார்ப்பதும் அதிகமானது.  அப்போதெல்லாம் மதிப்புமிக்க ஒரு கருவியாகப் பார்க்கப்பட்ட இந்தத் தொலைக்காட்சி, பிறகு பொழுதுபோக்கு அம்சமாக மாறி, இன்று கேளிக்கைப் பொருள்களில் ஒன்றாக மாறிப்போனது.

                 இது எப்படி நடந்தது? அரசியல் கட்சியோடு தொடர்புடையவர்களால் தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி சானல்கள் முதலில் பொதுவான அம்சங்களோடு, திரைப்படங்களை ஒளிபரப்பி வந்தன.தொடக்கத்தில் தங்களுக்குத் தேவையான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கத் தொடங்கிய மக்கள், பிறகு ஓய்வுநேரங்களை முழுக்கமுழுக்க தொலைக்காட்சியின் முன் கழிக்கத் தொடங்கினர். 

               இதுதான் சானல்களைத் தொடங்கியவர்களின் எதிர்பார்ப்பும்கூட.  பிறகு தொடங்கியதுதான் கருத்துத் திணிப்பு. இதில் அவர்கள் பெற்ற வெற்றியே, இன்று வரை தொடங்கப்படும் புதிய சானல்களின் அடித்தளம். இதன் விளைவாக வேறு பல சானல்கள் தமிழில் உருவாகவும், மொழிமாற்று சானல்கள் வரவும் அது வழிகோலியது. இதன் தொடர்கதைதான் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. குறிப்பாக குழந்தைகளில் தொடங்கி, இளைஞர்களில் வளர்ந்து, முதியோரில் முடியும் வரை இன்று அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.   பெரும்பாலான குழந்தைகளுக்கு வெளி உலகமே தெரியாத நிலை. ஒற்றுமை, ஒருமைப்பாடு, கலாசாரம் என்ற பொதுபுத்திக்கான விஷயங்களே தெரியாதவர்களாக  அவர்கள் வளர்ந்து வருகின்றனர். 

             பொதிகை தொலைக்காட்சியைத் தவிர, குழந்தைகளுக்கான   மற்ற சானல்கள் உள்ளிட்ட எவையும் மோசமான, விபரீதமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ப்பதில்லை. இந்தியாவில் பாலியல் கல்வி இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், அதுகுறித்த அடிப்படை அறிவுகூட குழந்தைகளுக்கும், வளர்இளம்பருவத்தினரிடையேயும் இல்லாத நிலையில், இந்தியாவில் பாலியல் உறவுகொள்ளும் திரைப்படங்கள் வெளிநாட்டு தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன.

             இந்தியாவில் இந்த ஒளிபரப்புக்கான அவசியம் என்ன? மக்கள் விரும்பிக் கேட்டுத்தான் அரசு அனுமதித்துள்ளதா? பொதுவாக அனைத்து வயதினரையும் அவர்களது வேலைகளை குறித்தநேரத்தில்  செய்யவிடாமல், பொன்னான நேரத்தை கிரகித்துக்கொள்ளும் இந்த ஒளிபரப்புகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் (இதிலும் விதிவிலக்கு உண்டு). 

               ஆனால், அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி, பிபிசி போன்ற சானல்கள் கட்டண ஒளிபரப்புகளாகத் தொடர்கின்றன.இதுபோன்ற சானல்களை மைய அரசு குறைந்த கட்டணத்தில் பெற்று மக்களின் நன்மையைக் கருதி இலவசமாக ஒளிபரப்பினால் மாதக் கட்டணமாவது குறையும்.  குறிப்பாக, தமிழகத்தில் இன்று கல்வி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தொடங்கப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய காட்சிகளோடும், இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்தும், 

               சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்க்கைக் கல்விக்கான ஒரு முழுநேரச் சானலை தொடங்க எவரும் முன்வரவில்லை.  செல்வந்தர்களோ, அறக்கட்டளைகளோ, தொண்டு நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ, ஏன் இலவசங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகளோ இதுகுறித்து சிந்திக்காதது ஏன் என்ற காரணம் தெரியவில்லை. இந்தியாவின் அதீத வளர்ச்சியைப் பொறாமைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு மத்தியில், பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை விழுங்கக் காத்திருக்கும் நிலையில், இந்திய இளைஞர்களுக்கு கிடைத்துவரும் வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வளர்ந்த நாடுகளுக்கு மத்தியில் இன்னும் பழங்கதைகள் பேசி, தொலைக்காட்சியில் தோன்றும் பொய்யான தோற்றங்களில் மயங்கி, அதன் கேளிக்கை நிகழ்ச்சிகளே கதியாகக் கிடந்தால், இந்தியர்களின் வாழ்வில், குறிப்பாக தமிழர்களின் வாழ்வில், "இன்னொரு இருண்ட காலம்' என்ற வரலாற்றை வருங்காலம் படிக்கும்.
நன்றி: தினமணி
மேலும் வாசிக்க... "தொலைக்காட்சி சானல்கள் அவசியமா?"எல்லாமே இலவசம்!!! எங்கே?

            தமிழகத்தின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மனதை மயக்கும் இலவசத் திட்டங்கள் பெருகிவிட்டன. பட்டனைத் தட்டிவிட்டால் தட்டில் இட்லி என  கலைவாணர் பாடியதுபோல இன்று உழைக்காமலேயே கையில் உணவு கிடைக்க ஆரம்பித்து விட்டது. காரணம் இன்று தமிழகத்தில் வழங்கப்படும் பல்வேறு இலவச நலத்திட்டங்கள்தான். இதை தவறென்று யாரும் கூறவில்லை. 


        மக்களை அரசு சுபிட்சமாக வாழவைக்கிறதுஎன்பது பெருமைப்படவேண்டிய விஷயம்தான். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? நீருயர வரப்புயரும், வரப்புயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயரும் என்ற மொழி இன்று மாறிவிட்டது.  இன்றைக்கு  இலவச மின்சாரம், டிவி, எரிவாயு அடுப்பு, வீடு என இலவசங்களாக குவிகிறது. மேலும், சலுகை விலையில் அரிசி, முதியோர் உதவித் தொகை, பேருந்தில் இலவச பயணம், கர்ப்பிணிகளுக்கு உதவி, இலவச கல்வி, சத்துணவு, காப்பீட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் என பட்டியல் நீளுகிறது. 


        இத்தனையும் அரசின் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.  உண்மையிலேயே இத்தனை வசதிகளும் கிடைக்கும்போது அதை வாழ்த்தாமல் வசைபாடுவது ஏன் என்பது ஆட்சியாளர்களின் கேள்வி. அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், எதற்கும் கவலையில்லை. ஏன் உழைக்க வேண்டும் என்ற கேள்வி இன்று பலரிடமும் எழுகிறது. உழைப்பது எதற்காக என்பதை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. உழைத்தால்தான் உடலும்,உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.  வேளாவேளைக்கு உண்டுவிட்டு, மூலையில் முடங்கிகிடப்பதால் மனிதனின் ரத்தஓட்டம் பாதிக்கப்படுகிறது. நடைபயிற்சி மறந்துபோய் தளர்ந்துவிடுகிறான். வெயில், மழை என மாறி மாறி உடல் உழைப்பு மேற்கொள்வதால் நோய் நொடிக்கு வாய்ப்பில்லை. வயலிலும், ஆலைகளிலும் உழைப்பவர்கள் ஒய்யாரமாகப் படுத்தால் விளைவு என்னவாகும். விரைவிலேயே நடைதளர்ந்து, மனம் புழுங்கி, வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலை வந்துவிடுகிறது. ஆயுள்காலமும் குறுகிவிடுகிறது. அன்று காடு, கரை என்ற சென்றவர்கள் இன்று கிராமப்புறங்களின் டீக்கடை பெஞ்சுகளிலும், ஆலமரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் பொழுதைக் கழிக்கின்றனர். 


           எங்கிருந்தோ அரிசி கிடைக்கிறது! நமக்கென்ன என்ற அலட்சியம். போதாக்குறைக்கு நூறுநாள் வேலை என்ற பெயரில் அன்றன்று கையில் கிடைக்கும் ஊதியம். இது உழைக்காமல் கிடைக்கும் வருமானம். இப்படி கிடைக்கும் பணத்தை மதுக்கடைகளில் சென்று செலவழிப்பது வாடிக்கையாகிவிட்டது. விளைவு மதுக்கடை வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது.இதனால் கிடைக்கும் அபரிமிதமான வருவாயால் மேலும் பல இலவசத் திட்டங்களை அரசு வழங்கிவருகிறது.

             இப்படி உழைப்பவர்களை சோம்பேறிகளாக்குவதன் மூலம் சம்பாதிக்கத் தேவையில்லை என்ற மனோபாவம் ஏற்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தமே மாறிவிடுகிறது. எதற்காக குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்? அவர்கள் காலத்துக்கும் இதே இலவசத் திட்டங்கள்தான் தொடருமே என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கியுள்ளது. கிராமப்புறங்களில் இன்று விவசாயம் செய்வதை பார்க்க முடியுமா என்ற பதைபதைப்பு எழுகிறது. 


            வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அரிசி பெரும் அளவில் இறக்குமதியாகிறதே இனி நாம் ஏன் சாகுபடி செய்ய வேண்டும் என்ற அளவுக்கு விவசாயிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை இப்படியே வளரவிட்டால் நெல் என்ற தானியம், காய்கறிகள் போன்றவற்றை வெறும் புகைப்படங்களில் மட்டும்தான் பார்க்க வேண்டிவரும் என வேளாண்மை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ரெடிமேட் மிக்ஸ் போன்றே இனி அரிசிக்குப் பதில் உணவும் வந்துவிடும் என்ற நிலை வந்துவிட்டது. 

               தமிழர்களின் வீர விளையாட்டுகளை விளையாட வருங்காலச் சந்ததியினருக்கு போதிய உடல் வலு கிடைக்குமா என்பது தெரியவில்லை. விஞ்ஞானம்தான் வளர்ந்துவிட்டதே, இனி நாம் எதற்கு உழைக்க வேண்டும் என்ற கேள்வி இளையதலைமுறையினர் மத்தியில் நிலவுகிறது.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மனதில் நிறுத்தி இலவசத்தால் மக்களை வசப்படுத்தவதை நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக கிஸôன் விகாஸ், இந்திரவிகாஸ் போன்ற பத்திரங்களைத் தரலாம்.


         மேலும், காப்பீட்டுத் தொகையும் வழங்கலாம். அப்படித் தந்தால் அது வாழ்நாள் முழுக்க மக்களுக்குப் பயனளிக்கும் திட்டமாகத் திகழும். அதை விடுத்து இலவசங்கள் தொடர்ந்தால் மக்களின் மனதை மழுங்கடிக்கச் செய்யும். யானைகட்டிப் போரடித்த காலம் மறந்துபோனதைப்போல விளைநிலங்கள் காட்சிப்பொருளாக மாறும் என்பதே உண்மை.
மேலும் வாசிக்க... "எல்லாமே இலவசம்!!! எங்கே?"கடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா?

  காட்டுப்பூக்களைப் போலவே அழகிய வண்ணத்தில் இருப்பதால் கடல் தாமரைகள் என அழைக்கப்படும் இந்த உயிரினத்தை ஆங்கிலத்தில் "சீ அனிமோன்' என்கிறார்கள்

""ஆக்டினாய்டியா என்பது இதன் விலங்கியல் பெயர். அரை செ.மீ முதல் 6 அடி வரை அழகிய ஆரங்கள் கொண்ட வட்ட வடிவத்தில் அழகான தோற்றம் உடையவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் இந்த உயிரினம் தனது வாழ்நாள் முழுவதும் கடலுக்குள் ஒரே இடத்திலேயே பட்டா போட்டுக் கொண்டு உயிர் வாழ்கின்றன. கால்களே இல்லாத இந்த உயிரினங்கள் ஆபத்து என்று தெரிந்தால் மட்டுமே ஒரு மிதவையைப் போல் மிதந்து வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று அமர்ந்து கொள்கின்றன.

சுருக்கங்களுடன் கூடிய வட்ட இதழ்களை அற்புதமாக விரித்து கடலின் அடிப்பகுதியில் மணல் பரப்பிலோ அல்லது பாறைகளிலோ ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இதன் வயிறு ஒரு குழாய் மூலம் இதழ்களோடு இணைந்திருப்பதுடன் உடலின் நடுவில் வயிறே வாய் போன்றும் செயல்பட்டு மற்ற மீன் இனங்களை விழுங்குகின்றன. இவற்றின் வகைகளில் சில மட்டும் தனது அழகிய இதழ்கள் மூலமாக மற்ற மீன்களை கவர்ந்து இழுத்து அருகில் வந்தவுடன் விஷ திரவத்தைப் பீய்ச்சிக் கொன்று பின்னர் வாய் போன்று இருக்கும் வயிற்றுக்குள் தள்ளி மூடி விடுகின்றன.

ஆணின் உறுப்புக்களும் பெண்ணின் உறுப்புக்களும் ஒரே தாமரையில் அமைந்தவாறு சில வகைகள் மட்டும் இருபால் உயிரியாகவும் செயல்படுகிறது. இருபால் உயிரினங்களாக இருப்பவற்றில் தாய் தாமரை பல துண்டுகளாகி சிதறிய பின்னர் அவற்றில் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியாக மாறி வளரத் தொடங்குகின்றன.பெண் இனம் முட்டைகளை வாயாக இருக்கும் வயிற்றின் மூலமே வெளியேற்றுகிறது. 

முட்டைகள் கடலின் அடிப்பகுதியில் சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஒட்டிக்கொண்டு சில நாட்களுக்குப் புழுவாகவே வாழ்ந்து பின்னர் உருமாறி தாமரையாக மலர்கின்றன.வளர்ச்சியடையும்போது நுண்ணிய பச்சைப் பாசிகளையும் சேர்த்துக் கொண்டு அதன் இதழ்களுக்கு அழகிய நிறத்தையும் தாவரங்கள் போன்ற தோற்றத்தையும் தருகின்றன. மேலும் இவை சேர்த்துக் கொண்ட பச்சைப்பாசிகள் ஓரினச் சேர்க்கை நடத்திக் கொண்டு தனது தேவை போக மீத உணவை தாமரைகளுக்கு தானாகவே கொடுத்து விடுகின்றன.

கோமாளி மீன்கள் எனப்படும் ஒரு வகை மீன் இனம் மட்டுமே கடல் தாமரைகளுக்குள் உயிர் வாழக்கூடியது. இம்மீன்கள் பிடித்துக் கொண்டு வரும் இரைகளையும் தாமரைக்கு கொடுக்கின்றன. பொதுவாக மற்ற மீன்களை லாகவமாகப் பிடித்து விழுங்கும் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை மட்டும் விட்டு விடுகின்றன.  துறவி நண்டுகள் எனப்படும் ஒரு வகை நண்டுகள் கடல் தாமரைகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து சாப்பிடுகின்றன.

வயதாகிவிட்ட கடல் தாமரைகளை டாக்டர் இறால்கள் எனப்படும் மீன்கள் சுத்தம் செய்கின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைக் கம்பள கடல் தாமரைகளே அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் வாசிக்க... "கடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா?"சூரியச் சூறாவளி 2012 இல் வரும்?

100மில்லியனஹைட்ரஜனகுண்டுகளினசக்தி கொண்மிகப்பெரிசூரியப்புயலஒன்று 2012ஆமஆண்டஏற்படுமஎன்றுமஇதனாலபூமியிலபலத்சேதங்களஏற்படுமஎன்றுமவிஞ்ஞானிகளதெரிவித்துள்ளனர்.

நாடுகளினமின்சாவினியோஅமைப்புகளுமதகவலதொடர்பஅமைப்புகளுமபலத்சேதமடையுமஎன்றவிஞ்ஞானிகளகூறியுள்ளனர்.

விமானபபோக்குவரத்து, மின்னணுசசாதஅமைப்புகள், கப்பலபோக்குவரத்திற்கஉதவுமஉபகரணங்களமுக்கியமாசெயற்கைககோள்களவேலசெய்யாது.

நாசாவினசூரியப்பௌதீகபபிரிவவிஞ்ஞானி டாக்டரஃபிஷரஇதபற்றிககூறுகையில் 100 ஆண்டுகளிலஅசாதாரசக்தி கொண்இந்சூரியப்புயலமுதனமுதலாகததாக்கவுள்ளது. இதனாலபெரிஅளவுக்கமின்வினியோகததடைகளும், தகவல்தொடர்பசிக்னல்களஇழக்கப்படும். என்றஎச்சரித்துள்ளார்.

சூரியப்புயலதாக்குகையிலசூரியனினவெப்அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையுமகடந்தவிடும்.

இந்சூப்பரசூரிசூறாவளி இடி இடிப்பதபோன்றநிகழும். பூமியினகாந்தப்புலங்களநம்பி இயங்குமநமததகவல்தொழிலநுட்உலகமபெரிதுமபாதிக்கப்படுமஅபாயமஉள்ளது.

இந்வகஅதிசக்தி சூரியப்புயல் 2012 ஆமஆண்டிலஅல்லதநிச்சயமாக 2013ஆமஆண்டிலஏற்படுமஎன்பதஉறுதி ஆனாலவிளைவுகளபற்றி இன்னமுமஆய்வுகளநடைபெற்றவருகின்றன.

இந்தசசூரியப்புயலாலஏற்படுமசூரிஎரிதழல்களபூமியினகாந்தபபுலத்தபாதிக்கும். ஆனாலஇதமிகமிகவேகமாநடக்கும், ஒரஇடி இடிப்பதபோன்நேரத்திலஅனைத்துமநடந்தமுடிந்தவிடுமஎன்கிறாரநாசவிஞ்ஞானி பிஷர்.

இதனாலஏற்படுமமின்வினியோஅமைப்புகளசேஉள்ளிட்பிசேதங்களசீரசெய்மிகப்பெரிஅளவிலபணமசெலவழியுமஎன்பதோடநீண்காலமபிடிக்குமஎன்பதுமஉண்மை.

சூரியசுழற்சியில் 24ஆமகட்டத்தஅதஎட்டுவதாலஇந்நிகழ்வதவிர்க்முடியாததஎன்கின்றனரவிஞ்ஞானிகள்.

இந்தககண்டுபிடிப்புகளஆஸ்ட்ரேலியனசயன்ஸஎன்பத்திரிக்கையிலவெளியாகியுள்ளது.
மேலும் வாசிக்க... "சூரியச் சூறாவளி 2012 இல் வரும்?"ஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்

பின்லாந்தில் கடலுக்கு அடியில் இருந்து 70 ஷாம்பெய்ன் மது பாட்டில்கள் கிடைத்துள்ளன. 230 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இவற்றின் மதிப்பு ரூ.22 கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தின் ஒரு பகுதியாக இருப்பது ஆலண்ட் தீவுக்கூட்டம். பால்டிக் கடல் நடுவே உள்ளது.

 இங்கு ஸ்வீடன், பின்லாந்து நீச்சல் வீரர்கள் கடந்த ஜூலையில் சாகசம் செய்யும்போது, கடலுக்கு அடியில் 150 அடி ஆழத்தில் உடைந்த கப்பல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். கப்பலின் உடைந்த பகுதிகளுக்கு இடையே சில பாட்டில்கள் இருந்தன.

கப்பல் எந்த ஆண்டு விபத்துக்குள்ளானது என்று தெரிந்துகொள்வதற்காக ஒரு பாட்டிலை மட்டுமே மேலே எடுத்து வந்தனர். பரபரப்பாகிவிடும் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இடத்தில் மொத்தம் 70 ஷாம்பெய்ன் பாட்டில்கள் கிடைத்துள்ளன. கடலுக்கு அடியில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், சூரிய ஒளி படாத இடத்தில் இருந்ததால் ஷாம்பெய்ன் இப்போதும்கூட குடிக்கும் நிலையில் இருக்கிறதாம்.

கப்பல் 200 ஆண்டு பழைமையானது என தெரியவந்தது. ஷாம்பெய்ன் சரக்கு 1780 வாக்கில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 1825&ல் தயாரிக்கப்பட்ட ஷாம்பெய்ன்தான் உலகிலேயே பழைய சரக்காக கருதப்படுகிறது.

பின்லாந்து சரக்கு தயாரானது 1780-களில் என்பது நிரூபணமானால் இதற்கு அந்த பெருமை கிடைக்கும். தலா ரூ.31.9 லட்சம் என 70 பாட்டில் விலை ரூ.22 கோடியை தாண்டும் என்கின்றனர் ‘சரக்கு’ நிபுணர்கள்.
மேலும் வாசிக்க... "ஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்"கைபேசியில் வரும் தொல்லைகள்


இந்த 21-ம் நூற்றாண்டில் நம் நாட்டில் மற்ற துறைகளைக் காட்டிலும் தகவல் தொடர்புத் துறையில் மிகப் பெரிய புரட்சி நடந்திருக்கிறது. குறிப்பாக, கைபேசி (செல்போன்) வருகையால் வணிகர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ள தகவல் தொடர்பு சாதனமாக மாறி, தற்போது, அது அத்தியாவசியப் பொருளாகவும் நிலைபெற்றுவிட்டது.  

கைபேசியால் பல்வேறு பயன்களை நாம் அனுபவித்து வந்தாலும், மறுபுறம் சில வேதனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்யும் சில விரும்பத்தகாத செயல்களே இதற்குக் காரணம். இதில், தேவையற்ற அழைப்புகள் உபயோகிப்பாளர்களுக்கு பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளன.  இந்தத் தேவையற்ற அழைப்புகளால் முக்கிய அலுவல்களில் இருக்கும் உபயோகிப்பாளர்களின் கவனம் திசை திரும்புவதுடன், பணியிடையே தொந்தரவும் அளிக்கிறது என்பதுதான் உண்மை. 

கைபேசி என்பது முக்கியத் தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருக்க வேண்டுமே தவிர, அது உபயோகிப்பாளர்களுக்கு வேதனை தரும் வகையில் இருக்கக்கூடாது.  புதிதாக கைபேசி வாங்கும் ஒருவர் தனக்குப் பிடித்தமான தனியார் தொலைபேசி நிறுவனத்தில் தொகுப்பி அட்டை  (சிம்கார்டு) வாங்கி தனக்கான தொடர்பு எண்ணைப் பதிவு செய்கிறார் என்றால், அந்த எண்ணை யார், யாருக்கு அளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அந்த நபருக்கு மட்டுமே உரிமை உண்டு.  ஆனால், தற்போது இதற்கு மாறாக குறிப்பிட்ட அந்தத் தனியார் தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள சில டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கைபேசி வைத்திருப்பவர்களின் எண்களை வாங்கி தங்களது வருமானத்துக்காக தனிநபர் கடன், துணி, நகைக் கடைகளில் தள்ளுபடி போன்ற தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன. இதனால் வரும் சில தகவல்கள் சிலருக்கு உபயோகமாக இருந்தாலும், பெரும்பாலானோரைப் பாதிக்கிறது என்பதே உண்மை.  

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை எடுத்துப் பேசினால் நாங்கள் குறிப்பிட்ட வங்கியிலிருந்து பேசுகிறோம்;

வீடு கட்டக்  கடன் தருகிறோம் என்றதும் நம்முடைய கவனம் திசை திரும்புகிறது. அச்சமயம், நாம் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசினால் விபத்தின்றி தப்பிக்கலாம்.  இந்த அவசர யுகத்தில் பெரும்பாலானவர்கள் கைபேசியில் பேசிக் கொண்டே செல்கின்றனர். இதனால், விபத்தில் சிக்க நேரிடுகிறது. இதுபோல, நின்று பேசுவதால், நேரம் விரயமாவதுடன், பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாகும் சூழல் உருவாகிறது.    மேலும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம்; தனிநபர் கடன் குறைந்த வட்டியில் தருகிறோம்; இது தொடர்பாக பேசுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா? எனக் கூறுகின்றனர். இதனால், விவரம் தெரியாத பல பெண்கள் தேவையற்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். சில வீடுகளில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதற்கும் இந்த அழைப்புகள் காரணமாக அமைகின்றன.  

அண்மையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது சக அமைச்சர்களுடன் முக்கிய அலுவலில் ஈடுபட்டபோது, சிணுங்கிய கைபேசியை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது, அவரது முகம் இறுகிய முகமாக மாறியதாகத்  தெரிகிறது. காரணம், அவருக்கு வந்த அழைப்பில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம் என்ற அழைப்புதான்.  இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா உடனடியாகத் தனது துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, தேவையற்ற அழைப்புகளை இனி அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்.  இதேபோல, உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் இருக்கும் அம்பானிக்கே வீடு கட்ட அழைப்பு விடுத்த சம்பவம் அண்மையில் நடந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.  இதேபோன்று தேவையற்ற அழைப்பைப் தவிர்ப்பது குறித்து குறிப்பிட்ட தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டால், உங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்பை ரத்து செய்ய குறிப்பிட்ட குறியீட்டை "டைப்' செய்து அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பினால், தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்கள் ரத்து செய்யப்படும் எனத் தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன.  ஆனால், டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு நமது அனுமதியில்லாமல் கைபேசி தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ள தொலைபேசி நிறுவனங்கள் அதனை ரத்து செய்வதற்கு நமது கைபேசியிலிருந்தே குறுந்தகவல் அனுப்பக் கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

மேலும், தனியார் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து வரும் அழைப்புகளைத் தொடர்புகொண்டால், "நீங்கள் எங்களுடன் ஜாலியாக அரட்டை அடிக்க வேண்டுமா?' உடனே குறிப்பிட்ட எண்ணை அழுத்துமாறு கூறுகின்றனர். இதனை அழுத்தாமல் விட்டுவிட்டால் நாம் தப்பினோம், வயோதிகர்கள் அறியாமை காரணமாக கை தவறி ஏதோ ஒரு பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக அவர்கள் குறிப்பிட்ட எண்ணை அழுத்திவிட்டால் அவ்வளவுதான். நமது கைபேசிக்கான தொகை இருப்பு குறைந்துவிடும். இது தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் மற்றொரு வேதனை.  எனவே, தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து கைபேசி உபயோகிப்பாளர்களின் எண்களைப் பெறும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் அரசு விதிகளைக் கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே தேவையற்ற வேதனைகளிலிருந்து விடுபட முடியும்.
மேலும் வாசிக்க... "கைபேசியில் வரும் தொல்லைகள்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1