CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

ஜனவரி 6 2009: தாய்ப்பால் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன்தான், தாய் மகவிடையே உருவாகும். பாசப் பிணைப்புக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இந்த ஹார்மோன் மூலமே தன் குடும்பத்திலுள்ளோரின் முகங்களை குழந்தை எளிதில் அறிந்து கொள்கிறது என்ற உண்மை இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஜனவரி 2009: ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் மற்றும் உறுப்பு மாற்றம் செய்யப்பட்டதனால் நிகழும் மனித உயிர்ப்பலிகள் பல மில்லியன்களாக உள்ளன. இதன் காரணி, கிரிட்டோ காக்கல் என்னும் பூஞ்சையால் ஏற்படும் பாதிப்புகள்தான் இதனால் நெஞ்சுவலி, வறட்டு இருமல் வயிற்றுவலி, தலைவலி பார்வைக்குறைபாடு உண்டாகிறது. இந்தப் பூஞ்சை மனிதனின் தற்காப்புத் துறையைத் தாக்கி இறப்பை உண்டுபண்ணுகிறது. இந்த ஆய்வாளகள் இப்போது, எப்படி கிரிப்டோகார்கஸ், மனிதர்களின் தற்காப்புத்திறனை ஏமாற்றி உள்ளே நுழைகிறது என்றும் அதற்கு அதனுடைய பாதுகாப்பு கவசம்தான் காரணம் என்றும் கண்டு பிடித்துவிட்டனர். அதன் இணைப்பான சர்க்கனா மூலக் கூறுகளையும் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இவைகளை புதிய மருந்துகள் மூலம் உடைத்து பூஞ்சைகள் உடலுக்குள் நுழைவதைத் தவிர்த்து மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற புதிய நிலை உருவாகியுள்ளது.

ஜனவரி 5 2009: புற்று நோய்க்கான வேதி சிகிச்சை மருந்துகள் புதிதான தகவலைத் தருகின்றன. இவை புற்றுநோய் செல்களையும் காப்பாற்றுகின்றனவாம். 

 ஜூன் 2009: இன்டியானாவின் நோட்ரே டானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்ற வானவியலாளர்கள் நம் சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு சிறிய கோளைக் கண்டு பிடித்துள்ளனர்இது தனது எரிபொருள் முழுதும் தீர்ந்துவிட்ட நிலையில் உள்ள பழுப்புகுள்ளான இறந்துவிட்ட சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. என்பது வானவியலில் ஓர் அரிதான அற்புதமான தகவலாகும். இந்த கோள் நம் பூமிபோல 3 மடங்கு நிறையுள்ளது.

ஆகஸ்ட் 2009: பூமியின் மேல் தகடுக்குக் கீழே அப்பகுதி டெக்டானிச் தட்டுகளாக உடைந்து கிடைக்கிறது. இந்த தட்டுகள் நகரும் போதுதான் புவியதிர்வு, எரிமலைகள், மலைகள் உண்டாகின்றன. ஆனால், இந்த நகர்வுப் பகுதிகள்தான், மின்சக்தியின் நல்ல கடத்தியாக செயல்படுகிறது. என்றும், இவைதான் நீருள்ள இடங்களை சுட்டிக் காட்டும் குறியீடாகவும் நீருள்ள இடங்களை சுட்டிக்காட்டும் குறியீடாகவும் உள்ளதாகவும் நிலவியலாளர் கண்டுபிடித்துள்ளனர்.

 ஆகஸ்ட் 2009: இயற்கை எரிவாயு மற்றும் புதை படிவ எண்ணெய்களான பெட்ரோல், குரூடாயில் போன்றவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கடலுக்குள் மூழ்கி பூமியின் உட்பரப்பிலிருந்து உருவாகிறது என்றுதான் தகவல். இப்போது நாம் நினைத்ததைவிட அதிக ஆழத்திலிருந்து கிடைக்கிறது. என்றும் உயிர்கள் அல்லாத கனிமப் பொருட்களிலிருந்து கூட இவை உருவாகியிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2009: உலகின் குளிரான பகுதியிலும், ஐரோப்பியாவிலும் வாழ்பவர்கள் தங்களுடைய உணவில் பாலை வைட்டமின்ஞி க்காக சேர்த்துக் கொண்டனர். இது 7500 ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்தது. இவ்வாறுதான் அந்நாடுகளில் பால் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை சீரணம் பண்ண லாக்டேஸ் என்ற நொதி வேண்டும். இதன் உற்பத்தியை நம்மிடம் உள்ள ஒரு ஜீன் கட்டுப்படுத்துகிறது. மத்திய ஐரோப்பியாவில் உள்ளவர்களே முதன்முதலில் பாலைக் குடிக்கத்துவங்கினர் என்றும் அவர்களிடமிருந்தே லாக்டேஸ் உருவாக்கும் ஜீன் பரவியது என்றும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அக்டோபர் 2009: மனித உடலுக்குள் ஓர் உயிர்க்கடிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இது ஆயிரக்கணக்கான ஜீன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயிர்க்கடிகாரம் நம்மூளைக்குள் உள்ள பார்வை முடிச்சின் மேல் உள்ளது. இவை ஒளியால் மட்டுமல்ல மற்ற உறுப்புகள் மற்றும் உணவாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிவிறிரி என்ற மூலக்கூறுதான், செல்களின் ஆற்றல் தேவையறிந்து உணவு வேண்டும் எனத் தூண்டுகிறதாம். செல்லில் போதுமான உணவிருந்தால், கிவிறிரி ஆன்செய்யப்பட்டுவிடும் உணவின் உயிர்க்கடிகாரத்துக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஷிப்டில் பணிபுரிபவர்களின் உயிர்க்கடிகாரம் சமனநிலை இழக்கிறது. பருமனகின்றனர், மிகை அழுத்தம் மாரடைப்பு நிகழ்கிறது என கண்டறியப்படுகிறது.

அக்டோபர் 2009: பழதை வெட்டி வைத்தால் அதில் ஈக்கள் மொய்ப்பதை நாம் அறிவோம். ஆனால், அங்குள்ள ஆண் ஈக்களுக்கு கண் தெரியாது. ஆனால் இனப் பெருக்கம் பழத்தின் மேலேயே நிகழும். தன்னுடைய பிரமோன்உணர்வால் வரும் இறக்கையுள்ள பெண் ஈ எது எனத் தேடும் ஆண் ஈ ஆனால் தற்போது ஆய்வாளர்கள் புதிய தகவலைக் கண்டு பிடித்துள்ளனர். ஆண் ஈக்களின் வயிற்றுப் பகுதியில் உருவாகும். இன ஈர்ப்பு ஹார்மோனானா புரமோனா மூலம் ஆண் ஈக்கள் மற்ற ஆண் ஈக்களிடம் தயவுசெய்து நீங்கள் நுழையாதீர்கள். பெண்களை மட்டும் நுழையவிடுங்கள் என்று சொல்கிறதாம்.

செப்டம்பர் 2009: ரூத்தியம், ஆஸ்மியம் என்ற இரணடு உலோகங்களையும் இணைத்து, புற்றுநோயை எதிர்க்கும் மருந்துகளை உருவாக்குகின்றன. இது ஆண்களின் டெஸ்டிடுலார் புற்றுக்குப் பயன்படுகிறது.இந்த உலோகங்களின் அணுக்கள்தான் புற்றுநோய் செல்களின் ஞிழிகிவை ஈர்த்து சாகடிக்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 2009: இதுவரை அல்ஜீமர் வியாதியால்தான் குறைவான தூக்கம் உண்டாகிறது என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், புதிய கண்டுபிடிப்பு வேறொரு உண்மையைத் தெரிவிக்கிறது. நம்மால் உண்டாகும் தூக்கம் குறைவு தூக்கம் இழப்புதான் அல்ஜீமர் வியாதியையும், அது தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது என்பது தெரியவந்துள்ளது.

செப்டம்பர்2009: உருளைக்கிழங்கின் ஜீன் வரிசைகள் முழுமையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 840 மில்லியன் உள்ளன. மனிதனுக்கு உள்ளதில் 1/4 பகுதிதான் இது..

செம்டம்பர் 2009: சில பாக்டீரியாக்கள் எதிர்உயிர் மருந்தையும் தாக்குபிடித்து அதற்குப்பின்னரும் நோய் உண்டாக்கி மருத்துவத்துறைக்கு தலைவலியாகவும், சவாலாகவும் உள்ளன. அந்த பாக்டீரியாவின் மேல்பரப்புதான் இப்படித்தாக்குப்பிடித்து உயிர்வாழும் வேலையைச் செய்கின்றன. அப்படி பாதுகாப்பு தரும் செல்சுவரை உடைக்க, ஒருபுது வழியைக் கண்டுபிடித்துவிட்டனர். விஞ்ஞானிகள் அந்தவேதிக் கலவையின் பெயர் விகிசி 13243 என்பதே இது பாக்டீரியாவின் மேல்தோலிலுள்ள பாதுகாப்பு கவசத்தை உடைக்கிறது. எனவே, இதன்மூலம் மருத்துவதுறை கொஞ்சம் அமைதி பெறும் எதிர் உயிரிக்கு கட்டுப்படாத பாக்டீரியத்தை இது கட்டுப்படுத்துகிறது.

செப்டம்பர் 2009: ஹைதராபாத்திலுள்ள லால்ஜிசிங் மற்றும் அமெரிக்காவின் டேவிட் ரிச் இருவரும் இணைந்து மனித சமுதாய தோற்றம் பற்றிய புது தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் 12 விதமான தனித்த பழங்குடியினர், மனித இனத்திடையே ஆராய்ந்தால் அந்தமானில் வாழும் பழங்குடியினர் தென்னிந்தியாவிலிருந்து பிரிந்தவர் என்பது தெரியவருகிறது. இவர்கள் நேரடியாக ஆப்பிரிக்காவை விட்டு சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டனர்.

புதிய தனிமம் 112வது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கோப்பர்நிசியம் என்று பெயரும் சூட்டியாகிவிட்டது. இதுதான் வேதி அட்டனையில் உள்ள மிகக் கனமான தனிமம்.

2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் 9 பேர் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஐரோப்பாவைச் சேர்ந்த சார்லஸ் கே. கேவோ மற்றும் ஹார்லாவுக்கும் சீன பல்கலைக் கழக வில்யாக்கு பாயல் என்பவருக்கும் ஜார்ஜ்ஸ்மித்தும் இணைந்து பெறுகின்றனர். ஒனித்தகவலுக்காக இணைப்புகள் மூலம் எப்படி ஒளி கடந்து செல்கிறது என்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.

உயிரியல் மற்றும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசினை 3 அமெரிக்கர்கள் இணைந்து வாங்கியுள்ளனர். எலிசபெத்பிளாக்பென், கரோல் கிரிடர், ஜாக்ஸ்சோடார் இவர்கள் செல் பிரிதலின் போது நுனியில் உள்ள குரோமோசோம்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் கண்டிபிடித்துள்ளனர்.

வேதியலுக்கான நோபல் பரிசு ஆச்சரியமாக உயிரியல் தொடர்பான வேதிக் கண்டு பிடிப்புக்கு தரப்பட்டிருக்கிறது. செல்களுக்குள் ரிபோசோம்கள் எப்படி பணிபுரிகின்றன என்பதை இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் வாழும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும், அமெரிக்காவைக் சேர்ந்த தாமஸ்எ. ஸ்டீட்ஸ¨ம் இஸ்ரேலைச் சேர்ந்த அடா எ. யோனாத்தும் இணைந்து ரிபோசோம் செயல்பாட்டுக்கான நோபல் பரிசினைப் பெறுகின்றனர்.

டிசம்பர் 22 2009: விஷப் பல்லுடைய பழங்கால புதைபடிம உலகின் முதல் பறவை ஒன்றை வடகிழக்கு சீனாவில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் சீனா பறவை பல்லி என்பதாகும். இதன் எலும்புகள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வான்கோழி அளவுள்ள பறவை. இதற்கு 4 இறக்கைகள் உண்டு. பயங்கரமாய் வளைந்த நீளமான விஷப்பல் உண்டு. இது சீனாவில் சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

டிசம்பர் 23 2009: தேனீக்கள் எவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததாலும், தரையிரங்கினாலும் அவைக ட்கு அடி படுவது கிடையாது. அதற்கான காரணம் அவைகளின் துல்லியமான பார்வை என்பது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்வைப் பகுதியிலுள்ள சிறப்பு செல்கள் மூலம் இது ரேடார் அல்லது சோனார் போல செயல்படுகின்றது. எனவே, இவை மெதுவாகவே தரையிறங்குகின்றன. தரை உள்ள தூரத்தைச் சரியாக நிர்ணயிக்கின்றன.

சுமார் 14.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு செல் அல்கா ஒன்றை புதைபடிமமாக கண்டு பிடித்துள்ளனர். இது மரப்பிசியில் ஒட்டிக் கொண்டுள்ளது. இப்போது இது பாரிஸின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 23 2009: அலெக்ஸ் ஈவுன்புக் என்ற இரண்டு வானவியலாளர்கள் இரண்டு பழுப்பு குள்ளன் அளவுள்ள பொருட்கள் ஒரு பெரிய அசுர வின்மீனை சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளனர். இவை வியாழனைவிட 21 மடங்கு, 13 மடங்கு பெரியவை. ஒன்று அசுர விண்மீனை 380 நாட்களிலும், மற்றொன்று 622 நாட்களிலும் அசுர விண்மீனை (சூரியனைச்) சுற்றிவருகிறது. (அனைத்து விண் மீன்களும் சூரியனே அனைத்து சூரியன்களும் வீண்மீன்களே)

இளைஞர் முழக்கம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை


இன்றைய பொன்மொழி:
"நீ  யாருக்காக  வாழ்கிறாயோ"... அவர்களுக்காக  சிலவற்றை  விட்டு  கொடு !.
"உனக்காக  யார்  வாழ்கிறார்களோ " அவர்களை  யாருக்காகவும்  விட்டுகொடுத்து  விடாதே !!! 

இன்றைய விடுகதை:  கொதிக்கும் குளத்தில் குதிப்பான், குண்டுப் பையனாய் மிதப்பான்- அவன் யார்?  

முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை:
குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன?
விடை: ஊசி நூல் 


2 கருத்துரைகள்:

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

அரிய தொகுப்பு..

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

தாய்ப்பால் மற்றும் டெக்டானிக் தட்டுகள் குறித்த தகவல்கள் ஆச்சர்யம் அளித்தன...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1