
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.
சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.
ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.
துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.
தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.
கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.
புத்தரின் கூற்றுக்கள்
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.இன்றைய பொன்மொழி:
தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும். - புத்தரின் போதனைகள்
இன்றைய விடுகதை:விடை அடுத்த பதிவில்....
கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம் நிற்குது- அது உன்ன?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை: இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன? விடை: தட்டான்.
7 கருத்துரைகள்:
புத்தர் வாழ்க்கை வரலாறு படங்கள் அருமை... இவை அனைத்தும் கலெக்ஷனில் வைக்கப்பட வேண்டியவை...
அரிய கௌதம புத்தரின் படங்கள் அனைத்து அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அருமையான பதிவு. அறிந்து கொண்டேன். நன்றி நண்பரே.
அருமை... நன்றி...
Ref: http://www.tamilvaasi.com/2013/07/useful-tips-for-bloggers.html
Really Your Post is Best... It is Nice
-Top 10 Worst Mistakes on Blog
-Avoid The Mistakes Below on Your Blog
-Secrets to Increase PageRank @ Jet speed
-Top topics of post That will get more Hits
-Choose Perfect Domain for Your Blog
-Best Software on Planet to Blog
-How to Restore Blog from Back Up
-Best Methods to get Traffic for Blog
-Facebook Popup Code for Blogger
-Add Google+ Comment Plugin to Blogger
-Best method to choose permalink for Blogger
-Secret to Change Template in Blogger
-Mention People in Blogger
-How to Earn Money with Blog
-5 ways to Increase Alexa Rank
-Get More Facebook Likes
புத்தரின் வரலாறை முதல் முதலில்
உங்கள் பதிவி மூலமே அறிந்து கொண்டேன் நன்றி
அவர் மீண்டும் வந்தால் அவருடைய முதல் சீடனாக ஆசைப்படுகிறேன்.