CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!நான் சாப்பிட்ட பொங்கல்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
           என்ன மக்கா? பொங்கல் பண்டிகை எப்படி இருந்துச்சு எல்லோருக்கும்?
        நான் எப்படி பொங்கல் கொன்டாடுனேன்னு தெரிஞ்சுக்கங்க. இந்தப் பதிவு பிடிக்கலன்னா என்னைய திட்டாதீங்க.. இந்த பதிவுல நான் சாப்பிட்ட பொங்கலைப் பத்தியும் சொல்லியிருக்கேன். கண்டிப்பா படிங்க.. நம்ம தமிழக மக்களை எந்த அளவுக்கு முட்டாளா ஆக்கியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்குவீங்க.         நான் என் குடும்பத்தோட வெள்ளிக்கிழமை சாயங்காலம் என் ஊரான சின்னாள பட்டிக்கு டூவீலரில் சென்றேன். அப்பத்தானே மனைவியோட ஊர் சுத்த முடியும்? நான் டெயில்லியும் நெட்ல உட்கார்ந்து பழகியாச்சா? சரின்னு , ஒரு ப்ரொவ்சிங் சென்டருக்கு போனேன்.
          அங்குள்ள இன்டர்நெட் செண்டர்க்கு சென்று நம்ம நண்பர்களுக்கெல்லாம் பொங்கல் வாழ்த்து சொல்லலாம்னு ஜிமெயில் ஓபன் செய்தேன். Loading ஆகவில்லை. சரி, தமிழ்வாசியை ஓபன் செய்தாலும் ஓபன் ஆகவில்லை..  blogger - ம் ஓபன் ஆகவில்லை. எனக்கு வெறுப்பாயிருச்சு. என்னடா இது? நல்ல நாள் அதுவுமா நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லலாம் என்றும், நம்மளும் புதிய பதிவும் போடலாம்னு நெனச்சா இப்படி இணையத்தளம் ஓபன் ஆகாமல் சண்டித்தனம் செய்தது.
         சென்டர் ஓனரிடம் பிரச்னையை சொன்னேன். என்னத்த ஓபன் செஞ்சு வச்சிருக்கேன்னு வந்து பார்த்தார். அவரு  firefox - ல் ஒரு புது விண்டோவை ஓபன் செய்து ஜிமெயில் ஓபன் செய்தார், அப்போதும் ஓபன் ஆகவில்லை. உடனே swith to basic html  - ஐ கிளிக் செய்தவுடன் ஒரு வழியா ஜிமெயில் ஓபன் ஆனது. எனக்கு gmail standard version வேணும்னு கேட்டேன். அவர் server problem - ஆ இருக்கும், என சொன்னார். அவரிடம் மேலும் பேசுகையில் அங்குள்ள இன்டர்நெட் தொடர்பு BSNL என தெரிந்து கொண்டேன். அப்படின்னா இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்னு நேனசிக்கிடேன். அடுத்த நாள் பொங்கலுக்காக செனட்டர் லீவாம். சரி, இன்னைக்கு நம்ம நேரம் சரியில்லைன்னு நெனச்சிக்கிட்டேன்.

        அடுத்த நாள் பொங்கல். காலையிலேயே சீக்கிரமா எழுப்பி விட்டுட்டாங்க என் அம்மா. (நம்ம எப்பவுமே லீவுன்னா போர்வையை முழுசா முக்காடு போட்டுத் தூங்குரவிங்க.)  அப்புறமா குளிச்சு புது டிரஸ் போட்டு பொங்கப் பானையை வச்சு அப்பா,அம்மா எல்லோரோட சேர்ந்து சாமி கும்பிட்டு அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். இலையில வச்ச பொங்கலைப் பார்த்து மிரண்டு போனேன்.. அதுக்கு காரணம் பொங்கல் கரும் பச்சை நிறத்தில் இருந்துச்சு. அம்மாகிட்ட கேட்டப்போ இறக்கி வச்சப்ப நல்லா இருந்துச்சாம். எங்களுக்கு ஒண்ணுமே புரியல.. ஆனா சாப்பிட்டா நல்லா டேஸ்டா தான் இருந்துச்சு.
         அப்புறமா கரும்பு சாப்பிட்டு பின்னர் மனைவியோட சித்தி வீட்டுக்கு போனோம். நாங்க கொண்டு போன பொங்கலைப் பார்த்து அவங்க கேட்டக் கேள்வி எங்கள் அனைவரையும் ஷாக்கடிக்க வைத்தது. அப்படி என்ன கேட்டாங்க தெரியுமா? ரேசன்ல இலவசமா கொடுத்த மண்டவெல்லத்த  போட்டு பொங்கல் வட்சீங்களானு  தான் கேட்டாங்க.. அம்மாகிட்ட கேட்டப்ப கடையில வாங்குன வெல்லத்தோட, ரேசன் வெல்லத்தையும் கலந்து போட்டு செஞ்சாங்களாம்.  மனைவியோட சித்தி ரேசன் வெல்லத்த தண்ணீல கரைச்சு காமிச்சாங்க. சும்மா திக்கா கரும் பச்சை நிறத்தில் இருந்துச்சு. அப்பத்தான் தெரிஞ்சது இலவசத்துல எனத்தையோ இலவசமா சேத்துட்டாங்கனு.
          அப்புறமா மனைவியோட சேர்ந்து என்னுடைய நண்பர்கள் வீடு, திண்டுக்கல்லுன்னு சுத்திட்டு வீட்டுக்கு வந்தா இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மேட்ச் அப்பா பார்த்துக்கிட்டு இருந்தாங்க, அப்பத்தான் எனக்கு மேட்ச் ஞாபகமே வந்துச்சு.  அப்பாவோட சேர்ந்து நானும் மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன். இந்தியா வெறும் 190 ரன்கள் தான், இன்னைக்கும் இந்தியாவுக்கு ஆப்பு தான்னு நெனெச்சேன். அது மாதிரியே தென்னாப்பிரிக்கா வீரர்கள் சும்மா சூப்பெரா வெலயாடுனாங்க. மேட்ச் பாக்க பிடிக்காம தூங்கி விட்டேன். 
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை
           காலையில் நான் என்திரச்சவுடனே அம்மா சொன்னாங்க இந்தியா ஒரு ரன்ல ஜெயிச்சிட்டாங்கனு . ஒரே சந்தோசம் எனக்குள்ள, டீவிய போட்டா மேட்ச் ஹைலைட்ஸ் போட்டுக்கிட்டு இருந்தாங்க, புல்லா பார்த்தேன்.
           ரெண்டு நாளா நெட்டுப் பக்கம் போகாம இருந்ததுல பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.  வேற வழி இல்லாம அதே ப்ரொவ்சிங் சென்டருக்கு சென்றேன்.. அப்பாவும் என்னை நெட் ஸ்பீட் ரொம்ப சோதிச்சது. வேற வழ்யில்லாம வீட்டுக்கு வந்து நல்லா சாப்பிட்டு ஒரு தூக்கம் போட்டேன்.
         சாயந்திரமா மூட்ட முடிசுகள கட்டிட்டு மதுரைக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்து இன்டெர்நெட்ட ஆன் பண்ணுனதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் நிம்மதியா இருதுச்சு. நம்ம ப்ளோக்ல என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டு வந்ததையே எழுதலாம்னு இப்ப எழுதிக்கிட்டு இருக்கிறேன்.
           இந்த பதிவு சிலருக்கு அறுவையாக இருக்கலாம், சிலருக்கு சுவையாகவும் இருக்கலாம். இந்த பொங்கல் ட்ரிப்பில் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி எதுன்னா? இன்டர்நெட் ஸ்பீட், தமிழக அரசின் இலவச மண்டவெல்லப் பொங்கல், இந்தியா வெற்றி. இவை மூன்றும் தான்.
          மண்டவெல்லத்துல என்ன கலந்திருப்பாங்கன்னு யாராச்சும் சொல்றீங்களா? மதுரையில என் மனைவி வீட்டுக்கும் போனால் அங்கேயும் கரும் பச்சை பொங்கல் தானாம்.  தமிழ்நாட்டுல எல்லா இடத்திலையும் இந்தப் பொங்கல் தானா????????

இன்றைய பொன்மொழி: 
ரோஜா  செடியில்  முட்கள்  குத்திய  பிறகே  அந்த அழகான  மலரை  பறிக்க  முடியும்,
அது போல்  வாழ்க்கையில்  பல  துன்பத்திற்கு  பிறகுதான்  இன்பமும்,  மகிழ்ச்சியும்  மலராய் பூக்கும் . 

இன்றைய விடுகதை: 
கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
விடை  அடுத்த பதிவில்....
 முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை: சிலந்தி 
சரியான விடை சொன்ன Philosophy பிரபாகரன் க்கு வாழ்த்துக்கள்.

 


3 கருத்துரைகள்:

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நன்று பிரகாஷ்.இன்டர்நெட் வேகம் பெரிய ஊர்களை தவிர எல்லா இடங்களிலும் இதே பாடு தான். பதிவு நன்றாக இருந்தது. நிறைய படியுங்கள், உபயோகமான பதிவுகளாக எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Rathnavel கண்டிப்பாக நல்ல உபயோகமான பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன்.

அமைதி அப்பா said... Best Blogger Tips

எனது நண்பரும் இதைக் குறிப்பிட்டார். இந்த வருஷம் கலர் பொங்கல் போல! சந்தோஷமா எடுத்துக்க வேண்டியதுதான்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1