CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!உடல் எடையை குறைக்க வேண்டுமா? கீழே படிங்க.

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
       
        உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை  சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.

சேர்க்க வேண்டிய உணவுகள்: 
6.00 AM
GREEN TEA - யை  பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10  நிமிடம் கழித்து பருக வேண்டும்.8.00 AM
வேக  வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.

11.00 AM
முட்டைகோஸ் சூப்  (அ) காய்கறி சூப்.


1.00 PM
ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.

4.00 PM
GREEN TEA + ஒரு  ஆப்பிள் (அ)  ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.

7.30 PM
கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.


தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:

 


        கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.

எளிமையான உடற்பயிற்சிகள்:
            ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள்  தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYMவெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.
           கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம்.

          மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.


        உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

இன்றைய பொன்மொழி: 
மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே.
- பார்பரா ஷெர்

இன்றைய விடுகதை:
எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

முந்திய  பதிவின் விடுகதைக்கான விடை: புகை வண்டி.  

முந்திய விடுகதைக்கு  பதிவை பார்க்க: ஓய்வு பெற்றார் கங்குலி
 


19 கருத்துரைகள்:

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

அய்யா எனது உடல் எடை மிகவும் குறைவாக இருக்கிறது... அதற்கு ஏதாவதொரு வழி சொல்லுங்களேன்...

ப.கந்தசாமி said... Best Blogger Tips

இன்றைய பொன்மொழி: மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே. - பார்பரா ஷெர்மறுமொழி போடறதுக்கு பயமாய் இருக்குதுங்க,

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

நான் சற்றே மூன்று கிலோ மட்டும் தான் குறைக்க வேண்டும். அதற்கு இவ்வளவு கடுமையான உணவுப் பழக்கங்கள் தேவை இல்லை என நினைக்கிறேன். நடைப்பயிற்சி மட்டுமே போதுமென நினைக்கிறேன். மற்ற நண்பர்களுக்கு பயனுள்ள தகவல். இதைப் பயன படுத்தி வெற்றி கண்ட பின் இடுகையாக வெளியிட்டமை நன்று. வாழ்க வளமுடன் - குறைந்த எடையுடன்.

Unknown said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே

FARHAN said... Best Blogger Tips

முயற்சித்து பார்கின்றேன் நண்பா

Unknown said... Best Blogger Tips

இது நமக்கு தேவை படாது ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

best ideas! i try to follow these

ஆனந்தி.. said... Best Blogger Tips

ஹாய்..நம்ம ஊரு...:))) கிரீன் டீ இல் தேன் விட்டு குடிக்கலாமா????

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Philosophy Prabhakaran
///அய்யா எனது உடல் எடை மிகவும் குறைவாக இருக்கிறது... அதற்கு ஏதாவதொரு வழி சொல்லுங்களேன்...////
மனசை சந்தோசமா வச்சுக்கங்க. நான் சொல்லியுள்ள உணவுகள் அனைத்துமே நல்லா சாப்பிடுங்க, கண்டிப்பா உடல் ஆரோக்கியமா இருக்கும்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@cheena (சீனா)///நான் சற்றே மூன்று கிலோ மட்டும் தான் குறைக்க வேண்டும். அதற்கு இவ்வளவு கடுமையான உணவுப் பழக்கங்கள் தேவை இல்லை என நினைக்கிறேன்.///
அம்மா கிட்ட கேளுங்க , கண்டிப்பா எடையை சற்று கூட்ட வேண்டும் என சொல்வார்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

///DrPKandaswamyPhD, விக்கி உலகம், FARHAN, நா.மணிவண்ணன், மாத்தி யோசி, middleclassmadhavi,/// இவை டயடிற்கான உணவுகள் மட்டும் அல்ல. உடல் ஆரோகியதுக்குமான உணவுகள் தான்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஆனந்தி..
///ஹாய்..நம்ம ஊரு...:))) கிரீன் டீ இல் தேன் விட்டு குடிக்கலாமா????///
தாங்கள் முதல் வருகை என நினைக்கிறேன், நன்றி.
அடுப்பிலிருந்து இறக்கி வைத்த காய்ச்சிய சுடு நீரில் மூன்று, நான்கு green tea இலைகள் மட்டும் சேர்த்து பத்து நிமிடம் ஊறிய பின்னர் பருக வேண்டும். தேன் சேர்க்க தேவையில்லை. green tea அருந்திய பின்னர் நடை பயிற்சியோ (அ) உடற்பயிற்சியோ செய்தால் மிகவும் நல்லது.

ராவணன் said... Best Blogger Tips

மதுரையா..........? அதுதான் காமடி!இது தமிழர்களுக்கு சரி வராது. சும்மா லூஸ்ல விடுங்க பாஸ்.அப்படியே ஜெய்ஹிந்புரம் முருகன் தியேட்டர் பக்கமா வந்தா பத்தே நாளில் பத்து கிலோ குறைக்கலாம், அல்லது கூட்டலாம்.

மதுரை சரவணன் said... Best Blogger Tips

முயற்சி செய்கிறேன்... பகிர்வுக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@மதுரை சரவணன் At least, Green Tea மட்டுமாவது பருகுங்கள்.

Speed Master said... Best Blogger Tips

உடல் எடை ஏறவும் 6 பேக் வரவும் வழி சொல்லவும்

Thanglish Payan said... Best Blogger Tips

Its good..

keep posting..

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

hello sir
I am happy that i came across your blog
particularly this blog
since I am more than 90 kgs
your blog gave me very good motivation to reduce my weight. thank you

ப.கந்தசாமி said... Best Blogger Tips

இந்த உணவைச் சாப்பிட்டால் மூன்று வாரத்தில் உங்கள் எடை முழுவதும் குறைந்து உங்கள் முன்னோர்களைச் சென்றடையலாம். இது உறுதி.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1