CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg photo PARTIMAGE16.jpg
     

    அன்பார்ந்த வாக்காள பெருமக்களே,  (இல்லையில்லை) அன்பார்ந்த வாசக பெருமக்களே!

அடச்சே! ஆரம்பத்துலேயே தடுமாற்றமா?

       மக்களே! தேர்தல் தேதியும் அறிவிச்சுட்டாங்க, கட்சிகளும் அவங்க அவங்க கூட்டனிய முடிவு பண்ணிட்டாங்க. ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகள வாய்க்கு வந்ததெல்லாம் சும்மா இலவசமா அள்ளித் தெளிப்பாங்க.
    
        இதோ இப்ப ஆளுங்கட்சி தன் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிச்சிருக்கு. படிச்சுட்டு மறக்காம ஆளுங்கட்சிக்கு ஒட்டு போட்டுடுங்க. •  ஒரு ருபாய்க்கு வழங்கும் அரிசியோடு பருப்பையும் ஒரு  ரூபாய்க்கு கொடுக்கப்படும் 

நம்ம கமெண்ட்டு:
அப்ப மாட்டு தீவனத்துக்கு இன்னும் சத்தான உணவு கிடைச்சிடுச்சு.

 •  எல்லா மக்களுக்கும் கலர் டிவி கொடுத்த மாதிரி DVD பிளேயர் கொடுக்கப்படும், அதில் போட்டு படம் பார்க்க எல்லா ஊர்களிலும் CD கடை அரசு சார்பில் தொடங்கப் படும். மக்களுக்கு மணியம் விலையில் எல்லாவித CD - களும்  விற்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
எல்லா விதமான CD -ணா, அப்ப அந்த மாதிரி CD - களும் கிடைக்குமா?

 • பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை, பொங்கல் சாமான்கள் கொடுத்த மாதிரி, தீபாவளிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக பட்டாசுகள் கொடுக்கப்படும் (பின்குறிப்பு: பட்டாசு வேடிக்கலைனா அரசு பொறுப்பல்ல!) அதோடு பட்டாசுகளை பற்ற வைத்து வெடிக்க பத்திகளும் இலவசமாக கொடுக்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
அப்ப தீபாவளிக்கு வேட்டி, சேலையெல்லாம் கிடையாதா?

 •  மீனவர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு படகிற்கும் ஒரு துப்பாக்கி கொடுக்கப்படும். குண்டுகளும் இலவசமாக வழங்கப்படும். மீனவர்கள் அவர்களாகவே தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
நம்ம கமெண்ட்டு:
நம்மாளுக எதிரிகள சுட்டு வீழ்த்துராங்களோ, இல்லையோ மீன்களை சுட்டு வீழ்த்துவாங்க.

 • இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் திட்டம் மாணவர்களிடையே வெற்றி பெற்றது போல, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக தரப்படும். 
நம்ம கமெண்ட்டு:
அப்ப வண்டி ஓட்ட பெட்ரோலும் தருவீங்களா?

 • பேருந்தின் டிக்கெட் விலை உயர்த்தப்பட மாட்டாது. மக்களின் சொகுசுக்காக அனைத்து  தாழ்தள பேருந்து, விரைவு பேருந்துகளில் படுக்கை சாய்மான இருக்கைகள் பொருத்தப்படும். இதற்கு பயண சீட்டுடன் ருபாய் 10 மட்டும் சேர்த்து வசுலிகப்படும்.   

 நம்ம கமெண்ட்டு:
இதுக்கு பேரு கட்டண உயர்வு இல்லையாக்கும்?

 • காவிரி நீரை கர்நாடகா தர மறுப்பதால் அவகளுக்கு லஞ்சம் கொடுத்தாவது தண்ணீரை தமிழக மக்களுக்கு பெற்றுத் தர முயற்சி எடுக்கப்படும்.

நம்ம கமெண்ட்டு:
அடங் கொக்கமக்கா இப்படியும் ஒரு லஞ்சமா?

 • தமிழகத்தில் புதிதாக தொழ்ற்சாலை தொடங்க வருபவர்களுக்கு அரசே நிலத்தை கையகப்படுத்தி அவர்களுக்கு கொடுக்கப்படும். புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

நம்ம கமெண்ட்டு:
ம்க்கும், பல லட்சம் மக்கள் வீடிழப்பார்கள்.


 • பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் பெயில் ஆகும் மாணவர்களுக்கு கூடுதலாக ஐந்து மார்க்குகள் இலவசமாக போடப்பட்டு பாசாக்க முயற்சி எடுக்கப்படும். 

நம்ம கமெண்ட்டு:
அடப்பாவிகளா! பரிட்சையிலும் இலவசமா? வெளங்கிடும்.

 • தமிழ் பெயரில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பது போல, பிறமொழி சொற்கள் கலக்காமல் திரைப்படங்களில் பாடல்கள் அமைத்தால், அந்த திரைப்படங்களை அரசே விநியோக உரிமையை வாங்கி அரசு சார்பில் தியேட்டர்களில் வெளியிடப்படும். முதல் நாள் ஷோ இலவசமாக காண்பிக்கப்படும்.

நம்ம கமெண்ட்டு:
பிறமொழி கலக்கக் கூடாதாம், முதல் நாள் ஷோ இலவசமாம். அப்ப ரெண்டாம் நாளே படத்த தியேட்டரிலிருந்து தூக்கிருவாங்க. பாவம் தயாரிப்பாளர்.
 • இலவச காஸ் அடுப்பு வழங்கியது போல, அடுப்பில் வைத்து சமைக்க இலவச குக்கர் வழங்கப்படும். 

நம்ம கமெண்ட்டு:
இதுக்கு, சோற்றையே இலவசமா கொடுத்துடலாம்.          மக்களே! இன்னும் இன்னும் ஏதாவது திட்டங்கள் தேவையெனில் அரசுக்கு விண்ணப்பம் கொடுங்கள். சட்டமன்ற கூட்டுக்குழு மூலம் பரிசீலனை செய்து முடிந்தவரை இலவசமாக வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

 ஏதோ, என்னால இந்த நடிகைங்க படத்தை தான் இலவசமா போட முடிஞ்சது. ஹி...ஹி....ஹி.... 


இன்றைய பொன்மொழி:
       நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். விடிவெள்ளிக்கு சற்று முன்பு இருள் அதிகமாகவே இருக்கும். 

இன்றைய விடுகதை:  அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு அங்கம் முழுவதும் தங்கக் கண்ணாடி. அவன் யார்?
விடை அடுத்த பதிவில்......

முந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: மண்பாண்டம் 
முந்தய விடுகதையின் பதிவை பார்க்க:    சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ
 


16 கருத்துரைகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

ஏதோ, என்னால இந்த நடிகைங்க படத்தை தான் இலவசமா போட முடிஞ்சது. ஹி...ஹி....ஹி....

இதுவே போதுமையா!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஓட்ட வட நாராயணன்
///ஏதோ, என்னால இந்த நடிகைங்க படத்தை தான் இலவசமா போட முடிஞ்சது. ஹி...ஹி....ஹி.... ///

நம்மளால முடிஞ்சத நம்ம மக்களுக்கு செஞ்சிருக்கேன். அவ்வளவு தான்

பிரபாஷ்கரன் said... Best Blogger Tips

நல்ல காமெடிங்க சரி நீங்க போட்டுள்ள படங்களை பார்த்தவுடனே மேட்டரை படிக்க முடியாது போலிருக்கே . நீங்க கவர்ச்சி திட்டம் நிறைய செய்வீங்க போலிருக்கே

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பிரபாஷ்கரன்
///நல்ல காமெடிங்க சரி நீங்க போட்டுள்ள படங்களை பார்த்தவுடனே மேட்டரை படிக்க முடியாது போலிருக்கே . நீங்க கவர்ச்சி திட்டம் நிறைய செய்வீங்க போலிருக்கே///

நம்பள நம்பி வர்றவங்கள ஏமாத்தக் கூடாது. கண் குளிர படி(பார்)க்கணும்.

தமிழ் உதயம் said... Best Blogger Tips

உங்க இலவச சேவை நாட்டுக்கு தேவை.

MoonramKonam Magazine Group said... Best Blogger Tips

விட்டா நீங்களே தேர்தல்ல நின்னுடுவீங்க போல நண்பா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தமிழ் உதயம்
///உங்க இலவச சேவை நாட்டுக்கு தேவை.///

அதுக்குத்தானே இருக்கோம்.

தமிழ் 007 said... Best Blogger Tips

நல்ல கற்பனை.... சூப்பர்!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை
///விட்டா நீங்களே தேர்தல்ல நின்னுடுவீங்க போல நண்பா///

இப்படியே உசுப்பேத்த நாட்டுல ஒரு கூட்டமே இருக்கு. அதுல ஒருத்தர் நீங்கதானா.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தமிழ் 007
///நல்ல கற்பனை.... சூப்பர்!///
வாங்க, வணக்கம்....

Anonymous said... Best Blogger Tips

நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்

Yoga.s.FR said... Best Blogger Tips

"எல்லாம்" நல்லாருக்கு!!!!!!!!!!!!?

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நடந்தாலும் நடக்கலாம்.

Unknown said... Best Blogger Tips

நீங்களும் நல்லாவே அரசியல் நடத்துறீங்க...

சாமக்கோடங்கி said... Best Blogger Tips

இதற்குப் பேர் தான் "கவர்ச்சி"த் திட்டங்களா..??

எப்படியோ பதிவைப் படிக்க முடியாத அளவுக்குச் செய்து விட்டீர்..

நல்ல நகைச்சுவை உணர்வுடன் கூடிய பதிவு..

இலவசங்கள் இருக்கும்வரை திமுகவை யாரும் அழிக்க முடியாது..

cheena (சீனா) said... Best Blogger Tips

நல்லாவே இருக்கு - ம்ம்ம்ம்ம்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1