CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தனபாலு...கோபாலு.... புதிய அரட்டைப் பகுதி இன்று முதல் ஆரம்பம்.. இவிங்களுக்கு எத,எத பேசறதுன்னு ஒரு வரைமுறையே கிடையாது. எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க... இவிங்க என்ன பேசுராங்கன்னு அடிக்கடி கேட்ப்போம்.


தனபாலு: டேய், கோவாலு...ஒனக்கு விஷயந் தெரியுமா? நம்ம விஜய் ஆரம்பிச்சிருக்குற இயக்கத்துக்கு அ.தி.மு.க. தரப்புலயிருந்து மூணு சீட்டு ஒதுக்குராங்கலாம்டா...கோபாலு: இந்த மேட்டர நானும் கேள்விப்பட்டேண்னே, விஜய் போட்டியிட மாட்டாராம். அனா அவங்க அப்பா புதுக்கோட்டை தொகுதியில நிக்கப் போறாராம்.

தனபாலு: விடுறா பேச்சை, அவிங்களும் அவிங்க இயக்கமும்.. அப்புறம் வேற என்ன மேட்டரு.

கோபாலு: காங்கிரஸ் கூட்டணில இருந்து தி.மு.க. பிரிஞ்சு, அப்புறமா ரெண்டு மூணு  நாளு டேக்கா கொடுத்துட்டு மறுபடி கூட்டணி சேந்துக்கிட்டாங்கள.. அதுக்கு என்ன காரனமுன்னு தெரியுமா?

தனபாலு: தெரியும்மடா! நம்ம மு. க. வோட குடும்ப விசயம்தான் காரணம்ன்னு உள்ளுக்குள பேசிக்குறாங்கடா.

கோபாலு: அண்ணே! அமெரிக்காவுல சிலந்திய வச்சு ஒரு ஆராய்ச்சி பண்றாங்க. அந்த ஆராய்ச்சி சக்சஸ் ஆச்சுன்னா அமேரிக்கா போற மொத ஆளு நான்தான்.

தனபாலு: அட தீவட்டி தலையா? என்னடா..அமேரிக்கா ஆராய்ச்சின்னு ஒளருற. தெளிவா சொல்லுடா...இல்ல அடிச்சு புடுவேன்.

கோபாலு: அண்ணே! ஒங்க காத கொடுங்க... விஷயம் என்னான்னு ரகசியமா சொல்றேன்...

தனபாலு: என்னடா...காத கீத கடிச்சு ருசி பாத்துட மாட்டேயே...ம்ம்ம்...சும்மா சொல்லு விசயத்த.

கோபாலு: அதாவது என்னா ஆராய்ச்சின்னா...சொல்றதுக்கே சும்மா கிளுகிளுப்பா இருக்கண்ணே..ஒரு வகையான செலந்தில இருந்து வயாக்கரா மாதிரி ஒரு மாத்திர தயாரிக்கற ஆராய்ச்சி தாண்ணே அது...

தனபாலு: சரிடா... சினிமா செய்தி ஏதும் வச்சிருக்கியா?

கோபாலு: நம்ம அனுஷ்கா, நம்ம அனுஷ் நடிகைக்கு இந்திப் பட வாய்ப்பு வந்துச்சாம். ஆனா அம்மிணி காட்டுன கிராக்கில வாய்ப்பு கை நழுவி போச்சாம்.


தனபாலு: டை கண்ணா, மேட்டர தெளிவா சொல்லு. எதுனால கை நழுவுச்சாம்?

கோபாலு: வேறென்ன, எல்லாமே பணத்தாசை தான்... கொஞ்சம் பேமசு ஆயிட்டா போதும், தங்களோட கிராக்கிய ஏத்திக்கராங்களே. ம்ம்ம்... அதுகனால முடியுது...

தனபாலு: சரி அத விடு... நம்ம மூனுஷா நடிகைக்கும், ஹைதராபாத் தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சுச்சுன்னு ஒரு வதந்தி பரவிக்கிட்டு இருக்குடா.. அதுவும் கல்யாணத்த கொஞ்ச நாள் கழிச்சு வச்சுக்கலாம்னு மூனுஷா தள்ளி போட்டிருக்காம்.

கோபாலு: சரிண்ணே! கொஞ்ச நாளுக்கு முன்னாடி கூட மூனுஷா பத்தி ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன்.. அது என்னானா? கல்யாணம் ஆகி ஒரு கொழந்தையே பொறந்திருக்காம்... எப்படியெல்லாம் பிட்டு போடுறாங்க... இதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு போல...


தனபாலு: டேய்... ஜெனரல் நாலேஜ் கேள்வி கேக்கிறேன், கரெக்டா சொல்றியானு பாக்கலாம்..

கோபாலு: என்கிட்ட ஜெனரல் நாலேஜ் கேள்வியா? ம்ம்ம்... கேளுங்க..

தனபாலு: தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டி யார்னு சொல்லு? பாக்கலாம் ஒன்னோட திறமைய....

கோபாலு:  நமீதா... என் தலைவி நமீதா... தான் தமிழ்நாட்டின் செல்ல சீமாட்டி. அண்ணே, நமீதா பத்தி எந்த நியூஸ்னாலும் நம்மளுக்கு தெரியாம போகாது.. நாங்க அதுல வெவரமுள்ள... ஏதோ ஒரு காலேஜ் பசங்க தலைவிக்கு அந்த பேர வச்சிருக்காங்க... பேரு நல்லயிருக்குதல்ல!

தனபாலு: சரிடா...சரிடா..நீ வெவரம் தாண்டா... வேற ஏதாவது உருப்படியானமேட்டரு வசிருக்கியாடா?

கோபாலு: அண்ணே! இப்ப பிளஸ் டூ பரிட்சை நடக்குதல்ல... அதுல தமிழுக்கும், இங்கிலீசுக்கும் கேள்வி ரொம்ப ஈசியா கேட்டிருந்தாங்கலாம். நம்ம பக்கத்து வீட்டு குமாரு சொன்னான்.

தனபாலு:  டேய், அந்த குமாரு பய கூட நீ அடிக்கடி பேசுரதுக்கான காரணம் எனக்கு தெரியுமுடா... அவன் அக்காள ரூட்டு விடுறேல....நானும் கொஞ்ச நாளா பாத்துக்கிட்டு இருக்கேன்....

கோபாலு: அண்ணே! அப்படியில்ல... சும்மா ஒரு பிரன்ட்ஷிப்புக்கு தான்..

தனபாலு: இந்தமேட்டர ஒரு நாளைக்கு கையும் களவுமா பிடிக்கறேண்டா.. அப்ப தெரியும் பிரன்ட்ஷிப்பா, இல்ல வேறையான்னு....

கோபாலு: அண்ணே! எனக்கு ஒரு வேலை இருக்கு... இன்னொரு நாள் பெசலாம்னே... இப்ப போயிட்டு வர்றேன்....

தனபாலு: தம்பி... எஸ்கேப் ஆகுறியா... போய்ட்டு வா... இன்னொரு நாள் ஒன்ன வச்சுக்கிறேன்.....


இன்றைய பொன்மொழி:
தோல்விகளை  கண்டு அஞ்சுபவனிடத்தில் வெற்றி விலகி விடுகிறது.


இன்றைய விடுகதை:
மடியிலே  பறித்தால், பிடி இலை இல்லை. அது என்ன?
விடை அடுத்த பதிவில்......

முந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: மயில்
முந்தய விடுகதையின் பதிவை பார்க்க:  ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்


19 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1