CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


தனபாலு:  கோபாலு... கோபாலு... வீட்டுக்குள உட்கார்ந்து என்னடா செயற?

கோபாலு:  டி வி ல நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஜப்பான்ல சுனாமி வந்துச்சுல்ல.... அந்த நியூஸ் தான் பார்திக்கிட்டு இருக்கேன்...தனபாலு:  பாவம்டா ஜப்பான் மக்கள்... வீடிழந்து, உடமைகளை இழந்து தெருவுல குளிருல இருக்காங்க... ஆயிரக்கணக்கானோர் எங்க போனாங்கன்னே தெரியலியாம். அவங்களுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.

கோபாலு:  ஆமாண்ணே! நானும் அனுதாபப் படுகிறேன். என்ன விசயமா தேடி வந்திங்கண்ணே?

தனபாலு:  சும்மா! பொழுது போக்கலாம்ன்னு தாண்டா... விஷயம் தெரியுமா? ஜெயலலிதா ஒரு புது டெக்னிக் யூஸ் பண்ணப் போறாங்க..இந்த தேர்தல்லுல...

கோபாலு:  ஆமாண்ணே... அது என்ன டெக்னிக்ன்னு நான் சொல்லட்டுமா? தன்னோட கட்சி வேட்பாளர் தவிர அறுபது சுயேச்சை வேட்பாளர்களையும் அவங்க செலவுலேயே நிறுத்தப் போறாங்க... இதுனால எலெக்ட்ரானிக் ஓட்டு பெட்டிய யூஸ் பண்ண முடியாது... வாக்கு சீட்டு முறையைத்தான் யூஸ் பண்ணனும். அதுக்கு தான் இந்த புது டெக்னிக்..


தனபாலு:  ச்சே... நம்ம பயபுள்ளைக தென்னாப்ரிக்கா கிட்ட இப்புடி மன்ன கவ்விட்டாங்களேடா. பாட்டிங் ஆர்டர மாத்தி நிறைய ரன்கள் எடுக்க முடியாம சொதப்புனாங்க.

கோபாலு:  எல்லாம் இந்த தோணி பயளால வந்தது வினை. சரி... பௌலிங்ல நம்ம பயலுக தேறிருவாங்கன்னு பாத்தா, நெக்ரா கடைசி ஓவர்ல சொதப்பிட்டான். நம்ம சச்சினோட செஞ்சுரி வீணாப் போச்சு.

தனபாலு:   டேய் தம்பி, சேதி தெரியுமா.. நம்ம தமன்னா புள்ள ஜோதிகாவோட கொழுந்தனை லவ்விக்கிட்டு இருக்காங்கன்னு நெனச்சா,  முன்னாள் நடிகை அமலாவுக்கு மருமகளா ஆகப்போறா. அமலாவோட  மகனத்தான் லவ்விக்கிட்டு இருக்காங்களாம். ரெண்டு பெரும் பிரீயா பேசுற ஜோடி நம்பர போட்டு மணிக்கணக்குல அரட்டை அடிக்குதுகளாம்.கோபாலு:  இந்த நடிகைகளே இப்படித்தான்... பச்சோந்திக... அனுஷ்காவும் தெலுங்கு பக்கமாத்தான் காதல்ல விழுந்திருக்காங்களாம். டைரக்டர் கிரீஷ் தான் லவ்வர்ன்னு அவங்களே சொல்லியிருக்கர்தா பேப்பர்ல போட்டிருக்காங்க...


தனபாலு:   நமீதா அவங்க பரந்த மனசு மாதிரியே ஒரு சைடு தொழிலையும் பண்றாங்களாம். ஒருத்தர பிரண்டா சேத்துகிட்டு புதுசா ரியல் எஸ்டேட் மூலமா பெரிய பெரிய வீடு கட்டி விக்கராங்கலாம்.


கோபாலு:  அப்படியாண்ணே! நாமல்லாம் அந்த மாதிரி பரந்த பெரிய வீட்ட தூரத்துல இருந்து பாக்க மட்டும் தான் முடியும்...

தனபாலு:  டேய், இன்னொரு விஷயம் தெரியுமா? நம்ம கடைத்தெரு நாயகிக்கு பிரபல அரசியல் தளபதி அஞ்சு கோடில ஒரு பங்களா வாங்கி கொடுத்திருக்காராம். அந்த பங்களாவோட மர்மம என்னான்னு தான் எனக்கு புரியல...

கோபாலு:  அண்ணே! அந்த மர்மம் பத்தி அஞ்சு எலிகள்கிட்ட போய் கேளுங்க.. என்னான்னு கரெக்டா சொல்லும்...


தனபாலு:   கோபாலு... அண்ணனோட மெயில் க்கு ஒரு பாட்டு மெசேஜ் வந்துச்சு... பாடுறேன்.. நீயும் காத நல்லா கொடுத்து கேளு....


கோபாலு:  அண்ணே! நீங்க பாட்டு பாட போறீங்களா? வேனாம்ண்ணே....

தனபாலு:  இன்னைக்கு உன்னோட விதி என் பாட்டை கேட்கணும்னு இருக்கு...


(தனபாலு பாடுகிறான்)

உள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா,
ராசா வருவதை எதிர்கொள்ளடா..

கனிக்கு நீ கணவனில்லை
ராசாத்திக்கு மருமகனில்லை
ஊர் பழி ஏற்றாயடா ராசா –கஸ்பாரும்
உன் பழி கொண்டானடா....
(உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா... ராசா
வஞ்சகன் கலைஞரடா... ராசா வஞ்சகன் கலைஞரடா
(உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

90 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்
உன்னைத்தான் பிடித்தாரடா –
ராசா மன்னித்து அருள்வாயடா... ராசா மன்னித்து அருள்வாயடா
(உள்ளத்தில் கெட்ட உள்ளம்...)

கோபாலு:  அண்ணே! பாட்டு ரொம்ப சூப்பரு... பாவம் அந்த ராசா......

தனபாலு:  டேய்... இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம தமிழ்வாசி பிரகாஷ் வலைச்சரம் ஆசிரியர சிறப்பு பேட்டி எடுக்கிறாருல. அந்த பேட்டி தமிழ்வாசி வலைதளத்துல 150-வது பதிவா வரப போகுது....

கோபாலு:  அப்படியாண்ணே, எப்பண்ணே 150-வது பதிவு போடுராங்கலாம்? அவரோட பேட்டிய படிக்கணும்னு ஆசையாயிருக்கு.தனபாலு:  ரொம்ப நாள் வெயிட் பண்ண வேண்டாம்டா... அடுத்த பதிவே 150 தாண்டா....

கோபாலு:  சரிண்ணே, அப்புறம் கிளம்புறேன். அடுத்த வாரம் பேசலாம்.

இன்றைய பொன்மொழி:
தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்.
இன்றைய விடுகதை: 
ஒரு படி அரிசி போட்டு
ஊரு சனங்க எல்லாம் போட்டும்
மீந்து கிடக்குது இன்னும்.... அது என்ன?
விடை அடுத்த பதிவில்......
முந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: ஈ.
முந்தய விடுகதையின் பதிவை பார்க்க: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ


22 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1