CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
  தனபாலு...கோபாலு.... புதிய அரட்டைப் பகுதி. இவிங்களுக்கு எத,எத பேசறதுன்னு ஒரு வரைமுறையே கிடையாது. எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவாங்க... இவிங்க என்ன பேசுராங்கன்னு அடிக்கடி கேட்ப்போம்.


கோபாலு: அண்ணே! என்னாச்சு? ரொம்ப சோகமா ஒட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க... என்ன விஷயமண்ணே?

தனபாலு: வேற ஒன்னுமில்லடா... இந்த வை.கோ வை பத்தி நெனச்சு கவலைப் பட்டிட்டு இருக்கேன்.. பாவம், அவரோட அரசியல் வாழ்க்கையே இருண்டு போச்சு.கோபாலு: ஆமாண்ணே, அஞ்சு வருசமா, அ.தி.மு.க. கூட கூட்டணியில இருந்தும் இப்ப செல்லாக் காசாத்தானே இருக்காரு. போடாவுல ஜெயில்ல அடச்சும் ஜே- கிட்ட ஊறுகாய் மாதிரி தான் இருந்தாரு. இப்ப அந்த ஊறுகாய் ஊசி போச்சு பொல... அதான் கூட்டணில இப்ப நெறைய ஊறுகாய் வச்சிருக்காங்களே..


தனபாலு:  ஆமாண்டா, கூட்டணில ஒரு ஊறுகாய் சொல்லுச்சாம்,  இப்ப 41 எழுமிச்சங்காய் தான் இருக்கு. இன்னும் நாலு எழுமிச்சங்காய் கொடுத்தா உங்களுக்கு பிடிச்ச ஊறுகாயா இருப்போம்னு சொல்லியிருக்காங்க... ஜே, ஊறுகாயும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம்னு காட்டமா பேசியிருக்காங்க... அதனால அந்த ஊறுகாய் இருக்கிற எழுமிச்சங்காயே போதும்னு அமைதியாயிருச்சு.

கோபாலு: அப்புறம், விஷயம் தெரியுமா? தற்கொலை செஞ்ச சாதிக் பாஷாவோட ஒடம்ப பிரேத பரிசோதனை செஞ்ச டாக்டர் டேக்னால் வேலைய ரிசைன் பண்ணிட்டாராம். என்ன காரணமுனு தெரியல.

தனபாலு: டேய், விஷயத்த முழுசா தெரிஞ்சுக்கிட்டு பேசுடா. அவரு ரிசைன் லெட்டர பரிசோதன பண்றதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடியே கவர்மேன்ட்டுக்கு கொடுத்திட்டாரூ. என்ன ரீசன்னா? உளுந்தூர்பேட்டையில சுயேச்சை வேட்பாளரா நிக்றதுக்கு தான் ரிசைன் பன்னுனாரு. ஆனா கவர்மேன்ட் ஏத்துக்கரல. அதனால வேட்பாளரா நிக்கிறது டவுட்டு தான்... தெரிஞ்சுக்க..

கோபாலு: சரிண்ணே, முழுசா விஷயத்த தெரிஞ்சு வச்சிருக்கிங்க.. உங்கள நான் பாராட்டுறேன்..

தனபாலு: அடிங் கொய்யால... என்ன பாராட்டி நீ பெரிய மனுசனா ஆயிரலாம்னு பாக்குறியா...

கோபாலு: சரிண்ணே! விடுங்க நம்ம பிரச்சனைய அப்புறமா வச்சுக்கலாம். ஆளுங்கட்சி விஷயம் ஏதாச்சும் இருக்கா?

தனபாலு: தி.மு.க.வோட பழைய அனுதாபிகள் கட்சி நிர்வாகத்து மேல ரொம்ப கோவத்துல இருக்காங்க கோபாலு.

கோபாலு: என்ன விஷயம்ணே,  சீட் கொறைவா நிக்கராங்கன்னு கோவமா?

தனபாலு: அது இல்லடா. தி.மு.க.கட்சிய ராயபுரத்துல தான் அண்ணா அவர்கள் தொடங்கி வச்சாரு. ஆனா இந்த தேர்தலுக்கு அந்த தொகுதிய காங்கிரசுக்கு விட்டு கொடுத்திட்டாங்க. அதனால அவங்க கட்சிய காங்கிரஸ் கிட்ட அடகு வச்ச மாதிரி பீல் பண்றாங்களாம். இந்த விஷயத்துல எனக்கும் கொஞ்சம் வருத்தம் தாண்டா.

கோபாலு: ஆளுங் கட்சியோட புது "கதாநாயகி" பத்தி நீங்க என்னா நெனைக்கிறீங்க?


தனபாலு: புது "கதாநாயகி" தானே... சும்மா மப்பும் மந்தாரமுமா, செம கட்டையா இருக்குடா. சும்மா கிடைக்குற "கதாநாயகியை தொட்டு பாக்க யாருக்குடா ஆசையிருக்காது?

கோபாலு: அண்ணே, "கதாநாயகி" பாக்ரதுக்கு அழகா தான் இருக்குன்னு ரொம்ப ஆசப்படாதிங்க. அழகு எங்க இருக்கோ, அங்க தான் ஆபத்தும் இருக்கும். சொல்லிப்புட்டேன்.

தனபாலு: சரி சரி.. ரொம்ப தத்துவம் பேசாத. இந்த காலத்து சின்ன பசங்க கூட கிரிமினலா மாறிட்டு வர்றாங்கடா?

கோபாலு: புரியற மாதிரி தெளிவா சொல்லுங்கண்ணே.

தனபாலு: டெல்லியில பத்தாம் வகுப்பு படிக்கற பையன, சின்ன பசங்களா சேந்து கத்தில குத்தி கொலை பண்ணியிருக்காங்க. கொலைக்கு காரணமான எட்டு பசங்க இப்ப ஜெயிலுல கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க. பாவம், அவங்கள பெத்தவங்க.

கோபாலு: ஆமாண்ணே, அவங்க ரொம்ப பாவந்தான்.... ம்ம்ம்... இந்த காலத்துல சின்ன பசங்க கூட கிரிமினலா இருக்காங்க.. நம்ம சமுதாயம் இப்ப ரொம்ப கெட்டு போச்சு.

தனபாலு: பாருடா... சமுதாயத்த பத்தி கவலைப்படுற அளவுக்கு யோசிக்கற... ம்ம்ம்... பரவாயில்ல.

கோபாலு: இந்திய டீமுல யுவராஜ சேத்ததொட முக்கியத்துவம் இப்ப தான் தெரியுது. அவரால தான நம்ம இந்தியா குவாட்டர் பைனலுக்கு போயிருக்கு.


தனபாலு: சரியா சொன்னடா...  மொத்தம் ஆறு மேட்ச் விளையாடி மூணு பிப்டி, ஒரு சதம்னு அசத்தியிருக்காரு. அது போக விக்கெட்டும் எடுத்திருக்காரு. சரி... அது இருக்கட்டும்.. விஜய் என்ன செய்றாரு?

கோபாலு: நடிகர் விஜயோட அப்பா, அ.தி.மு.க. வுக்கு கொடுத்த ஆதரவுல இருந்து கொஞ்சம் விலகி இருக்காராம். தன் இயக்கத்துக்கு மூணு சீட் கேட்டு கொடுக்கலல. அதான் ஆதரவு தர்றதுல கொஞ்சம் யோசனையில இருக்காரு.

தனபாலு: நடிகர் பார்த்திபனும் டி.வி - ய நம்பி சீரியலுல நடிக்கிராரு. டைரக்டரு நடுநிசி நாய்கள் படத்த எடுத்தவரு. மியுசிக்கு நம்ம ஆஸ்கார் நாயகன் தான்.

கோபாலு: அப்ப ஆம்பிளைகளும் சீரியல பாத்து இனி அழுக வேண்டியது தான்...

தனபாலு: அதுதாண்டா இல்லை... ஒவ்வொரு நாளும் திகிலும், மர்மமுமா இருக்குமாம்.. கவலைப்படாத.

கோபாலு: அண்ணே! ஒரு ஜோக் சொல்றேன். அதுக்கு ஆன்சர சொல்லுங்க.

தனபாலு: இங்க பாருடா... ஜோக்ன்னு சொல்லி கடிச்ச, உன்னைய கடிச்சுபுடுவேன்.. ஆமா...

கோபாலு: சொல்ல வந்தத மொதல்ல சொல்ல விடுங்க....

தனபாலு: சரி சொல்லுடா...

கோபாலு: மழைக்கும், லஞ்சத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்னான்னு சொல்லுங்க பாக்கலாம்.

தனபாலு: இங்க பாருடா..ஜோக்ன்னு சொல்லி கடிக்காத.. எனக்கு ஆண்சாரு தெரியல..நீயே சொல்லு.

கோபாலு: இன்று சென்னையில நாள் முழுதும் மழை பேஞ்சதால, மக்கள் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது... இதானே மழைக்கும், லஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமை.


தனபாலு: அடங் கருவா நாயே... கடிக்காதடா....

கோபாலு: அண்ணே! இப்ப உங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்றேன், கேளுங்க.

தனபாலு: மறுபடியும் ஆரம்பிசுட்டயா?

கோபாலு: அண்ணே! நமக்கு அழகான பொண்டாட்டி கெடச்சா, அது சூப்பரு!...
அந்த அழகான பொண்டாட்டிக்கு ஒரு தங்கச்சி இருந்தா, அது ஆபரு!.... ஹா...ஹா...ஹா... எப்படி நம்ம ஜோக்கு...


தனபாலு: நீ சொன்னதோட இன்னொரு லைனையும் சேத்துக்க. அது என்னான்னா? அந்த அழகான பொண்டாட்டிக்கு ரெண்டு தங்கச்சி இருந்தா, அது ஆபரோ...ஆபர்!. ஹா..ஹா...ஹா.. எப்புடி?


கோபாலு: அண்ணே! ஒங்க பொண்டாட்டிக்கு ரெண்டு தங்கச்சின்னு நெனக்கிறேன்... இருங்க, அண்ணி கிட்ட சொல்றேன்... ஆபரோ...ஆபர் கேட்குதா உங்களுக்கு?

தனபாலு: டேய் தம்பி... என் ராசா... அப்படி சொல்லாதடா... இன்னைக்கு என் செலவுல ஒனக்கு ஊத்தி விடுறேன்.... அண்ணிகிட்ட சொல்லாத.... எவ்வளவுக்கு வேணாலும் நீ தண்ணி அடிச்சுக்க....என் தம்பிடா நீ....

கோபாலு: ம்ம்ம்... உன்னைய இப்படி மடக்குனா தான் உண்டு. கொஞ்சமாச்சும் கருணை காட்டுவ!


இன்றைய பொன்மொழி:   தலை சிறந்த அறம் என்பது எது என்றால், அது அடுத்தவர் பசியை நீக்குவத்கு ஆகும்.

இன்றைய விடுகதை: 
அன்னை கல்லிலும், முள்ளிலும்
மகளோ மணப் பந்தலில், 
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: வானம் 
முந்தைய விடுகதையின் பதிவை பார்க்க: நடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்கள்


22 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

ha..ha..ha.. இன்றைய அரட்டை சூப்பரு... இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

cheena (சீனா) said... Best Blogger Tips

ஆஃபரோ ஆஃப்பரு - ஆப்புடி கடசில - சாக்கிரத

பாலா said... Best Blogger Tips

இந்த கதாநாயகிய வச்சு அடுத்த என்ன கொள்ளை அடிக்க போறாங்களோ???

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

இந்த தனபாலும், கோபாலும் இந்த
வாட்டி, அரசியலையும், விளையாட்டையும் கையில எடுதிருக்காங்களா இனி பொக்கப்போக
என்னல்லாம் பண்ணுவாங்களோ?

கோலா பூரி. said... Best Blogger Tips

இந்த தனபாலும் கோபாலும் நல்லாவே
அரட்டை அடிக்கராங்க. கண்டின்யூ.

Unknown said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி நண்பா கலக்கல் காமடி

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

haa haa ஹா ஹா செம

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

சிரிச்சு முடிச்சாச்சா...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@cheena (சீனா)
ஐயா, நாங்க கலந்து பேசிட்டோம்ல

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பாலா
கொள்ளையடிகிறத வரிசையா சொல்லிட்டாங்களே?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Lakshmi ///இந்த தனபாலும், கோபாலும் இந்த
வாட்டி, அரசியலையும், விளையாட்டையும் கையில எடுதிருக்காங்களா இனி பொக்கப்போக
என்னல்லாம் பண்ணுவாங்களோ?///

எம்ம்புட்டு தான் இவிங்களும் பேசுவாங்கே?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@komu

இன்னும் தொடரும்...

செங்கோவி said... Best Blogger Tips

கலக்கல் பிரகாஷ்..விடுகதைக்கு விடை தெரியலியே........

சிந்தையின் சிதறல்கள் said... Best Blogger Tips

அதிகமாக சிரிக்க முடிந்தது உங்க தயவில் ஆனந்தம்...... தொடருங்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கி உலகம்
வாங்க விக்கி வணக்கம்...ஹி..ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
///haa haa ஹா ஹா செம///

செம ரவுசுல்ல

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
///கலக்கல் பிரகாஷ்..விடுகதைக்கு விடை தெரியலியே.......///

அடுத்த பதிவுல விடை வரும்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
///கலக்கல் பிரகாஷ்..விடுகதைக்கு விடை தெரியலியே.......///

அடுத்த பதிவுல விடை வரும்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@நேசமுடன் ஹாசிம்
///அதிகமாக சிரிக்க முடிந்தது உங்க தயவில் ///
என்னால முடிஞ்சது அவ்வளவுதான்..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//ஜே- கிட்ட ஊறுகாய் மாதிரி தான் இருந்தாரு. இப்ப அந்த ஊறுகாய் ஊசி போச்சு பொல...//

ஐயோ பாவம் வைகோ....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//கோபாலு: நடிகர் விஜயோட அப்பா, அ.தி.மு.க. வுக்கு கொடுத்த ஆதரவுல இருந்து கொஞ்சம் விலகி இருக்காராம். தன் இயக்கத்துக்கு மூணு சீட் கேட்டு கொடுக்கலல. அதான் ஆதரவு தர்றதுல கொஞ்சம் யோசனையில இருக்காரு.//

போடாங் கொய்யால....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//நடிகர் பார்த்திபனும் டி.வி - ய நம்பி சீரியலுல நடிக்கிராரு. டைரக்டரு நடுநிசி நாய்கள் படத்த எடுத்தவரு. மியுசிக்கு நம்ம ஆஸ்கார் நாயகன் தான்.//

கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதையா போச்சே...

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1