CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!தனபாலு...கோபாலு.... அரட்டை! பெரியார் பஸ் ஸ்டாண்டில்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தனபாலு: டேய்....கோபாலு....கோபாலு.....கோபாலு....இப்டி கத்ரனே....ஒன் காதுல விழுதா? எரும மாடு...எரும மாடு...

கோபாலு: அண்ணே....அண்ணே.... வந்துட்டேன்..திட்டாதிங்க....என்ன விசயம்னே?

தனபாலு: ஒனக்கு விஷயந் தெரியுமா? நம்ம ஆனந்தியக்கா இருக்காங்கள்ள, அவங்க வலைச்சரத்துல நம்பள பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருக்காங்கடா...

கோபாலு: அப்படியாண்ணே! நாம ரெண்டு பெரும் அரட்டையடிக்றது இம்புட்டு பேமசு ஆயிருச்சா?! ஹி..ஹி...ஹி...


தனபாலு: டேய்..தேங்கா மண்டையா? மண்டைய இப்படி கரிச்ச மண்டையா வெட்டியிருக்க? என்ன விஷயம்டா?கோபாலு: ஓ... அதுவாண்ணே... வெய்ய காலம் ஆரம்பிருச்சுல... அதான் முடிய ஒட்டா வெட்டிட்டேன்... வேர்த்து நசனச ன்னு ஆயிரும் அதான்...

தனபாலு: ஓ..ஓ...  என்னடா மண்டைய பிளக்கற இந்த வெயில் நேரத்துல ரெண்டு நாளா நம்ம ஊர்ல சாயங்காலமா மழை பெய்ர ரகசியம் இதுதானோ....


கோபாலு: அண்ணே! சும்மா நக்கல் பண்ணாதிங்க... வேற ஏதாவது விஷயம் இருந்தா பேசுங்க...

தனபாலு: டேய் தம்பி.... இந்த ஜனதா சு. சாமி கொசு தொல்ல தாங்க முடியலடா...

கோபாலு: என்ன கொசு தொல்ல.... தெளிவா சொல்லுங்களேன்...

தனபாலு: நம்ம தமிழ் நாட்டுக்கு தேர்தல் முடிஞ்சு இன்னும் யார் ஆட்சிய பிடிக்கப் போறாங்கன்னு தெரியல... அதுக்குள்ள இன்னும் ரெண்டு வருஷத்துல தமிழ் நாட்டுல ஆட்சி கவுந்து மறு தேர்தல் வரும்னு ஆருடம் சொல்றார்டா. ஒரு பேப்பர்ல முக்கிய நியூஸ் ஆ போட்டிருக்காங்க..

கோபாலு: ம்க்கும்... அந்த ஆளையும் மனுசனா மதிச்சு பேப்பர் காரங்க நியூஸ் ஆ போட்டிருக்காங்க பாரு... ரொம்ப கொடுத்து வச்ச மகராசண்டா சு.சா. கொசு.

தனபாலு: கலைஞர் ஆட்சி முடியப்போகுது.... எல்லா கருத்து கணிப்பும் அப்படித்தான் சொல்லுது... தமிழ் நாட்டுல சென்னைய தவிர எல்லா பக்கமும் கரண்ட் கட் பண்ணி தங்களோட செல்வாக்க கொறச்சிக்கிட்டாங்களே...

கோபாலு: ஆமாண்ணே! கரண்ட் கட்டும் அவங்களோட பின்னடைவுக்கு காரணம் தாண்ணே... சரிண்ணே...இந்த மேட்டாரு எல்லாத்துக்கும் தெரிஞ்சது தானே... இதுல புதுசா என்ன சொல்ல போறீங்க...

தனபாலு: டேய்...இந்த கரண்ட் கட் வேலைய புதுசா சென்னையிலும் ஆரம்பிசுட்டாங்களாம்டா... தெனமும் ஒரு மணி நேரம் கரண்ட்ட புடுங்கராங்கலாம்....

கோபாலு: அண்ணே! லவ் பண்றவிங்க எப்படி எப்படியோ லவ் பன்றாங்கே... ஆனா கோவையில ஒருத்தன் ஆறு மாசமா காதலிய பாக்காமலே லவ் பண்ணியிருக்கான். ஆனா, காதலிய நேர்ல பாத்ததும்..... பாத்ததும்....ம்ம்ம்

தனபாலு: என்னடா,,,, விஷயத்த முழுசா சொல்லாம முழுங்குற....

கோபாலு: அவன் காதலிய பாத்ததும் என்ன நெனச்சான்னு தெரியல.... ரயில்ல விழுந்து செத்துட்டானாம்.... ஏன் ரயில்ல விழுந்தான்னு அந்த பொண்ணுக்கு தெரியலையாம்... போலிஸ் விசாரிசிக்கிட்டு இருக்குது...

தனபாலு:  வடிவேலு.... திமுக வுக்கு ஆதரவா ஊர் ஊர்ரா பிரச்சாரம் பன்னுனார்ல... அவருக்கும் அவர் கூட உதவியா வந்தவங்களுக்கும் சேத்து ஆன செலவு எவ்வளவு தெரியுமா?

கோபாலு: எவ்வளவு அண்ணே!  பணத்த தண்ணியா இறச்சிருப்பான்களே...

தனபாலு: அது தான் இல்லை... வெறும் ஒரு லட்சத்து பண்ணிரெண்டாயிரம்னு கணக்கு காம்சிருக்காங்க...

கோபாலு: அண்ணே! அது வேட்பாளர் செலவுல காமச்ச கணக்கு... ஆனா ஒவ்வொரு தொகுதி முக்கியமான ஆட்கள் மூலமா சில கோடிகள் கை மாறியிருக்காம்.

தனபாலு: டேய் நம்ம ஊரு சிரிப்பு நடிகர் கஞ்சா கருப்பு அப்பா ஆயிட்டாருடா..

கோபாலு: அப்படியாண்ணே... பொண்ணா? பையன்னா?

தனபாலு: பையன் பொறந்திருக்கானாம்... சென்னையில சூட்டிங்கில் இருந்து உடனே பறந்து வந்துட்டார் மதுரைக்கு...

கோபாலு: அப்புறம் பாக்கனும்னு ஆச இருக்காத பின்ன... அண்ணே! நேத்து முன்னாள் ஒலக அழகி ஐஸ் ஓட நாலாவது வெட்டிங் டேவாம்... ரொம்ப சிம்பிளா கொண்டாடியிருகாங்க...

தனபாலு: ஏண்டா... இம்புட்டு வருத்ததோட சொல்ற...

கோபாலு: ஒரு காலத்துல என் கனவு கண்ணி அவங்க... இப்ப இன்னொருதரோட நிஜ கண்ணியா ஆயிட்டாங்க.

தனபாலு: சரிடா... தம்பி... ரொம்ப பீல் பண்ணாத...ஒனக்கும் ஒருத்தி பொறந்திருப்பாடா? அவ யார்ன்னு கண்டுபிடிச்சு கனவு காண் டா.

கோபாலு: அண்ணே! நம்ம சிம்ரன் மாதிரி இன்னொரு ஹீரோயின் தமிழ்பட உலகத்துக்கு கெடச்சுட்டாங்க.

தனபாலு: என்னடா சொல்ற...யார சொல்ற...

கோபாலு: "கோ " பட நாயகி, ராதா மகள் கார்த்திகாவை சொல்றேன். அவங்க ஒரு பேட்டியில நீச்சல் உடையில் நடிக்க ரெடின்னு சொல்லியிருக்காங்க...

தனபாலு: போடா..லூசு... என்னம்மோ பேட்டி கொடுத்தாளாம்... நீச்சல் உடையில நடிக்க ரெடின்னு... மொதல்ல அப்படி நடிக்கட்டும்.... அப்புறம் பாக்கலாம் சிம்ரன் மாதிரியான்னு... என்ன தான் இருந்தாலும் சிம்ரன் மாதிரி யாராலயும் நடிக்க முடியாது...

கோபாலு: "சொடக்கு போடு சொடக்கு போடு சொர்ணாக்கா.... மடக்கி போடு மடக்கி போடு மங்காத்தா.." ஐயோ... இந்த பாட்ட பாடுனாலே ஒரே கிளுகிளுப்பா இருக்கண்ணே! இந்த பாட்டு எந்த படத்துல வருது? யார் பாடியிருக்காங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்? 

தனபாலு: அஜித் நடிக்கிற  மங்காத்தா படமா இருக்கும்... சரி தானே...

கோபாலு: இல்லண்ணே! யார்ன்னு சொல்றதுக்கே வெட்கமா இருக்கண்ணே!

தனபாலு: அடங் கொக்கமக்கா யார்னு சொல்லி தொலைடா?

கோபாலு: பாட்டு பாடினது நம்ம ஷகிலா'ன்னே. ரொம்ப அனுபவிச்சு பாடுனாங்கலாம். படம் பேரு :சன்முகிபுரம்".

தனபாலு: அடிங் கொய்யால... அந்த ஓல்ட் பழத்தை சொல்ல இம்புட்டு பில்டப்பாக்கும்...

கோபாலு: அண்ணே அடிக்காதிங்க...அண்ணே! அந்த காலத்துல நீங்க பாக்காத பிட்டு படமா... வீட்டுல போட்டு கொடுக்கவா?

தனபாலு: சரிடா தம்பி...கோச்சுக்காத...அண்ணே! சும்மா வெளையாட்டுக்கு அடிச்சேண்டா... ரொம்ப நேரம் பேசிட்டோம்...வீட்டுல அவ தேடுவா....போயிட்டு வர்றேன்.

கோபாலு: நீங்க எங்கிட்ட மாட்டிக்கிட்டிங்கன்னு தெரிஞ்சு கமுக்கமா கிளம்புறிங்களாக்கும்.


25 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

interesting.

Unknown said... Best Blogger Tips

கலக்கலா இருக்கு மாப்ள!

Prabashkaran Welcomes said... Best Blogger Tips

நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது தொடரட்டும்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>கோ " பட நாயகி, ராதா மகள் கார்த்திகாவை சொல்றேன். அவங்க ஒரு பேட்டியில நீச்சல் உடையில் நடிக்க ரெடின்னு சொல்லியிருக்காங்க...

அந்த பாப்பா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாப்ல.. ஹி ஹி

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

நல்லாவே இருக்குய்யா - செய்தித் தொகுப்பு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

ஒரு பதிவில் இவ்வளவு விஷயங்களா..

பாட்டு ரசிகன் said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்.

maruthu said... Best Blogger Tips

சின்னாலப்பட்டியாரே ! ரெம்ப...... ரெம்ப ...... சின்னபுள்ளதனமா இருக்கு . பரவால்ல தொடருங்க .

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நால்லா அலசுங்க அலசுங்க மக்கா...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//கோபாலு: பாட்டு பாடினது நம்ம ஷகிலா'ன்னே. ரொம்ப அனுபவிச்சு பாடுனாங்கலாம். படம் பேரு :சன்முகிபுரம்". //

இது வேற கமுக்கமா நடந்துருக்கா....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இராஜரா
ஜேஸ்வரி

///interesting.///

ok.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

/// விக்கி உலகம் said...
கலக்கலா இருக்கு மாப்ள///
தாங்க்ஸ் விக்கி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Prabashkaran Welcomes

நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிகிறது தொடரட்டும்///

ரைட்டு

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

>>கோ " பட நாயகி, ராதா மகள் கார்த்திகாவை சொல்றேன். அவங்க ஒரு பேட்டியில நீச்சல் உடையில் நடிக்க ரெடின்னு சொல்லியிருக்காங்க...

அந்த பாப்பா அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாப்ல.. ஹி ஹி>>>

ஹி....ஹி..ஹி.... நானும் அப்படித்தான் நெனக்கிறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@cheena (சீனா)
ஐயா நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பாட்டு ரசிகன்
///ஒரு பதிவில் இவ்வளவு விஷயங்களா..///

ஏன் இருக்க கூடாதா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@maruthu
//சின்னாலப்பட்டியாரே ! ரெம்ப...... ரெம்ப ...... சின்னபுள்ளதனமா இருக்கு . பரவால்ல தொடருங்க .///

அவிங்க ரெண்டு பெரும் சின்ன புள்ளைங்க தானே....ஹி...ஹி...ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
நல்லா அலசுனா துணி கிழிஞ்சுறும். ஹி...ஹி...ஹி...

நிரூபன் said... Best Blogger Tips

ஒனக்கு விஷயந் தெரியுமா? நம்ம ஆனந்தியக்கா இருக்காங்கள்ள, அவங்க வலைச்சரத்துல நம்பள பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருக்காங்கடா...//

ஆஹா... அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் இது தொடர்பாக பேசுறாங்க என்றால், நம்ம தனபாலு அரட்டையிலும் பேசத் தொடங்கிட்டாங்களே!

நிரூபன் said... Best Blogger Tips

ஓ... அதுவாண்ணே... வெய்ய காலம் ஆரம்பிருச்சுல... அதான் முடிய ஒட்டா வெட்டிட்டேன்... வேர்த்து நசனச ன்னு ஆயிரும் அதான்...//

டைம்மிங் காமெடி...

நிரூபன் said... Best Blogger Tips

அண்ணே! லவ் பண்றவிங்க எப்படி எப்படியோ லவ் பன்றாங்கே... ஆனா கோவையில ஒருத்தன் ஆறு மாசமா காதலிய பாக்காமலே லவ் பண்ணியிருக்கான். ஆனா, காதலிய நேர்ல பாத்ததும்..... பாத்ததும்....ம்ம்ம்//

ஏன் ஒரு தலைக் காதலாக இருக்குமோ?

நிரூபன் said... Best Blogger Tips

தனபாலு கோபாலு அரட்டை.... அரசியல் அலசல்கள், வெய்யில் கால தலை வெட்டு நக்கல், நவீன பிட்டு படம், வலையுலக தகவல், சினிமா கொசுறு எனப் பல வகைகளிலும் மதுரை மண் வாசனையுடன் மலர்ந்திருக்கிறது,

ரஹீம் கஸ்ஸாலி said... Best Blogger Tips

மொத்தமா எல்லாத்தையும் கலவையா கொடுத்து அசத்திட்டீங்க...

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips

உங்கள் எழுத்து நடை
படிக்கும் ஆர்வத்தை தூண்டிப்போகிறது
விஷயங்கள் கூடுதல் போனஸ்
தொடர வாழ்த்துக்கள்

உணவு உலகம் said... Best Blogger Tips

அருமையான எழுத்து நடை. விறுவிறுப்பான தொகுப்பு. அசத்துங்க.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1