CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!கொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


கோடை விடுமுறை வந்துவிட்டாலே நமது மனம் கொண்டாட்ட 'மூடு' க்கு மாறிவிடும். உறவினர்களோடு அரட்டை, கூச்சல் கும்மாளத்தோடு டி.வி.யில் படம் பார்ப்பது, சீட்டுக் கச்சேரி என களை கட்டும் கோடை விடுமுறையில், பல குடும்பங்களில் பிக்னிக்கும் கட்டாயம் இடம் பெறும் 

ஆனால் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பிக்னிக் பேக்க்குகளிலும் நம்மவர்களின் மிக விருப்பமான நொறுக்கு தீனிகளாக சிப்ஸ் பாக்கெட்டுகளும், சாக்லேட்டுகளும், தாகம் தணிக்கும் பானங்களாக குளிர்பானங்களும் பயண பைகளுக்குள் கட்டாயம் திணிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த இடத்தில்தான் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும்! 

இதுபோன்ற சிப்ஸ் மற்றும் சாக்லேட்டுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறி சாலட்டுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர். 

வழக்கமான உணவுகள் மற்றும் முறையான உடற்பயிற்சிகளோடு, மேற்கூறியபடி காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொண்டால், கோடை கொண்டாட்ட குதூகலத்தில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்கின்றனர்.

தாகத்தை தணிக்க தண்ணீர்: 

கோடையில், குறிப்பாக வெயிலில் சுற்றி வந்தால் நாக்கு வறண்டு தாகம் அதிகமாக எடுப்பது சகஜம்தான். இந்த சமயத்தில் நம்மில் பலர் உடனடியாக தாகத்தை தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை வாங்கிக் குடிக்கிறார்கள்.இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி குடித்தால், அது நமது உடலுக்கும் உபாதைகளை ஏற்படுத்துவதோடு, பர்ஸ்-க்கும் வேட்டு வைக்கிறது. 

அதற்கு பதிலாக தாகத்தை தணிக்க தண்ணீரே போதுமானது.அது நமது உடலை குளுமைபடுத்துவதோடு,உடலில் நீரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.மேலும் தேவையற்ற கூடுதல்கலோரிகள் உங்கள் உடலில் சேருவதையும் அது தடுக்கிறது.செயற்கை குளிர் பானங்கள் நமது உடலில் தேவையற்ற அதிக கலோரிகளை உருவாக்கி விடுகிறது.

ஒருவேளை சிலருக்கு வெறும் தண்ணீரை அருந்த விருப்பமில்லாமல் இருந்தால், அதற்கு பதிலாக புதிதாக தயாரிக்கப்பட்ட எலுமிச்சை பழ ஜூஸ், இளநீர் அல்லது மோர் போன்றவற்றை அருந்தலாம். இவை கோடையின் சிறந்த தாகம் தணிப்பு பானங்கள் என்றே சொல்லலாம்.


உணவில் பழங்கள்,காய்கறிகள்:

மற்ற காலங்களில் எப்படியோ கோடையில் கட்டாயம் உங்களது உணவில் குறைந்தது இரண்டு காய்கறிகள் மற்றும் இரண்டு வகை பழங்களாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வகை பழங்கங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும். அதுபோன்று கோடைக்கென்றே வரும் சில வகை பழங்கள் உள்ளன.தர்ப்பூசணி, வெள்ளரி பழம் போன்றவை தாகத்தை தணித்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்றால், மாம்பழம் போன்றவற்றை மில்க் ஷே செய்து அருந்தினால் அது உடலுக்கு ஏக தெம்பை கொடுக்கும். 

உணவை தவிர்க்காதீர்கள்: 

சிலர் கோடை விடுமுறையில் உடல் எடையை குறைத்து காட்டுகிறேன் பேர் வழி என்று சாப்பாட்டை தவிர்ப்பது உண்டு.ஆனால் மிக மோசமான ஆரோக்கிய கேடு என்பதோடு, பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள் .உணவு அருந்தாமல் இருந்தால் உடலில் கலோரிகளை எரிக்கும் 'மெடோபாலிசம்' செயல்பாடு மந்தமாகி விடும்.எனவே சிறிது சிறிதாகவேனும் உணவை ஆறு வேளையாகவது எடுத்துக் கொள்ளுங்கள். -YAHOO


15 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

இளநியும் நுங்கும் தான் பெஸ்ட்.. மத்த கூல்டிரிங்க்ஸ் எல்லாம் வேஸ்ட்

Unknown said... Best Blogger Tips

வாய்யா மாப்ள

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips

கோடைக் காலத்திற்குரியபயனுள்ள நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips

சொல்லிட்டாரு சரக்கு சந்தானம்

Unknown said... Best Blogger Tips

சிபி நீரு கிபியா கிமுவா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கி உலகம் விக்கி உலகம் said...
சிபி நீரு கிபியா கிமுவா

ஹா...ஹா... செம விக்கி

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

நல்லதொரு தகவல் - கடைப்பிடிக்க முயலலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ்

நல்லதொரு தகவல் - கடைப்பிடிக்க முயலலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

சரி பாட்டி நீங்க சொல்ற மாதிரியே செய்யுறோம்....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

நல்ல பயனுள்ள தகவல்கள்...

Anonymous said... Best Blogger Tips

நல்ல தகவல் . கோடை காலதத்தில் கொளுத்தும் வெயிலில் இளநீர் சாப்பிடுவதே ஒரு தனி சுகம் ..)))

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

//விக்கி உலகம் said...
சிபி நீரு கிபியா கிமுவா///

நமீ'ய்யா நமீதா......

சாகம்பரி said... Best Blogger Tips

தெரிந்த விவரங்கள் என்றாலும் நினைவு கொள்ளவேண்டியவை. நன்றி பிரகாஷ்.

செங்கோவி said... Best Blogger Tips

அதெல்லாம் சரி, இதுக்கு யாரு காசு கொடுப்பா?

Sivakumar said... Best Blogger Tips

மே 13 ஆம் தேதி முடிவுக்கு பின் மயங்கி விழுபவர்கள் உடல்நிலை தேற என்ன சாப்பிடனும்?

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1