CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

இனிய  உறவுகளே!
          மதியோடை திரு. மதிசுதா அவர்கள் பேட்டியின் இரண்டாம் பாகம் இது. இப்பேட்டியின் முக்கிய அம்சமான விஷயம் என்னவென்றால் கேள்விகள் உங்கள் மூலமாக கேட்கப்பட்டது தான். பலரும் பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள். கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றி.
முதல் பாகம்: மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக) சித்தார மாகேஷ்
(சுவர் தேடும் சித்திரங்கள் – http://siththara-mahesh.blogspot.com/ )
-அண்ணா தங்கள் படைப்புக்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது எப்படி இவ்வளவு வேலைக்கு மத்தியிலும் உங்களால் நேர முகாமைத்தவம் பண்ண முடிகிறது ?
       பெரிதாக ஒன்றுமில்லை தங்கா மனதையும் உடலையும் எந்த வலியையும் தாங்குமளவுக்கு வளர்த்துக் கொண்டால் போதும்.. செந்தாமரையில் ஆசை வைத்தால் சேற்றிலிருந்தாலென்ன ஆற்றில் இருந்தாலென்ன பறித்தே தீரணும் என்று நினை எல்லாம் கூடிவரும்..
 - ஏன் நீங்கள் நகைச்சுவை படைப்புகளையும் கொஞ்சம் முயற்சிக்கலாமே? தாங்கள் சிறந்த நகைச்சுவையாளன் என்பது எமக்கு மட்டும் தெரிந்தால் போதுமா உலகுக்கும் தெரிய வேண்டாமா ?
           உங்கள் ஆதாங்கம் புரிகிறது உங்க முகத்தின் முன்னே நடந்து கொள்வது வேறு…. எழுத வரும் போது அடிக்கடி சிரியசான பதிவு போடும் இந்த நகைச்சுவையாளனை எந்த கண் கொண்டு பார்ப்பார்கள் என்ற ஒரு சந்தேகம் தான் காரணம். பதிவுகளின் முக்கியத்துடன் ஒப்பிடுகையில் என்னிடம் உள்ள நகைச் சுவை பதிவை விட சமூக பதிவே காத்திரம் கூடியதாக இருக்கிறது.
 - உங்கள் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறதே என்ன காரணம் ?
          என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்

மதுரன்
(கூதற்காற்று - http://koothatkatru.blogspot.com/ )
வன்னி பிரதேசம் போர் மேகங்களால் சூழப்பட்டு தொழில்நுட்பத்தில் மிகவும்பின்தங்கிய நிலையிலே காணப்பட்டது. ஆனால் நீங்கள் எம்போன்ற பல பதிவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல உதவிகளை வழங்கி வருகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது?
        இதிலென்ன இருக்கிறது சகோதரம் கொஞ்ச ஆங்கில அறிவும் தேடலும் தான் காரணம் அதை விட முக்கியம் உதவி செய்வதில் வரும் ஒரு வித ஆத்ம திருப்தியும் தான்… என்னை விட அதிக தொழில் நட்பம் தெரிந்த வன்னி பதிவர் ஒருவர் இருக்கிறார் தெரியும் தானே..
உங்களுக்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணம் என்ன?
           உண்மையாவே அது எப்படி வந்ததென்று எனக்கு தெரியாது சகோதரம்…. சிறுவயதிலேயே எதையும் கிண்டிக் கிளறுவேன் அப்படி செய்கையில் ஏதாவது கண்டு பிடிப்பேன் அதை நானே பிரயோகித்தும் பார்ப்பேன்… அவ்வளவும் தான்

தம்பி கூர்மதியன் kooranpathivu.blogspot.com
- தங்களின் விவர பக்கத்தில் தங்களது ஆரவங்கள் என்று பார்க்கையில் //போர் ஆதரவாளருக்கு எதிரான செயற்பாடு// என்று சொல்லியிருந்தீர்கள் அப்படியானால் தனியொரு ஈழம் அமைவதில் தங்களுக்கு விருப்பமில்லையா??? இல்லை ஆயிரம் ஆயிரம் உயிரை இழக்க செய்து தனியொரு ஈழத்தை பெற்று அந்த பிணங்கள் மீது புதிய ஈழத்தின் வாழ்க்கை தொடங்குவதில் உங்களுக்கு விருப்பமில்லையா?
            முதலாவதை எல்லோருமே விரும்புகிறோம் ஆனால் இரண்டாவது மட்டும் தான் தீர்வென்பதை தான் நான் வெறுக்கிறேன்… யாரும் வெற்றியை பெறலாம் ஆனால் அது தக்கவைத்திருக்கும் போதே சாதிப்பதை சாதிக்கணும்.. சரியான பருவகாலத்தில் சரியான முடிவெடுக்கணும்..
 - அந்நிய குண்டுகள் உங்கள் உடம்பை தைத்துண்டா???
           குண்டுகளுக்கு தெரிவதில்லை நாம் ஒருவனை கொல்லப் போகிறோம் என்று சுட்டவன் மட்டும் தான் அறிவான்….. அதற்கு நல்லவன் கெட்டவன் என்ன வித்தியாசம் தெரியாது… சகோதரம்..
 -     இந்திய நாட்டில் தாங்கள் மறக்க முடியாத பிரபலமோ சாதாரண மனிதரோ யார்.??? ஏன்???
     மேன்மை தகு ஜனாதிபதி அப்துல்கலாம் தான்…. அவரை எனக்கு மட்டுமல்ல உலகுக்கே பிடிக்கும்…. வடநாடே ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க துடிக்கையில் மனிதாபிமானத்தோடு கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு விடுவிக்கச் சொன்னாரே அந்த தருணம் யாராலும் மறக்க முடியாது…

லட்சுமி www.echumi.blogspot.com
- நண்பாசிறப்பு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வளந்திருக்கீங்கதிறமை இருப்பதால தானே வாய்ப்பு தேடி வருதுஇவ்வளவு வளர்ந்ததற்கு கடுமையா உழைச்சிருப்பீங்களேஅதை எல்லாம் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே?
     என் உழைப்பு என்பதை விட என்னை வளர்த்தவரின் வளர்ப்புத் தான் காரணம் அம்மா… இந்த பதிவுலகத்தை என் குடும்பம் போல் தான் கருதுகிறேன். எல்லோருக்கும் ஒரு தம்பியாகவும் அண்ணனாகவும் இருக்கிறேன்… யாரும் என்னை எதிரியாக கருதினாலும் அவர்களை நான் உறவினனாகவே பார்க்கிறேன்…. இவை தானம்மா எனது வெற்றி ரகசியம் வேறொன்றுமில்லை..

கோமு [email protected]
ஹாய் . தி. சுதா. முதலில் வாழ்த்துக்கள். இந்த சந்தோஷத்தை எப்படி உணர்கிறீர்கள்.?
          மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது என் உறவுகள் மனதுக்குள் என்னிடம் கேட்க இருந்ததை வெளிப்படையாக கேட்பதும் என்னால் முடிந்ததற்கு பதில் அளிப்பதையும் இட்டு இதை தந்த பிரகாசுக்கு மிக்க நன்றி சொல்லணும்.
 -  வாரம் மூணு பதிவாவது எழுதுவீங்களா? டைம் கிடைக்குதா?
     ஆமாங்க பதிவு எழுத நேரம் கிடைக்கிறது ஆனால் பிரசுரிக்கத் தான் நேரமில்லை என் பதிவுக்கு கருத்திடும் நபர்களுக்காவது கருத்திடணும் அது முடிந்த பின் தான் அடுத்த பதிவு போடுவேன்.
 வளர்ந்து வரும் பதிவர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
            பதிவர், பதிவு இரண்டும் வேறு வேறு அவரை வாசிப்பதானால் நெருங்கிப் பழகுங்கள். பதிவை வாசிப்பதானால் நல்ல ஆணித்தரமான கருத்தை வழங்குங்கள். உதாரணத்துக்கு நானே தான் காரணம் என் பதிவில் இருக்கும் காரத்தன்மை போல நானில்லை மிகவும் நகைச்சுவையான பேர்வழி. அது நெருங்கிப் பழகுபவருக்கு மட்டுமே தெரியுமுங்க..

நிரூபன்.http://www.thamilnattu.com/
- இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று இலக்கணக்காரர்கள் கூறுவார்கள். இதே இலக்கிய மொழி நடையினையோ, அல்லது எமது மரபுகளையோ தொடர்ந்தும் தக்க வைக்காது தனி மனிதனது எண்ணங்களினூடாகவும், தனி மனிதனின் சுதந்திர சுயாதீன ஊடகத்தினூடாகவும் வலைப் பதிவுகளை எழுதி வரும் நாங்கள் ஏன் எங்களின் கடந்த கால விடயங்களைப் பதிவுகளாக்கப் பின் நிற்கிறோம்?

இவ் வினாவின் உப விடயங்களாக, அரசியலை விடுத்து, எமது அவலங்களை உற்று நோக்கினால், நடு நிலமையுடன் ஒரு தனி மனிதனது எண்ணங்களூடாக வெளி வரக் கூடிய  வன்னியின் வாழ்வியல் சார்ந்த படைப்புக்கள் (இலங்கையில் 2008ம் ஆண்டுகளிற்குப் பின்னரான காலப் பகுதியினைக் குறிப்பிடுகிறேன்) இல்லை என்றே கூறலாம். இந்த எழுதப்படாத அவலங்கள் யாவும், காலவோட்டத்தில் கரைந்து போய் விடுமா? இல்லை காத்திரமான முறையில் தொகுக்கப்படுமா? உங்களின் எண்ணவோட்டத்தில் வலைப் பதிவுகள் மூலமாக எவரையும் சாடாத/ சாராத, ஒரு போர்க்கால படைப்புக்களை தனியாகவோ, அல்லது வேறு நண்பர்களுடன் சேர்ந்தோ வழங்குவது சாத்தியமாகுமா?

அப்படிச் சாத்தியாமாயின் ஏன் அவற்றை வலையேற்றப் பின் நிற்கிறீர்கள் சகோதரா?
       ஹ…ஹ… என்ன நிருபன் தாங்கள் அறியாததா ? அரசாங்கத்தை சாடினால் அவன் புலி ஆதரவாளன், புலிகளை சாடினால் அவன் அரசாங்க ஆதரவாளன், மக்கள் அவலம் சொன்னால் தேசத் துரோகி, மக்களுக்கான பணத்தை ஏப்பம் விட்டால் நாட்டுப் பற்றாளன் இதில் உங்களுக்க எந்தப் பட்டம் பெற விருப்பமாக உள்ளது என்று சொல்லுங்களேன்..

செங்கோவி: www.sengovi.blogspot.com
ஈழத்தில் இன்னும் ஆயுதப் போராட்டதிற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? அல்லது மீண்டும் தந்தை செல்வா வழியில் அஹிம்சைப் போராட்டத்திற்கு திரும்ப வேண்டிய நேரமா இது?
    ஈழத்தில் இப்போ இந்த ரெண்டுக்கும் சாத்தியமில்லை காரணம் எந்த இளைஞனிடமும் சரியான தொழில் வாய்ப்பில்லை பெரும்பாலான இளைஞர்களின் எண்ணமெல்லாம் ஏதாவது ஒரு சிறிய நாட்டிற்காவது போய் குடும்பத்தை கவனிக்க வேண்டுமென்பது பற்றித்தான் சிந்தனையெல்லாம் இருக்கிறது. மற்றும்படி எல்லாம் வாய்ப் பேச்சுத் தான் சகோதரம்..
சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சகஜமான சூழ்நிலை அங்கு நிலவுகிறதா? 

       சிந்தித்து பதிலளிக்க வேண்டிய கேள்வி சகோதரம்.. காரணம் இணைந்து வாழும் சுழ்நிலை பற்றி சரியாகச் சொல்லத் தெரியல அனால் இணைந்து பழகுகிறோம் எம்மிடம் இனத் துவேசம் இருப்பது போலத் தான் அவர்களில் சிலரிடம் இருக்கிறது அனால் நாம் நினைப்பது போல விகிதாசார அடிப்படையில் நான் தொழில் ரிதியாக சந்தித்த பலர் மனித நேயம் கொண்டவர்களே…

பதிவுலகில் உங்கள் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
நான் சாதித்திருக்கிறேன் தான் இல்லையென்றில்லை ஆனால் நான் எதிர் பார்க்கும் இலக்கை இன்னும் அடையல உயிரோடிருந்தால் இன்னும் ஒரு சில வருடத்தில் அடைந்து விடுவேன்..
.

பன்னிக்குட்டி ராம்சாமி

  -ஈழத்தமிழர்களுக்கு கலைஞர் துரோகம் இழைத்துவிட்டார் என்று நம்புகிறீர்களா?
     அவர் செய்தது தப்பு என என்னால் சுட்டிக்காட்ட முடியும் சகோதரம் ஆனால் அதை துரோகம் என வரையறுக்கலாமா தெரியல காரணம் அப்படி பார்த்தால் பல துரோகிகளை பட்டியல்ப் படுத்த வேண்டியிருக்குமே.    
 - உங்களுக்கு பிடித்த பதிவு/பதிவர்? காரணம்?
    மீனவர்களுக்காக எழுதப்பட்ட அத்தனை பதிவும் என்னை கவர்ந்தவையே.. பதிவுலகம் எவ்வளவு ஒற்றுமையானது என பலரை திரும்பிப் பார்க்க வைத்த தருணம் அது அதற்காக பதிவிட்டவர் ருவிட்டியவர் கருத்திட்டவர் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்..
-  இலங்கையில் தற்போது சூழல் எப்படி இருக்கிறது?

   போர் நடக்கவில்லை என்ற மனத் துணிவு பிறந்ததால் பல கட்டடங்கள் தலை நிமிர்த்துகிறது.. பெற்றொர் துணையில்லாமல் தனியாக பல்வேறு வயது மட்டத்தவரும் வெளிக்கிட்டுத் திரிகிறோம் (ஆனால் சோதனைகள் நிறுத்தப்படவில்லை) மிக முக்கியமாக அடுத்த நாள் காலை உயிரோடு எழலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையில் படுக்கப் பழகி விட்டோம்.
முத்து குமார், குவைத்
தோ்தல் முடிவுக்குப் பின் வைகோவின் நிலை என்ன?

அடுத்த தேர்தல் வரும் போது தான் தெரியும் சகோதரம்..
இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.
....உண்மை..... தன் மனதில் உள்ள உணர்வுகளை .....தனக்கு நியாயம் என்று படுவதை, துணிந்து எழுதும் சுதாவுக்கு வாழ்த்துக்கள்!

எத்தனயோ சோதனைகளை, வேதனைகளை கடந்து வந்து கொண்டிருக்கும் இவர், எப்பொழுதும் positive ஆக சோர்ந்து போகாமல் எப்படி இருக்க முடிகிறது?

   நாங்கள் வாழ்க்கையை உயிராக காதலிக்கிறோம் அக்கா… காதலி எது செய்தாலும் உண்மை காதலன் என்ன செய்வான்…. எல்லாம் பழகி விட்டது அக்கா..சிவா
- என்போன்ற புதியவர்களுக்கு வலைப்பதிவு பற்றிய தொழில்நுட்பம் சம்மந்தமாக ஏற்படும் சந்தேகம்களை எப்படி சரியாக தீர்க்கமுடியும்?
        தெரிந்த குறுக்க வழிகளை காட்டுவோம் சகோதரம் இல்லாவிடில் எமக்கு மூத்த சசி போன்ற தொழில் நுட்ப பதிவர்களிடம் பரிந்துரைப்போம்..
 புலம்பெயர் தேசத்தில் இப்போது அதிகமான புதியவர்கள் எழுதுகின்றோம் நம்பதிவுகளை எப்படி அதிகமானவரிடம் கொண்டு சேர்க்க முடியும்!?

     எனக்குத் தெரிந்தவரை மற்றவருக்கு அறிமுகமாக ஒரே வழி கருத்திடலும் கருத்தின் கீழ் பதிவின் தொடுப்பிடலும் முக்கியமாக திரட்டிகளில் இணைப்பதுமே..

நாகரிகம்மற்ற பின்னுட்டம் இடும் பதிவர்களை எவ்வாறு இனம் கானுவது?

    கருத்துக்களில் மட்டுமே அடையாளம் காணலாம் சகோதரம் ஹ… ஹ.. இல்லாவிடில் அவர்கள் வீட்டு போனால் வாசலில் கோலத்திற்கு பதிலாக ஏதாவது எழுதி வைத்திருப்பார்கள்.. அவர்கள் கருத்துப் பெட்டியில் இடுவது அவர்களது வீட்டில் அழைக்கப்படும் செல்லப் பெயர்களைத் தானே… ஹி.. ஹிமகாதேவன் V.K www.thagavalthulikal.blogspot.com

நீங்கள் பதிவெழுதிய பிறகு ஏன் இந்தப்பதிவை  எழுதினேன்/பதிவிட்டேன் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
      ஆமாம்… அசினிடம் நான் உதவி கேட்டு எழு��ிய பதிவை 9 இணையத்தளங்கள் அவருக்கெதிரான பரப்புரைக்கு அதை பயன்படுத்திய போது மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டேன்..
"பாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும்" இந்தப்பழக்கம் எப்படி வந்தது? எந்த வயதில் வந்தது?
      பாண் சுற்றி வருவது என்று ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் சொன்னேனுங்க… எனக்கு 6-7 வயதிலேயே இப்பழக்கம் வந்தது.. நூல் நிலையங்கள் சென்று பழைய பத்திரிகைகளுக்கு ஒரு தொகை பணம் கொடுத்து வாங்குவேன்.. பலர் ஒரு பத்திரிகைக்கு போட்டியிட்டால் பத்திரிகை வந்து அடுத்த நாளே போய் கிழித்து சட்டை பையில் மறைத்து கொண்டு வந்துவிடுவேன்.
   ஆனால் ஒன்று இப்போ என்னிடம் இருப்பது மிக கொஞ்சமேயாகும் மீண்டும் சேகரிக்கிறேன்..
இந்தியாவுக்கு  குறிப்பாக தமிழ் நாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டதுண்டா ? அப்படியானால் அங்கே நீங்கள் சந்திக்க விரும்புவது யாரை (அரசியல்வாதி, நடிகர்கள் அல்லது நண்பர்கள் உறவுகள்) ? 
      நிச்சயமாக மிகவும் விரும்புகிறேன் காரணத்தை என்றொ ஒரு நாள் அறிவீர்கள் சகோதரம்..

ஆச்சி www.aatchi.blogspot.com
தமிழக தமிழ் பல ஸ்லாங்குகளில் பேசப்படுவது போல இலங்கை தமிழும்  பல ஸ்லாங்குகளில் பேசப்படுகிறதா?
     ஆமாம் இங்கு ஊருக்கு ஊர் ஒரே சொல்லை பலவிதமாக அழைப்போம் அதிலும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத் தமிழ் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்..
 அரசியல்,கல்வி அல்லது ஏதாவது ஒரு துறையில் குறிப்பிடும்படியான பெண்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். எனக்கு குமாரதுங்கா பண்டாரநாயக்காவைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
         பலர் இருக்கிறார்கள் நிங்கள் குறிப்பிட்டவரின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட முதல் பெண் பிரதமர் என்ற பெரும் சாதனைக்குரியவர் தமிழிலும் பல பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரை வெளிப்படையாக சொல்ல முடியலிங்க..
நீங்கள் மருத்துவராஇருப்பின் உங்கள் மருத்துவம்வாழ்க்கை பற்றி சொல்லவும்.
          ஆமாம் ஒரு தனியார் மருத்தவராக கடமை புரிந்தேன் இறுதியாண்டை தொடர பொரளாதாரம் இடம் தராததால் அந்த கவலைகளையெல்லாம் தூக்கி எறிந்த விட்டு ஒரு அரசு சார்பற்ற நிறுவனமொன்னில் மனதுக்கு திருப்தியான பணியொன்றை தேர்ந்தெடுத்து பணி புரிகிறேன்.

நிலாமதி  www.mathinilaa.blogspot.com
ஒரு நாளில் கணனிக்கு முன் எவ்வளவு நேரம் செலவிட   முடிகிறது ?
    அதையேன் கேட்கிறீர்கள் அக்கா கழுதை தேய்ந்து கட்டெறும்பானாலும் பரவாயில்லை என் கதை சுதா தேய்ந்து சுருட்டை புழுவான மாதிரியாச்சு..
- சமுதாய  விழிப்புணர்வு  உள்ள நீங்கள் பல சவால்களை சந்தித்து இருப்பீர்கள். அவற்றை எப்படி எதிர் கொள்ள முடிகிறது. ?

      சேவை செய்வதில் ஒரு வித மன திருப்தி கிடைக்கிறது அதற்கு என் உடல் நிலையும் முழு ஒத்துழைப்பு தருகிறது இயலாத சூழ்நிலைகள் வரும் போது மட்டும் கொஞ்சம் தளர்வு மற்றம்படி கடவுள் என்னை சோர விடுவதில்லை.போளூர்  தயாநிதி
விடுதலை போராட்டம் என்றால் உயிர் இழப்புகள்  படுகொலைகள்  எல்லாமிருக்க  வேண்டுமென்பதில்லை  ஆயின்  நான்  என்ன ஆயுதத்தை  எடுக்க வேண்டும்  என்பதை  என்  எதிரி  தீர்மானிக்கிறான்  என்றார்  மாவோ  அதுபோல  இழப்பை   எண்ணி  வருந்தாமல்  விடுதலையை  முன்னொடுக்க  வேண்டுமேயன்றி (இருதிகட்டத்திலும் கரும்புலிகள் வேண்டுகோள் )அங்கு  ஈழத்தில்  மக்கள்(போராளிகளை  சொல்லமாட்டேன்  விடுதலைக்கு பாடுபடவில்லை  என  எண்ணவைத்து விட்டது  இதுகுறித்தான  உங்களின் பார்வை என்ன ?
         இது மிகவும் பெறுமதியான கேள்வி சகோதரம்.. வெளிப்படையாக கேட்டதற்க மிக்க நன்றி ஒரு வெளி நாட்டு பதிவர் என்னை பகிரங்கமாகவே கேட்டார்.. ”நீயெல்லாம் தப்பி ஓடி வந்ததால் தானே உயிரோடிருக்கிறாய்” என்றார். அப்படியானால் கரிபால்டி 3 தரம் கோழையானாரா ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது. ஒரு போரின் வெற்றி தோல்வியை பல காரணிகள் தீர்மானிக்கும் கொரில்லா யுத்தம் வேறு மரபு வழி யுத்தம் வேறு.. மக்களுக்கள் மரபு வழி யுத்தம் நடக்கையில் எவனும் கதிகலங்கித் தான் போவான்… ஒரு குடும்பத்தில் 2 பிள்ளை செத்தால் மற்ற 2 பிள்ளையாவது எஞ்சணும் என்பதற்காக தப்பி ஒடவே நினைப்பான்… சுருக்கமாக சொன்னால் ஒரு பேருந்தில் தவறி விழுந்தவனை இழுத்துப் பிடித்தால் அவன் மேலே வருவதற்குள் தேந்துய்து செத்தவிடுவான்… விழுந்தவன் முக்கியம் என்றால் பேருந்தை நிப்பாட்டணும்.. பிரயாணம் மக்கியம் என்றால் விழுந்தவனை கை விடுவதே சிறந்தது..

நாஞ்சில் மனோ: www.nanjilmano.blogspot.com
நான் ஆட்சிக்கு வந்தால் "மாற்றத்தை" ஏற்படுத்துவேன் என்று ஆட்சியை பிடிச்சாரே ஒபாமா, அப்பிடி ஏதாவது மாற்றம் தெரிகிறதா உங்கள் பார்வையில்....?


      ஆமாம் சகோதரம் இருக்கிறது தானே ஒற்றை மனிதனுக்கு இந்தளவு லட்சங்களை அள்ளி இறைத்து வெற்று உடம்பை கடலில் போட்டது பெரிய மாற்றமில்லையா ஹி... ஹி...
-  விலைவாசி இப்படி உயர்ந்து வருகிறதே அதன் அடிப்படை காரணம்....?
           பொருட்களுக்கான உற்பத்தி குறைந்து தேவை அதிகரிக்கின்றமை பெரும் காரணமாகச் சொல்லப்பட்டாலும்.. ஆளும் வர்க்கத்தின் சுயநலச் சுரண்டலும் தான் காரணமாக இருக்கிறது..
- நம்ம ஊர் குப்பனு��் சுப்பனும் இப்போது விழிப்படைந்து வருகிறார்களா....?
      நிச்சயமாக எங்கோ ஓர் கிராமப் புறத்தில் இருக்கும் குப்பன் சுப்பன் விழிப்பாயிருக்கிறான். ஆனால் பட்டணத்திலிலுக்கும் மனிதன் தான் உறக்கத்தில் இருக்கிறான்..மதிசுதாவின் நன்றி மடல்..
       இங்கு என்னை கேள்வி கேட்ட அனைவருக்கும் முடிந்தளவு நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிலளிக்க முயற்சித்திருக்கிறேன் கேள்வி கேட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள் அத்துடன் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் நீண்ட நாட்களுக்கு முதல் கேட்டிருந்தாலும் எனது விபத்தானது தாமதப்படுத்தி விட்டது அதற்காக அவரிடமும் தங்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. அதுமட்டுமல்ல தனது 200 வது பதிவிலேயே தனது சிக்கலான கேள்விகளுடன் துணிந்து பதிவிட்ட அவரது துணிச்சல் என்னை வியக்க வைத்தது இந்தச் சந்தர்ப்பத்தை தந்த பிரகாசுக்கு மிக்க மிக்க நன்றிகள்.. இங்கு நான் தெரிவித்த பதில்களுக்கு நான் தான் முழு பொறுப்பாளி தங்களது எதிர்மறையான கருத்துக்கள் இருப்பின் எனக்கே நேரடியாக திட்டுங்கள் உறவுகளே..


நன்றிச் செதுக்கலுடன்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

நண்பர்களே! அடுத்த பேட்டிக்கு யார் தெரியுமா?
நம்ம பதிவுலகத்தின் நம்பர் ஒன் புலி. 
யாரென்று கண்டுபிடிதீர்களா?


62 கருத்துரைகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்! மிக மிக அருமையான பேட்டி! நிறையவே சிந்திக்க வைத்துவிட்டார் சுதா!

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நன்றி நண்பரே,..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

சுதாவால் நகைச்சுவை பதிவு எழுத முடியும் என்பதை சித்தாராவின் கேள்வி மோலம் அறிந்து கொண்டேன்!

மச்சி மாட்டினீஙக! இனி விடமாட்டோம்! நீங்கள் காமெடி பதிவு போட்டே ஆகவேண்டும்!

ம் கெளப்புங்கள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

யோவ் அதுக்குள்ள நன்றி சொல்லி அனுப்பிடாதே! இன்னும் நிறைய எழுதணும்! பின்னூட்டம் போடவா வேணாமா?ஹி ஹி ஹி!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அருமையான கேள்வி பதில்கள், சூப்பர்ப்....!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

- உங்கள் பதிவுகள் பெரும்பாலும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கிறதே என்ன காரணம் ? என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்!

சுதா அப்படி ஒரு எண்ணம் உங்கள் மனதை விட்டு இந்தக்கணமே அகலட்டும்! நண்பன் என்ற உரிமையில் கொஞ்சம் கண்டிப்பாகவே சொல்கிறேன்!

மனவலிமையும், தெய்வபக்தியும் உள்ள ஒருவரை யாராலும், எதுவும் செய்துவிட முடியாது!

உங்கள் மன வலிமை பெருகட்டும்! ஆண்டவனின் அருள் கிடைக்கட்டும்!!

தமிழ்வாசி - Prakash said... Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அண்ணே! நீங்க பட்டைய கிளப்புங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

- இந்திய நாட்டில் தாங்கள் மறக்க முடியாத பிரபலமோ சாதாரண மனிதரோ யார்.??? ஏன்???
மேன்மை தகு ஜனாதிபதி அப்துல்கலாம் தான்…. அவரை எனக்கு மட்டுமல்ல உலகுக்கே பிடிக்கும்…. வடநாடே ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்��� துடிக்கையில் மனிதாபிமானத்தோடு கருணை மனுக்களை ஏற்றுக் கொண்டு விடுவிக்கச் சொன்னாரே அந்த தருணம் யாராலும் மறக்க முடியாது…

மிகவும் பொருத்தமானதும் சரியானதுமான பதில் சுதா! எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்!

Amudhavan said... Best Blogger Tips

மனதில் ரணங்களை நிரப்பிவைத்துக்கொண்டு நகைச்சுவையுடன் வலம்வரும் சுதாவை அறிந்துகொள்ள வைத்ததில் பிரகாஷின் பங்கு கணிசமானது. வாழ்த்துக்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

உதாரணத்துக்கு நானே தான் காரணம் என் பதிவில் இருக்கும் காரத்தன்மை போல நானில்லை மிகவும் நகைச்சுவையான பேர்வழி. அது நெருங்கிப் பழகுபவருக்கு மட்டுமே தெரியுமுங்க..

அடுத்த பதிவு காமெடி பதிவா போடுமாறு மொக்கை பதிவர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறே்ன்!

அப்புறம் பதிவுக்கு நடுவு நடுவுல... ஹி ஹி ஹி ஹி .....ஹா ஹா ஹா ஹா ... அவ்வ்வ்வ்வ்வ் இதெல்லாம் போட்டுக்கணும்!

மறக்காம லேபலில் மொக்கை என்று போடவும்!

♔ம.தி.சுதா♔ said... Best Blogger Tips

ரொம்ப ரொம்ப நன்றி பிரகாஷ்...

ரஜீ உங்க பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்குது....

சித்தாரா ஒரு லூசுப் பொண்ணு அவ கதையெல்லாம் ஒரு கதையெண்டு என்னையும் மாட்டி விடுறிங்களா... உங்களைப் போன்றவர்களுடன் இந்த விடயத்தில் போட்டி போடவே முடியாதப்பா...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்று இலக்கணக்காரர்கள் கூறுவார்கள். இதே இலக்கிய மொழி நடையினையோ, அல்லது எமது மரபுகளையோ தொடர்ந்தும் தக்க வைக்காது தனி மனிதனது எண்ணங்களினூடாகவும், தனி மனிதனின் சுதந்திர சுயாதீன ஊடகத்��ினூடாகவும் வலைப் பதிவுகளை எழுதி வரும் நாங்கள் ஏன் எங்களின் கடந்த கால விடயங்களைப் பதிவுகளாக்கப் பின் நிற்கிறோம்?
இவ் வினாவின் உப விடயங்களாக, அரசியலை விடுத்து, எமது அவலங்களை உற்று நோக்கினால், நடு நிலமையுடன் ஒரு தனி மனிதனது எண்ணங்களூடாக வெளி வரக் கூடிய வன்னியின் வாழ்வியல் சார்ந்த படைப்புக்கள் (இலங்கையில் 2008ம் ஆண்டுகளிற்குப் பின்னரான காலப் பகுதியினைக் குறிப்பிடுகிறேன்) இல்லை என்றே கூறலாம். இந்த எழுதப்படாத அவலங்கள் யாவும், காலவோட்டத்தில் கரைந்து போய் விடுமா? இல்லை காத்திரமான முறையில் தொகுக்கப்படுமா? உங்களின் எண்ணவோட்டத்தில் வலைப் பதிவுகள் மூலமாக எவரையும் சாடாத/ சாராத, ஒரு போர்க்கால படைப்புக்களை தனியாகவோ, அல்லது வேறு நண்பர்களுடன் சேர்ந்தோ வழங்குவது சாத்தியமாகுமா?
அப்படிச் சாத்தியாமாயின் ஏன் அவற்றை வலையேற்றப் பின் நிற்கிறீர்கள் சகோதரா?

கொய்யாலே கேக்குறான் பார் கேள்விய ....!!! யாழ்ப்பாணத்தில இருந்து கொண்டு இதெல்லாம் சாத்தியாமா? அவ்வளவு ஜனநாயகமா அங்கு நிலவுது?

சாதாரண சப்பை மேட்டருக்கே, ஏன் முள்ளிவாய்க்காலில் செத்துப் போகவில்லை என்று கேட்கிறார்கள்!

நிரு, மச்சி உனக்கு ஏனிந்த கொலை வெறி?

நீ கேட்ட கேள்விக்கு - புலம்பெயர் தேசத்து உறவுகளால் சாத்தியம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சகஜமான சூழ்நிலை அங்கு நிலவுகிறதா?

சிந்தித்து பதிலளிக்க வேண்டிய கேள்வி சகோதரம்.. காரணம் இணைந்து வாழும் சுழ்நிலை பற்றி சரியாகச் சொல்லத் தெரியல அனால் இணைந்து பழகுகிறோம் எம்மிடம் இனத் துவேசம் இருப்பது போலத் தான் அவர்களில் சிலரிடம் இருக்கிறது அனால் நாம் நினைப்பது போல விகிதாசார அடிப்படையில் நான் தொழில் ரிதியாக சந்தித்த பலர் மனித நேயம் கொண்டவர்களே…

இந்தக்கேள்விக்கு மிக அருமையாகவும், சூசகமாகவும், யதார்த்தமாகவும் பதிலளித்த சுதாவை பாராட்டுகிறேன்! மிகவும் சிக்கலான கேள்வி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

- பதிவுலகில் உங்கள் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
நான் சாதித்திருக்கிறேன் தான் இல்லையென்றில்லை ஆனால் நான் எதிர் பார்க்கும் இலக்கை இன்னும் அடையல உயிரோடிருந்தால் இன்னும் ஒரு சில வருடத்தில் அடைந்து விடுவேன்..

அந்த சாதனையை புரிய தைரியமாக ஆரம்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்! இனிமேல் சாவு, அது இதெண்டு கதைக்ககூடாது சுதா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

தமிழக தமிழ் பல ஸ்லாங்குகளில் பேசப்படுவது போல இலங்கை தமிழும் பல ஸ்லாங்குகளில் பேசப்படுகிறதா?
ஆமாம் இங்கு ஊருக்கு ஊர் ஒரே சொல்லை பலவிதமாக அழைப்போம் அதிலும் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத் தமிழ் மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கும்..

ஹி .....ஹி ....ஹி .... நல்ல பதில்
சுதா, மசுந்துறது எண்டா என்ன?

அதுக்கேனப்பா அங்க நிண்டு மசுந்துறாய்? என்று சொல்வார்களே அப்படி என்றால் என்ன?ஹி ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

- அரசியல்,கல்வி அல்லது ஏதாவது ஒரு துறையில் குறிப்பிடும்படியான பெண்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். எனக்கு குமாரதுங்கா பண்டாரநாயக்காவைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
பலர் இருக்கிறார்கள் நிங்கள் குறிப்பிட்டவரின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட முதல் பெண் பிரதமர் என்ற பெரும் சாதனைக்குரியவர் தமிழிலும் பல பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரை வெளிப்படையாக சொல்ல முடியலிங்க..

நான் சொல்கிறேன்! போர்வீரர்களுக்கு தரம் வழங்கப்படும் போது, சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாகவே, வழங்கப்படுகிறது என்கிற வரலாற்று உண்மையை பதிவு செய்து கொண்டு.....

எம்மிடம் இரண்டு பிரிகேடியர் தர பெண் வீராங்கனைகள் இருக்கிறார்கள் என்பதை மிகவும், ஆணித்தரமாகவும், பெருமையுடனும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்!

அத்துடன் அரசியலிலும், கல்வியிலும், வீரத்திலும் என பலனூறு வித்தகிகள் இருக்கிறார்கள்! - சிலர் இப்போது சிறைகளில்!

இவையெல்லாம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பெருமையாகும்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

உண்மையில் மிக மிக அருமையான பேட்டியினை தந்து சிறப்பித்த சுதா, பிரகாஷ் இருவருக்கும் நன்றிகள் + வாழ்த்துக்கள்

சாகம்பரி said... Best Blogger Tips

யுத்தபூமி, சுற்றி நிற்கும் அவலங்கள் , தொலைத்ததை தேடிக் கொண்டிருக்கும் சூழல் இத்தனைக்கும் இடையில் ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் வாழும் மனிதர்களின் முன்மாதிரியாக ம.தி.சுதா. வாழும் கலை பற்றி வரையறுக்க முடியாத பல விசயங்களை புரிந்து கொள்ளமுடிகிறது . நன்றி திரு.பிரகாஷ்.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பதிவுலகில் நான் படித்த 87 பேட்டிகளில் மிக முக்கியமான பேட்டி இது. இதை காலம் குறித்து வைத்துக்கொள்ளும். ம தி சுதாவின் இன்னொரு பக்கத்தை அறிய இது உதவும் .. பேட்டி எடுத்தவருக்கு நன்றிகள் ..பேட்டி கொடுத்தவருக்கு வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

செந்தாமரையில் ஆசை வைத்தால் சேற்றிலிருந்தாலென்ன ஆற்றில் இருந்தாலென்ன பறித்தே தீரணும் என்று நினை எல்லாம் கூடிவரும்.//
ஆழ்ந்த கருத்து. பாராடுக்கள்.

Anonymous said... Best Blogger Tips

அண்ணே உங்களை எங்கோ கண்ட போல இருக்கு, வலி மேற்கு பக்கம் வந்திருக்கிரிங்களா ? (2008 முதல் )

Anonymous said... Best Blogger Tips

////என்னை விட அதிக தொழில் நட்பம் தெரிந்த வன்னி பதிவர் ஒருவர் இருக்கிறார் தெரியும் தானே../// நம்ம நிரூபன் அண்ணாச்சியா !!!

Anonymous said... Best Blogger Tips

////என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்////ஏன் இப்படி.... இதை விட்டெறியுங்கள்...

Anonymous said... Best Blogger Tips

///- வளர்ந்து வரும் பதிவர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?
பதிவர், பதிவு இரண்டும் வேறு வேறு அவரை வாசிப்பதானால் நெருங்கிப் பழகுங்கள். பதிவை வாசிப்பதானால் நல்ல ஆணித்தரமான கருத்தை வழங்குங்கள். உதாரணத்துக்கு நானே தான் காரணம் என் பதிவில் இருக்கும் காரத்தன்மை போல நானில்லை மிகவும் நகைச்சுவையான பேர்வழி. அது நெருங்கிப் பழகுபவருக்கு மட்டுமே தெரியுமுங்க..//// என்னே ஒரு முதிர்ச்சியான பதில் ...

Anonymous said... Best Blogger Tips

////ஹ…ஹ… என்ன நிருபன் தாங்கள் அறியாததா ? அரசாங்கத்தை சாடினால் அவன் புலி ஆதரவாளன், புலிகளை சாடினால் அவன் அரசாங்க ஆதரவாளன், மக்கள் அவலம் சொன்னால் தேசத் துரோகி, மக்களுக்கான பணத்தை ஏப்பம் விட்டால் நாட்டுப் பற்றாளன் இதில் உங்களுக்க எந்தப் பட்டம் பெற விருப்பமாக உள்ளது என்று சொல்லுங்களேன்../// அதுவும் சரிதான்...

Anonymous said... Best Blogger Tips

///சிந்தித்து பதிலளிக்க வேண்டிய கேள்வி சகோதரம்.. காரணம் இணைந்து வாழும் சுழ்நிலை பற்றி சரியாகச் சொல்லத் தெரியல அனால் இணைந்து பழகுகிறோம் எம்மிடம் இனத் துவேசம் இருப்பது போலத் தான் அவர்களில் சிலரிடம் இருக்கிறது அனால் நாம் நினைப்பது போல விகிதாசார அடிப்படையில் நான் தொழில் ரிதியாக சந்தித்த பலர் மனித நேயம் கொண்டவர்களே…/// நானும் இதை கொழும்பில் வாழும் காலத்தில் சந்தித்துள்ளேன். சகோதரத்துவத்துடன் பழகும் சிங்களவர்கள் தலைநகரில் உள்ளார்கள். ஆனால் சிலரிடம் இன துவேசம் உள்ளது அது அரசியல்வாதிகள் அவர்களுள் விதைக்கப்பட்டது...

Anonymous said... Best Blogger Tips

///நான் சாதித்திருக்கிறேன் தான் இல்லையென்றில்லை ஆனால் நான் எதிர் பார்க்கும் இலக்கை இன்னும் அடையல உயிரோடிருந்தால் இன்னும் ஒரு சில வருடத்தில் அடைந்து விடுவேன்../// சாதிப்பீர்கள் ..வாழ்த்துக்கள் அண்ணே ..

Anonymous said... Best Blogger Tips

காத்திரமான கேள்வி பதில்கள். நன்றி பிரகாஸ் பாஸ்

Lakshmi said... Best Blogger Tips

கேட்க்கப்பட்ட எல்லா கேள்விகளையும்
திறமையாக எதிர்கொண்டு மழுப்பல் இல்லாத தெளிவான பதில் கள் கொடுத்
திருக்கார். பாராட்டுக்கள். பிரகாஷ் உனக்கும் பாராட்டுக்கள்.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் மற்றும் மதிசுதா

கேள்விகள் கேட்ட அனைவருக்க்கும் - அழகாக, மறுக்காமல், பூசி மெழுகாமல், தகுந்த பதிலைனை அளித்த மதிசுதாவிற்கும், பிரசுரித்த பிரகாஷிற்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Kousalya said... Best Blogger Tips

மிக மதிநுட்பமான பதில்கள்...இந்த அளவிற்கு ஒரு வெளிப்படையான நல்ல பேட்டியை பதிவுலகில் நான் படிப்பது இதுவே முதல் முறை.

அதற்கு என் பாராட்டுகள் பிரகாஷ்.

@@சுதா... உங்களின் ஒவ்வொரு பதில்களும் மிக சிந்திக்க வைத்தன. சில இடங்களில் சோகம் இழையோடியும், சில இடங்களில் நகைசுவையாகவும் உங்கள் உணர்வுகள் வெளிப்பட்ட விதம் அருமை.

உங்களை பற்றி அறிந்துகொள்ள பலருக்கும் இந்த பேட்டி உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

எந்த பதில் பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை... மொத்தத்தில் மனதை நெகிழ வைத்துவிட்டது அனைத்தும்...!!

கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றிகள்.

சித்தாரா மகேஷ். said... Best Blogger Tips

"சித்தாரா ஒரு லூசுப் பொண்ணு அவ கதையெல்லாம் ஒரு கதையெண்டு என்னையும் மாட்டி விடுறிங்களா... உங்களைப் போன்றவர்களுடன் இந்த விடயத்தில் போட்டி போடவே முடியாதப்பா..."

நன்றி அண்ணா.
இப்பிடியெல்லாம் சொல்லி நழுவ பார்க்கலாம் என்று மட்டும் நினைக்காதீர் அண்ணா.யாரும் விடாதீங்க.நல்லா மாட்டிக்கிட்டியா அண்ணா.ஹ ஹ ஹ ஹா......

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

வித்தியாசமான வேள்விகள் தெளிவான மற்றும் முதிர்ச்சியான பதில்கள்
மதி அவர்களுக்கு வாழ்த்துக்க��்..

தொகுத்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்...

சித்தாரா மகேஷ். said... Best Blogger Tips

எங்களையும் மதித்து எங்களது கேள்விகளுக்கும் பதிலளித்து எங்க சந்தேகங்களையும் தீர்த்து வைத்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா.தங்கள் வழிகாட்டலில் வளர முயற்சிக்கின்றோம்.மேன்மேலும் தங்கள் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துகின்றோம்.

! சிவகுமார் ! said... Best Blogger Tips

Extraordinary interview. பதிவுலகில் குடுக்கப்பட்ட பக்குவமான பேட்டிகளில் மிக முக்கியமான ஒன்று. கேள்வி கேட்டவர்கள், பிரகாஷ் மற்றும் சுதா அனைவருக்கும் நன்றிகள் பல.

சித்தாரா மகேஷ். said... Best Blogger Tips

ஆமா அண்ணா ஆலம் விழுது நீங்க பிடிக்காவிட்டால் விழுந்து விடுமா இல்ல ஆலம் விழுதை பிடிக்காவிட்டால் நீங்க விழுந்திடுவீங்களா????

FOOD said... Best Blogger Tips

மிக வித்யாசமான பகிர்வு. சுதாவின் மறு பக்கம், மனப்பக்குவம்,ஆதங்கங்கள் வெளிகொணர்ந்த பிரகாசிற்கு வாழ்த்துக்கள். மிக வித்யாசமாய் பதில்களை சுவர்ராசியமாஇ அளித்த மதி.சுதாவிற்கு பாராட்டுக்கள்.

சித்தாரா மகேஷ். said... Best Blogger Tips

எவருமே சிந்திக்காத மிகவும் அருமையான உங்கள் 200 வது படைப்புக்கு எனது
வாழ்த்துக்கள் பிரகாஷ் அண்ணா.

சித்தாரா மகேஷ். said... Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன்.

"அடுத்த பதிவு காமெடி பதிவா போடுமாறு மொக்கை பதிவர்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறே்ன்!

அப்புறம் பதிவுக்கு நடுவு நடுவுல... ஹி ஹி ஹி ஹி .....ஹா ஹா ஹா ஹா ... அவ்வ்வ்வ்வ்வ் இதெல்லாம் போட்டுக்கணும்!"

நான் இதை ஆமோதிக்கின்றேன்.

மறக்காம லேபலில் மொக்கை என்று போடவும்!

godfather said... Best Blogger Tips

அருமையான,சிந்தையை தூண்டும் விதமான பேட்டி.வைகோ பற்றிய பதிலும்,பேருந்து உவமையும் முறையே சிரிக்க,சிந்திக்க வைத்தது.சுதா அவர்களுக்கு நன்றி.பிரகாஷ்க்கு எனது வாழ்த்துக்கள்.

நிரூபன் said... Best Blogger Tips

மதிசுதாவின் பதில்கள் அனைத்துமே அருமை, காலத்திற்கேற்ற வகையில் மென்றும் விழுங்கியும் மதிசுதா பதில் சொல்லியுள்ளார். அவ்...

வாழ்த்துக்கள் சுதா,
நன்றிகள் பிரகாஷ்.

செங்கோவி said... Best Blogger Tips

ஆணித்தரமான பதில்கள்..எனது கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி சுதா. (ஹி.ஹி..நேத்து எப்படியோ இந்தப் பதிவை மிஸ் பண்ணீட்டேன்!)

தம்பி கூர்மதியன் said... Best Blogger Tips

உங்கள் பதிவை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டிருகேன்.. நேரம் கிடைக்கும் போது வந்து எட்டி பார்க்கவும்..

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_31.html

akulan said... Best Blogger Tips

முதல் வருத்தம் என்னால் கேள்வி கேட்க முடியவில்லை......

"என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்"
இதை வாசித்தவுடன் இந்த பதிவு ஏதும் சொல்ல துடிக்குதா என்று தோன்றுகிறது........

வாழ்த்துக்கள் தமிழ்வாசி......

மகாதேவன்-V.K said... Best Blogger Tips

அன்புச் சகோதரன் மதி. சுதாவுக்கு!

பதிலுக்கு மிக்க நன்றி��ள் தங்கள் திறமைக்கு மற்றுமொரு ஆதாரம் இங்கே பரவிக்கிடக்கின்றன.

வாழ்க வழமுடன்.

Nesan said... Best Blogger Tips

பிந்தி வந்தாலும் திருப்தியுடன் உள்ளேன் நண்பரின் பதிலில் வாழ்த்துக்கள் சுதா நன்றி என் கேள்விகளையும் இனைத்ததிற்கு பிரகாஸ் இற்கும் நன்றிகள்!

மகாதேவன்-V.K said... Best Blogger Tips

இப்படியொரு பதிவை தேர்வுசெய்து பதிவிட்டத்தட்க்கு வாழ்த்துக்கள் பிரகாஷ்

நிரூபன் said... Best Blogger Tips

முதலி���் அனைவரிடமும் ஒரு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதிகமான வேலைப் பளு, மற்றும் பயணத்திற்கு வேண்டிய தயார்படுத்தல் பிசி காரணமாக வலையில், என் வழமையான பாணியிலான பின்னூட்டங்களை வழங்க முடியவில்லை,

நண்பர்களே! அடியேனை மன்னித்துக் கொள்ளுங்கள்.

நிரூபன் said... Best Blogger Tips

முக்கிய அம்சமான விஷயம்//

அதென்ன் முக்கிய அம்சம், விசயம்,

இரண்டுமே ஒரே பதம் தானே மாப்பிளை. அவ்..

நிரூபன் said... Best Blogger Tips

மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)//

அடடா, டபுள் செஞ்சரி அடிச்சிருக்கீங்க தலைவா!
வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said... Best Blogger Tips

டபுள் செஞ்சரி அடிச்சா மட்டும் போதாது, தொடர்ந்தும் நம்மளைச் சுற்றிக் கலக்கிக் கிட்டே இருக்கனும் சகோ.

நிரூபன் said... Best Blogger Tips

யோ, மதிசுதா, உந்தப் படம் கிளிநொச்சிக் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னாடி உள்ள ஆலமரத்திற்கு கீழே தானே எடுத்தது...

கலக்கல் மச்சி.
அதென்ன ஆலம் விழுதிலை ஒரு கைப் பிடி?

நடிகர் விஜய் இன் ஸ்டைலில் ஒரு லுக்கு!

நிஜமாகவே நீ ஹீரோ தான் மாப்பிளை!

நிரூபன் said... Best Blogger Tips

மச்சி மதிசுதா, இந்தப் போட்டோவைப் பார்த்திட்டுப் பொண்ணுங்கள் உங்கள் வீட்டுக்கு வரன் பார்க்க லெட்டர் அனுப்பலையா?

நிரூபன் said... Best Blogger Tips

உங்கள் ஆதாங்கம் புரிகிறது உங்க முகத்தின் முன்னே நடந்து கொள்வது வேறு…. எழுத வரும் போது அடிக்கடி சிரியசான பதிவு போடும் இந்த நகைச்சுவையாளனை எந்த கண் கொண்டு பார்ப்பார்கள் என்ற ஒரு சந்தேகம் தான் காரணம். பதிவுகளின் முக்கியத்துடன் ஒப்பிடுகையில் என்னிடம் உள்ள நகைச் சுவை பதிவை விட சமூக பதிவே காத்திரம் கூடியதாக இருக்கிறது.//

மாப்பிளை, நகைச்சுவைகளையும் கலந்து கட்டி அடிக்கிறதிலை என்ன தப்பு. சமூகம் சமூகம் என்று தொடர்ச்சியாக ஒரே மாதிரியான நடையில் வெவ்வேறு உட் கருத்துக்களோடு பதிவுகளைத் தருவதிலும் பார்க்க, வித்தியாசமான நடையில் பக்காவா ஜோக் போடலாமில்ல.

சகோ, சும்மா நடிக்காதீங்க, உங்க கிட்ட உள்ள திறமைகளில் நகைச்சுவை உணர்வும் ஒன்று என்பது எனக்கும், ரஜீக்கும் எப்பவோ தெரியும்.

நிரூபன் said... Best Blogger Tips

என் மரணம் இந்தக் கணம் கூட வரலாம் அதுக்குள்ளாக ஏதாவது அடையாளத்தை விட்டு செல்ல விரும்புகிறேன்//

பாஸ், இனிமேல் ஒரு பேட்டியில். எங்காச்சும் இதனைப் பார்த்தேன், பிச்சுப் புடுவேன் பிச்சு.

கடவுள் எப்போதுமே உங்க கூட இருக்கார் பாஸ், அத்தோடு மக்களின் அன்பும் உங்களுக்கு இருக்கு. இல்லேன்னா நம்மளையெல்லாம் முள்ளிவாய்க்காலில் இருந்து இவ்ளோ தூரம் மீட்டிருப்பாரா.

கவலை வேண்டாம் சகோ. திடமாக இருங்கள்.

நிரூபன் said... Best Blogger Tips

அப்படிச் சாத்தியாமாயின் ஏன் அவற்றை வலையேற்றப் பின் நிற்கிறீர்கள் சகோதரா?
ஹ…ஹ… என்ன நிருபன் தாங்கள் அறியாததா ? அரசாங்கத்தை சாடினால் அவன் புலி ஆதரவாளன், புலிகளை சாடினால் அவன் அரசாங்க ஆதரவாளன், மக்கள் அவலம் சொன்னால் தேசத் துரோகி, மக்களுக்கான பணத்தை ஏப்பம் விட்டால் நாட்டுப் பற்றாளன் இதில் உங்களுக்க எந்தப் பட்டம் பெற விருப்பமாக உள்ளது என்று சொல்லுங்களேன்..//

ம்...ஆனாலும் நாட்டுப் பற்றாளராக ஒரு சில நாட்கள் நினைவு கூரலை விடத்
துரோகி எனும் பெயரோடு வாழ் நாள் பூராகவும் வாழ்வது சந்தோசம் தானே மாப்பிளை.

நிரூபன் said... Best Blogger Tips

மதிசுதாவின் பதில்கள் ஒவ்வொன்றும் காத்திரமானவை, அதே போல பிரகாசின் இம் முயற்சியும் அபாரமானது.

பிரகாஷ், கடந்த பேட்டிகளைப் போலல்லாது மதிசுதாவின் பேட்டியில் வெரைட்டி காட்டியிருக்கிறார்.
வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said... Best Blogger Tips

தனது வேலைப் பளுவிற்கு மத்தியிலும் சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனின் உணர்வுகளை, உள்ளக் கிடக்கைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் வழங்கிய சகோ பிரகாசிற்கு மனமார்ந்த நன்றிகள்.

நிரூபன் said... Best Blogger Tips

மதிசுதா, துடிப்பான இளைஞன், திடமான நம்பிக்கை கொண்ட சமூகம் மீது பற்று மிக்க இளைஞன் என்பதற்கு அவரது பதில்களே சான்றாக அமைகின்றன.

வாழ்த்துக்கள் சுதா.

நிரூபன் said... Best Blogger Tips

தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

சிறப்பான பேட்டி...!

பூங்கோதை said... Best Blogger Tips

சுதா, உங்கள் பதில்கள் மனதை நெகிழ வைக்கின்றன. ஒவ்வொன்றும் இரத்தினச் சுருக்கம். ஆனால் எப்போதும் மரணத்தை எதிர்பார்க்கும் தொனியில் நீங்கள் கூறிய பதில் ரணமாக வலிக்கிறது. தயவுசெய்து எதையும் எதிர்மறையாக சிந்தித்துக்கூடப் பார்க்காதீர்கள்.
சாமர்த்தியமான பதில்கள். வாழ்த்துக்கள். இத்தகைய ஒரு பெறுமதி வாய்ந்த பதிவை இட்ட பிரகாசுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1