CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இனிய உறவுகளுக்கு வணக்கம்

நேற்று நெல்லையில் பதிவர்கள் சந்திப்பு திரு. சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது. காலை பத்து மணியளவில் ஒவ்வொருவருக்கும் முகமறியா நண்பர்களாகிய நாங்கள் முகமறிய குடும்பமாக ஒன்று கூடினோம். இதில் சுமார் 5, 6 பெண் பதிவர்களும் அடக்கம்.

வந்திருந்த நண்பர்களை எனக்கு தெரிந்தவரை குறிப்பிட்டுளேன்.
உணவு சங்கரலிங்கம்
வலைச்சரம் சீனா
நாஞ்சில் மனோ
இம்சை அரசன் பாபு
பலாபட்டறை ஷங்கர்
மணிஜீ (தண்டோரா)
பெயர் சொல்ல விரும்பவில்லை
சி பி செந்தில் குமார்
கோமாளி செல்வா
மணி வண்ணன்
தமிழ்வாசி பிரகாஷ்
வெடி வேல் சகாதேவன்
தங்கசிவம்
வெறும்பய ஜெயந்த்
ஷர்புதீன் ( ரசிகன் )
ஸ்டார் ஜான்
ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்னவேல்
DR.கந்தசாமி.Phd
சித்ரா
கௌசல்யா
ரூபினா
கல்பனா
ஜோஸபின்
இன்னும் பலர் வந்திருந்தார்கள்.


    காலை பத்துமணியளவில் மிதிலா ஹாலில்-A/C பா வடிவ மேசையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பார்க்கும் வண்ணம் அமர்ந்தோம். திரு. சங்கரலிங்கம் சார் அனைவரையும் வரவேற்று பேசினார். வரிசையாக ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் வலைப்பூவையும் அறிமுகம் செய்து கொண்டோம். அட்ராசக்க சி.பி அறிமுகம் அனைவரையும் சிரிக்க வைத்தது. இன்று பதிவு போட முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் முகத்தில் தெரிந்தது. ஒவ்வொருவரின் அறிமுகமும் மிக நகைச்சுவையாக கலகலப்பாக முடிந்தது. பின்னர் சில்லென்ன லெமன் ஜூஸ் குடித்து முடித்தது தான் தாமதம் கோமாளி செல்வா எழுந்து தன் கோக்கு மாக்கு கடிகளை எங்கள் முன் அவிழ்த்துவிட்டார். அதை சொல்ல வேண்டுமானால் தனி பதிவு போட வேண்டி வரும். 
       திரு. சீனா ஐயா அவர்கள் சீனியர் பதிவர்களை பற்றியும் புதிய பதிவர்கள் பற்றியும் பேசினார். பின்னர் ஒவ்வொருவரும் பதிவுலகை பற்றியும், தாங்கள் எப்படி பதிவு எழுத வந்தோம் என்றும், பிறரின் பதிவுகள் தங்களை எப்படி கவர்ந்தன என்பதை பற்றியும் கலந்துரையாடலாக பேசினோம். பலாபட்டறை சங்கர் சீனியர் பதிவர்கள் பதிவெழுதுவதை குறைத்து விட்டார்கள் என ஆதங்கபட்டார். அவர்கள் கூகிள் பஸ்சிலும், டிவிட்டரிலும் தான் அதிகமாக தென்படுகிறார்கள் என குறிப்பிட்டார். இதே கருத்தை மணிஜியும் சொன்னார். சி.பி அவர்கள் தன் பதிவுகள் பற்றியும், ஹிட் பற்றியும் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நகைச்சுவையாக பதில் சொன்னார். 


எங்களை ஏமாற்றிய மனோ.... என்னவென்று தெரிய வேண்டுமா?
தொடரும்....


36 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips

சுவாரசியமாக தான் நடந்திருக்கிறது .. மனோ மாஸ்டருக்கு என்னாச்சு..)))

செங்கோவி said... Best Blogger Tips

கலந்து கொள்ள முடியாத எங்கள் மனக்குறையைப் போக்குகிறது உங்கள் விலாவரியான பதிவு..நன்றி பிரகாஷ்..

நிரூபன் said... Best Blogger Tips

மாப்ளே, சஸ்பென்ஸ் வைச்சு முடிக்கிறீங்களே,
அடுத்த இடுகையினை உடனடியாகப் போடுங்கோ.

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

சுவராசியமா இருக்கு, அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே? கொஞ்சம் போட்டோக்களும் போட்டிருக்கலாமே?

கடம்பவன குயில் said... Best Blogger Tips

நடந்தது என்ன? அடுத்த பதிவிலா?
சஸ்பென்ஸ் தாங்கலப்பா சாமி.
தமிழ்வாசி....உடனே வாசி... இல்லைனா அனுப்பிடுவோம் காசி...ஹா...ஹா...ஹா...

மதுரை சரவணன் said... Best Blogger Tips

ithellaam eppa eppadi nadakkuthu.. enkalukku therivikkaama poona cheena, thamil vaasiyai kandikkiroom..

அம்பாளடியாள் said... Best Blogger Tips

லெமன் யூஸ் நல்லா இருந்திச்சு அதவிட உங்களுக்கு பின்புற சுவரில "பல்லி" இருந்ததையும்
நான்பாத்தனே!..ஹி...ஹி...ஹி....
நன்றி சகோ பகிர்வுக்கு வாழ்த்துக்கள்....

அம்பாளடியாள் said... Best Blogger Tips

அண்ணாச்சி ரெண்டு ஒட்டு போட்டாச்சு..அரோகரா.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... Best Blogger Tips

யோவ் இது நியாயமா? இப்புடி கொஞ்சூண்டு போட்டு கடுப்ப கெளப்புறியே! காலைல எந்திரிச்சு மொதல் வேலையா பதிவு போடு மச்சி!

சஸ்பென்ஸ் தாங்க முடியல! கண்டிப்பா படம் போடு!! ஒகே!

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

இது பதிவுலக அராஜகம்.
நாங்க வரலை எனபதற்க்காக இப்படி சஸ்பென்ஸ் வைத்து கொல்வதா?

யாரங்கே....யாரடா..அங்கே
அழகிரி அண்ணன்கிட்ட சொல்லி தமிழ்வாசியை தூக்கச்சொல்லு...

[அய்யய்யோ...பழைய நெனப்புல பிளிரிட்டமோ....]

Rathnavel Natarajan said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் பிரகாஷ்.

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

Voted 10 to 11 in INDLI

தங்களின் இந்தப்பதிவு நன்றாக உள்ளது. நேரில் கலந்து கொண்ட திருப்தியளிக்கிறது. பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன் vgk

Mahan.Thamesh said... Best Blogger Tips

சுவாரசியமா போய்க்கிட்டு இருந்தீச்சு அதுக்குள்ளே தொடருமா

ஜெட்லி... said... Best Blogger Tips

மகிழ்ச்சி....படங்கள் போட்டு இருக்கலாம்....

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - சுடச்சுட இடுகை இட்டாயிற்றா ? பலே பலே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கூடல் பாலா said... Best Blogger Tips

இதத்தாம்ண்ணே ரொம்ப நேரமா எதிர் பார்த்துகிட்டு இருக்கேன் .....மீதியையும் சொல்லிட்டீங்கன்னா பதிவர் சந்திப்புல கலந்துகிட்ட திருப்தி வந்திடும் ......

Unknown said... Best Blogger Tips

நல்வாழ்த்துகள்!

rajamelaiyur said... Best Blogger Tips

சந்தோஷமா இருந்திகளா ?

rajamelaiyur said... Best Blogger Tips

இன்று என் வலையில்

வருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23

சசிகுமார் said... Best Blogger Tips

யோவ் என்னய்யா அதுக்குள்ள முடிச்சிட்ட

சாகம்பரி said... Best Blogger Tips

உங்களுடைய லைவ் டெலிகாஸ்ட் வேற சதி பண்ணிடுச்சு. அதனால வந்தார்கள்... வென்றார்கள்... சென்றார்கள்.. என்று எழுதாமல் விரிவாக எழுத வேண்டும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இந்த வாரம் பதிவர் சந்திப்பு பதிவு வாரம்....

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

//////
சி பி செந்தில் குமார்
கோமாளி செல்வா
மணி வண்ணன்
தமிழ்வாசி பிரகாஷ்
வெடி வேல் சகாதேவன்
தங்கசிவம்////////


இதுல தமிழ்வாசி பிரகாஷ்-ன்னு இருக்கே அது யாரு..

Anonymous said... Best Blogger Tips

ஒரு ஃபோட்டோ கூட இல்ல...சங்கத்து ஆளு யாராவது விலாவரியா எழுதுங்கப்பா

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

Anonymous said... Best Blogger Tips

நான் வரலாம்னுதான் நெனச்சேன் ஆனா கடசி நேரத்துல நம்ம ஒபாம போன் பண்ணிட்டாரு, ஏதோ சிஐஏ வெப்சைட் ஹாக்கிங் பிரச்சனையாம், அத அவங்களாலயே தீக்க முடியலயாம் என்ன கூப்பிட்டாங்க போய் சரி பண்ணிட்டு வந்தேன்,அடுத்த சந்திப்பு அட்டண்ட் பண்ணிடுவோம்...

சிநேகிதன் அக்பர் said... Best Blogger Tips

வாழ்த்துகள்!

இன்னும் எழுதுங்க. காத்திருக்கோம்.

நானானி said... Best Blogger Tips

திருநெல்வேலிக்காரியாகிய என்னால் கலந்துக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் பதிவைப் படித்ததும் தீர்ந்தது.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ஆமா கேக்க மறந்துட்டேன், பதிவர் சந்திப்புல எதுக்குய்யா எப்பவும் பேண்டை கெட்டியா பிடிச்சிட்டு இருந்தீர்...? நான் சொல்லலை சிபி'தான் கேக்க சொன்னான் ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பகிர்வுக்கு நன்றி.//

அண்ணே ரமேஷ் அண்ணே நன்றிண்ணே....

Sivakumar said... Best Blogger Tips

/எங்களை ஏமாற்றிய மனோ.... என்னவென்று தெரிய வேண்டுமா?//

குற்றாலத்தில் குளிக்கும்போது மனோ போஸ் தராமல் ஏமாற்றியது அனைவருக்கும் வருத்தமே!!

J.P Josephine Baba said... Best Blogger Tips

மக்கா இப்படி கொடுமை படுத்தப்பிடாது முழு பதிவையும் கொடுங்கப்பா................

காதர் அலி said... Best Blogger Tips

அண்ணே,என்னைய விட்டுட்டிங்களே பார்த்து செய்யுங்க.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

haa haa ஹா ஹா போற போக்கை பார்த்தா 10 பதிவு தேத்திடுவீங்க போல

Starjan (ஸ்டார்ஜன்) said... Best Blogger Tips

பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றிகள்.

Unknown said... Best Blogger Tips

///சி.பி அவர்கள் தன் பதிவுகள் பற்றியும், ஹிட் பற்றியும் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நகைச்சுவையாக பதில் சொன்னார்.///


என்னது நகைச்சுவையா பேசினாரா . போக போக கோவமாக பேசினார்ங்க

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1