CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!அட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
இனிய உறவுகளே! வணக்கம்

   இன்றைய பேட்டியில் நாம் பேச இருப்பது வலையுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு சி. பி. செந்தில் குமார் அவர்களை தான். அவர் எழுதும் வலைப்பூ அட்ரா சக்க. அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் சொல்லனுமா? உங்களுக்கு தெரியாததா அவரை பற்றி....ஹி..ஹி... அவர் வலைப்பூ படிச்சிங்கன்னா தெரிஞ்சுக்கலாம். வலையுலக நண்பர்களிடமிருந்து கேள்விகள் கேட்டிருந்தேன் நிறைய வந்துள்ளன. அவர்களுக்கான சி பி.யின் பதில்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம். இன்று எனது கேள்விகள் இடம்பெறுகின்றன. 

1. அட்ரா சக்க பெயர் காரணம் கூறுக?
        மதுரை வீரன் எங்க சாமி படத்துல கவுண்டமணி அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க அப்டின்னு சொல்ற டயலாக் ஃபேமஸ் ஆச்சு.. அதை வெச்சு என் நண்பர் சப்ப மேட்டர் .காம் வலைத்தளத்தில் எனக்கு ஒரு இடம் அளித்து எழுத வெச்சாரு.. பின் நல்ல நேரம் சதீஷ் பிளாக்ல சான்ஸ் குடுத்தாரு. அப்புறம் என்னோட மொக்கைகளை பார்த்துட்டு தனிக்குடித்தனம் போங்கன்னு துரத்தி விட்டுட்டாரு.. அவர் தான் எனக்கு பிளாக் ஓப்பன் பண்ணி குடுத்தாரு.. எனக்கு அவர் தான் பதிவுலகின் குரு.. எனது தளத்தின் நோக்கம் போட்றா மொக்க.. ஹி ஹி .. ஜூலை 17ந்தேதி வந்தா ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆகுது.

2. நீங்கள் வாங்கிய பல்புகளில் (மின்விளக்கு அல்ல) மிக சிறந்த பல்பு எது?
     இதுவரை நான் 1786 தடவை 378 பேர்ட்ட பல்பு வாங்கி இருக்கேன்.. ஆனா என் பொண்ணு கிட்டே வாங்கிய பல்பு தான் நான் வாங்குன பல்புகளீலேயே சிறந்த பல்பு.. அதுக்கான லிங்க்.. http://adrasaka.blogspot.com/2011/01/vs_28.html . ஹி ஹி (  நீதி - தமிழன் கேப் கிடைக்கற பக்கம் எல்லாம் சுய தம்பட்டமும் விளம்பரமும் பண்ணீக்குவான்..)

3. உங்கள் பதிவின் கருத்துரைகளில் மிகச்சிறந்த கருத்துரை இடுபவர் யார்?
          லேப் டாப் மனோவும்,விக்கி தக்களியும் தான் .. ஏன்னா மனோ பதிவை படிக்கவே மாட்டாரு. அருவா வெட்டு,அப்டின்னு கமெண்ட் போடுவாரு. தக்காளி லைட்டா படிப்பாரு ஹி ஹி அப்டினு கமெண்ட் போடுவாரு.. மத்தவங்க எல்லாம் என்னை குறை சொல்வாங்க.. படிச்சுட்டு கருத்து சொல்வாங்க,, என்னை பொறுத்தவரை படிக்காமயே என் பதிவை சூப்பர்னு சொல்றவங்களைத்தான் பிடிக்கும் ஹி ஹி  ( இது சும்மா காமெடிக்கு.. உடனே சிலர் சீறி எழுந்து மன்னிப்பு கேள்னா கேட்டுடுவேன் ஹி ஹி )

4. உங்களுக்கும் தக்காளிக்கும் அடிக்கடி சண்டை வருமாமே, ஏன்? எந்த விஷயத்திற்கு சண்டை வரும்?
             விக்கி  தக்காளிக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுவேன்.. அப்போ அவரு 
பி ஏ கூட ஏதாவது அஜால் குஜாலா பேசிட்டு இருப்பாரு.. ஃபோனை கட் பண்னாதப்பா.. ஒட்டு கேட்கறேன்பேன்.. ஓக்கேன்னு சொல்லிட்டு முக்கியமான டைம்ல கட் பண்ணிடுவாரு.. ஐ டோண்ட் லைக் இட் ஹி ஹி 

5. நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளில் மிகவும் சிரமப்பட்டு அதிக நேரம் செலவழித்து எழுதிய பதிவு எது? ஏன்? (லிங்க் வேண்டும்)
    http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_11.html பெண் எழுத்து ஒரு பாசிட்டிவ் பார்வை. இந்த பதிவுக்கு சில புள்ளி விபரங்கள் தேவைப்பட்டது. லைப்ரரில போய் கலெக்ட் பண்ணினேன்.. ..ரொம்ப சிரமப்பட்டு கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவு பண்ணி ரெடி பண்ணுன பதிவு ஹிட் ஆகலை. ஆனா நான் 16 நிமிடங்களில் ஜஸ்ட் டைப் பண்ணுன 10 ஜோக்ஸ் உள்ள பதிவு சூப்பர் ஹிட் ஆகி இருக்கு.. அந்த மாதிரி வெற்றிகள் எனக்கு வருத்தத்தை தரும். இந்த மாதிரி தோல்விகள் வாசகர்களைப் போய்ச் சேரவில்லையே என்ற வருத்தம் தரும். 

6. எந்த நடிகை வந்து இந்த பேட்டியை உங்களிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
      எந்த நடிகையா இருந்தா என்ன? புது முகமா இருக்கனும். வயசு 15 டூ 16 க்குள்ள இருக்கனும். ஹி ஹி . மற்றபடி சிலர் புரளி கிளப்புவது போல் நமீதா, அஞ்சலி,ஹன்சிகா மேல் தனிப்பட்ட அபிமானம் ஏதும் இல்லை... என்னைப்பொறுத்தவரை யாரும் ஃபிகரே யாவரும் கலரே..  ஹி ஹி... 

7. உங்கள் வலைப்பூவுக்கு எத்தனை உதவியாளர்கள் வச்சிருக்கிங்க? எவ்வளவு சம்பளம் கொடுக்கறிங்க?
        ஹா ஹா ஏன் இந்த கொலை வெறி? நான் வெளில இருந்தா என்னால பதிவு போட முடியாத டைம்ல  பிளாக் பாஸ்வோர்டு குடுத்து யாரையாவது ஃபிரண்டை பதிவு போட சொல்லிடுவேன்.. ஆல்ரெடி டிராஃப்ட்ல 50 பதிவு டூ 60 ரெடியா வெச்சிருப்பேன்.. சம்பளம் எல்லாம் கிடையாது..  என் கிட்டே 800 டிவிடி இருக்கு.. அதுல 10 டிவிடி கிஃப்ட்..

8. உங்கள் வலைப்பூவை டாட் காமாக (dot com) ஆக மாற்றும் எண்ணம் உள்ளதா?
       நான் எப்பவும் காம் டைப் கிடையாது.. கல கல டைப்.. என் பிளாக் மட்டும் ஏன் காம் அதாவது டாட் காம் ஆக இருக்கனும்? அதுவும் இல்லாம மாசம் ரூ 500 பணம் தரனுமாமே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,அந்தளவு நான் ஒர்த் இல்லைங்க.. 

9. பதிவுலகில் உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்?
        ஹா ஹா எழுத வந்ததே ஒரு ஜாலிக்காகத்தான்.. இதுல போட்டியாவது ஒண்ணாவது.. ஆனா இவங்க அளவுக்கு எனக்கு திறமை இல்லையேன்னு சிலரை மனசுக்குள்ள நினைச்சிருக்கேன்.
  1. குசும்பன் 2. சேட்டைக்காரன் 3 ராம்சாமி 4. பட்டாபட்டி 5 . ஜோதிஜி திருப்பூர்..6 நிரூபன்  7 . ம தி சுதா  8. மாத்தி யோசி ஜீவன்  என நீளும் பட்டியல்கள்.... 

10. வலைப்பூவை பற்றி, உங்கள் பதிவுகளை பற்றி நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்வீர்களா?
       பொதுவா ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் தான் முக்கியம்.. முகம் தெரியாத நண்பர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியா இருந்தாலும் நம்ம குடும்பம் நம்மளை புரிஞ்சிக்கிட்டா சந்தோஷம் ,ஆனா எனக்கு அந்த சந்தோஷம் இல்லை.. ஏன்னா இதெல்லாம் வேலையத்த வேலைன்னு சொல்வாங்க.. குடும்பத்தை கவனிச்சா போதும்பாங்க.. ஆனா எங்கம்மா, அப்பா கிட்டே ஷேர் பண்ணும்போது சந்தோஷப்படுவாங்க.. ஆனா அதிலயும் ஒரு பிராப்ளம்.. அப்பா இறந்துட்டாரு.. நமக்கு யார் ஆதரவா ,பாசமா இருக்காங்களோ அவங்களை இழந்துடறது தான் மனிதனோட தலை விதி.

11. BLOGGER இல் இன்னும் என்னென்ன வசதிகள் இருந்தால் வலைப்பூவிற்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
     திரட்டிகளிடம் இணைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆட்டோமேட்டிக்கா இணைஞ்சா நல்லாருக்கும் ( நோகாம நோம்பி..!!!!!!!!!!!)

12. இனி வரும் காலத்தில் வலைப்பூவின் வளர்ச்சி நன்மையாக இருக்குமா? தீமையாக இருக்குமா?
        வலைப்பூவின் வளர்ச்சி பிரம்மாண்டமாக வளரும் என்பது காலத்தின் கட்டாயம்.. சமுதாய மாற்றத்துக்கு மீடியா எப்படி முக்கியப்பங்கு வகிக்குதோ அதே அளவு பிளாக்கும் அசுர வளர்ச்சி பெறும்.. 

நண்பர்களே, இன்று நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது என் வலைப்பூவின் 250 வது இடுகை ஆகும். இதுவரை 215 பாலோயர்கள் பெற்றிருக்கிறேன். இதுவரை நீங்கள் குறைவில்லாமல் கொடுத்த ஆதரவும், பின்னூட்டங்களுமெ இத்தனை இடுகைகளுக்கு என்னை சொந்தக்காரனாக்கியது. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை. மிக்க நன்றி. 


124 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1