CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!ஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)


மாலை நேரம். சூரியன் மயங்கும் நேரம். உணவுக்காக தன் கூட்டையும், குஞ்சுகளையும் விட்டு உணவு தேடி நெடுந்தூரம் பயணித்த பறவைகள், தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. பசியினாலும் பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் தத்தம் பெற்றோரை பார்த்த ஆனந்தத்தில் கி..கீ..கீச்..கீச்... என ஆராவாரித்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை சந்தோசமாக கொத்திக் கொண்டிருந்தன. அக்காட்சியை பார்த்து நாளெல்லாம் இரையை தேடித் தேடி பறந்த களைப்பையும் மறந்து பேரானந்தம் அடைந்தன, பெற்றோர் பறவைகள்.
ந்தப் பறவைகளின் பாசத்தை பாண்டியம்மாள் ஏக்கத்தோடும், ஒரு வித ஏமாற்றத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள். பாண்டியம்மாள் பண்ணிரண்டு வயது நிரம்பிய சிறுமி. அவள் தினமும் வீட்டை விட்டு வெளியே செல்கிறாள். படிக்க அல்ல. வேலை பார்க்க, அவளை அரவணைக்கவும் அன்பைக் காட்டவும் அம்மா மட்டுமே இருக்கிறாள். அப்பா இல்லை. மணல் லாரி ஒட்டிக்கொண்டு இருந்த அவர் மணல் கொள்ளை முதலைகளின் போட்டியால் செயற்கையாக நடத்தப்பட்ட விபத்தில் கொல்லப்பட்டு நான்கு வருடங்கள் ஓடி விட்டது.
பாண்டியம்மாள் இன்று வேலைக்கு செல்லவில்லை. சளி, இருமலோடு காய்ச்சலும் சேர்ந்து அவளை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்திருந்தது. லொக்..லொக்.. என இருமிக் கொண்டே வீட்டு வாசலில் உட்கார்ந்து பறவைகளின் அன்பை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா வீட்டினுள் அடுப்பு புகையுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அந்த புகையும் அடுப்பில் ரேசன் அரிசியை அமிர்தமாக மாற்றிக் கொண்டிருந்தாள். அப்படியே மகளுக்கு கஷாயமும், கஞ்சியும் தயார் செய்து கொண்டிருந்தாள். அவள் வயக்காட்டு வேலைக்கு சென்று காசு பார்க்கிறாள். கடந்த ஒரு மாதமாக பண்டியம்மாளும் வேலைக்கு செல்கிறாள். இதனால் அவளின் படிப்பு பாதியில் நின்று போனது. வெறு வழியில்லை அவர்களுக்கு, வறுமையை வென்றாக வேண்டிய கட்டாயம்.
ஸ்,ஐஸ், பாலைஸ், கப்பைஸ் என ஐஸை கூவி கூவி விற்றுக் கொண்டு வந்தான் ஒருவன். நம் பாண்டியமாளுக்கு ஐஸ் சாப்பிட ஆசை வந்தது. ஆசையாக அம்மாவிடம், "அம்மா...அம்மா...ஐஸ் வாங்கிக் கொடும்மா... சாப்பிடனும் போல ஆசையா இருக்கும்மா" என்றாள். "கண்ணு, தாயி, எனக்கு ஒடம்பு சரியில்லம்மா, இன்னைக்கு வேணாம், இன்னொரு நாள் அம்மா வாங்கி தரேன்" என்றாள். வெறு வழியில்லாமல் பான்டியம்மாளும் " சரிம்மா" என்றாள். அம்மாவுக்கு ஆசைதான், மகளுக்கு ஐஸ் வாங்கி தர...ஆனாலும் அன்று அவள் வேலைக்கான கூலி கிடைக்கவில்லை. காரணம், போன மாதம் அவளுக்கு வயிற்று வலி வந்து உடம்புக்கு முடியாமல் வேலைக்கு செல்லாமல் ரெண்டு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டாள். இச்சூழ்நிலையில் தான் பாண்டியம்மாள் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தாள்.
களுக்கு ஆக்கி போடவும், தன்னுடைய மருத்துவ செலவுக்கும் வயக்காட்டு மொதலாளியிடம் கொஞ்சம் பணம் வாங்கியிருந்தாள். அந்த பணத்தை தினமும் வேலை பார்த்து கடன் அடைத்துக் கொண்டிருந்தாள். அதோடு மகளை வைத்தியரிடம் காண்பித்து மருத்துவம் பார்த்து கொண்டிருந்தாள். வைதியரோ, அவளுக்கு குடிச்ச தண்ணில கிருமி மூலமா காய்ச்சல் வந்ததாக சொல்லியிருந்தார்.
டுப்பிலிருந்த அமிர்தத்தை இறக்கி ஆற வைத்தாள். மகளுக்கு தேவையான கஷாயமும் தயார் செய்து மகளை," பாண்டியம்மா.... பாண்டியம்மா... வாம்மா...உனக்கு கஞ்சியும், கஷாயமும் செஞ்சிருக்கேன்...வாம்மா" என பாசத்துடன் அழைத்தாள். அவளும் அம்மா அருகில் அமர்ந்து மடியில் சாய்ந்து கஷயத்தையும், கஞ்சியையும் குடித்தாள். அவள் சாப்பிடுவதை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்து பெருமிதம் கொண்டாள். அவளும் கஞ்சியை வடித்து பழைய குழம்பு சேர்த்து சாப்பிட்டாள்.
களுக்கு கண் சொக்கியத்தை பார்த்ததும், "என்னம்மா? தூக்கம் வருதா? இரு பாயை விருச்சு விடுறேன்" நல்லா நிம்மதியா தூங்கு" என கிழிந்த பாயை விரித்து தன் பழைய சேலையை அதன் மேல் விரித்து மகளை தூங்க வைத்தாள். அவளுக்கு மகள் உடல்நிலையை நினைத்து கண் கலங்கினாள். எப்படி ஓடி ஆடி திரிந்தவள், இப்படி சோர்ந்து போனாளே! என நினைத்து வேதனை பட்டாள். சிறிது நேரத்தில் மகள் தலையை தொட்டு பார்த்தாள், காய்ச்சல் குறைந்திருந்தது. அந்த நிம்மதியில் அவளும் உறங்கிப் போனாள்.
றுநாள் விடிந்தது. அம்மா சீக்கிரமே எழுந்து மகளை தொட்டு பார்த்தாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ஆம், அவளுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. " பாண்டியம்மா, எழுந்திரு..உனக்கு காய்ச்சல் குனமாயிருச்சு. உடம்புக்கு ஒன்னும் இல்லை" என அன்போடு தட்டி எழுப்பினாள். பாண்டியமாளும் எழுந்தாள். காய்ச்சல் இல்லாததால் அவளுக்குள்ளே ஒரு உற்சாகம் பிறந்திருந்தது. அவளும் விரைவாக பல் விளக்கி காலை கடன்களை முடித்து குளித்து முடித்திருந்தாள்.
"ன்ன? பாண்டியம்மா... சுடு தண்ணி வச்சு தர்றதுக்குள்ள இப்படி பச்ச தண்ணில குளிச்சிட்டியே, திரும்ப காய்ச்சல் வந்துட போகுது" என மகளை செல்லமாக அதட்டினாள். இல்லைம்மா, நீ சுடு தண்ணி வச்சுக் கொடுத்தா லேட் ஆயிரும், ஆமாம்மா...இன்னைக்கு வேலைக்கு போறேன், அதான் ஒடம்பு சரியாரிச்சுள்ள" என்றாள். தாயும் " சரிம்மா... பார்த்து கவனமா வேலைக்கு போயிட்டு வா" என சோற்றையும் கட்டிக் கொடுத்தாள். ஆனால் அம்மாவுக்கு ஒடம்பு சரியான்ன இன்னைக்கே வேலைக்கு அனுப்பறோமே என உள்ளுக்குள் அழுதாள். 
பாண்டியம்மாள், காலை சாப்பாடை சாப்பிட்டு, தூக்கு சட்டியையும் தூக்கிக்கிட்டு கிளம்பினாள் பக்கத்து ஊரிலுள்ள ஐஸ் தயாரிக்கும் கம்பெனிக்கு கால்நடையாக....
மீள்பதிவாக ...
மேலும் வாசிக்க... "ஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)"தோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா? அரசே உன் கையில்...

       தோழி செங்கொடியின் நம்பிக்கை வீண் ஆகலாமா.... நியாயம் ஜெயிக்க, அநியாயம் தோற்கடிக்கப்பட வேண்டும். இன்னும் நாள் அவகாசம் உள்ளது. அரசே, உண்மையை கண்டறி...  உங்களுக்கு தெரியாதது அல்ல, குற்றவாளிகள் தண்டிக்கப்படா விட்டாலும், ஒரு நிரபராதி குற்றவாளியாக கூடாது என்பதை நாடே அறிந்த விஷயம். 
      முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்கள் நியாயமான முறையில் ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதே தோழி செங்கொடியின் ஆசை. அவர்களின் ஆசை நிராசையாகாமல், அவரின் ஆத்மா சாந்தி அடையும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும். இவர்களின் தூக்கு தண்டனை தீர்ப்பை நிறுத்த தமிழகமே ஒன்று திரண்டுள்ளது... போராட்டம் வெல்லட்டும்.மேலும் வாசிக்க... "தோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா? அரசே உன் கையில்..."மதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு!


     நண்பர்களே, நேற்று மதுரையில் வேலாயுதம் பாடல் வெளியிட்டு விழா ரசிகர்களுக்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாடல்களை வெளியிட்டு விழாவின் இறுதி பகுதியாக விஜய் பேசினார். அவர் பேசியது இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் ரெகார்ட் செய்யப்பட்டதால் தரம் சற்று குறைவாக உள்ளது. அவர் பேச்சின் இறுதியில் வேலாயுதம் படத்தில் வரும் "சொன்னா புரியாது" என்ற பாடலை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார்.

தமிழக குழந்தைகளுக்கு விஜய், "நேரு" மாமாவாக இருக்காராம். தமிழகத்தை காக்க வந்த "காந்தி"யாம். அதாவது பரவாயிலைங்கோ, ஒருத்தரு பேசினாரு பாருங்க, தென்னகத்தின் "அன்னா ஹசாரே"ன்னு, எனக்கு மயக்கமே வந்திருச்சு. பேசுங்க புகழ் பாடி பேசுங்க, அதுக்காக இம்புட்டு ஓவரா பேசக்கூடாது. நேற்றைய பதிவு: 

விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!
மேலும் வாசிக்க... "மதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு!"விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!

       
    விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு மதுரையில் சர்ச் மைதானத்தில் இன்று மாலை நான்கு மணி வாக்கில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. 
        பாடல் வெளியீட்டோடு, ஏழைகளுக்கு பல நலத்திட்டங்களும் அளிக்க உள்ளார்கள். விஜய் ரசிகர்களின் மாநாட்டாக தான் இந்த விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் மத்தியில் பாடல்களை இயக்குனர் வெளியிட விரும்பியதால் பாடல் வெளியீட்டு விழாவாகவும் களை கட்டியுள்ளது. பாடல்களை வெளியிடுபவரை வந்திருக்கும் கூட்டத்தில் தேர்ந்தேடுப்பார்களாம். 

ஆடுகளைத் தான் பலியா கொடுப்பாங்க...ஹி...ஹி.. ஆனா இங்க????
விஜய் போஸ்டரை ஆடுகள் ஆர்வமாக சாப்பிடும் காட்சி. அதில் என்ன ருசி இருக்குனு தெரியல. இப்படி வரிசையா சாப்பிடுதுங்க. 

அட "எம் ஜி ஆர்" மாதிரில விஜய் தெரியறாரு.... ஏனிந்த வேஷம்....?

விழா நடைபெறும் மைதானம்.
     
     விஜயை ஆடுகள் திங்குது.... அப்ப பிரியானின்னா என்னன்னு கேட்கறின்களா? அதாங்க வேலாயுதம் பாட்டு ரிலீஸ். பாட்டு ரசிகர்களுக்கு பிரியாணி மாதிரி தானே...


மேலும் வாசிக்க... "விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!"அப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட? மனைவியின் குமுறல்என்னங்க, நீங்க வேலைக்காரியை நைட்டு கட்டிப்பிடிச்ச மாதிரி கனவு கண்டேன்.
நல்லா தெளிவா சொல்லு, கண்டது கனவு மட்டுமா? இல்லை தூக்கத்துல எந்திரிச்சு கிச்சன் ரூமை எட்டிப் பார்த்தியா?


கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேணும் கேள்?
மனிதன்: இந்தியாவுல இருந்து அமெரிக்காவுக்கு ரோடு போட்டுக் கொடுங்க, அது போதும் சாமி
கடவுள்: அது கஷ்டமாச்சே... வேற எதாச்சும் கேள்.
மனிதன்: அப்ப என் பொண்டாட்டி பேச்சை குறைக்கனும், நான் சொல்றத மட்டும் அவ கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுன்னு அவ கேட்கக் கூடாது
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா? டபுளா?


என்னது உன் புருசன் எதுவுமே பேச மாடிங்கிறார்.
இப்ப அவரை சைலன்ட் மோடில் போட்டிருக்கேன்.


கத்திரிக்காய் வாங்க போன அவளோட புருசன் லாரி அடிச்சு செத்து போயிட்டாராம்.
அய்யோ பாவம், அப்புறம் என்னாச்சு.
வீட்டுல இருந்த முருங்கைக்காயை வச்சு சாம்பார் வச்சாளாம்.ஒரே பேஷன்ட்டை ரொம்ப நாள் நம்ம ஆஸ்பத்திரியில வச்சிருந்தது தப்பு டாக்டர்!
ஏன் சிஸ்டர்..? 
நம்ம ட்ரீட்மென்ட் ரகசியங்களைத் தெரிஞ்சுக்கிட்டு போய் எதிர் வரிசையில தனியா கிளினிக் போட்டுட்டார்!

பிச்சைகாரன்: அந்த சினிமா போஸ்ட்டரை ஏன் இவ்ளோ நேரமா உத்து பார்த்துகிட்டு இருக்க?
பிச்சைக்காரன்: ஒன்னும் இல்லை, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அது நான் தயாரிச்ச படம்.


என்னய்யா இது... அமலாபாலுக்காக வட இந்தியாவுல யாரோ உண்ணாவிரம் இருக்காங்களாமே..?
தலைவரே, அவங்க உண்ணாவிரதம் இருக்கிறது அமலாபாலுக்காக இல்லை... லோக் பாலுக்காக!என்ன கபாலி... மாப்பிள்ளை கோலத்தில திருட வந்திருக்கே?
தாலி கட்டியதும் தொழிலுக்கு வந்துட்டேன் சார்!
பல் செட்டை எடுத்து எதுக்காக அடிக்கடி என்கிட்டே காட்டறீங்க?
அடிக்கடி பல்லைக் காட்டினா உங்ககிட்டே காரியம் நடக்கும்னு வெளியே பேசிக்கிட்டாங்க!
கொஸ்டீன் பேப்பரைப் பார்த்து நாம அழுதா அது தரித்திரம்; 
நம்ம ஆன்ஸர் பேப்பரைப் பார்த்து திருத்தறவங்க அழுதா அது சரித்திரம்!
இப்படிக்கு: சுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்

என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக் கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.
இப்படிக்கு: எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு 
நீக்கிட்டாரு..?
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!


மேலும் வாசிக்க... "அப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட? மனைவியின் குமுறல்"

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 4

டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி


CNC என்றால் என்ன என்பதை போன பாகத்தில் பார்த்தோம். அதில் நிறைய வகைகள் இருக்கிறது.
VERTICAL MACHINING CENTER
HORIZONTAL MACHINING CENTER
MULTI AXIS MACHINING CENTER
VERTICAL TURNING CENTER
HORIZONTAL TURNING CENTER
EDM WIRECUT M/C, SPARK EROSSION, ETC
இவ்வாறு இன்னும் நிறைய வகைகள் உள்ளன.

CNC யினால் என்னென்ன பயன்கள்:
HIGH ACCURACY AND REPEATABILITY
REDUCED INSPECTIONS
EASY OF ASSEMBLY INTERCHANGEABILITY
LESS SCRAP AND REWORK
SPACE SAVING
LESS MATERIAL HANDLING
HIGH FLEXIBILITY FOR DESIGN CHANGES
REDUCED TOOLINGS.

CNCயில் என்ன குறைகள்:
MACHINE IS COSTLY AND HIGHER MACHINE HOUR RATE
ஒரு MACHINEஇன் விலை 20, 30 லட்சம் என MACHINE இன் CAPASITYயை பொறுத்து விலை அதிகரிக்கும். ஒரு கோடி ரெண்டு கோடிக்கெல்லாம் MACHINEகள் இருக்கிறது.

MAINTENANCE IS COSLY
MACHINE விலையே அதிகமா இருக்கறப்போ பராமரிப்பு செலவும் மிக அதிகமாக தான் இருக்கும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் பிரச்சனைகள் வந்து விடாது.

OPERATOR TRAINING IS EXPENSIVE
வேலை பார்க்க தகுதியான ஆட்கள் கண்டிப்பாக தேவை. கொஞ்சமாவது PROGRAMING மற்றும் SETTING KNOWLEDGE இருந்தால் தான் வேலை பார்க்க முடியும்.

EFFICENCY OF THE OPERATION DEPENDS ON PROGRAMMER'S SKILL
ஒவ்வொரு PROGRAMMERம் ஒவ்வொரு மாதிரியான PROGRAM METHODகளை கையாள்வார்கள். எப்படி இருந்தாலும் நமக்கு முக்கியம் CYCLE டைம் குறைவாக, இருக்க வேண்டும். அப்போது தான் HOUR RATE குறையும்.

       இங்க HOUR RATE என குறிப்பிட்டுள்ளேன். அப்படின்னா என்னண்ணா? ஒரு JOB CNCயில் ஒரு ஐந்து மணிநேரம் ஓடுகிறது எனில், ஒரு மணிக்கு எவ்வளவு ஆகுமோ அதை ஐந்தால் பெருக்கி கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 400 எனில், (400 x 5 = 2000) ஆக இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது. ஒவ்வொரு MACHINEஐ பொறுத்து MACHINE HOUR RATE மாறுபடும். 

CNCயினால் என்ன முன்னேற்றம் (DEVELOPMENT) இருக்கு?
PRODUCTIVITY
ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அதிகமான எண்ணிக்கை (QTY) போடுகிறோமோ அதுக்கு உற்பத்தி திறன் என சொல்வோம்.
FLEXIBILITY
CNC PROGRAM மூலம் எந்த வகையான பொருட்களையும் உருவாக்கி விடலாம்.
EFFICIENCY
ஒரு முறை SET செய்து விட்டால் அடுத்தடுத்து JOBயை கழட்டி மாட்ட வேண்டியது தான். IDLE குறைவதால் உற்பத்தி கூடும். ஒவ்வொரு JOBக்கும் 90% க்கு மேல் உற்பத்தி செய்தோமென்றால் அதுவே EFFICIENCY என சொல்லலாம்.
QUALITY
தரம் CNCயில் குறையாது.
MINIMUM COST OF COMPONENTS
வேகமான தயாரிப்பு திறனால் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் சாதாரண இயந்திரங்களில் ஒரு நாளைக்கு ஐநூறு JOB முடிக்கிறோம் எனில், CNC மூலமாக அதை விட கூடுதலாக முடிக்க முடியும். எனவே உற்பத்தி பெருக்கம் அதிகமாவதால் பொருளின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

அடுத்த பாகத்தில் CNC MACHINEஇல் என்ன செய்யலாம், செய்யக் கூடாது என பார்கலாம். 

கீழே வீடியோ உள்ளது பார்க்க மறந்துராதிங்க.

THANKS: YOUTUBE
மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 4"பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்)

     நம்ம செங்கோவி பதிவரை தெரியாதவங்க இருந்தா நீங்க வேஸ்ட்டு. மன்மத லீலைகள் (என் கிழிந்த டயரியிலிருந்து...) அப்படின்னு ஒரு பேமஸ் தொடர் எழுதிட்டு வராரு. இந்த தொடரை படிச்சிங்கன்னா அடுத்த பார்ட் எப்போ வரும்னு நீங்க எதிர்பாக்க ஆரம்பிச்சுருவிங்க. இப்ப நான் அவர் எழுதற லீலையை பத்தி நான் சொல்ல வரல.... மனுஷன் கொஞ்ச நாளா ஒரு நடிகை மேல ரொம்ப பைத்தியமா இருக்கிறாரு. அந்த நடிகை யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், தெரியாதவங்க தெரிஞ்சுக்கங்க அந்த நடிகை பளபள ஹன்சிகா தான்...

ஹன்சிகாவுக்கு முன்னாடி நமீதா விசிறியா இருந்த இவரு, 
"எதா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல நமீ படத்தைப் போடுவோம்........"
இப்படி எழுதிட்டு இருந்த செங்கோவி இப்ப நமீயை மறந்து ஹன்சியை பிடுச்சிகிட்டாரு.

    ஹன்சிகா வேலாயுதம் படத்துல விஜய் கூட ஜோடியா நடிக்கறாங்க. அத தெரிஞ்சுகிட்டு செங்கோவி பதறி போயிட்டாரு. ஆமா பின்ன, விஜய் படங்கள் வரிசையா ஊத்திக்கிறதுனால ஹன்சிகாவோட திறமை வெளியில தெரியாம, ராசியில்லா நடிகைகள் லிஸ்ட்டில் சேர்ந்திருவாங்களோனு பயந்து போயி ராத்திரி நேர பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டாரு. வேலாயுதம் வெற்றி பெற சாம பூசை செய்வோம்னு ஒரு பதிவே போட்டிருக்காருன்னா பார்த்துக்கங்க. பூஜை சக்சஸ் ஆனதா சொல்லியிருக்காரு. அவரு நம்பிக்கை வீண் போக கூடாதுன்னு நாமளும் வேண்டிக்கிருவோம். அப்புறம் பாவம்ல அவரு...
    தமனாவை டொச்சு பிகர்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு. அதுக்கு காரணம் ஹன்சிகா மேல அவருக்கு இருந்த ஈடுபாடு தான் காரணம். ஹன்சிகாவை பற்றி ஒரு பதிவில் எப்படி வர்ணிச்சிருகார்னு கீழே போட்டிருக்கேன்
ஹ..ஹ..ஹன்சிகா:
சென்ற வாரம் தமிழகத்தில் நடந்த உருப்படியான விஷயம், அழகுப்புயல் ஹன்சிகா மாப்பிள்ளையில் அறிமுகம் ஆனது தான். தமன்னா போன்ற டொச்சுப் பிகர்களை வேறுவழியின்றி ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ஹன்சிகாவின் வருகை வரப்பிரசாதம். பதிவர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம். 

சில பேர் சின்ன குஷ்பூ என்கிறார்கள்(பிரபு ஜாக்கிரதை!), பூமிகா-மாளவிகா மிக்ஸிங் என்கிறார்கள், இன்னும் சிலர் கேப்டன் ரேஞ்சுக்கு ‘கனகாம்பரப்பூ- ஆரஞ்சுப்பழ சுளை-வெண்ணெயில் தடவி எடுக்கப்பட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு-பருத்திப்பஞ்சு’ன்னு எழுதியும் மப்புல இருந்து மீளமுடியாம தவிக்காங்க. இன்னும் ஐந்து வருடங்களுக்காவது ஹன்சி நம்மளை விட்டுப் போகமாட்டாங்கன்னு நம்புறேன்! அதனால ஈரோட்டுல ஹன்சி மன்றத்துக்கும் அடிக்கல் நாட்டிட வேண்டியது தான்!

எப்படியெல்லாம் ஹன்சிகாவை வர்ணிச்சு எழுதியிருக்காருன்னு படிச்சு புல்லரிச்சு போச்சா உங்களுக்கு.

அப்புறமா இன்னொரு பதிவுல ஹன்சிகா பெயரை எப்படி நுழைக்கிறதுன்னு ரொம்ப யோசிச்சிருப்பாரு போல, எப்படி டுபாக்கூர் விட்டிருக்கார்னு கீழே பாருங்க,

பதிவர் வேண்டுகோள்:
தன்னோட ப்ளாக்ல நடிகைங்க படம் போடுற வழக்கம் இல்லாத ஒரு நல்ல பதிவர், எனக்கு மெயில் அனுப்பி இருந்தாரு. என்ன மேட்டர்னு பார்த்தா, அது இதுன்னு வளவளத்துட்டு ’நானா யோசிச்சேன்ல ஹன்சிகா படம் போடுங்க..ஹி..ஹி’-ன்னு மெயிலியிருக்காரு. என்ன அநியாயம் பாருங்க..சரி, மனுசன் ஆசைப்பட்டு கேட்டுட்டாரு.. அவருக்காக மீண்டும்:
    இன்னொரு பதிவுல ஹன்சிகா பொறந்த நாளு எப்பனு சொல்லியிருக்காரு, அதையும் பாருங்க.
1991 ஆகஸ்ட் 9ம் தேதி என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்?.. தெரியலையே..ம்.. எதுக்கு இப்போ இந்த கேவலமான ஹிஸ்ட்ரின்னு கேட்கீங்களா? அட, அன்னைக்குத் தாண்ணே நம்ம தங்கத்தலைவி, சக்கரவள்ளிக் கிழங்கு ‘ஹன்சிகா’ பொறந்த நாளு..அதான் அன்னைக்கு என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்...மன்றக் கண்மணிகளும் இதே மாதிரி யோசிச்சுப் பாருங்கப்பா..
எங்கேயும் காதல் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு. அதுல நம்ம ஹன்சி தான் ஹீரோயின். ஹன்சியை எப்படி சொல்லியிருக்காருனு பாருங்களேன்.
"படம் மொக்கையானாலும் கொடுத்த காசு வீண் போகாம, நம்மைக் காப்பாத்துறது நமது தங்கத்தலைவி..ஃப்ரெஷ் பீஸ் ஹன்சிகா தான்"

அந்த பதிவில் ஒருத்தரு ஹன்சியை குறை சொல்லியிருப்பாரு. அதுக்கு செங்கோவி குடுத்த பதிலை பாருங்க.
செங்கோவி said... [Reply]
@! சிவகுமார் !//புண்ணியவதி ஹன்சிகா டப்பிங்குக்கு வாய் அசைச்ச அழகுக்கே நான் படம் போகாம இருந்துட்டேன்.!!// மகா மோசமான பின்னூட்டம்..தலைவியைவே தப்பாச் சொல்றீங்களா...உங்க கூட டூ நானு!

இன்னொரு பதிவில ஹன்சி மன்ற தலைவரா தான்னு ஒருத்தர் சொல்லியிருப்பாரு, அதுக்கு அவரோட பதிலை பாருங்க.
செங்கோவி said... [Reply]
@Heart Rider//அப்புறம் நம்ம செல்லத்தலைவி ஹன்சிகா மன்றத்துக்கு நாந்தான் தலைவர்..// இருக்குறது ஒரு தலைவி..அதுக்கு எல்லாரும் தலைவர் ஆகணும்னு நினைக்கலாமா?

நிறைய பேரு ஹன்சிகாவை கூகிளில் தேடினதுல ஒரு முறை கூகுளே படுத்திருச்சுன்னு ஒரு பதிவுல சொல்லியிருக்காரு கீழே பாருங்க.
ஹ..ஹ..ஹன்சிகா:
சமீபத்துல நம்ம ஹன்சிகா மன்றத்துக்குக் கிடைச்ச செய்தி நம்மளை ரொம்பவே கவலைப்பட வைக்குது. கூகுள்லயும் யூ டியூப்லயும் நிறையப்பேரு ‘ஹன்சிகா ஹாட்’னு தேடுனதுல கூகுள் படுத்திருச்சாம், யூடியூப் ‘ப’ டியூப் ஆகிடுச்சாம்..இப்படியாய்யா பண்ணுவீங்க..என்னய்யா அவசரம்..பாப்பா இப்ப தானே வந்திருக்கு..இனிமே தான் அவுட்டோர் சூட்டிங் போகணும். ஹோட்டல்ல தங்கணும்..குளிக்கணும். அப்புறம் தானே நீங்க எதிர்பார்க்குறது கிடைக்கும்..அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?
பாய்ஞ்சு பிறாண்டிட்டாங்களோ!
ஹன்சி எங்க போயிடப்போகுது..மெதுவாத் தேடுங்கய்யா..பலாப்பழத்துல ஈ மொச்ச மாதிரி மொத்தமாப் போய் விழுந்தா பாப்பா பயந்துடாது..நமீதா மாதிரியே எல்லாரையும் நினைச்சா எப்படி..அதனால மன்றக் கண்மணிகள் கட்டுப்பாடோட நடந்துக்கிட்டு, மன்றத்தோட மானத்தைக் காப்பாத்தணும்னு கேட்டுக்கிறேன்.

மாப்பிள்ளை படம் விமர்சனத்தில் தான் செங்கோவி ஹன்சியிடம் மயங்கி உள்ளார். அதற்கான காரணத்தை அவரே சொல்லியிருக்கார். கீழே பாருங்க.

நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). இவரை ஃப்ரெஷ் பீஸ்னு சொல்லலாம். தப்பில்லை. கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்த மாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம். பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா. இதற்கு மேல் எப்படி ஜொள்ளுவது என்று தெரியவில்லை. நீங்களே ஃபோட்டோக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஹன்சிகாவை வைத்து இவர் பதிவுகளில் வந்த தலைப்புகள்:    

 ரஜினி நாக்கில் சனி..ஹன்சிகா நமக்கு ஹனி! (நானா யோசிச்சேன்)


தில்லான தேர்தல் கமிசனும் ஜில்லான ஹன்சிகாவும் (நானா யோசிச்சேன்)


டிஸ்கி: ஹன்சிகாவின் தீவிர ரசிகரான செங்கோவி, அவருடைய பதிவுகளில் ஹன்சிகாவை பற்றி எப்படி எழுதியுள்ளார் என்ற பார்வையின் கீழ் இந்த பதிவை தொகுத்துள்ளேன். படங்கள் செங்கோவியின் தளத்திலிருந்து எடுத்துள்ளேன். அவ்வளவே...மேலும் வாசிக்க... "பதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு? (நானா யோசிச்சேன்)"தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! FM இல் ஒரு பெண் சொன்னது...

              சூரியன் FM இல் மகளிர் மட்டும்னு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி மதிய நேரத்தில் போடுவாங்க. அந்த நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது பிரச்னையை கேள்வியா பெண்கள்கிட்ட கேட்பாங்க. பெண்களும்  போன் பண்ணி அவங்களோட கருத்துக்களை சொல்வாங்க. நேத்து என்ன  பிரச்னையை எடுதுக்கிட்டாங்கனா, தங்கம் விலை இப்படி நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு ஏறிட்டே போகுதே? அதனால என்னென்ன விளைவுகள் வருதுன்னு டாபிக் எடுத்திருந்தாங்க, நிகழ்ச்சியில பேசியவங்க கல்யாண  சீர்வரிசை  மற்றும்  செய்முறை  செய்றதும்  பிரச்சனையா இருக்கு. அதுவுமில்லாம தங்கத்தில் முதலீடு செய்யலாம்னு நெனச்சாலும் அதன் விலையை பார்த்து மலைக்க வேண்டியதா இருக்கேன்னு பேச்சு ஓடிட்டு இருந்துச்சு. 
         ஒவோருத்தரா போன் பண்ணி ஒவ்வொரு யோசனையா சொல்லிட்டு இருந்தாங்க.  ஆனா ஒரு பெண் சொன்னாங்க தங்கம் விலையெல்லாம் ஏறிப்போச்சு. அதனால சீர்வரிசை நிறைய,  இல்லை கொஞ்சம் கொடுக்கிறது கூட கஷ்டம் தான், அதை தவிர்க்கனும்னா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னா அந்த பிரச்சனையே இல்லைன்னு சொன்னாங்க. ஆகா ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கருத்தான்னு நிகழ்ச்சி தொகுப்பாளர் அசந்து போயிட்டாங்க. மறுபடியும் அவங்க சொன்னாங்க, இன்னைக்கு நிலைமையில ஒரு பொண்ணுக்கு பையனையோ, அல்லது பையனுக்கு ஒரு பொண்ணை பார்க்றதும் சிரமமான விசயமா இருக்கு. வரன் அமைந்தாலும் பொருத்தம் அமையறது இல்லை. அப்படியும் அமைஞ்சா ஏதாவது காரணம் சொல்லி தட்டிப் போயிருது. ஆக வரன் தேடுறதும் கஷ்டமான விஷயமாத்தான் இருக்கு. 
         அப்படியே கஷ்டப்பட்டு தேடி ஒரு வரன் கிடைச்சாலும் மண்டபத்தில் இருந்து சாப்பாடு, அழைப்பிதழ், பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நகைகள் போட்டு, அப்பப்பா ஏகப்பட்ட பார்மாலிடிஸ் இருக்கு. அப்படியே செலவு செஞ்சு திருமணம் நடத்தினாலும் அதுல, இதுல என ஏகப்பட்ட குறை சொல்வாங்க... இப்படி எந்த இம்சையிலும் சிக்காம இருக்கணும்னா, தங்கம் விலையிலிருந்தும் தப்பிக்கனும்னா லவ் மேரேஜ் தான் கரெக்ட்னு அவங்க ஒரு விளக்கமே சொன்னாங்க. 
      ஹி... ஹி... தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....மேலும் வாசிக்க... "தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! FM இல் ஒரு பெண் சொன்னது..."பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?

         சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு  (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும்  மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது. ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு  எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா? நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை. 
           நான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறினேன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க. அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.  
     அடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ  குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி  பிடிச்சு விளையாடுறதுமாய் இருந்தாங்க. நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும்  என் வேலையை பார்த்துட்டு இருந்தேன்.      வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும்  இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன். நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல. ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ? ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடுத்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ) 
         குரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான்  இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு. அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா? 
          அப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம்  ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க, மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரும்  ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில்  போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க. 
        லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க? அவங்க என்ன நெனச்சிருப்பாங்க? ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.
மேலும் வாசிக்க... "பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!?"பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா? அண்ணா ஹசாரே

     
     ஊழலை ஒழிக்க வலுவான மக்கள் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் வருகின்ற 30-ம் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசாரே மீண்டும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார். அதேசமயத்தில் இந்த பிரச்சினையில் நீக்கப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அனைத்து தரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும் தயார் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.  இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரே,தன்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மத்திய அரசும் அறிவித்திருந்தாலும் இது தொடர்பாக எங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் எங்கே, எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, இதில் யார் யார் கலந்துகொள்வது தொடர்பாக மத்திய அரசு சார்பாக யாரும் எங்களுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தரக்கோரி எம்.பி.க்கள் வீடுகள் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஹசாரே கேட்டுக்கொண்டார்.
       இதற்கிடையில் அண்ணாஹசாரே உடல்நிலையில் மத்திய அரசு அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்று ஹசாரேயின் ஆதரவாளர்களில் ஒருவரான கிரண்பேடி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு தீர்வுகாணுவதில் மத்திய காலம் தாழ்த்தி வருகிறது. உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் சுகாதார வசதி எதுவும் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்றும் கிரண்பேடி கூறினார். அண்ணா ஹசாரேயின் இந்த உண்ணாவிரத போராட்டத்தால் நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் மழைவெள்ளம் தேங்கி கிடப்பதாகவும் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்றும் கிரண்பேடி கூறினார். 
             அண்ணா ஹசாரேயுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துமா? அப்படி நடத்தினால் அரசின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

அண்மைய தகவல்: 
பேச்சு வார்த்தைக்கு பிரதமர் அவர்கள் சம்மதம் தெரிவித்ததாக தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டு உள்ளது.
மேலும் வாசிக்க... "பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா? அண்ணா ஹசாரே"பொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வேஸ்ட்?

             இன்றைய இளைஞர்களின் சுதந்திர தினம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்து ஒளிபரப்பியது ஒரு தொலைக்காட்சி. அதைப் பார்த்த அனைவரும், வெட்கித் தலைகுனியும் வகையில் இளைஞர்களின் பதில்கள் அமைந்திருந்தன. இக் காட்சிகள் இன்றைய இளைஞர்களின் எதிர்காலப் பாதை எதை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சத்தையும் பார்த்தவர்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
      ஆக.15 சுதந்திர தினம். சுதந்திர தினத்தை (விடுமுறையை) எவ்விதம் மக்களுக்குப் பயனுள்ளதாகக் கொண்டாடுவது என்று ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் மூளையைக் கசக்கிப் பிழிந்து விதவிதமான நிகழ்ச்சிகளைத் தங்களின் நேயர்களுக்காக வழங்கின.
  சில சேனல்கள் திரைப்படப் பிரபலங்களிடம் மக்களுக்கான ஆலோனைகளை வரிவரியாகக் கேட்டு ஒளிபரப்பின. சில சேனல்கள், பட்டிமன்றங்களில் சுதந்திரம் குறித்து உரைவீச்சை ஒளிபரப்பின. இந்தச் சேனல்களின் சுதந்திர கொண்டாட்டத்திற்கிடையே, பொதிகை தொலைக்காட்சியில் வெளியான ஒரு நிகழ்ச்சி, இன்றைய இளைய தலைமுறையின் உண்மையான முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
  அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர், மாணவர், இளைஞர், வேலைதேடுவோர் என பலரிடமும், மைக்கைக் கொடுத்து கேள்வி எழுப்ப, அவர்கள் ஏதோ விருப்பப் பாடல் கேட்கிறார் என எண்ணிக்கொண்டு, பேச்சுக் கொடுக்க அதன்பின்தான் புரிகிறது. அது விருப்பப் பாடலுக்கான நிகழ்ச்சியல்ல.
    சுதந்திர தினம் குறித்த கருத்துகளைப் பதிவு செய்யும் நிகழ்ச்சி என்பது. இக்கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் பலரும் மெதுவாக நகர, சிலர் வேறு வழியின்றி தவறாகவே பதில் சொல்ல, நிகழ்ச்சியைப் பார்த்த அனைவருமே நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்கள்.
கேள்விகள் ஒவ்வொன்றும், குரூப்-1 தேர்வில் கேட்கப்படக்கூடிய கேள்விகள் அல்ல. காந்தியின் முழுப்பெயர் என்ன? சுதந்திரம் என்று கிடைத்தது? சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், வாஞ்சிநாதன், பாரதியார் இவர்கள் யார்? பாரதியாரின் பாடல் வரிகள் சிலவற்றை கூறுக, தேசிய கீதத்தை எழுதியவர் யார்? தேசிய கீதத்தின் இரண்டு வரிகளைச் சொல்லுங்கள் என அந்தத் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்குச் சரியான விடையை சிலர்தான் கூறினர். பெரும்பாலான பொறியியல் மாணவர்கள் இதற்கான பதிலைக் கூறவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
     முடிவாகப் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளர், கேள்விகள் குறித்துச் சரியான பதில் சொல்பவர்களுக்கு காந்தி எழுதிய சத்திய சோதனையைப் பரிசாகக் கொடுக்க வாங்கி வைத்திருந்தோம். அதில் பெருமளவு புத்தகங்கள் எங்களிடமே மிச்சம் உள்ளன என வேதனை தெரிவித்தார்.
உண்மையில், இது இன்றைய இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சத்திய சோதனைதான்.
     இன்று நாம் நிம்மதியாக உலா வருகிறோம். உரிமையுடன் பேசுகிறோம். எழுதுகிறோம் என்றால் அதற்கு வித்திட்டவர்கள் அன்றைய சுதந்திரப் போராட்டத் தியாகிகள்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். வரலாறு என்பது தேர்வுகூடத்தில் மதிப்பெண் பெறுவதற்காக படித்த நிகழ்வு என்பதை மாற்றி, அந்த வரலாற்றின் உணர்வையும், உண்மையான வலியையும் ஒவ்வோர் இளைஞனும் உணர்ந்தால்தான், எதிர்கால இந்தியா வளமான இந்தியாவாகத் தொடரும்.
   இந்த உணர்வை ஊட்ட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் பெருமளவு உள்ளது. இதைக் கடமையாகச் செய்யாமல், கவனமாகக் கையாண்டால், சுதந்திரம் பெறுவதற்காக வலியை அனுபவித்த தியாகிகள் இன்று நிச்சயம் மகிழ்ச்சியடைவார்கள்.
இதையும் தாண்டி ஊடக பலம் ஊடுருவியுள்ள இன்றைய யுகத்தில் ஊடகங்களும் தங்கள் பங்குக்கு சில மணி நேரமாவது, தொடர்புடைய நிகழ்ச்சிகளை (அதாவது சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாள்களில் அது தொடர்பான நிகழ்ச்சிகள்) ஒளிபரப்பினால் இளம் தலைமுறையினர் புதிய தகவல்களை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
    இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற கேள்விகளை அனைத்துத் தேர்வுகளிலும் இடம்பெறச் செய்தால் அன்றைய வரலாறு இன்றும் 
நீடித்திருக்கும்.
இளைஞர்களின் சுதந்திரம் - தினமணி
மேலும் வாசிக்க... "பொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வேஸ்ட்?"மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 3

டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
     
   நண்பர்களே, அந்த காலத்தில் ஒரு பொருளை உருவாக்க மனித சக்திகள் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டது. இதனால் கால விரயம், உற்பத்திக் குறைவு, தரமின்மை, repeatation இல்லாமை, பொருட்களின் dimension குறைபாடு, அதோடு தேவையான நேரத்திற்கு உற்பத்தி கொடுக்க இயலாமை, போன்ற defects இருந்தது. இதனால் தேவையான நேரத்தில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்காமல் இருந்தது. இதனை தவிர்க்க பொருட்கள் தயாரிப்பில் automation இருந்தால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. எனவே manual machine களை NC Numeric control மூலம் இயக்கினார்கள். இதை மேம்படுத்தி 1970 வாக்கில் CNC (computer numerical control)இல் கொண்டு வந்து பொருட்களை எளிமையாக தயாரிக்கும் உத்தியை கண்டறிந்தனர். 

      Manual machine இல் மிகவும் சிரமப்பட்டு தயாரித்த பொருட்கள் CNC (computer numerical control) மூலம் விரைவாகவும், அளவுகள் துல்லியமாகவும் தயாரிக்கப்பட்டன. இம்மாற்றம் automobile, industrial துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. 


NC என்றால் என்ன?
     NC என்பது NUMERICAL CONTROL ஆகும். Series of numbers மூலம் ஒரு MACHINEஐ CONTROL செய்து பயன்படுத்தும் AUTOMATION முறைக்கு NC என்று பெயர். இதில் SLIDE POSITION, FEED RATE, CUTTING SPEED ஆகியவை CONTROL செய்யப்படுகிறது.

CNC என்றால் என்ன?
      CNC என்பது COMPUTER NUMERICAL CONTROL என்பதை குறிக்கிறது. ஒரு NC Machine ஆனது அதற்காக தனியாக ஒரு COMPUTER மூலம் CONTROL செய்யப்படும் பொழுது CNC Machine என அழைக்கப்படுகிறது.

Working principle of CNC System:
      ஒரு NC UNIT மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட PLC (Programmable Logic Controlers) களும் ஒருங்கிணைந்து MICRO PROCESSOR அடிப்படையில் கம்பியூட்டரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அமைப்பு CNC SYSTEM என அழைக்கபடுகிறது. இதில் NC யானது MACHINE இன் SPINDLE SPEED, CUTTING FEED ஆகிய INPUT களுக்கு ஏற்றவாறு MACHINE AXIS கணக்கிடப்படுகிறது. PLC ஆனது MACHINE இன் CONTROL களை கட்டுப்படுத்துகிறது.

நண்பர்களே, அடுத்த பகுதியில் CNC யின் வகைகள், பயன்கள், நிறை,  குறைகள் போன்றவற்றை பார்ப்போம்.

CNC யின் மூலம் உருவாக்கப்படும் சிலவற்றை கீழே வீடியோ இணைப்பின் மூலம் பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக பாருங்கள்.
THANKS: YOUTUBEமுந்தய பதிவுகள்:

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-1

மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 2

மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 3"இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!

            உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவே தான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வது தான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

 • 2 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை பல் பரிசோதனை.
 • 3 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை.
 • 18 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.
 • 18 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.
 • 30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை.
 • 30 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.
 • 40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.
 • 50 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.
 • 50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு. கருப்பை புற்றுநோய் பரிசோதனை.

எனவே நண்பர்களே, உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பற்றியும் தெரிஞ்சுக்கலாம்:

 • கொலஸ்ட்ரால் நமது இரத்தத்தின் ஒரு முக்கியமான பகுதி மேலும் நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாகும் போது தீங்கு விளைவிக்க கூடும்.
 • உங்கள் உடம்பில் மொத்த கொலஸ்டிரால் எவளவு உள்ளது என்பதையும் அது உங்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். அதிக அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் அதிக அளவிலும், குறை அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் குறைந்த அளவிலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • காய்கறிகளில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டிரால் எப்போதும் இருப்பது இல்லை.
 • பல நிலை பூரிதக் கொழுப்பு, ஒரு நிலை பூரிதக் கொழுப்புகளும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கின்றன.

   நமது ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் வாசிக்க... "இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!"ஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அறிக்கைதமிழ் சினிமாக்களுக்கு தமிழகத்துக்கு வெளியே அதிக வரவேற்புள்ள மாநிலம் ஆந்திரா. இங்கு எந்த தமிழ்ப்படமாக இருந்தாலும் அதன் டப்பிங் மற்றும் ஒரிஜினல் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது வழக்கம். 
ரஜினியின் அனைத்துப் படங்களும் நேரடியாகவும், தெலுங்கு டப்பிங் ஆகவும் ஆந்திராவில் வெளியாகி வசூல் சாதனைப் படைக்கின்றன. எந்திரன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநேரத்தில் இங்கு வெளியானது. ரூ 45 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது இந்தப் படம். 

சூர்யாவின் கஜினி, கார்த்தியின் நான் மகான் அல்ல போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வசூல் கண்டன. 
அவன் இவன் படம் வாடு வீடு என்ற பெயரில் வெளியாகி 18 கோடிகள் வரை குவித்தது. கோ படம் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு நல்ல வசூல் கண்டது.  
சமீபத்தில் தமிழில் வெளியான ராகவா லாரன்ஸின் காஞ்சனா, தெலுங்கில் அதே பெயரில் டப் செய்யப்பட்டது. இந்தப் படம் ரூ 3 கோடிக்கு விற்கப்பட்டது. இதுவரை ரூ 15 கோடிக்குமேல் அள்ளிவிட்டதாகச் சொல்கிறார்கள். 

இதனால் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் நேரடி தமிழ் மற்றும் தமிழ் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நேரடி தெலுங்குப் படத்தைவிட, நேரடி தமிழ்ப் படத்துக்கு நல்ல ஸ்கிரீன்களை ஹைதராபாத்தில் ஒதுக்குகிறார்களாம். 
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தெலுங்கு விநியோகஸ்தர்கள் தமிழ்ப் படங்கள் மூலம் ரூ 35 கோடி வரை சம்பாதித்துள்ளனர். 

இந்த நிலை தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் டப்பிங் படங்களுக்கு இப்போது ஆந்திராவில் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனை 50 சதவீதமாக உயர்த்துமாறும், தமிழ்ப் படங்களின் பிரிண்ட் எண்ணிக்கையை 50க்குள் கட்டுப்படுத்துமாறும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்கம் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

தெலுங்கு சினிமாக்களின் தரத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு, நன்றாக போய்க் கொண்டிருக்கும் வியாபாரத்தைக் கெடுக்கிறார்களே என புலம்புகிறார்கள் ஆந்திர விநியோகஸ்தர்கள். 
இனி வரவிருக்கும் தமிழ்ப் படங்கள் முக்கியமானவை என்பதால் இந்த கட்டுப்பாட்டை இப்போதே விதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் தயாரிப்பாளர்கள். 

இன்றைய மற்றொரு பதிவு:

தனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....

மேலும் வாசிக்க... "ஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அறிக்கை"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1