CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
    
  கடந்த மாதம் 14ம் தேதி காலை எனக்கு ஒரு நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. ஹலோ சொன்னேன்... ஹேய்... பிரகாஷ் எப்படி இருக்க? சவுக்கியமா? வொய்ப் சவுக்கியமா? என ஒரு பெண் குரல். அடிக்கடி சாட்டிங்கில் பேசியிருப்பதால் அவரின் குரலை கேட்டவுடன் நான் கண்டுபிடித்து விட்டேன் யாரென்று? அம்மா, வணக்கம் எப்படி இருக்கீங்க? இங்க எல்லோரும் சவுக்கியமா இருக்கோம் என வழக்கமான நலம் விசாரிப்புக்கு பின்னர் அம்மா சொன்னாங்க, உங்க ஊருக்கு வரேன்... சொந்தகாரங்க வீட்டுக்கு நெல்லை போறேன். நெல்லை போற வழியில மதுரையில ட்ரெயின் நிக்கும்ல அந்த அஞ்சு நிமிஷம் தான். உன்ன பாக்கணும் போல இருக்கு வர முடியுமா? என கேட்டாங்க..
      அம்மா கண்டிப்பா வரேன். அவங்க வர்ற ட்ரெயின், கோச், மதுரைக்கு வர்ற டைம் நைட் ரெண்டு மணின்னு சொன்னாங்க. அந்த வாரம் ஷிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு நைட்12:30 க்கு வந்ததால் எனக்கு டைம் பிரச்சனையா இல்லை. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே அவங்க தமிழ்நாடு வர்றதா சொல்லியிருந்தாங்க. நானும் சீனா ஐயாவும் அவங்க வர்றப்ப பார்க்க போகனும்னு ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தோம். சீனா அய்யாவிடம் சொன்னேன். இந்த மாதிரி அவங்க நைட் வராங்க. போகலாமா என கேட்டேன், அவர் ஓ எஸ் தாராளமா போகலாம். ரொம்ப தூரத்துல இருந்து வராங்க நாம போய் பார்த்துட்டு வரலாம்னு சொன்னார். 
        நானும் ஷிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு வந்திட்டு ரெப்ரெஷ் ஆயிட்டு ஐயாவையும் பிக்கப் பண்ணிட்டு ரெண்டு மணின்னு சொல்லியிருந்ததால அரை மணி நேரம் முன்னதாகவே மதுரை ஜங்ஷன் வந்தோம். ஜங்ஷனில் ட்ரெயின் வரும் டைம் சார்ட்டில் அரைமணிநேர தாமதமாக வருவதாக போட்டிருந்தாங்க. நம்ம ரயில்வே எப்பதான் சரியா ஒர்க் ஆகியிருக்கு? ஒரு ட்ரெயின் வந்து நின்னினுச்சு. அந்த ட்ரெயின் கன்னியாகுமரி ட்ரெயின்னு நினைக்கிறன். அந்த நைட் நேரத்துல டிடிஆர் செக்கிங் என்னமோ தெரியல, ரெண்டு பேர் செக் பண்ணிட்டு இருந்தாங்க. ரெண்டு பசங்க அவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க. ஒருத்தன் கையில கொஞ்சம் பணத்த வச்சிக்கிட்டு அவங்களுக்கு தர முயற்சி பண்ணிட்டு இருந்தான். அவங்க அவனை திட்டி அவங்க கண்ட்ரோல் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க. இன்னொருத்தன் திண்டுக்கல்ல இறங்க வேண்டியவனாம். தூக்கத்துல மதுரைக்கு வந்திட்டான். அதனால திண்டுக்கல் டு மதுரை டிக்கெட் இல்லாததால அவனுக்கு ஏதோ தொகை பைன் கட்டிட்டு போக சொன்னாங்க. அவனும் அவங்க கிட்ட ஏதோ மழுப்பிட்டு இருந்தான். அவனையும் கண்ட்ரோல் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. 
       இப்படியே எங்களுக்கு பொழுது போச்சு. இன்னும் ஒரு அரை மணிநேரம் ட்ரெயின் லேட்டுன்னு அறிவிப்பு வந்திச்சு. நாங்க சில விசயங்களை பேசிக்கிட்டே பொழுது போக்கினோம். தூரத்தில் ட்ரெயின் வருவதற்கான அறிகுறி தெரிந்தது. முகப்பு லைட் வெளிச்சம் தெரிஞ்சுச்சு. நாங்க அவங்க சொன்ன கோச் நம்பர் படி பிளாட்பாரத்தில் நின்னோம். ட்ரெயின் ஜங்க்சனில் நுழைந்தது. நாங்கள் அவரை பார்க்கும் ஆவலில் இருந்தோம். நாங்க நின்ன இடத்திற்கு கொஞ்சம் தள்ளி அவங்க சொன்ன கோச் நின்னுச்சு. ஒரு ஜன்னலில் எங்களை நோக்கி கைகளை ஆட்டியவாறே ஒருத்தர் இருந்தார். அவர் அருகில் சென்றோம். நாங்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டோம். அவர் ப்ளாக் ப்ரோபைலில்   அவர் போட்டோ வைத்திருப்பதால் எங்களால் அவரை அடையாளம் காண முடிந்தது. அவரும் எங்களை அடையாளம் கண்டு கொண்டார். 
        ஓ... சாரி... அவங்க யாருன்னு சொல்ல மறந்துட்டேன்ல.... 
தொடரும்...


46 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1