CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய  வேண்டும்.

மாரடைப்பு:
மாரடைப்பிற்கான அறிகுறிகள்:
      நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.
      இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.
      கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.
      படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம்  ஏற்படுதல். காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.

 முதல் உதவி சிகிச்சை:
      மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வர வழையுங்கள்.
      ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச்  செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.
      பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம்  கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி  உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.
      நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி:
      சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.
      தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.
      பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்து போனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்:
      சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை 
அப்புறப்படுத்தி விட்டு ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின் மீது போடலாம்.
      காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணி கொண்டு கட்டுப் போடுங்கள்.
      வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
 குறிப்பு:
      கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.

எலும்பு முறிவு:
      கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லா விட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
      எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
      எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.
      டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு  எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.


31 கருத்துரைகள்:

Chitra said... Best Blogger Tips

This reminds me of a "First-Aid" course that I took few years back.... Thank you.

இந்திரா said... Best Blogger Tips

மிகவும் பயனுள்ள பதிவு தோழரே..

//எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். //

அது பெரும்பாலும் எல்லோரும் செய்யக்கூடிய தவறு.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
பதிவின் பகிர்வுக்கும் தான்.

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

பயனுள்ள பதிவு மாப்ள..
பாராட்டுகள்..

மாய உலகம் said... Best Blogger Tips

ஒவ்வொருவரும் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டிய பதிவு... பகிர்வுக்கு நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Chitra
thanks 4 commented

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இந்திரா
thanks 4 commented

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

thanks machchi

Anonymous said... Best Blogger Tips

என்றுமே நான் தெரிந்திருக்க வேண்டிய தகவல், நன்றி பஸ் ...

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்...


நல்ல பதிவு...

செங்கோவி said... Best Blogger Tips

உருப்படியான பதிவு..ஏன் இன்னைக்கு எல்லாரும் நல்ல பதிவாப் போடுறாங்க..

Mathuran said... Best Blogger Tips

எல்லோரும் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள்.. பகிர்வுக்கு நன்றி

Unknown said... Best Blogger Tips

நன்றிங்கோ!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

அம்பாளடியாள் said... Best Blogger Tips

நன்றி சகோ சென்ஜோன் அம்புலன்ஸ்
முதலுதவிப் பயிற்சிப் பட்டறையில் நான் கற்றுக்கொண்ட
பாடத்தினை மீள்பதிவாய்ப் பார்க்கும்போது மனதிற்கு
மகிழ்ச்சியூட்டுகிறது இந்தப் பகிர்வு.....

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பிரகாஷ் டாக்டர் ஆனா அப்போ நர்ஸ் யாரு?

Prabu Krishna said... Best Blogger Tips

மிக நல்ல தகவல்கள் நன்றி

ஷர்புதீன் said... Best Blogger Tips

உபயோகமான பதிவு, இதெல்லாம் பள்ளிக்கூடத்திலும் சொல்லிகொடுத்தால் நன்றாக இருக்கும்!

Anonymous said... Best Blogger Tips

நன்றி DR பிரகாஷ்...மேலை நாடுகளில் அலுவலகங்களிலும் பள்ளியிலும் பலருக்கு இவை இலவசமாக
சொல்லிதரப்படுகின்றன...நம்ம ஊர்ல எப்பவோ...

கூடல் பாலா said... Best Blogger Tips

ரொம்ப ரொம்ப ரொம்ப பயனுள்ள பதிவு ...

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

மிகவும் பயனுள்ள பதிவு. தகவல்கள் யாவும் அருமை. அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன் vgk

[Indli 11 to 12 is mine ]

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

நன்றி டாகுடர் பிரகாஷ்...... எதுவும் பிராயச்சித்தமுங்களா...?

கோகுல் said... Best Blogger Tips

பயனுள்ள,தகுந்த நேரத்தில் பயன்படுத்தப்படவேண்டிய பகிர்வு.

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி. ஆமாம் - மாரடைப்பு வந்தவனுக்குக் கொடுக்க ஆஸ்பிரினும் சர்பிரேட்டும் உடனே எங்கே கிடைக்கும் ??? அப்புறம் என்ன என்னவோ சொல்றியே - பமர மனுசன் என்னாய்யா பண்ணூவான். ம்ம்ம்ம் 0 இருந்தாலும் இத்தகவல்கள் உதவும் நிச்சயம். - நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா

M.R said... Best Blogger Tips

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

FARHAN said... Best Blogger Tips

ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் ..

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

ஆமா இந்த தகவல் எல்லா டாக்டர் & நர்ஸ்--இக்கு தெரியுமா???

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய உபயோகமான தகவல்கள். எனக்கு மைல்ட், மாசிவ் ரெண்டு அட்டாக்கும் ஒரேசமயம் உண்டானப்போ
இந்தவிவரங்கள் தெரிந்திருக்க்லே.
அதனால பட்ட அவஸ்தைகள் இப்போ
நினத்தாலும் சிலிர்க்குது.

கோமதி அரசு said... Best Blogger Tips

டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.//

இது வரை தெரியாத புதிய முதலுதவி சிகிட்சையாக இருக்கிறது.நல்ல அவசியமான பதிவு.மிகவும் நன்றி.

கோமதி அரசு said... Best Blogger Tips

டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.//இது வரை தெரியாத புதிய முதலுதவி சிகிட்சையாக இருக்கிறது.நல்ல அவசியமான பதிவு.மிகவும் நன்றி.

Unknown said... Best Blogger Tips

அசத்தல் பதிவு!
அருமை!
புலவர் சா இராமாநுசம்

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1