CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!தனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தனபாலு: டேய் கோபாலு... இந்த பெட்டியில நம்ம தோட்டத்துல புடுங்கின கொய்யாப்பழம், திராட்சை எல்லாம் இருக்குடா. இந்த அட்ரசுக்கு லாரியில பார்சலா அனுப்பிருடா.

கோபாலு: அண்ணே! என்னண்ணே புதுசா இருக்கு? யாருக்கும் ஓசியில தர மாட்ட. நான் கேட்டா கூட காசு வாங்கிட்டு தான் பழங்கள தருவ. இப்ப யாருக்கோ பார்சலா அனுப்பற? யாருக்கு அது?

தனபாலு: டேய்... போன வாரம் என் கொழுந்தியா குடும்பத்தோட வந்திருந்தா. அவ ஆசையா கேட்டா? அதான் பார்சல் அனுப்பறேன்.

கோபாலு: ஹா...ஹா... உன் ஆசை நிறைவேறாது. ஏனா இன்னையில இருந்து லாரி ஸ்ட்ரைக் நடக்குது. உன்னால பார்சல் அனுப்ப முடியாது. உன் கொழுந்தியாவையும் பாக்க முடியாது.

தனபாலு: அடாடா.. பழங்களை ரொம்ப விரும்பி கேட்டாளே. என்ன செய்யலாம்? யோசிப்போம்?

கோபாலு: நல்லா யோசிங்க.. பழம் அழுகி போறதுக்குள்ள யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்கன்னே.
தனபாலு: டேய்.... போதும் நிறுத்துடா? என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.

கோபாலு: அண்ணே! இந்த கொடுமையை எங்க போயி சொல்ல?

தனபாலு: டேய், சொன்னா சொல்லு? இல்ல, சொல்லாத?

கோபாலு: ஊழலுக்கு எதிரா கிளம்பின ஹசாரேயை உள்ள தூக்கி வச்சுட்டாங்களே சென்ட்ரல் கவர்மேன்ட்டு. அவரு ஜெயில்ல இருந்து வெளியே வர மறுக்கிராராம்.

தனபாலு: ஆமாண்டா,  உண்ணாவிரதம் இருக்க கண்டிசன் இல்லாத உத்தரவு கொடுத்தா வெளியே வருவேன்னு சொல்லிட்டு இருக்காரு.

கோபாலு: ஆமாண்ணே! அவரும் என்ன செய்வாரு. எவ்வளவு அமைதியா போராடுனாலும் விட மாட்டிங்கறாங்க. ஏதாவது காரணம் சொல்லி உண்ணாவிரதத்துக்கு அனுமதி தராமலே இருக்காங்க.

தனபாலு: டேய்.... உனக்கு விஷயம் தெரியுமா? உள்ளாட்சி தேர்தலிலும் காங் கூட தி மு க கூட்டணி இருக்காம்.

கோபாலு: அப்படியா? அப்ப அதுலயும் பீல்டு அவுட்டா? ஹையோ பாவம்..

தனபாலு: டேய், விடுடா.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்டா...

கோபாலு: அண்ணே, என்னமோ சொல்றிங்க... ஒண்ணும் புரிய மாட்டிங்குது.

தனபாலு: உன் மரமண்டைக்கு ஒண்ணும் புரியாதுடா... சமச்சீர் கல்வி இருக்கணும்னு கோர்ட் மூலமா கொண்டு வந்துட்டாங்க, என் பையனுக்கும் புக் வந்திருச்சு. ஆனா அவன் அந்த புக்கில் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டான்டா.

கோபாலு: என்ன ஆராய்ச்சி பண்றான் அண்ணே?

தனபாலு: கலைஞர் குடும்பத்தை பத்தி இருந்த பாடங்களை பேப்பர் போட்டு ஒட்டியிருக்காங்கல்ல. அதை சரியா ஒட்டாம இருக்காங்க. அதனால அந்த பேப்பரை கிழிச்சு என்ன போட்டிருக்காங்கன்னு ஆராய்ச்சி பன்றாண்டா..

கோபாலு: ஹா...ஹா... பசங்களே அப்படித்தான். அண்ணே, அண்ணி என்ன சாப்பாடு பண்ணியிருக்காங்க இன்னைக்கு?

தனபாலு: அத ஏண்டா கேட்கற... தக்காளி ரேட் ரொம்ப குறைஞ்சு போச்சுன்னு டெய்லியும் தக்காளி சாப்பாடு, இல்லைன்னா தக்காளி கூட்டுன்னு ஒரே தக்காளி மயமா இருக்குடா.

கோபாலு: எங்க வீட்டுலயும் இந்த தக்காளி மயமாத் தான் இருக்கு. அண்ணே, மழை காலம் ஆரம்பிச்சிருச்சு. அதோட வெள்ளப்பெருக்கும் ஆரம்பமாயிருச்சு.

தனபாலு: ஆமாண்டா, எங்க பார்த்தாலும் சிமென்ட் ரோடு போட்டுட்டாங்க. கம்மா இருக்கிற இடமெல்லாம் பிளாட் போட்டு விக்கறாங்க. இருக்கிற கம்மாவையும் தூர் வாராம போட்டு வச்சிருக்காங்க. அப்புறம் எப்படி மழை தண்ணி வெள்ளமா மாறாது? அம்மா கம்மாக்களை கவனிக்கணும்.

கோபாலு: அம்மா நடவடிக்கை எடுப்பாங்களான்னு பாக்கலாம்ன்னே. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நம்ம இந்திய டீம் மேல ரொம்ப கோவமா இருக்காரு.

தனபாலு: ஆமா பின்ன நம்பர் ஒண்ணு இடத்துல இருந்து கீழே போயிட்டாங்களே. அதுவும் வரிசையா மூணு மேட்ச்ம் தோத்துட்டாங்க. ஒரு பய புள்ளிகளும் சரியா விளையாடல? அப்புறம் கோவம் வராம கொஞ்சவா செய்வாங்க?

கோபாலு: நம்மாளுக ரொம்ப மோசமா தான் விளையாடினாங்க. ஆடுற மேட்ச் எண்ணிக்கையை மொதல்ல குறைக்கனும். அப்பத்தான் உருப்படுவாங்க. 

தனபாலு: நாம பேசி என்னா நடக்கப் போகுது? பாக்கலாம் இனியாவது ஜெயிக்கராங்களா? இல்லை தோக்கறாங்களான்னு?

கோபாலு: அண்ணே, நயன்தாரா மதம் மாறினாலும் மாறினாங்க, பக்தி ரொம்ப முத்தி போச்சு. கோயில் கோயிலா சுத்தறாங்க. 

தனபாலு: கோயில் கோயிலா சுத்த அனுமதி வேற வாங்கியிருக்காங்கலாம்.

கோபாலு: நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, எப்போ கல்யாணம் பண்ண போறாங்களாம் அண்ணே?

தனபாலு: அதெல்லாம் ஏற்கனவே முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும்? யாருக்கு தெரியும்?

கோபாலு: மங்காத்தா இந்த மாசம் ரிலீஸ் ஆகும் ஆகும்னு சொல்றாங்க... ஆனா பாதி மாசம் ஓடி போச்சே?

தனபாலு: ஹீ...ஹீ.... மங்காத்தாவுக்கு அப்படியாவது சொல்றாங்க, ஆனா வேலாயுதம் படத்துக்கு ஒரு நியூஸ் ம் வரலையே. ஒரு வேளை மங்காத்தா ரிலீஸ் பார்த்துட்டு ரிலீஸ் பண்ணுவாங்களோ என்னவோ?

கோபாலு: கருங்காலி அஞ்சலி ஒரு படத்துல நிஜ கேரட்டரில் நடிக்கறாங்களாம். அதுக்கு ரொம்ப பிராக்டிஸ் பண்றாங்களாம்.

தனபாலு: பண்ணட்டும், பண்ணட்டும், நல்லா நடிச்சா சரி தான். சரிடா கோபாலு எனக்கு நேரமாச்சு, திருச்சி கிளம்பறேன். பஸ்ல கூட்டமா வேற இருக்கும். சீக்கிரம் கிளம்பறேண்டா.

கோபாலு: அண்ணே, ஒரு வேலையும் இல்லைன்னு சொன்னிங்க. ஊருக்கு போறீங்க? என்ன விசயமா?

தனபாலு: ஆங்.... லாரி ஸ்ட்ரைக்ல அதான் பார்சலை பஸ்ல போட்டுட்டு நானே கொடுத்திட்டு வர போறேன். கொழுந்தியாவையும் பார்த்த மாதிரி ஆச்சு. சரிடா நேரமாச்சு கிளம்பறேன்.

கோபாலு: அட அண்ணே, என்னமா பிளான் பண்றீங்க. பார்சலை கொடுத்திட்டு உடனே கிளம்புங்க. 

தனபாலு: எனக்கு தெரியும் போடா..... பெருசா சொல்ல வந்துட்டான்.

கோபாலு: சரிங்கன்னே, போயிட்டு வாங்க. இத அண்ணிகிட்ட சொல்லாம இருக்கணும்னா கொஞ்சம் என்னையும் கவனிக்கணும். ஓகே வா?

தனபாலு: இந்தா பிடி நூறு ரூவா? போயிட்டு வந்து உன்னை கவனிக்கறேன். வரேண்டா.....


27 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1