
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
தனபாலு: டேய் கோபாலு... இந்த பெட்டியில நம்ம தோட்டத்துல புடுங்கின கொய்யாப்பழம், திராட்சை எல்லாம் இருக்குடா. இந்த அட்ரசுக்கு லாரியில பார்சலா அனுப்பிருடா.
கோபாலு: அண்ணே! என்னண்ணே புதுசா இருக்கு? யாருக்கும் ஓசியில தர மாட்ட. நான் கேட்டா கூட காசு வாங்கிட்டு தான் பழங்கள தருவ. இப்ப யாருக்கோ பார்சலா அனுப்பற? யாருக்கு அது?
தனபாலு: டேய்... போன வாரம் என் கொழுந்தியா குடும்பத்தோட வந்திருந்தா. அவ ஆசையா கேட்டா? அதான் பார்சல் அனுப்பறேன்.
கோபாலு: ஹா...ஹா... உன் ஆசை நிறைவேறாது. ஏனா இன்னையில இருந்து லாரி ஸ்ட்ரைக் நடக்குது. உன்னால பார்சல் அனுப்ப முடியாது. உன் கொழுந்தியாவையும் பாக்க முடியாது.
தனபாலு: அடாடா.. பழங்களை ரொம்ப விரும்பி கேட்டாளே. என்ன செய்யலாம்? யோசிப்போம்?
கோபாலு: நல்லா யோசிங்க.. பழம் அழுகி போறதுக்குள்ள யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்கன்னே.
தனபாலு: டேய்.... போதும் நிறுத்துடா? என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.
கோபாலு: அண்ணே! இந்த கொடுமையை எங்க போயி சொல்ல?
தனபாலு: டேய், சொன்னா சொல்லு? இல்ல, சொல்லாத?
கோபாலு: ஊழலுக்கு எதிரா கிளம்பின ஹசாரேயை உள்ள தூக்கி வச்சுட்டாங்களே சென்ட்ரல் கவர்மேன்ட்டு. அவரு ஜெயில்ல இருந்து வெளியே வர மறுக்கிராராம்.
தனபாலு: ஆமாண்டா, உண்ணாவிரதம் இருக்க கண்டிசன் இல்லாத உத்தரவு கொடுத்தா வெளியே வருவேன்னு சொல்லிட்டு இருக்காரு.
கோபாலு: ஆமாண்ணே! அவரும் என்ன செய்வாரு. எவ்வளவு அமைதியா போராடுனாலும் விட மாட்டிங்கறாங்க. ஏதாவது காரணம் சொல்லி உண்ணாவிரதத்துக்கு அனுமதி தராமலே இருக்காங்க.
தனபாலு: டேய்.... உனக்கு விஷயம் தெரியுமா? உள்ளாட்சி தேர்தலிலும் காங் கூட தி மு க கூட்டணி இருக்காம்.
கோபாலு: அப்படியா? அப்ப அதுலயும் பீல்டு அவுட்டா? ஹையோ பாவம்..
தனபாலு: டேய், விடுடா.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்டா...
கோபாலு: அண்ணே, என்னமோ சொல்றிங்க... ஒண்ணும் புரிய மாட்டிங்குது.
தனபாலு: உன் மரமண்டைக்கு ஒண்ணும் புரியாதுடா... சமச்சீர் கல்வி இருக்கணும்னு கோர்ட் மூலமா கொண்டு வந்துட்டாங்க, என் பையனுக்கும் புக் வந்திருச்சு. ஆனா அவன் அந்த புக்கில் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டான்டா.
கோபாலு: என்ன ஆராய்ச்சி பண்றான் அண்ணே?
தனபாலு: கலைஞர் குடும்பத்தை பத்தி இருந்த பாடங்களை பேப்பர் போட்டு ஒட்டியிருக்காங்கல்ல. அதை சரியா ஒட்டாம இருக்காங்க. அதனால அந்த பேப்பரை கிழிச்சு என்ன போட்டிருக்காங்கன்னு ஆராய்ச்சி பன்றாண்டா..
கோபாலு: ஹா...ஹா... பசங்களே அப்படித்தான். அண்ணே, அண்ணி என்ன சாப்பாடு பண்ணியிருக்காங்க இன்னைக்கு?
தனபாலு: அத ஏண்டா கேட்கற... தக்காளி ரேட் ரொம்ப குறைஞ்சு போச்சுன்னு டெய்லியும் தக்காளி சாப்பாடு, இல்லைன்னா தக்காளி கூட்டுன்னு ஒரே தக்காளி மயமா இருக்குடா.
கோபாலு: எங்க வீட்டுலயும் இந்த தக்காளி மயமாத் தான் இருக்கு. அண்ணே, மழை காலம் ஆரம்பிச்சிருச்சு. அதோட வெள்ளப்பெருக்கும் ஆரம்பமாயிருச்சு.
தனபாலு: ஆமாண்டா, எங்க பார்த்தாலும் சிமென்ட் ரோடு போட்டுட்டாங்க. கம்மா இருக்கிற இடமெல்லாம் பிளாட் போட்டு விக்கறாங்க. இருக்கிற கம்மாவையும் தூர் வாராம போட்டு வச்சிருக்காங்க. அப்புறம் எப்படி மழை தண்ணி வெள்ளமா மாறாது? அம்மா கம்மாக்களை கவனிக்கணும்.
கோபாலு: அம்மா நடவடிக்கை எடுப்பாங்களான்னு பாக்கலாம்ன்னே. முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நம்ம இந்திய டீம் மேல ரொம்ப கோவமா இருக்காரு.
தனபாலு: ஆமா பின்ன நம்பர் ஒண்ணு இடத்துல இருந்து கீழே போயிட்டாங்களே. அதுவும் வரிசையா மூணு மேட்ச்ம் தோத்துட்டாங்க. ஒரு பய புள்ளிகளும் சரியா விளையாடல? அப்புறம் கோவம் வராம கொஞ்சவா செய்வாங்க?
கோபாலு: நம்மாளுக ரொம்ப மோசமா தான் விளையாடினாங்க. ஆடுற மேட்ச் எண்ணிக்கையை மொதல்ல குறைக்கனும். அப்பத்தான் உருப்படுவாங்க.
தனபாலு: நாம பேசி என்னா நடக்கப் போகுது? பாக்கலாம் இனியாவது ஜெயிக்கராங்களா? இல்லை தோக்கறாங்களான்னு?
கோபாலு: அண்ணே, நயன்தாரா மதம் மாறினாலும் மாறினாங்க, பக்தி ரொம்ப முத்தி போச்சு. கோயில் கோயிலா சுத்தறாங்க.
தனபாலு: கோயில் கோயிலா சுத்த அனுமதி வேற வாங்கியிருக்காங்கலாம்.
கோபாலு: நடக்கட்டும் நடக்கட்டும். ஆமா, எப்போ கல்யாணம் பண்ண போறாங்களாம் அண்ணே?
தனபாலு: அதெல்லாம் ஏற்கனவே முடிஞ்சாலும் முடிஞ்சிருக்கும்? யாருக்கு தெரியும்?
கோபாலு: மங்காத்தா இந்த மாசம் ரிலீஸ் ஆகும் ஆகும்னு சொல்றாங்க... ஆனா பாதி மாசம் ஓடி போச்சே?
தனபாலு: ஹீ...ஹீ.... மங்காத்தாவுக்கு அப்படியாவது சொல்றாங்க, ஆனா வேலாயுதம் படத்துக்கு ஒரு நியூஸ் ம் வரலையே. ஒரு வேளை மங்காத்தா ரிலீஸ் பார்த்துட்டு ரிலீஸ் பண்ணுவாங்களோ என்னவோ?
கோபாலு: கருங்காலி அஞ்சலி ஒரு படத்துல நிஜ கேரட்டரில் நடிக்கறாங்களாம். அதுக்கு ரொம்ப பிராக்டிஸ் பண்றாங்களாம்.
தனபாலு: பண்ணட்டும், பண்ணட்டும், நல்லா நடிச்சா சரி தான். சரிடா கோபாலு எனக்கு நேரமாச்சு, திருச்சி கிளம்பறேன். பஸ்ல கூட்டமா வேற இருக்கும். சீக்கிரம் கிளம்பறேண்டா.
கோபாலு: அண்ணே, ஒரு வேலையும் இல்லைன்னு சொன்னிங்க. ஊருக்கு போறீங்க? என்ன விசயமா?
தனபாலு: ஆங்.... லாரி ஸ்ட்ரைக்ல அதான் பார்சலை பஸ்ல போட்டுட்டு நானே கொடுத்திட்டு வர போறேன். கொழுந்தியாவையும் பார்த்த மாதிரி ஆச்சு. சரிடா நேரமாச்சு கிளம்பறேன்.
கோபாலு: அட அண்ணே, என்னமா பிளான் பண்றீங்க. பார்சலை கொடுத்திட்டு உடனே கிளம்புங்க.
தனபாலு: எனக்கு தெரியும் போடா..... பெருசா சொல்ல வந்துட்டான்.
கோபாலு: சரிங்கன்னே, போயிட்டு வாங்க. இத அண்ணிகிட்ட சொல்லாம இருக்கணும்னா கொஞ்சம் என்னையும் கவனிக்கணும். ஓகே வா?
தனபாலு: இந்தா பிடி நூறு ரூவா? போயிட்டு வந்து உன்னை கவனிக்கறேன். வரேண்டா.....
27 கருத்துரைகள்:
fஃபோட்டோக்கள் செம கில்மா .
ரொம்ப நாளா காணோமேன்னு பாத்தேன் லேட்டா வந்தாலும் நி றிய
தகவல்களை சொல்லி இருக்காங்க. பழங்கள் எல்லாம் சரியான சமயத்தில் கொண்டு கொழிந்தியா கிட்ட சேத்தீங்களா?
அருமையான சாட்..
வாழ்த்துக்கள் பிரகாஷ்..
படங்கள் அருமை ஹீ ஹீ
என்று என் வலையில்
டென்ஷன் ஆகாதிங்க பாஸ்…
Good share
அருமையான படங்கள்,அருமையான பதிவு.
அப்புறம்.....
கொழுந்தியாவை பார்த்தீங்களா
தமிழ் மணம் 5
நல்லாயிருக்கு.voted.
///அண்ணே, நயன்தாரா மதம் மாறினாலும் மாறினாங்க, பக்தி ரொம்ப முத்தி போச்சு. கோயில் கோயிலா சுத்தறாங்க. // அண்ணன் பிரபுதேவா கழட்டி விடக்கூடாது என்ற ஏக்கம் போல ))
பல விடயங்களை கோபாலும் தனபாலும் விவாதித்துல்லார்கள் ....
மச்சி படங்கள் எல்லாம் நச்சினு இருக்கு..
அரட்டையும் அசத்தல்..
நாம கொஞ்ச நாள் வலைக்கு வரலை என்றதும்,
நம்மளை மாதிரி யூச் பசங்களச் சுண்டி இழுக்க கில்மாப் படம் போடுறீங்களா..
இருங்க படிச்சிட்டு வாரேன்.
முதல் பாதி,
கொழுந்தியாளுக்கு பழங்கள் அனுப்புறாங்களாம்.............
அவ்........................
அடுத்த பகுதி,..கலைஞரைக் கலாய்ச்சு வந்திருக்கிறது.
இடையில் மங்காத்தா....வேலாயுதம் ஹாட் நியூஸ் சூப்பரா இருக்கு,
அஞ்சலியை எங்கே போனாலும் மறக்க மாட்டீங்க போல இருக்கே...
அரசியல், சினிமா, தக்காளி விலை, கொழுந்தியாள் மீதான ஆர்வம்...என அரட்டை கலக்கலாக வந்திருக்கிறது.
Nice mixture
தமிழ்வாசியும் நல்ல படமாப் போட ஆரம்பிச்சுட்டாரே..
//தக்காளி ரேட் ரொம்ப குறைஞ்சு போச்சுன்னு//
நல்லவேளை தக்காளிக்கு மதிவு போச்சுன்னு சொல்லலை..அப்புறம் விக்கி தனிப் பதிவு போட்டு, பேர் சொல்லாமலேயே திட்டுவாரு.
நயன்தாரா ஏன் கோயில் கோயிலாச் சுத்துறாங்கன்னா...ரம்லத் நிலைமை தனக்கும் வந்திடக்கூடாதுன்னு தான்.
அருமையான....
அருமையான கில்மா பதிவு படங்கள்
அருமை மாப்பிள வாழ்த்துக்கள்... அப்புறம் 200000 பக்கங்களை தொடப்போறீங்க மிக விரைவில் அதற்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....
காட்டான் குழ போட்டான்...
என் பதிவுகள்ள வந்து ஓட்டுப்போட்ருங்க இல்லன்னா கொழுந்தியாவுக்கு பழம் ஊட்டுன விசயத்த அண்ணிக்கிட்ட சொல்லிடுவேணாக்கும்... ஏகப்பட்ட துணுக்குகள்... கலக்கிட்டீங்க வாசி... தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்
அதென்ன கருங்காலி அஞ்சலி? ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டு இப்போ கருங்காலி அஞ்சலியா?
இதுல கொழுந்தியாவுக்கு கொய்யாப்பழம் வேற.... நடக்கட்டும் நடக்கட்டும்.... மாட்டிக்காம இருந்தா சரி....!
கலைஞர் குடும்பத்தை பத்தி இருந்த பாடங்களை பேப்பர் போட்டு ஒட்டியிருக்காங்கல்ல.////அப்புடி ஒட்டனும்னு தான் புத்தகத்தையே தடுப்புக் காவல்ல வச்சிருந்தாங்களோ?
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Shree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher