CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!பிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
        வணக்கமுங்கண்ணா!, எம்பேரு மொக்க சாமி, எல்லோரும் மாப்ள மொக்கசாமினு கூப்பிடுவாக... மாப்ள... மாப்ள.. அப்படினு வாய் நிறைய கூப்பிடுற ஒரு பய புள்ளைகளும், அதுங்க பொண்ணை கண்ணுல காட்ட மட்டிங்குதுக. என்ன செய்ய, நாம அம்புட்டு உலக பேரழகனா இருக்கோம்ல. ஹி... ஹி.... வேறேன்னத்த சொல்றது! சரி இப்போ மேட்டருக்கு வரேன், நான் சில மாசமா பதிவுலகுல நிறைய பேரோட பதிவுகளை படிச்சுட்டு வரேனுங்க. எல்லா ப்ளாக்கும் போய் படிக்கற எனக்கு சொந்தமா ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண ஆசை வந்துச்சு. ஹி.. ஹி... விபரீதமான ஆசை தான்! ஹி... ஹி... உங்களுக்கு விபரீதம்னு சொன்னேன்.
         ப்ளாக் அக்கௌன்ட் ஓபன் பன்னி "மொக்கை மாப்ள" அப்படின்னு பேரு வச்சு ( பேரு எப்படி?) எங்க ஊரு தெய்வம் மொக்கசாமிக்கு ஒரு ரூவா உண்டியல்ல காணிக்கையா போட்டு ஆரம்பிச்சேனுங்க. தினமும் ஒரு பத்து பேராவது பாலோயர் சேரனும் (ரொம்ப ஆசை படறேனோ?), பதிவுக்கு குத்துமதிப்பா 89 கருத்துகளாவது வரணும்னு காசு வெட்டி போட்டிருக்கேனுங்க. (ஹி..ஹி.. மிரட்டல் எப்புடி?) சும்மா வெறுமனே வந்து மொக்கையை படிச்சிட்டு பாலோயரும் ஆகாம, கருத்தும் போடாம போறவங்கள எங்க மொக்கைச்சாமி தண்டிச்சிருவாரு. எதுக்கும் கொஞ்சம் யோசனை பன்னி உள்ளே வாங்க. (எம்புட்டு பில்டப்பு பாருங்கையா இந்த மொக்கை பதிவருக்கு). 
        மொத பதிவா என்ன மொக்கை போடலாம்னு நாலு ரூம் போட்டு யோசிச்சேனுங்க. நாலு ரூமு எதுக்குன்னு கேட்கறின்களா? நாலு பேர் கிட்ட நல்ல விஷயத்தை கேட்கிற மாதிரி, நாலு ரூம்ல உட்கார்ந்து யோசிக்கறேன். ஒரு மொக்கையும் என்ன எழுதறதுன்னு ஐடியா வரல. அப்படியும் விடுவோமா நாங்க, நாலு ரூம்லையும் மாத்தி மாத்தி உட்கார்ந்து யோசிச்சுட்டே தூங்கிட்டேன். திடீரென எங்க மொக்கைசாமி கனவுல வந்தாரு. "டேய் மொக்கை நாலு ரூமுக்கு வாடகையை கொடுத்துகிட்டு இன்னுமா யோசிக்கற.... ? யோசிக்கறத நிறுத்து... எழுதுடா.... யோசிக்காம எழுத ஆரம்பி. நீ எழுதறது எல்லாமே மொக்கை தான்... நான் பின்னாடி இருந்து உன் மொக்கைக்கு துணையா இருக்கேன். " அப்படின்னு எனக்கு அருள்வாக்கு சொன்னாரு. திடீர்னு முழிச்சு பார்த்தேன். ரூம்ல புகை மண்டலமா இருந்துச்சு. அப்பத்தான் மொக்கை சாமி வந்துட்டு போனத நம்பினேன். அப்போ முடிவு பண்ணினேன். என் இஷ்டத்துக்கு எழுத போறேன்... எழுதினா மொக்கையா தான் வரும். பரவாயில்லை. அதானே மொக்கைச்சாமி பின்னாடி துணையா இருக்காரே... அவர் மேல பாரத்தை போட்டு மொத மொக்கை எழுதி வெளியிட்டேன். ஹி...ஹி.. தலைப்பு என்னான்னு கேட்கறின்களா? "பிரபல பதிவர்களுடன் மொக்கை போட்டி-பதிவுலக பரபரப்பு" எப்புடி நம்ம தலைப்பு. முதல் பதிவே செம டூப்பர் சூப்பர் ஹிட்டு. ஹிட்டுனா என்னான்னு கேட்கக் கூடாது. ஏன்னா நான் புதுசு. அப்படித்தான் பில்டப் பண்ணுவேன். நீங்க கண்டுக்கற கூடாது. மொத மொக்கை பதிவுக்கு ஆதரவா ஒன்போது பாலோயர் வந்துச்சு. வெறும் 58 கருத்துக்கள் மட்டுமே வந்துச்சு. 
             பாலோயர், கருத்துகள் போடாதவங்களை மொக்கைச்சாமி பார்துக்கிருவார் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து பதிவுகள், இல்லை, மொக்கைகள் எழுத ஆரம்பிச்சேன். இதுல அஞ்சாவது பதிவா நடிகைகளை பத்தி ஒரு மொக்கை பதிவு போட்டேன் பாருங்க, பதிவுலகமே செம ட்ராபிக் ஜாம். அப்புறம் நம்ம மொக்கைச்சாமி வந்துதான் அந்த ட்ராபிக் ஜாமை சரி பண்ணினாரு. இப்படி தினமும் பதிவுலகம் ட்ராபிக் ஆகுறதும், அதை மொக்கை சாமி சரி பண்றதுமாக நான் எப்படியோ பிரபல மொக்கை பதிவரா வலம் வர ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் நல்லா ஆட்டம் ஆடுனேன். 
           அப்புறம் திடீர்னு கூட்டம் குறைய ஆரம்பிச்சது. அட கடவுளே இது என்ன சோதனைன்னு மொக்கைசாமிக்கிட்ட ஓடினேன். வழக்கம் போல ஒரு ரூபா உண்டியல்ல காணிக்கையா போட்டுட்டு சாமி கிட்ட அருள் கேட்டேன். அவரு சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக்காயிட்டேன் தெரியுமா? சாமி சொன்னாரு, டேய் மொக்கை மாப்ள, உன் மொக்கைக்கு போட்டியா "ஷோக்கு ஷோக்கடி"ன்னு ஒரு மொக்கை பதிவரு புதுசா வந்திருக்காருன்னு. அதுவுமில்லாம உன் மொக்கையை படிச்சுட்டு நிறைய பேரு பைத்தியமா மாறிட்டாங்கலாம். அதனால உன் மொக்கையை படிக்க வர்றவங்க கூட்டம் கொறஞ்சு போச்சுன்னு குண்டை தூக்கிப் போட்டார். அய்யோ, இனி நான் என்ன செய்வேன், பிரபல மொக்கை பதிவர்னு பேரெடுத்த நான் இப்போ பிராப்ளம் தர்ற மொக்கையா ஆயிட்டேனே. 
         சாமி மொக்கை சாமி நீ தான் ஒரு வழி சொல்லனும்னு மறுபடியும் ஒரு ரூபா உண்டியல்ல காணிக்கை போட்டு அவர் அருள்வாக்கை வேண்டி நின்னேன். சாமி சொன்னாரு, மொக்கை மாப்ள அப்படிங்கற பேரை மெசேஜ் மாப்ள என மாத்திக்க. நானும் அவரு சொன்ன படி பேரை மெசேஜ் மாப்ள என மாத்திட்டு பதிவு போடலாம்னு யோசிச்சா வெறும் மொக்கை தான் மனசுல வந்து நின்னுச்சு. அதையும் மீறி ஒரு மெசேஜ் பதிவு போட்டேன். அப்படியும் கூட்டம் வரல. என்னான்னு பதிவை படிச்சு பார்த்தா, சொல்ற மெசேஜ்சை எப்படி மொக்கையா சொல்லலாம்னு போட்டிருந்திருக்கேன். அய்யோ, மொக்கைசாமி எனக்கு மெசேஜ் சொல்லத் தெரியல. எனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு. எனக்கு பதிவுலகமே வேணாம். இனி இந்த மொக்கைக்கு ஆசைப்பட மாட்டேன் சாமி......

டிஸ்கி: 
இந்த பதிவு முற்றிலும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல.


58 கருத்துரைகள்:

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

Neenga karpanaiyinnu sonnaa naanga nambiduvomaa?

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

adangkokkaa makkaa அடங்கொக்கா மக்கா.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

எலேய் மக்கா, தக்காளியை சொன்னா மாதிரி இருக்கே ஹி ஹி....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
Neenga karpanaiyinnu sonnaa naanga nambiduvomaa?///

நம்பிக்கை தானே வாழ்க்கை

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
அடங்கொக்கா மக்கா.///

சி பி திட்டறாரு... ஹி..ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ
எலேய் மக்கா, தக்காளியை சொன்னா மாதிரி இருக்கே ஹி ஹி....///

அப்படியா? அவரு மக்கானு சொல்றாரே

Unknown said... Best Blogger Tips

என்கிட்டே கதை கேட்டு புட்டு...எனக்கே கதை சொல்றியா ராஸ்கோல்...இனி உன்னைய எப்படி கூடுறேன்னு பாரு!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

(எம்புட்டு பில்டப்பு பாருங்கையா இந்த மொக்கை பதிவருக்கு).

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

நல்லா தான் இருக்கு மொக்கை.

கவி அழகன் said... Best Blogger Tips

செம மொக்கை
யாருக்கு உள்குத்து

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

மொக்கை ஒழிப்பு பற்றிய பதிவிலும், மொக்கை என்ற வார்த்தை கலந்திருந்தாலும் மொக்கை ஏதும் இல்லாமலும், மிகச்சிறப்பான மெசேஜ் ஏதும் இல்லாமலும், ஆனால் சூப்பராக சுவையாக, எல்லாமே கலந்த ஒரு ந்வரசக்கலவையாக அமைந்து விட்டது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். Voted 4 to 5 in INDLI.

கூடல் பாலா said... Best Blogger Tips

செம மொக்கைண்ணா!

Anonymous said... Best Blogger Tips

இப்படியும் ஒரு வழி மொக்கை போட..மொக்க சாமீ துணையா இருக்கட்டும். வாழ்த்துக்கள்

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் மாப்பிள யாருக்கோ மணியடிக்கிற... இந்த ஐடியா வேலைக்காகுமோய்யா... ஹி ஹி 

காட்டான் குழ போட்டான்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கியுலகம்
விக்கி ஏன் டென்சன் ஆகுறாரு

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி
வருகைக்கு நன்றிங்கோ

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Lakshmi
நன்றி கருத்துக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இது யாருன்னு எனக்கு நல்லா தெரியுமே? காட்டான் அண்ணன் கூட மணியடிச்சிருக்காரு.......

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@கவி அழகன்
செம மொக்கை
யாருக்கு உள்குத்து///

யாரையும் குத்தல குத்தல...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@வை.கோபாலகிருஷ்ணன்
மிக சரியான கருத்தை சொன்னிங்க சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

அநியாயத்துக்கு அப்பாவியா இருந்த தமிழ்வாசியும் இப்படி உள்குத்து, வெளிகுத்துன்னு கெளம்பிட்டாரே? ஒருவேள இவரும் கமலா காமேசை பாத்துட்டாரோ?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@காட்டான்
காட்டான் அவர்களே... உங்கள் கருத்து வேலைக்காகாது...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
அண்ணே... நீங்களுமா?

rajamelaiyur said... Best Blogger Tips

//
டிஸ்கி:
இந்த பதிவு முற்றிலும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல.
//
இதை நாங்க நம்பனும்

செங்கோவி said... Best Blogger Tips

/எல்லோரும் ”மாப்ள” மொக்கசாமினு கூப்பிடுவாக..//

இது தக்காளி விக்கி தானே?

K said... Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

சார், ஆஃபீசுல ஒர்க் பண்ணவே முடியல!ஒரே டாச்சரா இருக்கு!என்னான்னு கேக்குறீங்களா?

ஒரு பதிவர் எனக்கு மெயில் அனுப்பினார்! ‘ யோவ்,,, ஐடியா மணி! உன்னைப் பத்தி, தமிழ்வாசி ப்ரகாஷ் உள்குத்து பதிவு போட்டிருக்கார்னு’

நான் பிசியா இருந்ததால, அதக் கண்டுக்கல! அதுபோக நான் ஒரு புதிய பதிவர் அப்டீங்கறதால, என்னையப் போய் எதுக்கு அவரு குத்தணும்? அப்டீன்னு நெனைச்சுக்கிட்டு பேசாம இருந்துட்டேன்!

10 நிமிஷம் கழிச்சு, இன்னொரு பதிவர் ( மதுரையில இருந்து ) ஃபோன் பண்ணி

‘ தமிழ்வாசி உன்னைப் பற்றி உள்குத்து போட்டிருக்காரு’

அப்டீன்னு சொன்னாரு!

என்னடா இது வம்பாப் போச்சுதுன்னு, இங்க ஓடோடி வந்து பார்க்குறேன்!

அட, இதுவா உள்குத்துப் பதிவு? உள்குத்துப் பதிவுக்கு ஒரு லட்சணம் வேணாம்?

ஆனா, எனக்கு என்ன தோணுதுண்ணா, நீங்க எனக்கு எதிராப் போடலைன்னு!

சப்போஸ், எனக்கு எதிராத்தான் நீங்க போட்டிருக்கீங்க என்றால் ‘ம்’னு ஒரு வார்த்தை சொல்லுங்க சார்!

அப்புறம் நானும் களத்துல இறங்கிடுறேன்! ஏன்னா, எனக்கு உள்குத்துப் பதிவுகள் சூப்பரா போடத் தெரியும் சார்!

குத்துன்னா குத்து, கும்மாங்குத்து குத்தி, ஒரு பதிவு போடுறேன்! உங்ககூட சண்டை போட்டா நானும் ஃபேமஸ் ஆகிடுவேன்ல!

அதோட, படிக்கறவங்களுக்கும் செம இண்டெரஸ்டிங்க ஆ இருக்கும்ல!

சொல்லுங்க சார், யெஸ் ஆ? நோ ஆ?

நாங்களும் உள்குத்து போடுவோம்ல!

செங்கோவி said... Best Blogger Tips

// ப்ளாக் அக்கௌன்ட் ஓபன் பன்னி "மொக்கை மாப்ள" அப்படின்னு பேரு வச்சு //

இதுல ‘பன்னி’ன்னு சொல்றதுனால, இது அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமியை தாக்கி எழுதப்பட்ட பதிவுன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு.

செங்கோவி said... Best Blogger Tips

// இந்த பதிவு முற்றிலும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல.//

பரவாயில்லை மாப்ள..நான் சொன்னமாதிரியே டிஸ்கி போட்டியே..வெரிகுட்.

செங்கோவி said... Best Blogger Tips

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 21
அநியாயத்துக்கு அப்பாவியா இருந்த தமிழ்வாசியும் இப்படி உள்குத்து, வெளிகுத்துன்னு கெளம்பிட்டாரே? ஒருவேள இவரும் கமலா காமேசை பாத்துட்டாரோ? //

ஆமாண்ணே..மங்காத்தா பார்த்துட்டாரு..ஒருவேளை மங்காத்தா நல்லா இல்லென்னு சொன்ன அந்தப் பதிவரை தாக்குறாரோ?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வாங்க ஐடியமணி... முதல் முறையா கருத்து சொல்லியிருகிங்க. நல்ல விசயம்தான். நீங்க சொல்ற கருத்துகள் புதுசா இருக்கு. என்னமோ உங்களை நான் குத்தி பதிவு போட்டிருக்கேனா? ஹி... ஹி... நமக்கு உள்குத்து, வெளிக்குத்து எதுவும் தெரியாதுங்க....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஆனா, எனக்கு என்ன தோணுதுண்ணா, நீங்க எனக்கு எதிராப் போடலைன்னு!///

ஹா... ஹா... ஏங்க மணி நான் யாருக்காகவும் போடல... உங்களை எதுக்கு நான் எதிரியா பாக்கணும்...???

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
அட, இதுவா உள்குத்துப் பதிவு? உள்குத்துப் பதிவுக்கு ஒரு லட்சணம் வேணாம்?///

இது தான் கரகிட்டு கருத்து...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சொல்லுங்க சார், யெஸ் ஆ? நோ ஆ? ///

ஐயோ.... நான் யாரையும் குத்தலையே.... அப்புறம் எதுக்கு எஸ் ஆர் நோ? யாரோ சொல்றாங்கன்னு நீங்க டென்சன் ஆகாதிங்க மணி சார்...

K said... Best Blogger Tips

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

சார், மன்னிச்சுக்குங்க! எனக்கு மெயில் அனுப்பி, ஃபோன் போட்டு, என்னைய ஆஃபீசுல ஓர்க் பண்ணவிடாம, டென்சன் பண்ணாங்க பாருங்க அந்த ரெண்டுபேருக்கும, சாயந்தரம் ஃபோன் போட்டு கிழிக்கிறேன்!

அதுதானே சார், நீங்க எதுக்கு என்னையப் போயி குத்தணும்? நான் நம்பவே இல்லை!

எப்படியோ, இந்த ஒரு சம்பவத்தால, நம்ம நட்பு மேலும் இறுக்கமாச்சு! இனி அடிக்கடி உங்க பதிவுக்கு வருவேன் சார்!

ரொம்ப நன்றி சார்! தப்பா ஏதும் நெனைச்சுடாதீங்க!

ரொம்ப நன்றி சார்!

K said... Best Blogger Tips

சார், உலவுல எனக்கு அக்கவுண்ட் இல்ல சார், அதுனால தமிழ்மணம், இண்ட்லி, தமிழ் 10, கூகுள் ப்ளஸ் இதுகள்ள ஓட்டுப் போட்டுட்டு கெளம்புறேன் சார்!

KANA VARO said... Best Blogger Tips

இந்த பதிவில எத்தனை "மொக்கை" வந்தது எண்டு எண்ணி கஷ்ட பட்டுடன்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
எல்லோரும் ”மாப்ள” மொக்கசாமினு கூப்பிடுவாக..//

இது தக்காளி விக்கி தானே?///

ஹையோ....ஹையோ... முடியல

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
இதுல ‘பன்னி’ன்னு சொல்றதுனால, இது அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமியை தாக்கி எழுதப்பட்ட பதிவுன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு.///

ஹி..ஹி... எப்படிஎல்லாம் கோர்க்கராங்கையா????

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
பரவாயில்லை மாப்ள..நான் சொன்னமாதிரியே டிஸ்கி போட்டியே..வெரிகுட்.///

ஹி...ஹி.. இது டெம்ப்ளேட் டிஸ்கிங்கோ

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
எப்படியோ, இந்த ஒரு சம்பவத்தால, நம்ம நட்பு மேலும் இறுக்கமாச்சு! இனி அடிக்கடி உங்க பதிவுக்கு வருவேன் சார்! ///

இது ஒரு சம்பவமே இல்லைங்கறேன்.... நீங்க சம்பவம்ங்கறிங்க.... நட்புக்கு நன்றிங்கோ...

Anonymous said... Best Blogger Tips

விக்கியை வம்புக்கு இழுத்த பிரகாஷ் வாழ்க!!

இந்திரா said... Best Blogger Tips

சரியான உள்குத்தா இருக்கே..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@! சிவகுமார் !
விக்கியை வம்புக்கு இழுத்த பிரகாஷ் வாழ்க!!///

நீங்க வேற சண்டையை மூட்டி விடாதிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

அடேய்...
சும்மா இருக்க முடியல..

ஏற்கனவே நம் கும்மி குருப்ஸ் ஆளையே காணமா இருக்கு...

நீவேற இது மாதிரி போட்ட அவங்கள விரட்டிடாதே...

ஏதோ கற்பனைன்னு சொன்னதால சும்மா விடுறேன்...

தனிமரம் said... Best Blogger Tips

Nalla ullkutu kuthi irukkuringa bass.

Unknown said... Best Blogger Tips

வயித்தெரிச்சல் பார்ட்டிங்க யாரும் இன்னும் வரலையா பதிவர் குல மாணிக்கமே...ஹிஹி!

Unknown said... Best Blogger Tips

வயித்தெரிச்சல் பார்ட்டிங்க யாரும் இன்னும் வரலையா பதிவர் குல மாணிக்கமே...ஹிஹி!

Yoga.s.FR said... Best Blogger Tips

உருப்படுற மாதிரி பதிவு போட்டா யாரும் சீண்டுற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு பாத்தா நாப்பத்தஞ்சு கமண்டு வந்திருக்கு!கண்டிநியூ மிஸ்டர் தமிழ் வாசி!

பனித்துளி சங்கர் said... Best Blogger Tips

////////Yoga.s.FR said...
உருப்படுற மாதிரி பதிவு போட்டா யாரும் சீண்டுற மாதிரி தெரியல!இந்தப் பதிவுக்கு பாத்தா நாப்பத்தஞ்சு கமண்டு வந்திருக்கு!கண்டிநியூ மிஸ்டர் தமிழ் வாசி ////////


நல்ல முயற்சி

Unknown said... Best Blogger Tips

அருள்வாக்கு அற்புதம்.மொக்கை சாமியின் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைத்திருக்கிறது.

சுதா SJ said... Best Blogger Tips

செமையா கும்மி இருக்கீங்க....... அவ்ளோவும் அசத்தல் மொக்கை,
ஆமா உங்க உள் குத்தைப்பார்த்து அவர் அதாங்க அந்த பதிவர்
ரெம்ப யோசனையில் இருக்காராம்.... அடுத்து என்ன செய்யலாம் என்று....

பாஸ் பார்த்து, அவருக்கு பிரான்சில் நிறைய ஆபிரிக்கன் பிரெண்ட்
எல்லாம் இருக்கு.... அவ்வ்

சந்தியா said... Best Blogger Tips

கவனம் சார் மொக்கை சாமிக்கு யாரும் கோயில் கட்டிட போறாங்க

எமக்கு கிடைத்த வரங்களை நாமே கேவலம் செய்வதற்கு ஒரு உதாரணம்
நடிகர் விஜய்யைக் கேவலப்படுத்தும் Google நிறுவனம்

மயிர் கூச்செறியும் சாதனை
மலையில் இருந்து குதித்து பிரித்தானிய வீரர் உலக சாதனை (படங்கள் இணைப்பு)

M.R said... Best Blogger Tips

என்ன சொல்றது ...ம்ம்ம்....சரி வரேன் நண்பரே ,

ஒட்டு போட்டாச்சு .

மாய உலகம் said... Best Blogger Tips

உள்குத்து கும்மாங்குத்தா இருக்கும்போலருக்கே.... ஒரு சின்ன க்ளு குடுக்கப்படாதா...அவ்வ்வ்வ்வ்வ்வ்

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

மொக்கைப் பதிவும் சூப்பராயிருக்கு போங்க...

நிரூபன் said... Best Blogger Tips

நீங்க சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இது ஒரு உள்குத்துப் பதிவு தான்..
அவ்.......

பெயர் செலக்சன் சூப்பர் பாஸ்,
ரசித்தேன்..
பதிவுகளின் தலைப்பும் மொக்கை தான்.
ரசித்தேன்.

Anonymous said... Best Blogger Tips

ஒரு தடவை மொக்கை போட்ட நானா?

ezhilan said... Best Blogger Tips

மொக்கைப் பதிவர் மீண்டும ஒரு ரூபாயை உண்டியலில் போட்டூ உங்கள்பதிவுகள் அனைத்தையும் மொக்கையாக்கிவிடுவார்.ஜாக்கிரதை. இந்த் மாதிரி உள்குத்து இல்லாமல் நல்ல முறையில் பதிவுகள் போடலாமே.எப்படியோ உங்கள் மொக்கை அருமை.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1