CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!இவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... அரட்டை

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
தனபாலு: எங்க போனான் இந்த கோபாலு.... கொஞ்ச நாளா கடை பக்கம் காணலியே.... எங்கிட்டாவது எவளையாவது இழுத்துக்கிட்டு ஓடிட்டானா? என் கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டானே...
(கோபாலு வருகிறான்)

கோபாலு: அண்ணே... அண்ணே... என்னண்ணே எப்பிடி இருக்கீங்க? ஏண்ணே டல்லா இருக்குற? தீபாவளி சமயத்துல இப்பிடி நீ டல்லா இருந்தா கடை யாவாரம் கொறஞ்சு போயிருமே...?

தனபாலு: வாடா... உலக நியாயம் பேசுறவனே.... உன்னத் தாண்டா தேடிட்டு இருக்கேன்... சொல்லாம கொள்ளாம இம்புட்டு நாளா எங்கடா போன?

கோபாலு: அண்ணே, மாமா வீட்டுக்கு போயிருந்தேன். வேலை வாங்கி தரேன்னு சொல்லி இருந்தார். அதான் போனேன். ஆனா பிரயோசனமே இல்லை. 

தனபாலு: என்னடா சொல்ற... வேலைக்கு போனியா? என்ன வேலை பார்த்த? சொல்லுடா...

கோபாலு: நீ வேற கடுப்ப கிளப்பாத... வேலையும் பாக்கல... ஒரு மண்ணாங்கட்டியும் பாக்கல.... அந்தாளு வேலை வாங்கித் தறேன்னு அவர் கூட எடுப்பா வச்சுகிட்டார்.

தனபாலு: ஹா...ஹா... ஏண்டா, சலிச்சுக்கற... அவருக்கு பொண்ணு இருக்குன்னு சொல்லி இருக்கியே, அத ரூட் விட வேண்டியது தானே...

கோபாலு: ஹி..ஹி.. அது ஒரு அரலூசு... எவன பார்த்தாலும் பல்ல காட்டும். அவள சின்ன வயசுல இருந்தே எனக்கு பிடிக்காதண்ணே... சரி பேச்ச விடு. எதுக்காக டல்லா இருந்த?

தனபாலு: அதுவாடா... தீபாவளி சமயமா இருக்கு. நீ கடையில கொஞ்சம் உதவியா இருப்பே... அதான் உன்னைக் காணாம்னு கவலையில இருந்தேன். வா.. வந்து யாவாரத்த பாரு... 

கோபாலு: வரேண்ணே ... அந்தாளுக்கிட்ட எடுப்பா இருக்கறதுக்கு பதிலா உன்கிட்ட எடுப்பா இருக்கலாம். ஒன்னும் தப்பில்ல. 

தனபாலு: டேய் ரொம்ப பேசாத.... வேலையை பாரு...

கோபாலு: அண்ணே ஊர்ல எலக்சன் எப்பிடி போகுது? யாரு ஜெயிக்கற மாதிரி தெரியுது? 

தனபாலு: எங்கடா... ஒரு கட்சிக்காரனும் காசை கண்ணுல காட்ட மாட்டிங்கறான். அதனால யாரு வருவாங்கன்னு யூகிக்க முடியல.

கோபாலு: நீங்க காசு கெடக்கலைன்னு கவலைப்படுறிங்க. விருதுநகர் காரியாபட்டியில கொடுத்த பணத்தை எடுத்திட்டு கம்பளைன்ட் பண்றாங்க. என்ன உலகம் இது. நீங்க பணம் கிடைக்கலைன்னு வருத்தப்படறிங்க. அங்க பணம் கொடுத்தாங்கன்னு வருத்தப்படறாங்க.

தனபாலு: யாரு ஜெயிச்சு வந்தாலும் நம்மளுக்கு பிரயோசனம் இல்லை. கொடுக்கிற பணமாவது நம்மளுக்கு மிஞ்சுமே. 

கோபாலு: கேப்டன் தரப்பு எப்பிடி இருக்கு? தேறுமா? தேறாதா?

தனபாலு: எப்பிடியும் கொஞ்சம் சீட்கள் வரும்னு நினைக்கிறேண்டா... ஏன்னா, கேப்டன் ஒவ்வொரு ஊரிலும் நடத்தற பிரச்சாரத்தில் மக்கள் கிட்ட ரொம்பவே கெஞ்சறாரு. எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க... கொடுங்கன்னு... அதனால கொஞ்சம் தேறும்ன்னு நினைக்கிறேன்.

கோபாலு: எப்பிடி தான் ஜெயிச்சு வந்தாலும் அம்மாவுக்கு எதிரா வாயை தொறக்க மாட்டாருன்னு தான் நினைக்கிறேன். ரொம்பவே அடக்கி வாசிக்கறாரு. அப்படியே தொறந்தாலும் எபெக்ட் ஒன்னும் இல்லை.

தனபாலு: பாவம்டா அவரு. கட்சியை வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி நடத்துறாரு போல... 

கோபாலு: ஓ.... அதான் வாயை தொறக்க மாட்டிங்கறாரா? சரி விடுடா, அவரே பேசல, நாம ஏன் அவர பத்தி பேசிட்டு...

தனபாலு: டேய், ஜாக்கி சான் தெரியுமா? அவரோட நூறாவது படமான "1911" ஐ நம்ம தமிழ்நாடு முழுசும் ஒரே நாள்ல ரிலீஸ் பண்ண போறாங்கடா.

கோபாலு: அய்!.... எப்பண்ணே ரிலீஸ் பண்ண போறாங்க? கண்டிப்பா மொத ஷோ பாக்க போகணும்.

தனபாலு: அடுத்த வியாழக்கிழமை ரிலீஸ் பண்றாங்க. கடை வேலையை பாரு...அப்புறமா படத்துக்கு போலாம். சரியாடா?

கோபாலு: சரிண்ணே.... கடையில் இருக்கிறேன். உங்களுக்காக படத்தை அப்புறம் பிரீயா இருக்கறப்போ பாக்கறேன். சரியா? 

தனபாலு: நடிகை திரிஷாக்கு கையில படமே இல்லை. ஆனா அம்மிணி இன்னமும் நடிகர்களை புகழ்ந்து தள்ளுது.

கோபாலு: என்னண்ணே, யார யார புகழுது?

தனபாலு: அஜித் ஸ்ட்ரைட் பார்வர்டாம். விஜய் ஸ்டைலானவராம். விக்ரம் திறமையான நடிகராம். இப்படி சொல்லுது திரிஷா.

கோபாலு: ரொம்ப சரியாக தானே சொல்லி இருக்காங்க. தப்பில்லைண்ணே..

தனபாலு: அஜித்தின் அடுத்த படமான பில்லா-2 க்கு யாரு ஹீரோயின் தெரியுமாடா?

கோபாலு: தெரியல. என்ன பெரிய ஒலக அழகியா நடிக்கப் போகுது? யாருன்னு சொல்லுங்க. 

தனபாலு: சொன்னாலும் சொல்லலைன்னாலும் அழகி தான் அவங்க. 2008 மிஸ் இந்தியா பட்டம் வாங்கிய பார்வதி ஓமன குட்டன் தான் ஹீரோயின்.

கோபாலு: அண்ணே, அந்த பொண்ணு நல்ல அழகு தான்... தமிழ் படத்துல நடிக்க வந்துட்டாலே நல்ல எதிர்காலம் இருக்கு. 

தனபாலு: ஆமாடா, எப்பவுமே கேரள பொண்ணுகளுக்கு தமிழக சினிமாக்கள் நல்லா கை தூக்கி விட்டிருக்கு. இந்த பொண்ணுக்கும் அந்த ராசி இருக்கான்னு பார்ப்போம். சரி, சரி அரட்டை அடிச்சது போதும்... யாவாரத்த கவனி.

கோபாலு: அதானே, அண்ணன் என்னதான் பேசினாலும் காரியத்தில் கண்ணா இருக்கிறாரே...

டிஸ்கி: மேலே படங்களில் இருப்பது அழகி பார்வதி ஓமன குட்டன்


35 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1