நண்பர்களே,
இந்த வருடம் ஒவ்வொரு மாதமும் நான் எழுதிய பதிவுகளில் அதிகம் விமர்சித்த,கருத்துரைகள் வாங்கிய பதிவை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்.
இந்த வருடம் ஒவ்வொரு மாதமும் நான் எழுதிய பதிவுகளில் அதிகம் விமர்சித்த,கருத்துரைகள் வாங்கிய பதிவை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்.
டிசம்பர்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...அனைவருக்கும் வணக்கம்,
வலைபதிவர்கள், முகநூல், டிவிட்டர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி மகிழ கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நேற்று மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். சந்திப்பு பற்றிய நினைவுகளை இனி சில இடுகைகள் மூலம் உங்களிடம் பகிர்கிறேன்.
**********************************************************************
நவம்பர்: 63 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு
தமிழ் பேரன்ட்ஸ் வலை நண்பர் சம்பத்குமார் அவர்கள் எனக்குள் நான் என்ற தொடர்பதிவில் என்னையும் தொடர்பதிவிட மிரட்டல் விடுத்திருந்தார். அவர் மிரட்டலை தட்ட முடியாமல் ஏதோ எழுதி இருக்கேன். கண்டிப்பா படிச்சிருங்க.
**********************************************************************
அக்டோபர்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!
மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.
**********************************************************************
செப்டம்பர்: 65 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
மங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு
மங்காத்தா படத்தில் நடித்த அனுபவம் மற்றும் வாய்ப்பு பற்றி அஞ்சலி பேட்டி வீடியோ பாருங்கள்.
**********************************************************************
ஆகஸ்ட்: 81கருத்துரைகள் வாங்கிய பதிவு:
பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...
அடர்கூந்தலிலும், தோளிலும் தவழும்
மல்லிகையின் மனமும்....
சட்டென திரும்பி பார்க்கும்
தாவணி உடுப்பும்....
**********************************************************************
ஜூலை: 124 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
அட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)
இன்றைய பேட்டியில் நாம் பேச இருப்பது வலையுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு சி. பி. செந்தில் குமார் அவர்களை தான். அவர் எழுதும் வலைப்பூ அட்ரா சக்க. அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் சொல்லனுமா? உங்களுக்கு தெரியாததா அவரை பற்றி....ஹி..ஹி... அவர் வலைப்பூ படிச்சிங்கன்னா தெரிஞ்சுக்கலாம்.
**********************************************************************
ஜூன்: 42 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
லேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்றிய மனோ...
"எலேய் சி.பி எப்படிடா இருக்க... நாளைக்கு பக்ரைன்ல பிளைட் ஏறுறேன். பிளைட் சென்னைக்கு வருது... என்னை பிக்கப் பண்ணிகிறையா... நாளை சாய்ந்தரமா அஞ்சு மணிக்கு சென்னை வந்திருவேண்டா மாப்ளே..."
"டேய் மனோ மாமு.... நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு... வர முடியாதடா..." நீ ரெண்டு நாளுக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா..."
**********************************************************************
மே: 70 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!
நாஞ்சில் மனோ:
இவர் தான் ப்ளாக் - இல் பதிவெழுதுவதில் காட்டும் அக்கறையை விட மற்ற ப்ளாக் - இல் மொத ஆளா கமென்ட் போடுவதில் தான் காட்டுவார். எப்படின்னா? வடை, போண்டா, வெட்டு, குத்து, ரத்தம் இந்த ரேஞ்சில் தான் கமென்ட் போடுவார். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா இவரோட ஊசி போன வடை, பஜ்ஜில இருந்து நாம தப்பிச்சிருலாம். பாவம் மனோ, ஒத்த ஆளா ரூம்ல உட்கார்ந்து ஊசி போன வடை, பஜ்ஜிய சாப்பிட்டு இருப்பார். ஹி...ஹி...ஹி...
**********************************************************************
ஏப்ரல்: 59 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!
உணவுகள் தயாரிப்பில் உயர்ந்த தொழில்நுட்பம், நவீன வசதிகள் எவ்வளவு தான் வந்தாலும் நம்ம மக்கள் விலை குறைந்த உணவு பொருட்களையே நாடி செல்கிறார்கள். விலை குறைந்த உணவுகளை உட்கொள்வதால் பலவித நோய்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவோ மிக அதிகம்.
**********************************************************************
மார்ச்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)
வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் பிரகாஷின் அன்பான வணக்கங்கள். ஒரு வழியா 150 இடுகைகள் வரை போட்டாச்சு. இவையெல்லாம் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவால் மட்டுமே சாத்தியமாயிற்று. ஒவ்வொரு இடுகைக்கும் நேர் / எதிர் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.
**********************************************************************
பிப்ரவரி: 26 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
**********************************************************************
ஜனவரி: 21 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்
சர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.
**********************************************************************
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்