CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நமது PRESENTATION (விளக்க உரை) எப்படி இருக்க வேண்டும்?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
நண்பர்களே,

           நாம் படிக்கும் இடத்திலோ, வேலை பார்க்கும் இடத்திலோ நமது கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சி குறிப்புகளை மற்றவர்களுக்கு  ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது சில விதிமுறைகளை கடைபிடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதாவது நமது ப்ரசெண்டேஷன் மற்றவர்களுக்கு சலிப்பை உண்டாக்காதவாறு இருக்க வேண்டும். நாம் சொல்ல வந்த விஷயமும் பார்வையாளருக்கு தெளிவாக புரிய வேண்டும். 


இனி விதிமுறைகளை பார்ப்போமா?
1. வாழ்த்துகளோடு ஆரம்பியுங்கள்.
        வாழ்த்துக்கள் ரொம்ப முக்கியம். அந்த நிகழ்ச்சியை பற்றியோ, வந்திருக்கும் விருந்தினர்களை பற்றியோ வாழ்த்துக்கள் இருக்கலாம்.

2. உங்களை மற்றும் குழு உறுப்பினர்களை முதலில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
       நாம் யார் என முதலில் தெரிவிக்க வேண்டும். நமது குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதி பற்றிய சிறு குறிப்பை பகிரலாம். இதனால் நமது குழு பற்றி அனைவரும் அறிய ஒரு வாய்ப்பாக அமையும்.

3. முகவுரை, பொருளுரை, முடிவுரை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்.
     இது மிகவும் முக்கியம். இதன்படி நமது உரை அமைந்தால் நமது பிரசன்டேஷன் இனிய பகிர்வாக இருக்கும்.

4. கொடுக்கப்பட்ட நேரத்தில் உரையை முடித்தல் வேண்டும்.
       நேரம் ரொம்ப முக்கியம். பார்வையாளருக்கு சலிப்பை ஏற்ப்படுத்தாதவாறு இருக்க வேண்டும். தேவையான செய்திகளை மட்டும் பகிர்ந்து மற்றவர்களின் நேரத்தையும் வீணாக்க கூடாது.

5. படங்கள், செய்தி விளக்கங்கள், வரைபடங்கள் போன்றவை ஆர்வத்தைத் தூண்டும்.
      நமது கட்டுரை சம்பந்தமாக உள்ள விஷயங்கள் பார்வையாளர்களை கவர இந்த வழிமுறைகளை கையாளலாம். இதனால் நமது விளக்கங்களும் எளிமையாக இருக்கும். 

6. சீரான வேகத்தில் உரை அமைய வேண்டும்.
       ஓரிடத்தில வேகமாகவும், அப்புறம் வேகம் குறைந்தும் நமது பேச்சு இருக்க கூடாது. மேலும் நமது ஒலி அளவும் சீராக இருக்க வேண்டும்.

7. நீங்கள் பேசியது புரிந்ததா என்று பார்வையாளர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம். தவறில்லை.
      கண்டிப்பா இது முக்கியம். நாம பேசிகிட்டே போனாலும் மத்தவங்களுக்கு புரியுதாங்கிறத்தை நாம தெரிஞ்சு வைக்க வேண்டும். மற்றவர்களுக்கு புரியவில்லை எனில் நமது பேச்சு விதத்தை மாற்ற நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

8. கேள்விகளுக்கு சுருக்கமாக பதிளிக்க வேண்டும்.
        நமது உரையை பற்றி மற்றவர்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பு அளிக்கலாம். கேள்விகள் சுருக்கமாகவும், நமது பதில்கள் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். 

9. வாழ்த்தி விடை பெறலாம்.
      என்னதான் நாம் சிறப்பாக உரை நிகழ்த்தினாலும் இறுதியில் சொதப்பி விடுதல் கூடாது. ஏதேனும் தத்துவ வாக்கியங்கள் சொல்லி அனைவரையும் வாழ்த்தி நமது உரை அமைய வேண்டும்.

     நண்பர்களே, எனது தொழிற்சாலையில் சில வருடங்களுக்கு முன் பிரசன்டேஷன் பற்றிய ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது குறிப்பெடுத்த விஷயம் தான் இது. தற்செயலாக எனது புத்தகங்களை தேடிய பொழுது இந்த குறிப்பு கிடைத்தது. 
images from google



27 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1