CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 3

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

நம்ம நண்பர்கள் எல்லோரும் இருக்காங்களான்னு நம்பர் சொல்ல சொன்னப்போ நக்கீரனை காணவில்லை. அவர் எங்கே போனார்????????
எல்லோரும் போட்டோவுக்கு போஸ் தர சிபி மொபைலுக்கு போஸ் தாரார் போல!

ஹி... ஹி...அந்த மண்டபம் புல்லா தேடி ஒரு வழியா பாத்ரூமில் அவர கண்டுபிடிச்சோம். மறுபடியும் எல்லோரும் இருக்குற இடத்துக்கு வந்தா பாதி பேர காணல. எல்லா பயபுள்ளைகளும் அர்ஜென்ட்டா போயிட்டாங்க. அப்புறம் ஒரு வழியா எல்லோரும் அசெம்பிள் ஆயிட்டு மஹாலை விட்டு வெளியே வந்தா ஒரு கார் நின்னுட்டு இருந்துச்சு. உடனே மனோ வேகமா பேனட்ல ஏறி உட்கார்ந்தார். மனோ கார்ன்னு நெனச்சு சிபியும் ஏற முயற்சிக்க, யோவ், ஒரு போட்டோ எடுக்க காருக்கு வந்தா நீயும் பின்னாடியே வர்றீயே, என மனோ கலாய்க்க, சிபி நானும் போட்டோவுக்கு தான்யா வந்தேன் என சொல்ல,அவருடன் நாங்களும் இணைந்து கொள்ள  காருடன் கிளிக் செய்யப்பட்டது.  
கூலிங்கிளாஸ் போட மறந்த சிபி
மெட்ராஸ்பவன் சிவா ஐயாயிரம் தருவதாக சொன்னது மனோ மொபைலுக்கு தான்
 மனோ தனது பேஸ்புக் ஆயுதத்தால் எங்களை சுட்டார். (அதாங்க மொபைல்ல போட்டோ). கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு மண்டபத்திற்கு போனோம். கொஞ்ச நேரத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது. ஆபிசர் மேக்கப் அளவா போட்டு இளமையாக இருந்தார். ஈவ்னிங் ரிசெப்சனுக்கு வருவதாக அவரிடம் சொல்லி விட்டு அவரவர் ரூமுக்கு வந்தோம். 

சும்மா ஒரு கிரியேட்டிவிட்டி. ஹி..ஹி...
நாங்கள் அவரவருக்கு தேவையான அளவு பானங்களை அடித்துவிட்டு பிரியாணி, சிக்கன் என புல் கட்டு கட்டிவிட்டு தூங்கிப் போனோம். ஈவ்னிங் எல்லோரையும் எழுப்பி மகாலுக்கு கூட்டிட்டு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு.  சிபி காலையில் பவுடரை அப்பியது போல மாலையும் அப்பிக் கொண்டிருக்க, போட்டோ எடுத்திருவோம்னு பயமுறுத்தியவுடன் பவுடரைக் குறைத்தார். 
மதிய உணவாக பிரியாணி
 மகாலில் பிரபுவும், கௌசல்யா அக்காவும் மரக்கன்றுடன் இருந்தார்கள். காலை முதல் அவர்கள் விருந்தினர்களுக்கு பசுமையை பரிசாக தந்து கொண்டிருந்தார்கள். கூடல் பாலா போனில் இருமுறை பேசினார். அவரது ஊருக்கு கடைசி பஸ் டைம் ஆச்சுன்னு கிளம்பிட்டேன் என சொன்னார். 
விஜயன் மற்றும் வெடிவேல் ஐயாவுடன்

யானைக்குட்டி ஞானேந்திரன் குடும்பம் சகிதம் வந்திருந்தார். பதிவுலக நண்பர்களைப் பார்த்ததில் அவருக்கு மிக மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். அனைவரிடமும் கலகலப்பாக பேசினார். ஜோஸ்பின் கதைக்கிறேன் ஜோசப்பின் அவர்களும் குடும்பம் சகிதம் வந்திருந்தார். ஏற்கனவே போன வருஷ நெல்லை சந்திப்பில் நாங்கள் பார்த்திருந்ததால் உடனே அறிமுகம் ஆயிட்டோம். பின்னர் ஒவ்வொருத்தரையும் தனித்தனியே பெயர், பிளாக் பெயர் என கேட்டுக் கொண்டார்.
யானைக்குட்டி ஞானேந்திரனுடன் ராஜா

துபாய் ராஜா என்ற பதிவர் எங்களிடம் அறிமுகம் ஆனார். அனைவரது பதிவுகளையும் வாசித்திருப்பதாக சொன்னார். மனோ, பேஸ்புக் புகழ் விஜயன் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். மனோ மகளிடம் அப்பா மாங்காய் தந்தாரா என கேட்டால் இல்லை என சொன்னார். அட, பேஸ்புக்ல மகளுக்கு உப்பு காரம் போட்டு தந்ததா ஸ்டேடஸ் போட்டிருந்தது சும்மா என மனோ சொல்ல ஒரே ரகளையா இருந்துச்சு. IQ-225 level சாதனை பெண் விசாலினி பெற்றோருடன் வந்திருந்தார்.
IQ-225 level சாதனை பெண் விசாலினி
 மேடையேறி மனமக்களிடம் கிப்ட் அளித்துவிட்டு ஆபீசரிடம் ஒவ்வொருத்தரா விடை பெறவே அந்த மேடை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இன்னிசை கச்சேரியில் மேலோடி மெட்டுகள் முதல் குத்து மெட்டுக்கள் வரை களை காட்டிக்கொண்டிருந்தது. அவர்களையும் கிளிக் செய்தோம். நானும் சுரேஷ்ம் விஜயனிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போ விஜயன் சுரேஷை பார்த்து நீங்க யாருன்னு கேட்க நாங்க சிரிச்ச சிரிப்பில் விஜயன் ஒரு மாதியா ஆனார். நான் வீடு சுரேஷ் என அவர் சொல்ல, அட பேஸ்புக்ல சண்டை போட்டுட்டு இவ்ளோ நேரமா யாருன்னு தெரியாம பேசிட்டு இருந்தேனே என விஜயன் அதிர்ச்சி அடைந்தார். 
டின்னரை ரசித்து சாப்பிடும் நக்கீரர், ராஜா
பின்னர் அனைவரும் டின்னர் சாப்பிட சென்றோம். சிபி மட்டும் தனியாக ஒரு மூலையில் சாப்பிட இடம் பிடிச்சார். எங்களுக்கு முன்னாடி சாப்பிட உட்கார்ந்த அவர் நாங்க சாப்பிட்டு முடிச்சு கால் மணி நேரம் கழிச்சே சாப்பிட்டு முடிச்சார். மனோவும், கருனும் சாப்பிடவில்லை. என்ன மர்மம் என தெரியவில்லை. 
ஆபீசருடன் விடைபெறுகையில்
இன்னிசைக் கச்சேரி முடியும் தருவாயில் விருந்தினர்களை நடனம் ஆட குழுவினர் அழைக்க ஒரு சின்ன பெண் முன் வந்தார். கலாசலா கலசலா  என பாட்டு அதிர ஆட்டம் ஆரம்பமானது. நடுவில் சௌந்தரும் டான்ஸ் ஆடினார். நெல்லையை விட்டுச் செல்லும் நேரம் நெருங்க மறுபடியும் ஆபீசரிடம் விடைபெற்றுக் கொண்டோம். கருனும், சௌந்தரும் கன்னியாகுமரிக்கு பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு நெல்லை ஜங்க்சனுக்கு சென்றோம் நெல்லையின் பாரம்பரியமான அல்வாவை வாங்கிக் கொண்டு...
கச்சேரியில்  நடனம்:
ஒரு நாள் எப்படி போச்சுன்னே தெரியல. ஆபிசரின் அன்பான வரவேற்பு, ருசியான உபசரிப்பு, முகம் பார்க்காமல் நண்பர்களாக இருந்த பதிவர்கள் முகம் பார்த்து கலாய்த்த தருணங்கள் என நெல்லைப் பயணம் வாழ்வில் மறக்க முடியாத பயணமாய் இருந்தது.
 -End-
முந்தைய  பாகங்களுக்கு:
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பாகம் 1
நெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அலப்பறை - பாகம் 2


27 கருத்துரைகள்:

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1