CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!அடல்ட் கார்னர் ஆம்பிளைங்களுக்கு மட்டுமா? கேபிள் சங்கர் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! (cable SANKAR interview)

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் நண்பர்களே,
நமது தமிழ்வாசியில் பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி வரப் போகிறது என பதிவிட்டு இருந்தோம். பதிவர்கள், வாசகர்கள் என நீங்களே கேள்விகளை கேட்குமாறு அறிவித்து இருந்தோம். அதன்படியே சிலர் கேள்விகள் அனுப்பி இருந்தார்கள். அவர்களின் கேள்விகளுடன் நானும் சில கேள்விகளை கேபிள் முன் வைத்துள்ளேன். அவரும் பதிலளித்து உள்ளார். என்ன கேள்விகள், பதிலகள் என பார்ப்போமா?


1. பதிவுலகில் பல லட்சங்களை தாண்டி உங்கள் வலைப்பூ ஹிட்ஸ் வாங்குகிறதே, அதன் ரகசியம் என்ன கேபிள்ஜி? 
தொடர்ந்து எழுதுவதும் மக்களுக்கு பிடித்த மாதிரி எழுதுவதுமாய் இருக்கலாம்.நீங்கள் இந்த பதிலை படித்துக் கொண்டிருக்கும் போது தமிழில் எழுதி 60 லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியிருப்பேன். வாசகர்களுக்கு என் நன்றிகளை இதன் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 
 *******************************
2. தாங்கள் ஒரு படம் டைரக்ட் செய்தால் காமெடி, திரில்லர், ஆக்சன், சென்டிமென்ட் என எந்த சப்ஜெக்ட்டில் டைரக்ட் செய்வீர்கள்? 
டைரக்ட் செய்தால் என்ன செய்யப் போகிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். எனக்கு எழுதுவதற்கு தொடர்ந்து காமெடி படங்கள் வந்து கொண்டிருந்தாலும் ஆக்‌ஷன் திரில்லர் வகை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் எல்லா ஜெனரிலும் சில கதைகள் யோசித்திருக்கிறேன். பட் இ���்போது ஓகே ஆகியிருக்கும் படம் லவ் கம் த்ரில்லர் வகை.. 
 *******************************
3. தற்போதுள்ள பதிவர்களில் யாராவது சினிமாவில் கதை எழுதுமளவுக்கு திறமையுடன் இருக்கிறார்களா? குறிப்பிட்டு சொல்ல முடியுமா?
சினிமாவிற்கு கதை என்று தனியே இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. எந்தக் கதையெல்லாம் சினிமாவாக்க முடியும் என்று தெரிந்து, அறிந்து கொள்ளுவதுதான் திற்மை என்பது என் எண்ணம். நிறைய பதிவர்களுக்கு சினிமாவின் மீது ஆர்வமிருக்கிறது. ஆனால் அதை அடைய பெரும் முயற்சியும், காத்திருப்பும் தேவை. ஒரு ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு திறமை இருக்கிறது. என் கதைகளை அவர்களிடம் விவாதித்து இருக்கிறேன். 
 *******************************
4. சிலரின் ட்விட்டர் ஸ்டேடஸ் தற்போது சைபர் கிரைம் வரை சென்றுள்ளதே, இதனால் டிவிட்டர், முகநூல், வலைப்பூ எழுத்தாளர்களின் எழுத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதா?
நிச்சயம் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெருமபாலான நேரங்களில் விவாதத்தின் போக்கை அடக்க, வசை மொழி உபயோகிப்பது கண்டனத்துக்குரியது. பொது வெளியில் எல்லோரும் தங்கள் பொறுப்பை உண்ர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த கைது சொல்லியிருக்கிறது. ஆனால் இது தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது . இதற்கான சட்டத்தை இணைய வெளியில் உள்ள அனைவரும் தொடர்ந்து எழுதி மாற்றப் பட வேண்டிய அவசியத்தை அரசுக்கு உணர்த்த வேண்டும். 
 *******************************
5. பதிவுலகில் அவ்வப்போது சில சர்ச்சை பதிவுகளால் கடும் வாக்குவாதம், பதிவுச் சண்டை ஏற்படுகிறதே, இத்தகைய போக்கு பற்றி தங்கள் கருத்து என்ன? 
எல்லாமே ஒரு கவனிப்புக்குத்தான் என்று தோன்றுகிறது. சாதாரண கருத்து மோதல்களாக ஆரம்பித்து, பின்னர் தனிநபர் தாக்குதலாய் மாறி, பின்னர் ஜாதி, மத அரசியல் செய்யப்பட்டு அடித்துக் கொள்ளும்காட்சிகள் தற்போது நிறைய நடக்கிறது. எல்��ாவற்றிக்கும் காரணம் இணையத்தில் நான் சூப்பர் ஸ்டார் என்கிற ஈகோ உட்கார்ந்து கொண்டு இவன் என்ன சொல்வது? நான் என்ன கேட்பது போன்ற எண்ணமும் அதற்கு காரணம். கொஞ்சம் உக்காந்து யோசித்தால் இணையத்தை விட்டு வெளியே வந்தால் நம்மை யாருக்கும் தெரியாது என்று புரிந்து கொண்டால் நிச்சயம் சண்டை சச்சரவுகள் வராது, செய்யவும் மாட்டோம். யாராவது இணையத்தில் பிரபலமாய் இருப்பதால் பத்து காசு பிரயோஜன கிடையாது என்று சொன்னால் அதை மட்டும் நம்பாதீர்கள். நிச்சயம் பிரயோஜனம் உண்டு அந்த புகழை எப்படி பயன் படுத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான். 
 *******************************
6. வலைப்பூ பதிவர் சந்திப்பு சில ஊர்களில் நடந்துள்ளதே, இதனால் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடந்துள்ளனவா? பதிவர் சந்திப்புகள் அவசியமா? இது பற்றிய தங்களின் ��ருத்து என்ன? 
நல்ல விஷயம் தான். நிச்சயம் தொடர்ந்து ஏற்படுத்தப்படும் சந்திப்புகள் ஆக்கபூர்வமான செயல்களாய் மாறும். மாறிக் கொண்டுமிருக்கிறது. நம் பதிவர்களுக்காக ஒரு சங்கம் அமைத்திருந்தால் இன்று கோர்ட் கேஸ் என்று வரும் போது ஆளாளுக்கு தனித்தனியாய் பதிவோ, ட்வீட்டோ, பேஸ்புக்கிலோ எழுதிக் கொண்டிருக்காமல் நம் எண்ணத்தை ஒருமித்து காட்ட எதிர்த்திருக்கலாம். 
 *******************************
7. தாங்கள் எழுதிய புத்தகங்களில் மிகவும் சிரத்தையுடன் எழுதிய புத்தகம் எது? எதனால்? 
என்னைப் பொறுத்த வரை எல்லா புத்தகங்களுமுமே சிரத்தையுடன் எழுதியதுதான். சிரத்தையில்லாமல் எழுதினால் இவ்வளவு வரவேற்பு அத்துனை புத்தகங்களுக்கும் கிடைத்திருக்காது. வாசகர்கள் தரமில்லாத ஒன்றை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 
 *******************************
இதுவரை எனது கேள்விகளை கேட்டேன். அடுத்து நமது பதிவர்கள் தங்களிடம் கேட்ட கேள்விகள்.

மின்னல் வரிகள் கணேஷ்: 
1. உங்களுக்கு கோபம் வரவழைக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? 
கோபம் வருமாறு நடந்து கொள்ள வேண்டும் தலைவரே.. 
 *******************************
வீடு சுரேஷ்குமார்: 
1. கேபிள்ஜீ அடல்ட் கார்னர் படிச்சிட்டு உங்க வாசகிகள் யாராவது.....? செமையா திட்டியிருப்பாங்க அதை விடுங்க...பாராட்டியிருக்காங்களா? 
திட்டுறது எல்லாம் கிடையாது. நிறைய பேர் படிச்சிட்டு சந்தோஷப்பட்டிருக்காங்க.. சில பேர் வெளிப்படுத்துவாங்க.. சில பேர் எதுக்கு வம்புன்னு ஏதும் சொல்லாம போவாங்க. செக்ஸ் ஜோக்குங்கிறது ஆம்பளைங்களுக்கு மட்டுமே உரித்த்தானது என்பது ஒர் ஆணாதிக்க எண்ணம். உங்களுக்கு எல்லாம் ஒரு ரகசியம் சொல்றேன் நானெழுதும் நிறைய ஜோக்குகளின் சோர்ஸே என் பெண் நண்பர்கள்தான். 
 *******************************
2. உங்க பழைய பதிவு எதையாவதை திரும்பப் படிச்சிட்டு இவ்வளவு மொக்கையாவா எழுதியிருக்கோம்..!நம்மையும் இந்த உலகம் நம்புதே என சிலாகித்தது உண்டா? 
 ஒரு எழுத்தாளனா எழுதினது எல்லாம் சூப்பர்னோ.. மொக்கைன்னோ என்னைக்கு நினைக்க ஆரம்பிக்கறோமோ அன்னைக்கே அவன் எழுதுறது நின்னுரும்னு யாரோ ஒரு மகான் சொல்லியிருந்ததா படிச்சிருக்கேன். அதனால எழுதினத நான் திரும்ப ���டிக்கிறதேயில்லை. அப்படி நினைக்கிறதுனாலதான் தான் இந்த உலகம் என்னை நம்புதேன்னு சிலாகிச்சிக்கிறது இல்லை. சிலாகிக்கிற உலகம் சில்லு சில்லா ஆக்கும்னு தெரியும்ங்கிறதுனால..:)) 
 *******************************
3. கேபிள்ஜீ நீங்க சைவம் உண்ணும் பாரம்பரியத்தில் வந்தவர்! ஆனாலும் உங்களுக்கு பிடிச்ச நான்வெஜ் எது என்று சப்புக் கொட்டிய படியே செப்ப முடியுமா..?
மறைக்காமல்! நான் வெஜ் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு காரணமே சினிமாதான். ராத்திரியில டிஸ்கஷன் முடிச்சிட்டு ரெண்டு மணிக்கும் மூணு மணிக்கு சாப்பிட போனா கூட வந்தவங்க மட்டும் பரோட்டாவும் சிக்கன் க்ருமாவுமா அடிக்கும் போது நான் மட்டும் வெறும் பரோட்டா பிச்சித் தின்ன கடுப்புல சாப்பிட ஆர்ம்பிச்சேன். இப்ப அவங்களுக்கே சாப்பாட்டுக்கடை எழுதி சொல்ற அளவிற்கு ஆயிட்டேன். இதன் காரணம், பெருமை, அனைத்தும் சினிமாவையே சாரும். நான் எனக்கு பிடிச்ச அயிட்டத்தையெல்லாம் சாப்பாட்டுக்கடை பதிவுகள்ல எழுதறேனே மறைக்காம... 
 *******************************
4. கேபிள் நீங்க ஒரு படத்தின் இயக்குனர் ஆகின்றீர்கள் (தெரியாத்தனமாக..?) படத்தில் பதிவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா...? இல்லை ஹலோ...ஹலோ....சிக்னல் வீக்கா இருக்குன்னு எஸ்கேப் ஆயிருவீங்களா...?
 தெரியாத்தனமாக எல்லாம் இல்லை தெரிந்தே ஆகப் போகிறேன். நிச்சயம் பதிவுலக நண்பர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுப்பேன். என் கதை விவாதங்களில் சில ந்ண்பர்களின் பங்களிப்பை பெற்றிருக்கிறேன். பெறவும் இருக்கிறேன். எஸ்கேப் ஆவேன்னு நீங்க கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னா இப்ப இப்படித்தான் பேசுவீங்கன்னு சொல்வீங்க..? அதனால அந்த டைம்ல கூப்பிடுங்க நான் எஸ்ஸாகுறேனா இல்லையான்னு உங்களுக்கு தெரிஞ்சிரும். வாழ்க்கையில ஒரு சுவாரஸ்யம் வேணாமா?
 *******************************
டிஸ்கி: இவரது பேட்டி வெளிவரும் என முன்பே அறிவித்து சில காரணங்களால் தாமதமாகி இன்று வெளியிடுகிறேன்.
அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்த கேபிள் சங்கருக்கு நன்றிகள் பல....


16 கருத்துரைகள்:

கார்த்திக் சரவணன் said... Best Blogger Tips

சூப்பர்...

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நல்லது நண்பரே... நன்றி...

மகேந்திரன் said... Best Blogger Tips

அழகான கேள்விகளும்
அதற்கேற்ற பதிகளும்...

அம்பாளடியாள் said... Best Blogger Tips

வணக்கம் சகோ கேள்விகளும் அதற்களித்த பதில்களும் மனதைக்
கவர்ந்தது .வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அவர்களுக்கு.மிக்க நன்றி
சகோ உங்கள் பகிர்வுக்கு .

Seeni said... Best Blogger Tips

thodarkiren.....

Unknown said... Best Blogger Tips

கேள்வியும் ஏற்ற பதில்களும் அருமை ! சங்கம் அமைக்கும் முயற்சியை திரு, சங்கர் அவர்களே தொடங்கினால் வெற்றி உறுதி! தங்களுக்கும் நன்றி

Anonymous said... Best Blogger Tips

மிக அருமை
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

பட்டிகாட்டான் Jey said... Best Blogger Tips

மருதை சூப்பர் ஸ்டார் பதிவரின் கேள்விகளும், சென்னை சூப்பர்டூப்பர் ந்ஸ்டாரின் பதில்களும் அருமை.

நான் கேட்டக் கேள்வியக் கானோம், காக்கா தூக்கிட்டு போயிடுசுங்களா..:-)))

// நிச்சயம் பதிவுலக நண்பர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுப்பேன். //

அப்பாடா எனக்கு ஒரு வேஷம் குடுக்கிறேனு சொல்லிருந்தார், அதெல்லாம் கண்டிப்பா கூப்பிட்டு குடுப்பார், நல்ல மனுசன் :-)))

அஞ்சா சிங்கம் said... Best Blogger Tips

////பட் இப்போது ஓகே ஆகியிருக்கும் படம் லவ் கம் த்ரில்லர் வகை.. ///

அது சரி அண்ணே அது எந்த மொழி படம் அதை சொல்லவே இல்லையே ...

அஞ்சா சிங்கம் said... Best Blogger Tips

ஹி ....ஹி ......அப்படியே உங்க படத்தில் தீவிரவாதியை பறந்து பறந்து அடிப்பதற்கு ஆள் வேண்டும் என்றால் .. தயங்காமல் என்னை அணுகலாம் ................

K.s.s.Rajh said... Best Blogger Tips

கலக்கல் பேட்டி வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

சுவாரஸ்யமான பேட்டி! நன்றி!

செங்கோவி said... Best Blogger Tips

கலக்கல் பேட்டி.

Manimaran said... Best Blogger Tips

//உங்களுக்கு எல்லாம் ஒரு ரகசியம் சொல்றேன் நானெழுதும் நிறைய ஜோக்குகளின் சோர்ஸே என் பெண் நண்பர்கள்தான். //

அமைஞ்சா இப்படி அமையனும்...நமக்கு GF வந்து சேர்ந்திருக்கே... :-((

Thava said... Best Blogger Tips

செம்மையான பேட்டி..சூப்பரான கேள்வி பதில்கள்..ரொம்ப நன்றி..

மதுரை சரவணன் said... Best Blogger Tips

பதிவர்களை மறக்காமல் இணைத்துக் கொள்வேன் என்பது தான் கேபிளின் வெற்றி.

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1