CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!விஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் என்னத்த கண்டேன்)

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

ஹாய் பிரண்ட்ஸ்..

ஏமாந்துட்டேன்:
என்னத்த சொல்ல? 
    முந்தா நாள் ஜட்ஜ் நைட் கண் முழிச்சு படத்துக்கு தடையை  விலக்கினார். நாமெல்லாம் சந்தோசப்பட்டு படம் ரிலீஸ் பண்ணிருவங்கனு ஆர்வத்துல இருந்தோம். அதை நம்பி நானும் அடுத்து நம்மூருல என்னென்ன நடக்கும்னு ஒரு பதிவு எழுதியிருந்தேன். பதிவு போட்டுட்டு பேப்பரை மேஞ்சா,  இன்னொரு ஜட்ஜ் நல்லா கண் முழிச்சு விஸ்வரூப படத்துக்கு மறுபடியும் தடை போட்டுட்டாருன்னு போட்டிருந்தாங்க. இதனால நான் போட்ட பதிவு ஒர்த் இல்லாம போயிருச்சுன்னு நினைக்கும் போது ரொம்ப பீலிங்கா இருக்கு. அப்படி இப்படி என நடக்கும்னு நெனச்சது எல்லாத்துக்கும் சேர்த்து ஜட்ஜ் ஐயா தடை போட்டுட்டார். அவரு எப்ப தடையை நீக்கி, நான் பதிவுல சொன்னது எல்லாம் நடக்கும்???? மீ வெயிட்டிங்.....

மதுரை பொருட்காட்சி:
போன மாசம் மதுரையில மூணு வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு கண்காட்சி போட்டிருந்தாங்க. ஒண்ணு தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சியோட கல்விக் கன்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போயிருந்தேன், இந்த வாட்டி அப்படியொண்ணும் சிறப்பா இல்லை. சில காலேஜ் பசங்க செஞ்சிருந்த இஸ்ரோ ராக்கெட் டெமோ ப்ராஜக்ட், மணல் சிற்பம், காய்கறி சிற்பம் என கொஞ்சம் புதுசா பார்த்தேன். ஆனா பொழுது போக்க அப்படியொண்ணும் விரும்பறது மாதிரி இல்லை. 

அடுத்து மூன்றுமாவடி சர்ச் மைதானத்தில் வண்ண மீன் கண்காட்சின்னு போட்டிருந்தாங்க. அங்க போன வாரம் தான் போயிருந்தேன். அன்னைக்கு தான் கடைசி நாள்னு போட்டிருந்தாங்க. ஜஸ்ட் மிச்ச்னு நெனச்சுட்டேன். கிட்டத்தட்ட நூறு மீன் தொட்டியில கலர் கலரா மீன்கள் வரிசையா வச்சிருந்தாங்க. சில மீன்கள் நல்லா சுறுசுறுப்பாவும், சிலது சோம்பேறியாவும் இருந்துச்சு. ஆனா பொழுது போக்குனு பார்த்தா டோட்டல் வேஸ்ட். எந்தப் பொருள் எடுத்தாலும், அப்படின்னு சில கடைகள் இருந்துச்சு. அங்க எல்லா பொருட்களுமே அழுக்கு மண்டி போயிருந்துச்சு. அதையும் சிலர் வாங்கிட்டு தான் இருந்தாங்க. 

இந்த கண்காட்சிகளில் எடுத்த போட்டோஸ் நிறைய இருக்கு. தனியா ஒரு பதிவுல போடறேன்.

அடுத்து ஐயர்பங்களா மைதானத்தில் ஒரு கண்காட்சி போட்டிருந்தாங்க. அங்க போக முடியல. ஏன்னா ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு. இந்த கண்காட்சி பத்தி தனியா பதிவு எழுதியிருக்கலாமோ?????

"மாமதுரை" அப்படின்னா?:

மதுரையில மாமதுரைன்னு சில இடத்துல விளம்பரங்கள் பார்த்தேன். பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்டு பக்கத்துல மீனாட்சியம்மன் கோயிலுக்கு போற சந்திப்பு பக்கத்துல மாநகரா��்சி சொந்தமான ஆபீஸ் இருக்கு. அங்க புதுசா பெயின்ட் அடிச்சு சுத்தம் பண்ணி மாமதுரை, மாமதுரைன்னு பெரிசா விளம்பரம் போட்டிருந்தாங்க. அங்க கண்காட்சி மாதிரி மாத்தியிருக்கறதா கேள்விப்பட்டேன். மதுரை மாவட்டத்தின் பழமையை நினைவுபடுத்தவும், இன்றைய தலைமுறைகளுக்கு விளக்கவும் இந்த மாமதுரை விழா எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். மேலும் விவரங்கள் அறிய இந்த பதிவை வாசிக்கவும்.

பேஸ்புக்கும் விஸ்வரூபமும்:
 விஸ்வரூப பட விவகாரத்தில் பேஸ்புக்கில் விஸ்வரூபமா வளர்ந்து கமலுக்கு ஆதரவா, எதிரா ஸ்டேடஸ், வாக்குவாதம்னு செம பீக்குல நம்ம ஆளுங்க இருக்காங்க. இன்னும் சிலர், நாட்டுல காவிரி, மின்வெட்டு, கூடங்குளம், இலங்கை தமிழர் பிரச்சனைன்னு எத்தனையோ பிரச்சனை இருக்கு, அதுக்கெல்லாம் கிளர்ந்தெழாத பேஸ்புக் நண்பர்கள், கமல் காசு போட்டு எடுத்த படம் பிரச்சனையில இருக்குன்னு இப்படி கொந்தளிக்கறாங்களேன்னு நியாயமும் பேசுறாங்க. ஸ்டேடஸ் போடறது பேஸ்புக்கில் நம்ம உரிமைங்க. அதுக்காக வெட்டு குத்து நடக்கற அளவுக்கு வேணாங்க.

என்னைப்பற்றி:
போன வருஷம் பதிவுலகில் கொஞ்சம் விலகியிருந்தேன். அதுக்கு காரணம் புது வீடு கட்டிட்டு இருந்தேன். இப்போ வீட்டு வேலை ஓரளவு முடிஞ்சி புதுமனை புகு விழாவும் நடத்தியாச்சு. இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு வீட்டு வேலை இருக்கு. ஆனாலும் இப்ப லோன், மற்றும் அலையுற டென்ஷன் இல்லாம கொஞ்சம் டைம் கெடச்சதால சில பதிவுகள் எழுதிட்டு வரேன். அப்புறமா வீடு கட்டுன அனுபவத்தை வச்சு ஒரு பதிவு எழுதற எண்ணமும் இருக்கு. பார்ப்போம்.

பதிவுகள் எழுதாம இருந்த காலத்தில நான் எழுதிட்டு இருந்த CNC Programming தொடர் சில புதியவர்களிடம் சேர்ந்திருக்கு. ஆமா சிலர் அடுத்த பார்ட் எப்போ வரும்? கொஞ்சம் டவுட் இருக்கு. கிளியர் பண்ணுங்கன்னு  மெயில்கள் அனுப்பி இருந்தாங்க. அவங்களுக்காக தொடரை ரீஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன். கொஞ்சம் எக்சாம்பிள் வீடியோ தந்து பதிவு எழுதனும்னு நினைக்கிறதால லேட் ஆகுது. சீக்கிரம் எழுத முயற்சிக்கிறேன்.

டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):


13 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

விஸ்வரூபம் - அட போங்கப்பா...

மாமதுரை விழாவிற்கு வந்திடுவோம்...

செங்கோவி said... Best Blogger Tips

//இந்த கண்காட்சி பத்தி தனியா பதிவு எழுதியிருக்கலாமோ????? //

உண்மை தான்..இந்தப் பகுதி 5 பதிவுக்குச் சமம்.

James said... Best Blogger Tips

"வீடு கட்டுன அனுபவத்தை வச்சு ஒரு பதிவு எழுதற எண்ணமும் இருக்கு. பார்ப்போம்."

Please write, I am waiting

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம்,பிரகாஷ்!நலமா?///'நான் என்னத்தக் கண்டேன்'நல்லாருந்திச்சு!///டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):::::நமக்கெதுக்கு இதெல்லாம்,அந்த டிப்பார்ட்மெண்டுக்கு ஆளுங்க இருக்காங்க!ஹ!ஹ!ஹா!!!!

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips

கடந்த பதினைந்த நாட்களாக
தமிழகத்தில் இல்லை
நம் ஊர் நடப்பு ஏதும் தெரியாமல்
கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது
தங்கள் பதிவு கொஞ்சம் தெம்பளித்தது
தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்

Prem S said... Best Blogger Tips

கமல் மகளின் விஸ்வரூபம் இறுதியில் கண்டேன் நன்று

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன்

மாமதுரை விழாவிற்கு வந்திடுவோம்... ///

வாங்க தனபாலன் சார்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
உண்மை தான்..இந்தப் பகுதி 5 பதிவுக்குச் சமம்.//

அப்போ அஞ்சு பதிவு எழுதியிருக்கலாமோ???

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@DiaryAtoZ.com

"வீடு கட்டுன அனுபவத்தை வச்சு ஒரு பதிவு எழுதற எண்ணமும் இருக்கு. பார்ப்போம்."

Please write, I am waiting ///

கண்டிப்பா....
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Yoga.S.
///'நான் என்னத்தக் கண்டேன்'நல்லாருந்திச்சு!///

நன்றி ஐயா...

ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு):::::நமக்கெதுக்கு இதெல்லாம்,அந்த டிப்பார்ட்மெண்டுக்கு ஆளுங்க இருக்காங்க!ஹ!ஹ!ஹா!!!! ///

ஹா ஹா ஹா, அவங்களும் இருக்கட்டும்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Ramani S

கடந்த பதினைந்த நாட்களாக
தமிழகத்தில் இல்லை
நம் ஊர் நடப்பு ஏதும் தெரியாமல்
கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது
தங்கள் பதிவு கொஞ்சம் தெம்பளித்தது
தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள் ...///

நன்றி வருகைக்கு

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

சுவையான பகிர்வு! நன்றி!

சதீஷ் செல்லதுரை said... Best Blogger Tips

விஸ்வரூப விஷயத்தை விளக்கி விளக்கி கடைசியில் விலக்கி வைத்துவிட்டு பதிவுகளுக்கு திரும்பும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.....
அண்ணனிடம் ஜிகர்தண்டா கேட்டு யாரும் மெயில் அனுப்பியிருக்க மாட்டாங்க என்று நம்புகிறேன்.
வீடு கட்டுற அனுபவத்தை விட வலிகள்தான் அதிகமா இருந்திருக்கும்....##அவதானிப்பு##

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1