CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city news) - பகுதி இரண்டு!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலை நண்பர்களே,

மதுரையும் மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை பற்றிய செய்திகளை பார்த்து வருகிறோம். இனி இந்த பதிவில் என்னென்ன?

கள்ளழகருக்கு வைகை கிடைக்குமா?
கள்ளழகர் இறங்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதுவறண்ட வைகை ஆறு

இந்த வருடம் மே மாதம் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகையில் இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெற உள்ளன. கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா கோடை காலத்தில் இருப்பதாலும், போதிய மழை இல்லாததாலும், சில வருடங்களாக தண்ணீர் லாரி மூலம் ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதில் கள்ளழகர் இறங்கி வருகிறார். போன வருடம் வைகை அணையில் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால் தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு கவனத்தால் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு கள்ளழகர் இறங்கினார். இந்த வருடம் குடிநீருக்கே அணையில் தண்ணீர் பற்றாக்குறையாகி விட்டபடியால் கள்ளழகர் தொட்டி தண்ணீரில் இறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  மீனாட்சி, அழகர் கருணையால் ஏதேனும் மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் பாயும்... பொறுத்திருந்து பாப்போம் மாயாஜாலம் நிகழுமா என....

விஷால் த மால்:
மதுரை அவுட்போஸ்ட் அருகே சின்ன சொக்கிகுளத்தில் விஷால் த மால் உள்ளது. மாலின் வெளியே சிறு குழந்தைகள் விளையாட தண்ணீரில் மிதக்கும் பலூன் விளையாட்டு உள்ளது.


ரிலையன்ஸ் நிறுவன ஷாப்பிங் கடைகள் பெரும்பாலான தளங்களை ஆக்கிரமித்து உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பேஷன் கடைகளே பெரும்பாலும் உள்ளது.


இந்த மாலில் சமீபத்தில் ஐநாக்ஸ் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் தமிழ் படங்களை விட ஆங்கிலம் மற்றும் மற்ற இந்திய மொழிப் படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகிறது. மாலின் வெளிப்புறத்தில் இருபுறமும் இரும்பாலான படிக்கட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் தியேட்டர்கள் இருப்பதால் அவசர வழிக்காக இந்த படிக்கட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

கடந்த மாதம் குடியரசு நாளன்று தென்திசை அமைப்பினர் நடத்திய சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சியில், குழந்தைகள் இந்திய தலைவர்கள் போல வேடமிட்டிருந்தார்கள். நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க சற்று நேரமாகும் என அறிந்ததால் குழந்தைகளை மட்டும் புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியதாயிற்று. (இது சற்று தாமத பதிவு)


ட்ராபிக் சிக்னல் உங்களுக்கு புரியுமா?
மதுரையில் பெரும்பாலான சாலை சந்திப்புகள் சிக்னல் இருந்தாலும் நடைமுறையில் குழப்பமான சிக்னலாக/சந்திப்பாக உள்ளது. உதாரணம் என சொன்னால் மதுரையில் உள்ள முக்கால்வாசி சிக்னல்களை பட்டியலிடலாம். என் பார்வையில் முதல் இடத்தில் உள்ளது யானைக்கல் அருகே உள்ள சிக்னல் ஆகும். இந்த இடத்தில் சிம்மக்கலில் இருந்து கோரிப்பாளையம் செல்ல இடது புறம் திரும்ப வேண்டும். இது பிரச்னை இல்லை. ஆனால், வலது புறம் திரும்பி அடுத்து இணையாக உள்ள வக்கீல் புது  சாலைக்கும், கீழ மாசி வீதிக்கு செல்லலாம். அதே போல கோரிப்பாளையத்தில் இருந்து மேம்பாலம் ஏறி அண்ணா சிலைக்கு அருகில் வலது புறம் திரும்பி மீண்டும் இடது திரும்பினால் வக்கீல் புது  சாலைக்கும், கீழ மாசி வீதிக்கு செல்லலாம். அதே போல அங்கிருந்து வலது புறம் திரும்பினால் யானைக்கல் அருகே மீண்டும் MM லாட்ஜ், கோரிப்பாளையம் மேம்பாலம் ஏறலாம். 


மேற்சொன்ன எல்லா திருபங்களுக்கும் சிக்னல் என்பதே இல்லை. இங்கே பகிர்ந்துள்ள மேப்பில் பாருங்கள். X குறியீடு வடிவில் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகன ஓட்டுனர்கள் அவர்களாக தங்கள் திறமையை முதலீடு செய்து தேவையான சாலைக்கு செல்ல வேண்டும். இந்த இடத்தில் காலை மாலை அலுவலக நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். வேறு வழியே இல்லை. 

இதே போல மதுரையில் பல இடங்களில் X வடிவ குறுக்கு சாலை சிக்னல் உள்ளது. இவைகளுக்கு சிக்னல் விளக்கு செயல்படாது. வாகன ஓட்டிகள் இந்த சிக்னலை கடக்க பெரும் சிரமமாக உள்ளது. இவ்வாறான சிக்னலை முறைப்படுத்தி விபத்துக்கள் நடக்காத வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும். 14 கருத்துரைகள்:

ராஜி said... Best Blogger Tips

கள்ளழகருக்கு எப்படியும் தண்ணி லாரிகளிலாவது தண்ணி வந்துடும்.நம்மைப் போன்ற சாமனியர்களுக்கு!?

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

மாயாஜாலம் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை... இங்கு இப்போதே தண்ணீர் திண்டாட்டம் ஆரம்பித்து விட்டது...!

வரவர மதுரை ட்ராபிக் (+சிக்னல்) சிரமம் தான்...

Yarlpavanan said... Best Blogger Tips

தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

Seeni said... Best Blogger Tips

மதுரையை சுற்றி காட்டுறீங்க....

aavee said... Best Blogger Tips

என் மதுரை நாட்களை நினைவு படுத்தியது..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை ? மொத்த மணலும் கேரளாவுக்கு போயிட்டு இருக்கு !

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said... Best Blogger Tips

பல இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்லியவிதம் அருமை சகோ..
சிக்னல் இருந்தாலும் மக்கள் மதிப்பதில்லை..இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை..
இதையொட்டிய என் பதிவு,.
http://thaenmaduratamil.blogspot.com/2013/01/blog-post_23.html

Unknown said... Best Blogger Tips

எனக்கும் இந்த சிக்னல் குழப்பம் இருந்தது ,சரியாக சுட்டிக் காட்டி விட்டீர்கள்!
த ம 5

அம்பாளடியாள் said... Best Blogger Tips

இப்படியும் சில போக்குவரத்துச் சாலைகளா ?!!..திறமையற்ற வாகன சாரதிகளால்
பின் விபத்து உண்டாகமால் இருக்க வழி ஏது ???! இந்தியாவுக்கு ஒரு முறை நான்
வந்திருந்த போது பெரும் அவஸ்த்தைப் பட்டேன் வீதிகளைக் கடப்பதற்கு அதை
இப்போதும் மறக்க இயலாது .ஒவ்வொரு இடமாக சென்று அங்கு உள்ள குறை
நிறைகளைச் சுட்டிக் காட்டும் தங்களின் சமூக சேவை மனப்பான்மையைப் பெரிதும்
போற்றுகின்றேன் சகோதரா .வாழ்த்துக்கள் தங்கள் பயணம் தொடரட்டும் .

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips

இந்த வருடம் தண்ணிர்ப்பஞ்சம் அதிகமிருக்கும் போலத்தான் தெரிகிறது.

அழகருக்கு லாரித் தண்ணீருதான்...

Unknown said... Best Blogger Tips

மதுரை ,பற்றிய சில குறிப்புகள்! பயன் மிகுந்த பதிவு!

வெங்கட் நாகராஜ் said... Best Blogger Tips

மதுரைக் குறிப்புகள் நன்று.....

வறண்டு போயிருக்கும் வைகை.....

கண்களில் கண்ணீர்!

Rathnavel Natarajan said... Best Blogger Tips

மதுரையைப் பற்றி பயனுள்ள பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் பிரகாஷ்.

Ranjani Narayanan said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்.
இந்த ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]

அன்புடன்,
ரஞ்சனி

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1