இன்றைய இணைய உலகில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கானக்கான வீடியோ படங்கள் இணையத்தில் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. அறிய திரைப்படங்கள் முதல் வேடிக்கையான நிகழ்ச்சிகள் என YOUTUBE-இல் இல்லாத வீடியோ படங்களே இல்லை என சொல்லலாம். YOUTUBE-இல் உள்ள வீடியோ படங்களை இணையத்திலேயே பார்க்கும் போது ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.
திரும்பவும் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது அந்த வீடியோ படத்தை டவுன்லோட் செய்து வைக்க வேண்டியது வரும். அவ்வாறு டவுன்லோட் செய்யாமல் இணைய வழியாக பார்க்கும் போது, அதாவது எத்தனை முறை பார்த்தாலும் நமது இணைய இணைப்பின் கொள்ளளவு தேவையில்லாமல் வீணாகும். இதனால் விரைவிலேயே தீர்ந்து போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை ஒருமுறை பார்த்தாலும், அல்லது டவுன்லோட் செய்தாலும் ஒரே அளவு இணைய அளவே செலவாகும். ஆகையால் YOUTUBE வீடியோ படங்களை டவுன்லோட் செய்ய பல வழிகள் (YOUTUBE DOWNLOADERS) உள்ளது. அவற்றில் சிறந்த பத்து மென்பொருட்களை இந்த பதிவில் பார்ப்போம்.