CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்கள்.

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
வணக்கம் வலைப்பதிவர்களே....

வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமம் வலைப்பதிவர்களுக்கென கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்....!! வெல்லுங்கள்.....!!!

 ********************************************
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 8000

இரண்டாம் பரிசு ரூ 5000

மூன்றாம் பரிசு ரூ 2500

சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு 

********************************************

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்.. 

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.

7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில்  மட்டுமே அனுப்பவும். 

********************************************

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்


உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு [email protected] என்கின்ற முகவரிக்கு 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும்.

· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது

· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது.

·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் ம��்டுமே வெளியிடப்படும்

********************************************
நடுவர்கள்:
முதல் சுற்று: 

செங்கோவி

பால கணேஷ்

குடந்தை RV சரவணன்

சதீஷ் செல்லத்துரை 
ரஹீம் கஸாலி

வீடு சுரேஷ்குமார்

AG சிவகுமார் (மெட்ராஸ்பவன்)

(ஆனந்த விஜயராகவன்) கோவை ஆவி

தமிழ்வாசி பிரகாஷ்

அரசன்


இரண்டாம் சுற்று: 

பிச்சைக்காரன்

ராஜ ராஜேந்திரன் 
கார்த்திக் புகழேந்தி

இறுதிச் சுற்று: 

வா.மு. கோமு

செல்லமுத்து குப்புசாமி
********************************************
ஏதேனும் சந்தேகங்களெனில் [email protected] என்ற முகவரிக்கு மடல் வரைக.


6 கருத்துரைகள்:

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1