ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவில் திரையிட இருப்பதை அடுத்து, இன்று (பிப்ரவரி 14) அப்படத்தின் ட்ரைலர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டு உள்ளார்.
புதுமுகங்கள் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும், கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
முதல் பாகத்தைப் போலவே இப்படமும் பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றில் ஒரு வெற்றியுடன் தோல்வியை தழுவியது, அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறு போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நான்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.