CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label CNC. Show all posts
Showing posts with label CNC. Show all posts


மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING IN TAMIL & OPERATIONS) - PART-13


முந்தைய பாகங்களுக்கு...

வணக்கம் வலை நண்பர்களே...

டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும்.  நன்றி  

cnc programming-இல் இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது Arc radius Interpolation-க்கு எப்படி program எழுதுவது என்றும், எளிதாக புரிந்து கொள்ள simulation video மூலமும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING IN TAMIL & OPERATIONS) - PART-13"



CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!


வணக்கம் வலை நண்பர்களே...

நான் எழுதிய CNC PROGRAMMING & OPERATIONS தொடரை பார்த்து வருகிற மாணவர்கள் புத்தகம் கிடைக்குமா என அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓர் நற்செய்தி. ஆம். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்ட புத்தகம் உள்ளது. தேவைப்படும் நபர்கள் thaiprakash1@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். வெளியூரில் இருப்பவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

மேலும் வாசிக்க... "CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!"



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-12

முந்தைய பாகங்களுக்கு...

வணக்கம் வலை நண்பர்களே,

டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும்.  நன்றி  

இந்தப் பதிவின் இறுதியில் விளக்க வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும். அதில் கீழ்க்கண்ட படத்திற்கான program எளிதாக புரியும்படி simulator மூலம் விளக்கப்பட்டுள்ளது. 


மேற்கண்ட படத்திற்கு absolute method-இல் ப்ரோக்ராம் எவ்வாறு எழுதுவது என பார்ப்போமா?

முதலில் கீழ்க்கண்ட வரிகளை ஒருமுறை படித்துப் பார்த்து அந்த வரிகளை மனதில் எப்போதுமே இருத்திக் கொள்ளுங்கள்.

1. G00 G90 G17 G21 G40 G80 G49; 
ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது இந்த CODES முதல் வரியாக கொடுத்தால் நல்லது.
மேற்கண்ட CODES மிக முக்கியமானது. ஏனெனில் ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது சில தேவையில்லாத CODES செயல்பாட்டில் இருக்கக்கூடாது. அதனால் இந்த G17- XY PLANE, G90- ABSOLUTE METHOD, G21- METRIC INPUT, G40- CUTTER RADIUS COMPENSATION CANCEL, G80 CANNED CYCLE CANCEL, G49- TOOL LENGTH OFFSET CANCEL ஆகிய இந்த CODESகளை தவறாமல் கொடுக்க வேண்டும்.

2. G91 G28 Z0. என்ற வரியை இரண்டாவதாக கொடுக்க வேண்டும்.

இந்த வரியில் G28- AUTOMATIC ZERO RETURN கொடுக்கப்பட்டு Z AXISஐ HOME POSITIONக்கு கொண்டு செல்ல வேண்டும்.

3. M06 T1; முதல் TOOL ஐ CALL செய்ய வேண்டும். முதல் TOOL ஆக நாம் செட் செய்து வைத்திருப்பதை T1 இல் CLAMP செய்து வைத்திருக்க வேண்டும்.


4. G0 G90 G54 X Y; இந்த வரியில் X,Y முதல் புள்ளியை கொடுக்க வேண்டும்.


5. M03 S3000; அடுத்து இந்த வரியை கொடுக்க வேண்டும். தேவையான SPINDLE SPEED மற்றும் SPINDLE ROTATION DIRECTION கொடுக்க வேண்டும்.


6. G43 Z100. H1; என்று கொடுக்க வேண்டும்.


7. G00 Z5. M08; என்று கொடுக்க வேண்டும். இங்கே COOLANT ON செய்ய வேண்டும் (தேவையெனில்).


8. G01 Z-1. F100; என கொடுக்க வேண்டும். தேவையான FEED RATE தர வேண்டும்.


மேற்கண்ட எட்டு வரிகளில் உள்ளவை PROGRAM-க்கு மேலே வர வேண்டும்.

9. படத்தின் அளவுகளுக்கான புள்ளிகளை கொடுக்க வேண்டும். (PROGRAM POINTS) 

கீழே உள்ள 10 - 14 வரிகள் PROGRAM-க்கு கீழே அடுத்தடுத்து வர வேண்டும்.

10. G01 Z5. M09; என்பது வர வேண்டும். COOLANT OFF செய்ய வேண்டும்.

11. G00 Z100. M5; என்பது வர வேண்டும். SPINDLE STOP செய்ய வேண்டும்.


12. G00 G91 G28 Z0; Z AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


13. G00 G91 G28 Y0; Y AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


14. M30; ஆகியவை வரிசையாக வர வேண்டும்.



PROGRAM எழுதுவதற்கு முன் ORIGIN எங்கே வைக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த படத்தில் நடுவில் ORIGIN உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே நமது PROGRAM அந்த ORIGIN புள்ளியை வைத்தே எழுதுவோம்.

N1 G00 G90 G17 G21 G40 G80 G49;
N2 G91 G28 Z0.;
N3 M06 T1;
N4 G0 G90 G54 X-10. Y-30.;
N5 M03 S1000;
N6 G43 Z100. H1;
N7 G00 Z5. M08;
N8 G01 Z-1. F100.;
N9 G01 X10. Y-30. F200.;
N10 X10. Y-10.;
N11 X30. Y-10.;
N12 X30. Y10.;
N13 X10. Y10.;
N14 X10. Y30.;
N15 X-10. Y30.;
N16 X-10. Y10.;
N17 X-30. Y10.;
N18 X-30. Y-10.;
N19 X-10. Y-10.;
N20 X-10. Y-30.;
N21 G01 Z5. M09;
N22 G00 Z100. M5;
N23 G00 G91 G28 Z0.;
N24 G00 G91 G28 Y0.;
N25 M30;

ABSOLUTE முறையில் PROGRAM எழுதிவிட்டோம். இதற்கான SIMULATION-ஐ ஒரு வீடியோ மூலம் பார்கலாமா?





அடுத்த பதிவில் incremental method-இல் program அமைப்பது பற்றி பார்ப்போம்.
மேலும் வாசிக்க... " மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) - PART-12"



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) - refresh post

வணக்கம் வலை நண்பர்களே,
டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும்.  நன்றி    

நமது தமிழ்வாசியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மெக்கானிகல் மாணவர்களுக்காக, மெக்கானிக்கல் பிரிவில் ஒரு பகுதியான CNC பற்றி தொடர் எழுதி வந்தேன். பல காரணங்களால் அந்த தொடரை தொடர இயலாமல் போனது. இனி அந்த தொடரை தொடரலாம் என முடிவெடுத்துள்ளேன்.  அதன் தொடர்ச்சியாக இதுவரை வெளிவந்த தொடர்கள் ஒரு பார்வையாய் இங்கே தொகுத்துள்ளேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) - refresh post"



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

முந்தைய பாகங்களுக்கு...


டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி    
    இந்த இடுகையில் CNC PROGRAM பற்றிய ஒரு வீடியோவில் என் குரலில் விளக்கம் சொல்லி இணைத்து உள்ளேன். ஏதேனும் குறை இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.
         நண்பர்களே, சில வாரங்கள் இந்த தொடர் எழுத முடியவில்லை, காரணம் பணிச்சுமை அதிகம். கடந்த பாகங்களில் ABSOUTE, INCREMENTAL METHOD களில் X,Y புள்ளிகளை எப்படி எழுதுவது என பார்த்தோம். இன்று அந்த புள்ளிகளை எப்படி PROGRAM ஆக மாற்றி எழுதுவது என பார்ப்போம். ஏனெனில் முன்னர் நாம் பார்த்தது வெறும் புள்ளிகளை எப்படி எழுதுவது என மட்டுமே பார்த்தோம்.
     PROGRAM எழுத G-CODES, M-CODES, ADDRESS ஆகியவற்றை நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒரு PROGRAMக்கு என்னென்ன தேவை என்பதை முதலில் பார்ப்போம்.
G CODES, M CODES பற்றி இந்த பாகத்தில் பார்க்கவும்.


1. G00 G90 G17 G21 G40 G80 G49; 
ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது இந்த CODES முதல் வரியாக கொடுத்தால் நல்லது.
மேற்கண்ட CODES மிக முக்கியமானது. ஏனெனில் ஒரு PROGRAM ஆரம்பிக்கும் போது சில தேவையில்லாத CODES செயல்பாட்டில் இருக்கக்கூடாது. அதனால் இந்த G17- XY PLANE, G90- ABSOLUTE METHOD, G21- METRIC INPUT, G40- CUTTER RADIUS COMPENSATION CANCEL, G80 CANNED CYCLE CANCEL, G49- TOOL LENGTH OFFSET CANCEL ஆகிய இந்த CODESகளை தவறாமல் கொடுக்க வேண்டும்.


2. G91 G28 Z0. என்ற வரியை இரண்டாவதாக கொடுக்க வேண்டும்.
இந்த வரியில் G28- AUTOMATIC ZERO RETURN கொடுக்கப்பட்டு Z AXISஐ HOME POSITIONக்கு கொண்டு செல்ல வேண்டும்.


3. M06 T1; முதல் TOOL ஐ CALL செய்ய வேண்டும். முதல் TOOL ஆக நாம் செட் செய்து வைத்திருப்பதை T1 இல் CLAMP செய்து வைத்திருக்க வேண்டும்.


4. G0 G90 G54 X Y; இந்த வரியில் X,Y முதல் புள்ளியை கொடுக்க வேண்டும்.


5. M03 S3000; அடுத்து இந்த வரியை கொடுக்க வேண்டும். தேவையான SPINDLE SPEED மற்றும் SPINDLE ROTARION DIRECTION கொடுக்க வேண்டும்.


6. G43 Z100. H1; என்று கொடுக்க வேண்டும்.


7. G00 Z5. M08; என்று கொடுக்க வேண்டும். இங்கே COOLANT ON செய்ய வேண்டும் (தேவையெனில்).


8. G01 Z-1. F100; என கொடுக்க வேண்டும். தேவையான FEED RATE தர வேண்டும்.


9. நாம் முதலில் புள்ளிகள் எவ்வாறு குறிப்பிடுவது என பார்த்தோமே, அந்த வரிகள் இங்கே வர வேண்டும்.


10. G01 Z5. M09; என்பது வர வேண்டும். COOLANT OFF செய்ய வேண்டும்.


11. G00 Z100. M5; என்பது வர வேண்டும். SPINDLE STOP செய்ய வேண்டும்.


12. G00 G91 G28 Z0; Z AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


13. G00 G91 G28 Y0; Y AXIS HOME POSITION கொண்டு செல்ல வேண்டும்.


14. M30; ஆகியவை வரிசையாக வர வேண்டும்.


நண்பர்களே, முதல் எட்டு வரிகள் PROGRAM POINTSக்கு மேலும், பத்து முதல் பதினான்கு வரை PROGRAM POINTSக்கு கீழும் வர வேண்டும். எனவே நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

  மேற்கண்ட வரைபடத்துக்கு ஏற்கனவே X,Y புள்ளிகள் மட்டும் குறிப்பிடுவதை இந்த பாகத்தில் பார்த்தோம். இங்கே PROGRAM உடன் சேர்த்து எழுதுவதை இன்று பார்ப்போம்.
முழுமையான PROGRAM:

G00 G90 G17 G21 G40 G80 G49;
G91 G28 Z0.;
M06 T1;
G0 G90 G54 X-30. Y-20.;
M03 S1000;
G43 Z100. H1;
G00 Z5. M08;
G01 Z-1. F100.;
X20.0     Y-20.0;
X20.0     Y10.0;
X40.0     Y10.0;
X40.0     Y20.0;
X-10.0    Y20.0;
X-20.0    Y10.0;
X-20.0    Y-10.0;
X-30.0    Y-20.0;
G01 Z5. M09;
G00 Z100. M5;
G00 G91 G28 Z0.;
G00 G91 G28 Y0.;
M30;
     இந்த PROGRAM எவ்வாறு RUN ஆகிறது என ஒரு SIMULATER SOFTWARE மூலம் உங்களுக்கு விளக்க போகிறேன். இதில் ஒவ்வொரு வரிக்கும் நான் விளக்கம் சொல்லி உள்ளேன். முதல் முயற்சியாக உங்களுக்காக இந்த வீடியோவில் நான் பேசியுள்ளேன். ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.


        இங்கு ஒரு விசயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இணைய வழியாக CNC BASIC எழுதுவதால் MACHINE சம்பந்தமாக உள்ள WORK OFFSET, TOOL OFFSET எடுத்தல், PANEL BOARD OPTIONS ஆகியன பற்றி நாம் பார்க்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இவை முற்றிலும் CNC MACHINE அருகிலிருந்து கற்கும் விஷயங்கள். இங்கே நான் பாட்டுக்கு தியரியாக எழுதி கொஞ்சம் புரிந்து வைத்திருந்த உங்களை குழப்ப விரும்பவில்லை. PROGRAM எப்படி எழுதுவது என்பதைப் பற்றி மட்டுமே பார்க்க போகிறோம். 

பொன்மொழி, விடுகதைகள் அடுத்த இடுகையில்...



மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11"



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 10


முந்தைய பாகங்களுக்கு...

டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி

இந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.

     
       கடந்த பாகங்களில் ABSOLUTE மற்றும் INCREMENTAL METHOD பற்றி பார்த்தோம். அவைகளின் நன்மை தீமைகளை இங்கே பார்ப்போம்.


ABSOLUTE CO-ORDINATE METHOD நன்மை தீமைகள்:
1. ஒரு பொதுவான புள்ளியே origin ஆக வைக்கப்படுகிறது.
2. இந்த முறை மூலமே அதிக PROGRAMS எழுதப்படுகிறது.
3. இந்த முறையில் எழுதப்பட்ட PROGRAMஇல் ORIGIN எந்த இடத்தில வைக்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
4. இந்த முறை PROGRAMஇல் தவறு ஏற்பட்டால் எளிதாக கண்டறியலாம்.
5. CUTTER RADIUS COMPENSATION (ITHAI PROGRAMகளுக்கு மிக எளிமையானது. 
6. இந்த முறை SUBPROGRAMகளுக்கு குறைந்த அளவிலேயே ஒத்துழைக்கும். 


INCREMENTAL CO0ORDINATE METHOD நன்மை தீமைகள்:
1. ஒவ்வொரு புள்ளிக்கும் அதற்கு முந்தய புள்ளி ORIGINஆக வைக்கப்படுகிறது.
2. REPEATED PROGRAMS, SUB PROGRAMS ஆகியவற்றுக்கு இந்த முறையே எளிது.
3. இந்த முறை PROGRAM எழுத ஈசியா இருக்கும். ஆனால் இந்த முறையை தேவைப்படும் இடத்தில மட்டுமே யூஸ் செய்தால் நல்லது.
4. இந்த முறையில் ஒரு இடத்தில தவறு ஏற்பட்டாலும் PROGRAM முழுவதுமே தவறாகிவிடும்.
5. CUTTER RADIUS COMPENSATION PROGRAMஇல் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தவறு ஏற்பட்டு விடும்.
6. இந்த முறை PROGRAMஇல் ORIGIN எங்கே உள்ளது என கண்டுபிடிப்பது சற்று சிரமமான விஷயம்.


நண்பர்களே, மேலே ABSOLUTE மற்றும் INCREMENTAL METHOD இரண்டுக்குமுள்ள நன்மை தீமைகளை குறிப்பிட்டு உள்ளேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். அப்டேட் செய்து கொள்கிறேன்.


வழக்கம் போல கீழே வீடியோஸ் உள்ளது. தவறாமல் பாருங்கள்,






THANKS: YOUTUBE



மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 10"



மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 9

முந்தைய பாகங்களுக்கு...



டிஸ்கி:  
      இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி


இந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.
          
        நண்பர்களே, கடந்த பாகத்தில் ABSOLUTE CO-ORDINATE METHOD என்றால் என்ன? என பார்த்தோம். இனி INCREMENTAL CO-ORDINATE METHOD பற்றி பார்ப்போம்.


INCREMENTAL CO-ORDINATE METHOD என்றால் என்ன?
             வரைபடத்தின் ஒவ்வொரு புள்ளியையும் குறிப்பிடும் போது அதற்கு முந்தைய புள்ளியை வைத்து குறிப்பிடப்படுவது INCREMENTAL CO-ORDINATE METHOD எனப்படும்.

நண்பர்களே, INCREMENTAL பற்றி கீழே உள்ள வரைபடத்தின் மூலம் விளக்கமாக பார்க்கலாம்.


        மேலே படத்தில் அளவுடன் ஒரு வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதற்கு முதலில் ஒரு பொதுவான புள்ளி வைக்க வேண்டும். அந்த படத்திற்கு புள்ளிகள் எப்படி குறிக்க வேண்டும். முதலில் அந்த படத்தை ஒரு GRAPH SHEET இல் வரைந்து கொள்ளுங்கள். நான் அந்த படத்திற்கு நடுப்பகுதியை பொதுவான புள்ளியாக வைத்து வரைந்துள்ளேன். இதில் முதல் கால்பகுதி, இரண்டாம் கால்பகுதி, மூன்றாம் கால்பகுதி, நான்காம் கால்பகுதி என ��ாம் பத்தாம் வகுப்பில் கணக்கு பாடத்தில் GRAPH SHEETஇல் பிரிப்பது போல பிரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் MACHINE இல் நாம் ஒரு பொதுவான புள்ளியை கொடுப்போம். அதற்கேற்ப X.Y புள்ளிகளுக்கு + அல்லது - கொடுக்க வேண்டும்.


         மேலே படத்தில் GRAPH SHEET இல் கொடுக்கப்பட்ட படத்தை மையப்படுத்தி வரைந்துள்ளேன். உங்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க + மற்றும் - கொடுத்துக் கொளுங்கள். நாம் GRAPH இல் ஒரு கட்டத்தை பத்து மில்லிமீட்டராக பிரிதுள்ளோம். நமக்கு கொடுக்கப்படும் படங்களின் அளவுகள் மில்லி மீட்டரில் குறிக்கப்பட்டே இருக்கும். சரி நண்பர்களே, மேற்கண்ட முறையில் GRAPH SHEETஇல் படத்தை வரைந்து கொள்ளுங்கள். 


இப்போது INCREMENTAL METHOD முறையில் எப்படி புள்ளிகளை குறிப்பிடுவது என பார்ப்போம். 


          முதல் புள்ளிக்கு மைய புள்ளி GRAPHஇன் நடுவில் உள்ளது. அங்கே CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் முதல் புள்ளி மூன்றாம் கால்பகுதியில் இருக்கிறது. எனவே X-30.0 Y-20. என குறிக்கப்படுகிறது.
           இரண்டாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தய புள்ளியான முதல் புள்ளியில் இருக்கும். பார்க்க படம். படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் மூன்றாவது கால்பகுதியில் இரண்டாவது புள்ளி அமைகிறது. எனவே X50.0 Y0.0 என வரும். (குழப்பமாக இருப்பின் மேலே உள்ள INCREMENTAL வரையறையை மீண்டும் படிக்க)
          மூன்றாவது புள்ளிக்கு ORIGIN ஆனது அதற்கு முந்தைய புள்ளியான இரண்டாவது புள்ளியில் அமைகிறது. அங்கு படத்தில் உள்ள படி CO-ORDINATE வைத்தால் முதல் கால்பகுதியில் வருகிறது. எனவே, X0.0 Y30.0 என வரும். இப்படியே ஒவ்வொரு புள்ளிக்கும் அதற்கு முந்தைய புள்ளியில் CO-ORDINATEஐ வைத்து பார்த்தால் X, Y சரியாக குறிப்பிடலாம்.
1. X-30.0    Y-20.0
2. X50.0     Y0.0
3. X0.0       Y30.0
4. X20.0     Y0.0
5. X10.0     Y0.0
6. X-50.0    Y0.0
7. X-10.0    Y-10.0
(எப்பவும் போல X,Y குறிப்பிட்டாலே TAPPER வரும்.)
8. X0.0    Y-20.0
9. X-10.0    Y-10.0
9வது புள்ளி படத்தில் இல்லை. ஆனால் 1வது புள்ளிக்கு மீண்டும் வந்து சேர்ந்தால் தான் படம் COMPLETE ஆகும். 



        அடுத்த பாகத்தில் மேற்க்கண்ட புள்ளிகளை எப்படி PROGRAM வடிவில் ��ாற்றுவது என பார்க்கலாம். அது வரை கீழே உள்ள வீடியோக்களை பார்த்துட்டே இருங்க.


THANKS: YOUTUBE
மேலும் வாசிக்க... "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 9"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1