CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



உணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்


உணவு‌க்கு‌ம், ப‌சி‌க்கு‌ம் ‌நிறைதொட‌ர்‌பிரு‌க்‌கிறது. அதப‌ற்‌றி ‌நிறைபழமொ‌ழிகளு‌‌மஉ‌ள்ளன. ஒ‌வ்வொ‌ன்று‌மஅனுப‌வி‌த்து‌ககூற‌ப்ப‌ட்வா‌ர்‌த்தைகளாகு‌ம்.

குழ‌ந்தைகளபழமொ‌ழியை‌பபடி‌ப்போமா?

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

உ‌ப்‌பி‌ல்லாப‌ண்ட‌மகு‌ப்பை‌யிலே.

உ‌ண்ட ‌வீ‌ட்டு‌க்கரெ‌ண்டக‌மசெ‌ய்யாதே.

உ‌ண்டி சுரு‌ங்‌கி‌னபெ‌ண்டிரு‌க்கஅழகு.

கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல.

பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.

தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

நொறுங்கத் தின்றால் நூறு வயசு.

கூழானாலும் குளித்துக் குடி.

சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?
மேலும் வாசிக்க... "உணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்"

த‌ம்ப‌திய‌ரி‌ன் நகை‌ச்சுவைக‌ள்

நகை‌ச்சுவை எ‌ன்பது எ‌ங்கு‌ம் எ‌ப்போது‌ம் வர‌க்கூடியது. ‌நீ நகை‌‌க்காத நாளை வாழா நா‌ளி‌ல் வை எ‌ன்‌கிறது ‌பழமொ‌ழி.

ச‌ரி இ‌ன்று ‌சி‌ரி‌க்க ஒரு காரண‌ம் ‌கிடை‌த்து‌வி‌ட்டது. அதுதா‌ன் இ‌ந்த நகை‌ச்சுவைக‌ள்.

பூகம்பம்



திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.

மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?



நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல்...

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.

நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.

.............................................................................

நாயஉழை‌க்‌கிறே‌ன


எ‌ன்ன‌ங்ந‌ம்குடு‌ம்ப‌த்து‌க்காநா‌னநாயஉழை‌க்‌கிறே‌ன்‌னஅடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌மஅது‌க்கஎ‌ன்இ‌ப்போ?

இ‌ல்ந‌ம்ம ‌‌வீ‌ட்டவாச‌ல்நா‌யவ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கஅதா‌னகே‌ட்டே‌ன்.

சில கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ரியாமலேயே த‌ங்களது வா‌ழ்‌க்கையை க‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌ல் இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.
***


கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!
***

மனை‌வி : எ‌ன்ன‌ங்க இ‌ப்படியே நா‌ன் உ‌ங்களு‌க்கு ‌தினமு‌ம் சம‌ச்‌சி‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா என‌க்கு எ‌ன்னதா‌ன் ‌கிடை‌க்க‌ப் போகுது சொ‌ல்லு‌ங்க...

கணவ‌ன் : இ‌ப்படியே சம‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா ‌கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் எ‌ன்னோட எ‌ல்ஐ‌சி பண‌ம் உன‌க்கு ‌கிடை‌ச்‌சிடு‌ம்.
***


ப‌க்க‌த்து‌வீ‌ட்டு‌க்கார‌ர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

வீ‌ட்டு‌க்கார‌ர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.
***
மேலும் வாசிக்க... "த‌ம்ப‌திய‌ரி‌ன் நகை‌ச்சுவைக‌ள்"

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்���ு காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
மேலும் வாசிக்க... "இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்���ெ‌ய்தா‌ன்"



உங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா?

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் )ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
மேலும் வாசிக்க... "உங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா?"



மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்

உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று.  இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://officelive.com/enus/. தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள "Create a Free Website"  என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.
"Design Site"  லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான "About Us" மற்றும் "Contact Us"  தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.
தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருக்கள்.
மேலும் வாசிக்க... "மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்"

தமிழில் ஓர் இணைய தேடுதளம்



ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனை www.searchko.in என்ற முகவரியில் பெறலாம்.
இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)
தேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.
இந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார்.
ஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம்.
இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
சரி, அது என்ன "சர்ச் கோ' என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். இங்கு ""கோ'' என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் கொண்டு வந்துள்ள இந்த முயற்சியை வரவேற்போம்.
மேலும் வாசிக்க... "தமிழில் ஓர் இணைய தேடுதளம்"



குறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

கூகுலின் எந்த ஒரு சேவையும் எடுத்துக் கொண்டாலும்
அது நமக்கு மிகவும் பயன்உள்ளதாகத் தான் இருக்கும்
அந்த வகையில் கூகுலின் மெகா தமிழ் டிக்ஸ்னரி பற்றி தான்
இந்த பதிவு. எப்படி இதை பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
படம் 1
http://www.google.com/dictionary இந்த இணையதளத்திற்கு சென்று
படம் 1 -ல் காட்டியபடி “English to <> Tamil ” என்பதை தேர்வு
செய்யவும். அதன் பின் மொழி பெயர்க்க வேண்டிய வார்த்தையை
படம் 2 -ல் காட்டியபடி கட்டத்திற்குள் கொடுக்கவும்.
படம் 2
உதாரணமாக நாம் ” great ” என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
மொழிபெயர்ப்பு தேடியுள்ளோம்.நாம் கொடுத்த ஆங்கில வார்த்தையை
எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் ஆங்கில வார்த்தையை
மொழிபெயர்த்து தமிழ் வார்த்தையாக வரிசைப்ப்டுத்தி ( படம் 3 )
நமக்கு கொடுக்கும்.
படம் 3
அடுத்ததாக எந்த வார்த்தையுடன் எல்லாம் இந்த வார்த்தையை
பயன்படுத்தலாம் என்று வரிசையாக (படம் 4 ) தெரியப்படுத்தும்.
படம் 4
அடுத்து நாம் கொடுத்த வார்த்தைக்கு இணையான ( Synonyms ) ஆங்கில
வார்த்தையையும் (படம் 5 )நமக்கு காட்டும்.
படம் 5
இதையெல்லாம் விட சிறப்பு வெப் டெபினிஸன் எப்படி எல்லாம் சேர்த்து
பயன்படுத்தலாம் (படம் 6 )என்று விளக்கமாகவும் கொடுக்கும்.
படம் 6
மேலும் வாசிக்க... "குறிக்கப்பட்ட இடுகைகள்கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்"

கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி

கணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் தட்டச்சு
வகுப்புக்கு சென்று படித்தால் தான் வரும் என்றெல்லாம் இல்லை
சிலவகை எளிய வழி முறைகள் மூலமும் நாமும் எளிதாக
வேகமாக தட்டச்சு செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித் தான்
இந்தப் பதிவு.

ஆன்லைன் மூலம் தட்டச்சு படிக்கலாம் என்று சொல்லி எத்தனையோ
இணையதளங்கள் வந்தாலும் சற்று வித்தியாசமாகவும் புதுமையாகவும்
வார்த்தை விளையாட்டு மூலமும் நாம் எளிதாக தட்டச்சு படிக்கலாம்.
கணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்ற எண்ணம்
உள்ள யாரும் இந்த தளத்தைப்பயன்படுத்தி வேகமாக தட்டச்சு
செய்யலாம் என்ற கொள்கையுடன் வலம் வருகிறது.


வெவ்வெறு வகையான பயிற்ச்சிகள் எந்த மொழியை வேண்டுமானலும்
எளிதாக தட்டச்சு செய்து பழகலாம் ( தமிழ் மொழி இல்லை).
வேடிக்கையும் வித்தியாசமாகவும் தட்டச்சு பழகலாம் குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் புரிந்து தட்டச்சு
செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தட்டச்சு பலைகையில்
விரல்களை எப்படி வைக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து
அத்தனையும் சிறப்பாக சொல்லிக்கொடுக்கின்றனர். சில நாட்கள்
முழுமையாக பயன்படுத்தினால் நாமும் தட்டச்சு செய்வதில்
வல்லவர்களாக மாறலாம்.
இணையதள முகவரி :  http://www.sense-lang.org
மேலும் வாசிக்க... "கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி"

ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க

நம் கையெழுத்தை ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்
உருவாக்கலாம்  எந்த மென்பொருளும் தேவையில்லை
ஸ்கேனர் போன்ற எந்த உள்ளீட்டு சாதனமும் தேவையில்லை
உதாரணமாக நாம் இமெயில் அனுப்பும் போது முடிவில் நம்
சிக்னேசர் இட்டு அனுப்புவோம். இனி அதற்கு பதிலாக உங்கள்
கையெழுத்தை ஒவ்வொரு மெயில் அனுப்பும் போது சென்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல நம் நண்பர்கள்
வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பதிவுஇடும் போதும்
பதிவின் கீழ் அவர்கள் கையொப்பம் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும். இனி ஆன்லைன் மூலம் கையெழுத்தை எப்படி
உருவாக்குவது என்று பார்ப்போம்.

http://www.mylivesignature.com/mls_sigdraw.php  இந்த
இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி மவுஸ்
துனையுடன் உங்கள் கையெழுத்தை உருவாக்குங்கள்.
புதிதாக உருவாக்க்குபவருக்கு எதாவது கிறுக்கல் எற்பட்டால்
“Start Over ” என்ற பட்டனை அழுத்தி துடைத்தும் கொள்ளலாம்.

படம் 1
கையெழுத்தை உருவாக்கிய பின் “Create Signature ” என்ற பட்டனை
அழுத்தி உங்கள் கையெழுத்தை உங்கள் கம்யூட்டரில் படமாக
சேமித்தும் வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக நாம் உருவாக்கிய
கையெழுத்து படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.
இனி உங்களுக்கு தேவையான் இடத்தில் இந்த கையெழுத்தை
எளிதாக எங்கு வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க... "ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க"



சிஸ்டம் ரீஸ்டோர்

இப்ப நிறைய பேர் உபயோகிக்கறது விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP). இதில் உங்களுக்கு அதிகம் வரக்கூடிய ஒரு பிரச்சனை விண்டோஸ் லோட் ஆகாமல் பாதியில் நிற்பது. அப்படி பாதியில் நின்றால் , கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து , F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். உங்களுக்கு விண்டோஸ் பூட் மெனு வரும். அதில் கீழ்க்கண்டவை இருக்கும்.

1. safe Mode
2. Safe mode with Network
3. Safe mode with command prompt
4.Enable Boot Logging
5.Enable VGA Mode
6. Last Known Good Configuration(your most recent settings that worked)
7.Directory Services Restore Mode(Windows Domain Controllers only)
8.Debugging Mode
9.Disable Automatic System Restart on Failure
10.Start Windows Normally
11.Reboot
12.Return to OS Choices Menu

இப்படி ஒரு மெனு வரும். இப்பதான் முதல் முறையா உங்கள்ளுக்கு பிரச்சனை வருவதாக இருந்தால், ஆறாவது (6) ஆப்சனை தேர்வு செய்யவும். இது உங்கள் விண்டோஸ் பழுதடைவதற்க்கு முந்தைய நிலைக்கு உங்கள் கணிப்பொறியை கொண்டு செல்லும்.

இந்த முறையிலும், உங்கள் விண்டோஸ் லோட் ஆக வில்லையென்றால், திருபவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து அதே போல்  F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். இப்பொழுது  முதல் விருப்பத்தை(safe Mode) தேர்வு செய்யவும் . இப்பொழுது
விண்டோஸ் லோட் ஆகி சேப் மோடில் வரும் . இப்ப உங்க விண்டோஸ் ஸ்க்ரீன்ல ஸ்டார்ட் பட்டன் இருக்கும் அதை கிளிக் பண்ணி பிறகு ப்ரோக்ராம்ஸ் கிளிக் பண்ணுங்க. இப்ப உங்க சிஸ்டம்ல இன்ஸ்டால் ஆகி இருக்கும் ப்ரோக்ராம் லிஸ்ட் வரும். அதில் அச்செச்சரீஸ்(accessories) கிளிக் பண்ணி சிஸ்டம் டூல்ஸ் உள்ள போங்க. அதில் சிஸ்டம் ரீச்டோர் (system restore) என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க. இப்ப சிஸ்டம் ரீச்டோர் (system restore)  ஸ்���்ரீன் வரும். அதில் "restore my computer to an earlier time" செலக்ட் செய்து next பட்டனை அழுத்துங்கள்.

இப்ப ஒரு காலேண்டர் வரும் அதில், சில நாட்கள் மட்டும், போல்டாக (BOLD) இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்து  next பட்டனை அழுத்துங்கள். உடனே நீங்க தேர்வு செய்ததை உறுதிப் படுத்த சொல்லி ஒரு ஸ்க்ரீன் வரும் ,next பட்டனை அழுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்த தேதிக்குப் பிறகு எதாவது புதிய மென்பொருள் இன்ஸ்டால் செய்திருந்தால் அவை போய் விடும். மற்றப்படி நீங்கள் எதாவது பைல்கள் உருவாக்கிருந்தால் அவை போகாது.

இப்பொழுது சிஸ்டம் ரீச்டோர் ரன் ஆகி பிறகு ரீஸ்டார்ட் ஆகும். உங்கள் விண்டோஸ் பிந்தைய தேதிக்கு ரீச்டோர் ஆகி இருந்தால் நல்லபடியாக சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகி உங்கள் சிஸ்டம் ரீச்டோர் செய்யப் பட்டது என்ற தகவல் வரும். இல்லை விண்டோஸ் லோட் ஆகவில்லை என்றால் வேறு வழியில்லை, விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்வதுதான் ஒரே வழி.
மேலும் வாசிக்க... "சிஸ்டம் ரீஸ்டோர்"

ஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்

ஆனந்தபுரத்து வீடு்
'நாயா இருந்தா குலைக்கணும். பேயா இருந்தா முறைக்கணும்' எழுதப்படாத இந்த சினிமா இலக்கணத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு 'பிள்ளை என்றால் பேயும் இறங்கும். மருமகள் என்றால் மறுகணமே சரண்டர்' என்கிற சாத்வீக பேயை காட்டுகிறார் டைரக்டர் நாகா. உங்களுக்கு நிஜமாகவே ஒரு ஆஹா!
மனைவி, குழந்தையுடன் பதினைந்து வருடங்கள் கழித்து தனது சொந்த கிராமமான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. பல வருடங்களாக பூட்டிக் கிடக்கிற வீட்டில் அவரது தாய், தந்தையின் ஆவி உலவுகிறது. இதை முதலில் உணர்ந்து கொள்கிற சாயாசிங் அங்கிருந்து கிளம்பலாம் என்று நந்தாவை வற்புறுத்த, கிளம்பவே முடியாதபடி ஒரு லாக்! பிசினஸில் ஏற்பட்ட கடனுக்காக அந்த கிராமத்து வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் நந்தா. இவர் தப்பிக்க முயலும் ஒவ்வொரு நேரமும், வேணும்னா நீங்க போங்க. உங்க ஃபேமிலியை நான் பார்த்துக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிறார் அந்த பருமனான பைனான்சியர். இவர் பெயர் மேகவர்ணபந்த். பெயரை போலவே அவரது வித்தியாசமான நடிப்புக்கும் சேர்த்து ஒரு ஷொட்டு.
கூடவே இருக்கிற நண்பனே துரோகியாகிற போது வீட்டிலிருக்கிற ஆவிகள் எடுக்கிற முடிவும், நந்தா அண் பேமிலியின் நிம்மதி பெருமூச்சும்தான் படம்.
இது பேய்வீடு என்பதை முதல் ஷாட்டிலேயே ஓப்பன் பண்ணிவிடுகிறார் டைரக்டர். பல காலமாக சுத்தம் செய்யப்படாத வீடு, பிள்ளை வருகிறான் என்றதும் தானாக கூட்டி பெருக்கி சுத்தமாகிக் கொள்வதும், வீட்டுக்குள் நுழைந்த பேமிலிக்கு சுட சுட தானாகவே உணவு சமைத்துக் தருவதுமாக ஒரு ஆவியுலக அற்புதத்தை ஆரவாரமாக ஆரம்பித்து வைக்கிறார் நாகா. ஆனால் ஆவிகளின் அற்புதங்கள் ஜன்னலை திறந்து திறந்து மூடுவதிலேயே பாதி (பிராணன்) போய்விடுகிறது. ஆனாலும், அந்த துரோகிக்கு தருகிற சாட்டையடியும், அந்தரத்தில் ஊஞ்சலை து£க்கி அலற விடுவதும் தனி சுவாரஸ்யம். மனைவியை கை நீட்டுகிற பிள்ளை நந்தாவை தனது கைத்தடியால் போட்டுத்தள்ளுகிற அந்த காட்சியும் கைதட்டல் களேபரம்.
நந்தாவுக்கு இயல்பாகவே சற்று மிரண்ட முகம். பொருத்தமாக இருக்கிறார் பல காட்சிகளில். தனது அப்பா அம்மாதானே என்று கூட நினைக்காமல் வீட்டை விட்டு ஓட முயல்வது பரிதாபம். அதைவிட பரிதாபம், என்னை ஏன் போக விட மாட்டேங்கிறீங்க என்று ஆவிகளிடம் ஆவேசப்படுகிற காட்சி.
முதலில் அஞ்சினாலும், இந்த ஆவிகளால் தனக்கும் தன் பிள்ளைக்கும் ஆபத்தில்லை என்பதை உணர்கிற நிமிடத்திலிருந்தே சாயாசிங் ஹாயா சிங் ஆகிவிடுகிறார்.
லேண்ட் புரோக்கர் ரத்தினமாக கணேஷ்பாபு. ஆவிகள் இருப்பதை அறியாமலே இவரும் இவர் கூட்டி வரும் அண்ணாச்சியும் வீடு பார்க்காமல் பாதியில் பிடிக்கிற ஓட்டம் இருக்கிறதே, வீடு வந்து சேர்கிற வரை நமக்கு தொடர்கிறது சிரிப்பு. நண்பன் நந்தாவை தன் கண்ணெதிரிலேயே சிலர் மிரட்டுவது பொறுக்காமல் 'வெளியூர்காரன் அடிக்க வர்றதா' என்று பாய்வதும் சரியான டச்சிங்.
அந்த குழந்தை ஆர்யனின் முகபாவங்கள் தனி போட்டோ கேலரியாகவே மனதில் பதிகிறது. அந்த மலர்ந்த முகத்தில் ஆயிரமாயிரம் அசகாய எக்ஸ்பிரஷன்கள். இந்த பேரனுக்காக தாத்தா பாட்டி ஆவிகளின் பாசப்பிணைப்பும் மிக சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு முக்கிய கேரக்டர் கலைராணி. முதல் காட்சியிலேயே ஆவிகளின் மகிமையை புரிந்து கொள்கிற இவர் அப்புறம் ஏன் பயந்து ஓட வேண்டும்?
ரமேஷ்கிருஷ்ணாவின் இசை பேய் படம் என்ற மிரட்டலை தராமல் தாலாட்டியிருக்கிறது. கதையோடு கை பிடித்து அழைத்துச் செல்கிறது அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு.
பேரானந்தபுரத்து வீடு
மேலும் வாசிக்க... "ஆனந்தபுரத்து வீடு் - விமர்சனம்"



ஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை

நம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடம் இருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயமாக அவை பயனற்றவை என்று தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டிருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை, வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸுக்கு அனுப்பாமல் இருக்கும் வசதியினை ஜிமெயில் தருகிறது. அதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
ஜிமெயிலில் இத்தகைய இமெயில்களின் முகவரிகளுக்கென மற்ற தளங்கள் தருவது போல பிளாக் லிஸ்ட் வசதி இல்லை. இருப்பினும் அவற்றை எப்படி தடை செய்வது என இங்கு காண்போம்.  நீங்கள் இத்தகைய மெயில்களுக்கென ஒரு பில்டர் தயாரிக்க வேண்டும்.  இதற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயிலுக்குச் செல்லவும். நீங்கள் எந்த இமெயில் முகவரிகளிடமிருந்து, மின்ன���்சல்களைப் பெற விரும்பவில்லையோ, அவற்றின் முன் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து திரையின் மேலாக உள்ள  More Actions  என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.இங்கு  Filter Messages like these  என்ற இடத்தில் பின்னர் கிளிக் செய்திடவும். உடன் create filter  என்ற விண்டோ காட்டப்படும். நீங்கள் தடை செய்திட விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும்  From  பீல்டில் இருப்பதனைப் பார்க்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரிகள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். நீங்கள் விரும்பினால், ஓர் இணைய தளத்திலிருந்து வரும் அனைத்து மெயில்களையும் தடை செய்திடலாம். அதற்கு @ என்ற அடையாளம் மட்டும் அமைத்து, அதன் பின்னர் தளத்தின் பெயரை அமைக்கவும். இத்துடன் மெயில் செய்தியில் சில சொற்கள் உள்ள மெயில்களையும் தடை செய்திடலாம். இதனை எல்லாம் முடித்தவுடன், அடுத்து Next Step   என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து என்ன செயலை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பாக்ஸ் முன் டிக் அடையாளத்தினை அமைக்கவும். எடுத்துக்காட்டாக, விரும்பாத இமெயில் வந்தால், உடனே அழிக்க வேண்டும்  என எண்ணினால்,  Delete it என்பதில் டிக் அடையாளம் அமைக்கவும். இந்த முகவரிகளில் இருந்து வரும் அனைத்து மெயில்களும் உடன் ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்க  Skip the Inbox, Archive it, Mark as read, Star it, Apply a label, Forward it, Send canned response, and Never send to spam   என்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. சில வேளைகளில், சிலரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்த்துவிட்ட பின்னர், அழிக்க எண்ணலாம். அத்தகைய இமெயில்கள் ட்ரேஷ் பெட்டியில் 30 நாட்கள் தங்கும். இவற்றை எல்லாம் முடித்தவுடன்  Create Filter Button என்ற பட்டனை  அழுத்தவும். உடனே பில்டர் செயல்படத் தொடங்கும்.  எவற்றை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது Settings – Filters  என்ற இடத்தில் பட்டியலாகக் காட்டப்படும். உங்களுடைய விருப்பம் மாறும் போது, இந்த இமெயில் முகவரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
மேலும் வாசிக்க... "ஜிமெயிலில் சில இமெயில்களுக்குத் தடை"



சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?

சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?

இப்படி எனது எண்ணிக்கையை நான் எப்போதுமெ சலித்துக்கொண்டதில்லை. சிறு வயதிலிருந்தெ எனது எண்ணிக்கை பழக்கம் துவங்கியதாக பாட்டி அடிக்கடி கூறுவாள். இரவு முழுவதும் வானத்து நட்சத்திரங்களை எண்ணுவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதையும், அரிசியில் கலந்து போன பருப்புகளை எண்ணிக்கையோடு சேர்ப்பதையும் அனைவரும் வீட்டிற்க்கு வந்து அதிசயமாக பார்த்து சென்றதாக் மிக பெருமையோடு சொல்லிக்கொண்டிருப்பள்.

அப்பாவிற்க்கோ தனது பையன் இப்படி சமர்த்தக இருந்ததில், அனைவரிடமும் தம்பம் அடித்து கொள்வதையும், வீட்டிற்கு வரும் அனைவரிடமும் சவால் விடுவதும், என்னிடம் பல விதமான எண்ணிக்கைகளின் புதிர்களை கேட்டும் நான் சொல்லும் பதில்களுக்கான எதிர் சவால் விடுவதுமாக இருந்தார்.

ஐந்தாம் வகுப்பு கூட முடிக்காத எங்கள் கிராமத்தில் யாருக்கும் எதிர் சவால் விடுவதில் தைரியம் இல்லை. இதனால் தான் என்னவோ என்னை மிக எளிதாக பக்கத்தில் உள்ள ட்வுன் பள்ளியில் இடம் கிடைத்தது. எங்கள் ஊர் தலைவர் தான் பள்ளிகூடத்தில் கொண்டு சேர்த்தார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக பிடித்த மாணவனக இருந்ததில், பல பையன்களின் அன்புத்தொல்லைகளை தாங்க வேண்டியிருந்த்தது. சில கடைசி பென்ச் மாணவர்கள் மட்டும் என்னை கவிழ்பதில் சமயம் பார்த்து கொண்டிருந்தனர்.
அன்று எந்த ஆசிரியரும் வராத காரத்தினால் எல்லொரையும் பி. டி கிளாசிற்க்கு வருமாறு அறிவுப்பு வந்திருந்தது. கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. இன்று நிச்சயமாக முத்துசாமி சொன்ன பந்தயதில் ஜெயித்து விடலாம். பந்தயம் என்னவென்றால் வேப்ப மரதிலிருந்து கீழ் விழும் இலைகளை அதிகமான எண்ணிக்கையில் யார் எடுப்பது என்பது தான்.

முத்துசாமி, கணேசன், தங்க ராசு எல்லோரும் சேர்ந்து கொண்டோ ம். முத்து சாமி தான் எண்ண ஆரம்பித்திருந்தான்.ஐம்பது, ஐம்பத்தி ஒன்று,.....ஒரே மூச்சில் நானும் எண்ண ஆரம்பித்திருந்தேன். என்னை சுற்றியிருந்த எல்லா சத்தங்களும் அடங்க தொடங்கின. எனது ஒரே குறியாக இலைகளை எண்ணுவதிலேயெ இருந்தது.

லேசாக இருட்டிக்கொண்டு வருவாதாக எனக்கு பட்டது. எப்போது படுத்தேனொ தெரியாது. முகத்தில் வெயில் சுள்ளென்று அடிக்க வாட்சுமேன் எழுப்பிய போது தான் தெரிந்தது காலை ஆகி விட்டதென்று. வாட்சுமேன் பக்கத்தில் அம்மாவும் நிற்பது தெரிந்த போது தான் விசயம் தெரிந்தது. வீட்டில் என்னை நேற்று முழுவதும் தேடியிருக்கவேண்டும். அந்த கவலை அம்மாவின் வீங்கிப்போன முகத்திலெ தெரிந்தது. இரவு முழுதும் அழுதிருக்கவேண்டும். அம்மா என்னை அணைத்துக் கொண்டு அழைத்துப் போனாள். மஞ்சள் வாசம் வீசியது.

அப்போது தான் சட்டென்று நினைவிற்க்கு வந்தது. 1887 நேற்று நான் எண்ணிக்கையில் விட்ட இலைகள். நிச்சயமாக முத்துசாமியொ, தங்கராசோ இந்த எண்ணிக்கையை அடைந்திருக்க முடியாது.

இப்படியெ எனது எண்ணிக்கை பயணம் கல்லூரி வரை தொடர்ந்தது. கல்லூரியில் பலரது காதலுக்கு எனது எண்ணிக்கை பயன் பட்டது. தனது காதலி எத்தனை தடவை மஞ்சள் புடவை போட்டிருந்தால் என்பதில் இருந்தது அவள் எத்தனை தடவை நாக்கு கடித்தாள் என்பது வரை என்னிடமிருந்து எண்ணிக்கை கணக்குகள் சென்று கொண்டிருந்தன.

அன்றும் அப்படித்தான் யாருடையொ காதலியின் ஏதோ எண்ணிக்கையை சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சரியாக கேட்காமல் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்ததால் எரிச்சலடைந்து சற்று சத்தமாகவெ சொல்லிவிட்டேன். திடீரென என் பின்னாலிருந்து ஒரு செருப்பு என் முதுகை தாக்கியது. திரும்பி பார்த்தேன். என் கண்கள் அப்படியெ நின்று போனது. நான் சொன்ன ஒரு எண் அவளுடைய எதோ ஒரு அளவு எண்ணிக்கையில் ஒத்து போனதில், அவளுடய செருப்பு என் மேல் விழுந்திருக்கிறது. மேலும் அவள் என்னை எதேதோ சொல்லி என்னை திட்டி கொண்டிருப்பதையும், எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும், நான் நினைவுக்கு வந்த பிறகெ தெரிந்தது. மொத்தமாகவெ என்னை அவளிடம் இழந்திருந்தேன்.

பிறகு மகேந்திரன் சொல்லிதான் அவள் பெயர் மதுமதி என்பதும், அவள் இந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்பதும் தெரிந்தது.பிறகு அவளை நான் எனது எண்ணிக்கை புலமை மூலம் அசத்தியதையும், அவள் என்னுடன் தனது வீட்டை விட்டு வந்ததையும், அவள் வீட்டார் திரும்பவும் என்னை தேடி வந்து கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதையும் எழுதுவதற்க்கு குறைந்தது நாற்பது வரிகளவாது தேவைப்படும். இப்போது வேண்டாமே...

இதோ கல்யாணமாகி ஆறு மாதங்களாகி விட்டது. மது என்னுடன் மிக சந்தோசமாகவே இருக்கிறாள். முத்துசாமி, தங்கராசு, கணெசன், மகேந்திரன் நம்மை பார்ப்பதற்க்காக வந்திருக்கிறார்கள். பழைய விசயங்களை நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

மறு நாள் காலை எழுந்தவுடன், நீச்சல் குளம் செல்வதென முடிவு செய்தோம். முத்துசாமி தான் கிராமத்தில் நான் தான் எப்பொதும் அதிக நேரம் தண்ணிரீல் இருப்பேன் என்றும், எண்ணிக்கையில் ஒரு தடவை 999 வரை சென்றதாகவும் ஞாபகப்படுத்தினான். எனக்கு பெருமையாக இருந்தது. இன்றும் அதெ போல் தண்ணீரில் யார் அதிக நேரம் மூழ்கி இருக்கபோவதென பந்தயம் செய்து கொண்டோம்.

மார்கழி மாதமாக இருந்ததில் நீச்சல் குளத்தில் அதிகம் பேர் இல்லை. நாங்கள் எங்கள் எண்ணிக்கையை ஆரம்பித்தோம். இந்த தடவை கணேசன் எண்ண ஆரம்பித்திருந்தான். 15, 16, 17, ...

நானும் எண்ணிக்கையை ஆரம்பித்தென். முதலில் கொஞ்சம் மூச்சையடைத்து, இருந்தாலும் எனது எண்ணிக்கையை தொடர்ந்த்து கொண்டிருந்தேன். 960...., 989.....................................999, 1000, 1001, 1002........... மிகவும் சந்தோசமாக இருந்தது. நிச்சயமாக வேறு யாரும் இவ்வளவு நேரம் இருந்திருக்க முடியாது.

வீட்டிற்க்கு வந்த போது வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. நிச்சயமாக மதுவுடைய சொந்தங்களாக இருப்பார்கள். கடந்த இரண்டு மாதங்காளாகவெ இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவளை தேடி அவள் சொந்தகாரர்கள் வருவதும், போவதும்.
இந்த தடவை எங்கள் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். மது கொஞ்ச அதிகமாகவே அழுதிருந்தாள். கண்களுக்கு கீழெ கருமை நிரம்பி.... இருந்தாலும் அழகாகவே இருந்தாள். அவள் அருகில் அவளுடைய மாமா பையன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தான். அவனைதான் மதுவுக்கு கட்டுவாதாக இருந்தது. ஆனால் நமது காதல் கல்யாணத்தில் எல்லாம் நின்று போனது. அதற்கு பிறகு இப்போது தான் இவனை பார்க்க முடிந்தது.

அவள் அழுகும் போது இவன் அவளின் தலையை கோதிவிடுவதும். அழுகை அதிகரிக்க அதிகரிக்க அவளை லேசாக அணைத்துக் கொள்வதுமாக இருந்தான். அவன் முகத்தில் அதிகப்படியான சிரிப்பு புதைந்திருந்தது.

என் தலைக்கு மேல் உள்ள குத்துவிளக்கு அணைந்து போயிருந்தது. நான் வாங்கியிருந்த எல்லா பரிசுகளையும் யார் யாரோ பார்த்துகொண்டிருந்தார்கள். வேன் வந்து விட்டதாக யாரோ கூறிய போது மது அதிகமாக கதறி அழுதாள். இப்போது அவன் மதுவை இருக்கமாக கட்டிக்கொண்டான்.

சே..! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்..
மேலும் வாசிக்க... "சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?"

கனவு

மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். இடது மார்புக்கு மிக நடுவே...சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான் குறிக்கோளில்...என்னால் உணர முடிந்தது. தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது.

"டேய்..! எந்திரி..மணி எட்டாகுது..."

சே..! பயங்கரமான கனவு.

"என்னடா இன்னைக்கி யுனிவர்சிட்டி போகனும்னு சொன்னியே, மணி எட்டச்சு..போகலயா..?

அம்மதான்..பயங்கரமாக உலுக்கி எழுப்பி கொண்டிருந்தாள். ஒரு வழியாக கண் விழித்தேன். இரவு அதிக நேரம் டிவி பார்த்ததில் கண் எரிச்சலை கிளப்பியது இப்படித்தான் அடிக்கடி என் கனவுகளில் நான் கொல்லப்படுகிரேன். ஆனால் இறப்பதற்க்கு முன்னமே கனவு முடிந்து போகிறது அல்லது முடிக்கப்படுகிறது. இவ்வாறு நான் யோசிக்க தொடங்கியதும், யுனிவர்சிடி போக வேண்டும் என்பது ஞாபகம் வந்தது. கொஞ்சம் லைப்ரேரியில் வேலை இருக்கிறது.

நான் அடிப்படையில் இயற்பியல் படிக்கும் மாணவன். ஏற்க���வே பி.எஸ்.சியில் மூன்று வருடம் குப்பை கொட்டியாகி விட்டது, போததென்று இந்த இரண்டு வருடமாக எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அதிகமான குவாண்டம் கொள்கைகளையும், ரிலெட்டிவிட்டி தத்துவங்களையும் எழுதியோ படித்தோ கொண்டிருக்கிறேன். யுனிவர்சிட்டியில் முக்கியமாக சில புத்தகங்ளை தேட வேண்டும். இன்று அவள் நிச்சயம் வருவாள்.

நீங்கள் நினைத்தது சரிதான். அவளை பார்பதற்க்காகதான் நான் லைப்ரேரி செல்கிறேனென்று. இந்த இரண்டு வருடமாக எனக்கு அவளைத் தெரியும், நீங்கள் நினைப்பதை விட அவள் மிக அழகானவள். இப்பொதைக்கு அவளைப் பற்றி இது போதும்.

கொஞ்சம் என்னைவிட அதிகம் சிந்திப்பவள். வருங்காலத்தில் யுரேனியத்தில் பி.எச்.டி பண்ணும் ஆர்வத்தில் இருக்கிறாள். நான் அவளுக்கக சில புத்தககங்களை தேடிக்கொடுக்கவே செல்கிறேன்.

இந்த நான்கு பாரா முடிவதற்க்குள் நான் குளித்தாகிவிட்டது.

"டேய்..! தோசையிலே முட்டை விடட்டும..?" அம்மா கேட்டாள்.

"சரி..ஏதோ...பண்ணு..." கொஞ்சம் சலித்துக்கொண்டேன். தோசை சூடாகவே இருந்தது. அப்பா வழக்கம் போல சன் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் வேகமாக சாப்பிட்டு முடிந்ததும், கருப்பு கலர் டி சர்ட் அணிந்து கொண்டேன். முனிச்சாலை ஸ்டாப்பில் நின்று கொண்டால் 21ம் நம்பர் வருமா என்பது சந்தேகம் தான். பெரியார் நிலையம் செல்வது தான் சரி. யோசித்துக்கொண்டிருக்கும் போதெ கூட்டம் குறைவாக 4ம் நம்பர் வந்தது. எனக்காகவெ ஒரு ஜன்னல் ஓரம் காலியாக இருந்தது.

டிக்கெட் வாங்கி முடிந்ததும் எனது எண்ணங்களை தொடர்ந்தேன். கடந்த சில மாதங்களாக இந்த கனவு அடிக்கடி வருகிறது. அவன்... நீள முகம், லேசான மீசை, பான்பராக் பற்கள், கொஞம் அதிகமான மூக்கு, அரைகுரையாக வளர்ந்த தாடி, எப்போதும் எதாவது ஆயுதங்களுடன் என்னை எதிர்கொள்கிறான். சில சமயம் வில் போன்ற, கொஞ்சம் துப்பாக்கி கலந்த, ஆங்கிலப்படங்களில் மட்டுமே பார்த்த....அம்புகள் பொருத்தி என்னை குறி பார்கிறான்.

இப்படி சில கனவுகள் நிஜ வாழ்க்கையில் நிஜமாகிறது என்பதை எங்கேயோ படித்ததாக
ஞாபகம். என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி நடக்குமா...? வயிற்றை கலக்கியது...

இன்று அவளுக்காக புத்தகம் தேடும் போது, சைக்கலாஜி பிரிவில் கனவுகள் பற்றி எதாவது புத்தகம் தேட வேண்டும். பஸ் ஸ்டாண்டில் நுழைந்து கொண்டிருந்தது பஸ். பஸ்ஸை விட்டிறங்கி, ரோட்டை கடந்து, மறு பக்கமுள்ள பல்கலைகழகம் செல்லும் நிறுத்த���்திற்க்கு சென்ற போது, சரியாக 21ம் நம்பர் வந்தது...வாழ்க்கையில் முதன்முறையாக இவ்வளவு சீக்கிரம் பஸ் கிடைத்ததை நினைத்துகொண்டேன்.

கனவுகள் நம் வாழ்க்கையின் மிச்சங்களா..!? நம் உள்மனத்தின் பிரதிபலிப்பா...? நம் வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக உயிரூட்டப்பட்டு கனவாக மாறுகிறது. கனவுகளில் வண்ணங்கள் உண்டா? கனவுகளில் வரும் முகங்களோ, உருவமோ நிஜமாக இருக்க முடியுமா? ஆழ்ந்த உறக்கங்களில் கன்வுகள் வருவதில்லை என்றும், ' நான்ரெம்' எனப்படும் பாதி நிலை உறக்கங்களில் கனவுகள் தோன்றுகிறது என்றும் சில புத்தகங்காளில் படித்திருக்கிறேன்.

ஒரு இயற்பியல் மாணவன் சைக்கலாஜி ப்ற்றியோ, கனவுகள் பற்றியோ படிப்பது அவசியம் தானா என்பது நீங்கள் கேட்க கூடிய கேள்வி தான். ஆனால் அடிப்படையில் படிக்கும் ஆர்வம் என்பது இயற்பியல் படிக்கும் மாணவனுக்கு கொஞம் அதிகம் தான் என்பது என் கருத்து.

பஸ் நாடார் காலேஜை கடந்து கொண்டிருந்தது. இன்று ஞாயிற்று கிழமையாதலால் பஸ்ஸில் அதிகம் கூட்டமில்லை. மார்கழி மாதமாக இருப்பதால் கொஞம் மேக மூட்டமாகவே இருந்தது. குளிர்காற்றும் வீசியது.

பஸ்ஸை விட்டு இறங்கியதும் எதிர் கடையில் அவள்..மிராண்டா குடித்து கொண்டிருந்தாள்...(எந்த இளிச்சவாயன் மாட்டினானோ..?) உடனே ஒரு கவிதை தோன்றியது....அடக்கிக் கொன்டேன். என்னைப் பார்த்ததும் சிரித்தாள் (சிரித்தாளா...?)

"என்னடா...!(செல்லமாக தான்..) இவ்வளவு லேட். எங்கேயாச்சும் நின்னு தம் அடிச்சுட்டு வர்றியா...?".

நான் புகை பிடிப்பதே இல்லையென்பதும், வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை என்பதும், அவளுக்கு தெரிந்திந்தும், ஒவ்வொரு தடவை என்னை பார்க்கும் பொதும் இந்த கேள்வியை கட்டயமாக கேட்கிறாள் (ஒரு வேளை என்ன தம் அடிக்க சொல்கிறாளா..?)

பாட்டில் காலியானதும் கடைக்கராரிடம் கொடுத்துவிட்டு, எனக்கு முன்னாடி நடந்தாள்.

"பணம் கொடுக்கலை..?" என் கைகளில் சாக்லேட்டை திணித்துக்கொண்டே "ரமேஷ் கொடுத்துட்டான்.." சாதரணமாக சொன்னள் (பாவம்! சோடப்புட்டி...!!).

"உருகிப்போச்சு...உன் உடம்பிலே உஷ்ணம் அதிகம்..." அவள் கைப்பைக்கும், மார்புக்கும் நடுவில் சாக்லேட் வைத்திருந்தை, நினைத்துக் கொண்டே நான் சொன்னதை கேட்டு முறத்திருப்பாள். நான் பார்க்கவில்லை. வேறு எங்கெயோ, எதுவோ பெரிதாக தெரிந்ததை பார்த்துக்கொன்டிருந்தேன்.

"டேய்...மாக்கான்! இன்னைக்கி விட்டுக்கு சீக்கிரம் போகணும். பொண்னு பார்க்க வர்றாங்க..." சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தாள். அவள் உதட்டோரத்தில் ஒட்டியிருந்த சாக்லேட் என்னை என்னவோ செய்தது.

"சரி உன்னோட கனவு...என்னச்சு?" இவளிடமும் சொல்லியாகி விட்டது. என் கனவுகளைப்பற்றி என்ன அக்கரையாக கேட்கிறாள்.

"டேய் மக்கு..கனவுங்கிறது நம்ம மனசுலே நினைக்கிற அதிகபட்ச ஆசைகளும், தினசரி வாழ்கையில் நடக்கிற நிகழ்சிகளும் கலந்து வர்றது தான்டா. நீ படுக்குறதுக்கு முன்னாடி எதாச்சும் இங்கிலிஷ் படம் பார்த்திருப்பே. அதுல வர்ற, ஒத்த கண்ணனோ, மொட்டதலையனோ உன்னை கொல்ல வந்திருப்பான். இதையெல்லம் மனசுலே போட்டு, புலம்பிக்கிட்டு இருக்கதே...லைப்புல அடுத்து என்ன பண்ணபோரேங்கிறைதை பற்றி யோசி...எங்க வீட்டுல வேற என்னை மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சுட்டங்க..." எதுவோ எனக்கு உறைக்க ஆரம்பித்தது. யோசிக்கனும்!. "என்னடா...எதுவும் பேச மாட்றே..." என் தலையை கலைத்து விட்டாள். முடிவு செய்து கொண்டேன்.

"சரி...சிக்கிரம் போய் அந்த கிளசிக்கல் மெக்கானிக் புக் வந்துருச்சான்னு கேட்டு வா...ஆத்தர் கோல்டுஸ்மித்டா....ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். வேற எந்த புக்குலேயும் புரிய மாட்டேங்குது." லைப்ரேரியனை நோக்கி சென்று கொண்டிருத்தேன்.

கோல்டுஸ்மித் வந்திருந்தது. எடுத்து வைத்து விட்டு, சைக்கலாஜி பக்கம் சென்றென். 'டிரீம் அனாலிஸிஸ்' புது அட்டையுடன் இருந்தது. ஆசிரியர் ஏதோ ரஷ்ய பெயராக இருந்தது புரியவில்லை.
'கனவுகல் நிஜத்தின் நாடகங்கள். இரவின் கருப்புத் திரைப்படங்கள். கற்பனையின் காட்சி தத்ரூபங்கள். உள் மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்.....'
கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தில் பாதி வார்த்தைகள் நானாக யுகித்து படித்து கொண்டிருந்தேன். லேசாக தாகம் எடுத்தது. ஜன்னல் ஓரம் இருந்த பிரிட்ஜை திறக்கும் போது....அங்கே ஜன்னலுக்கு வெளியே...

மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். என் நெற்றிப்பொட்டுக்கு நடுவே...இரண்டு புருவங்களுக்கு மத்தியில்...மிக தெளிவாக...இம்மியளவும் பிசகாமல்...கூடவே என்னை எதுவோ பயங்கரமாக உலுக்கிக் கொண்டிருந்தது.
மேலும் வாசிக்க... "கனவு"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1