CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!யூத் தம்பதிகளுக்கு கவலை இல்லை இனி...

  

வந்தாச்சு 24 மணி நேர கிரெச்!


  ‘‘அவருக்கு ரயில்வேயில் வேலை; அடுத்த மாதம் டிரான்ஸ்பர், திண்டுக்கல்லுக்கு. குழந்தை, குட்டியோடு இப்படி மாறிண்டே இருக்கிறது எனக்கு வாடிக்கையாப் போச்சு...’’
இப்படி அலுத்துக்கொள்பவர்கள் உங்களில் பலர் இருக்கத்தானே செய்கிறீர்கள். உங்கள் வாரிசுகளுக்கும் இந்த பிரச்னை இருக்கக்கூடும். ஆனால், ஒரு வித்தியாசம்... உங்கள் கணவருக்காவது மதுரையிலிருந்து திண்டுக்கல்தான்; ஆனால் அவர்களின் பிரச்னை இன்னும் எல்லைமீறக்கூடியது! கணவனுக்கு சுவிட்சர்லாந்தோ, மனைவிக்கு அமெரிக்காவோ இருக்கும். அல்லது ஒருவர் சென்னை என்றால், மற்றவர் பிரிட்டனுக்குப் பறக்க வேண்டியிருக்கும். இப்படி இருந்தால், தனியாக வாழ நேரும் அந்த மனைவி, வேலைக்கும் போய்க்கொண்டு, குழந்தையை எப்படி பராமரிக்க முடியும்? அதிலும் சாஃப்ட்வேர் பணி என்றால் போதும், 12 மணி நேரத்துக்குக் குறையாமல் ஆபீசில், கம்ப்யூட்டரையே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான்! இப்படிப்பட்டவர்களுக்குக் கைகொடுக்கத்தான், ‘24 மணி நேர கிரெச்’ வந்து விட்டது. கிரெச் என்பதும் மேற்கத்திய அறிமுகம்தான். ஆனால், காலையில் ஆரம்பித்து மாலை ஆறு மணி வரை & அதாவது பெற்றோர் ஆபீசிலிருந்து திரும்பிவரும் வரை பராமரிக்கும் மையமாகத்தான் இது இருந்து வந்தது. ஆனால், இப்போது சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் 24 மணி நேர மையங்கள் பரவி விட்டன.

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்ற வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறும் பல பெற்றோருக்கு உதவியாக இருந்த இந்த மையங்கள், இப்போது நம்ம சாஃப்ட்வேர் இளைய தலைமுறையினருக்கும் கைகொடுக்க ஆரம்பித்து விட்டன. இந்த மையங்களில் குழந்தைகளை சேர்த்து விட்டால் போதும்... 24 மணி நேரமும் பராமரிப்பு அந்த மையத்தைச் சேரும். வீட்டில் பார்த்துக்கொள்வதைவிட பல மடங்கு கவனிப்பு, பராமரிப்பு இருக்கிறது. மாதக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கேற்ப உணவு, பராமரிப்பு, பொழுதுபோக்கு வசதிகள் மாறும்.

என்ன பிடிக்கும்?
இப்படிப்பட்ட மையங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம்... உங்கள் குழந்தைக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஒரு தனி கேள்விப் பட்டியலே உள்ளது. மையத்தில் அதை வாங்கி, அதில் ‘டிக்’ அடித்துத் தரவேண்டும். காலை எழுந்ததும் என்ன பிரஷ்ஷில் எந்த டூத் பேஸ்ட் தேய்க்க கொடுக்க வேண்டும், காபியா, ஹார்லிக்ஸா, பூஸ்ட்டா என்பதில் ஆரம்பித்து, காலை சிற்றுண்டி, பகல் உணவு மெனு, மாலை நொறுக்ஸ், இரவு டின்னர் பட்டியல், தூங்கும்போது என்ன கதை சொல்ல வேண்டும் என்பது வரை இந்த பட்டியலில் எழுதித் தந்துவிட வேண்டும். சில மையங்களில் என்னென்ன மெனு என்பதுடன், குழந்தைகள் நல மருத்துவர்கள் குழுவையும் வைத்துள்ளனர். அவர்கள் அடிக்கடி குழந்தைகளைப் பரிசோதித்து, வைட்டமின், இரும்புச்சத்து வகையறாக்கள் உட்பட ஆரோக்யமான மெனுவையும் எழுதித் தருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா
இந்த மையங்களில் கண்காணிப்பு
கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை விட்டுச்செல்லும் தம்பதிகள், தங்களின் செயற்கைக்கோள் தொடர்புடன் கூடிய ஜி.பி.எஸ் வசதியுள்ள கம்ப்யூட்டர் இணைப்பில் தங்கள் குழந்தையைக் கண்காணிக்கலாம். மையத்தில் குழந்தை அடம் பிடிக்கிறதா, மைய ஊழியர்கள் கண்டிக்கின்றனரா, குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதை எல்லாம் கம்ப்யூட்டர் வழியாகவே பார்க்கலாம். அதற்கேற்ப மையத்தையும் தேர்ந்தெடுக்கலாம். பெங்களூர் நகரில் உள்ள பெரும்பாலான மையங்களும் இப்படி ஜி.பி.எஸ் இணைப்பு கொண்ட கேமரா வசதியுடன்தான் இயங்குகின்றன. இதனால், தவறுகள் நடக்காமல் தடுக்க வழி ஏற்படுகிறது.

யூத் தம்பதிகள் டென்ஷன்
இதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு உள்ளது. அவர்களுக்கு இது நல்லது, இது கெட்டது என்று பிரித்துச் சொல்ல கூட்டுக்குடும்பம் இல்லை. எல்லா நல்லது கெட்டதும் டிவி மூலம் வரவேற்பறையிலும், கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட்டிலும் வந்து விழுகின்றன. தங்களைச் சுற்றி நல்லதும் கெட்டதும் கலர் கலராய் வலம் வரும்போது, அதையும் தாண்டி ஒழுக்கத்துடன், முறையுடன் வாழ்வது என்பது சவாலான விஷயம்தான். அந்த சவாலை வெற்றிகரமாக பல இளம் தம்பதியினரும் சமாளித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்!

கிரெச் என்றால் ஜாலி
சாஃப்ட்வேர் பணியில் இருக்கும் மனைவியாகட்டும், கணவனாகட்டும்... வீட்டில் இருப்பதே அரிது; அப்படியே இருந்தாலும், சாப்பிடக்கூட நேரம் இல்லை. வேலை முடிந்து வந்ததும், அப்படியே படுக்கையில்தான் விழ வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு பாசம், நேசம், சந்தோஷம் என உறவுகள் தரும் எல்லா உணர்வுகளையும் இழந்து வருகின்றனர்.
இந்த 24 மணி நேர கிரெச்களால், அவர்களையும் அறியாமல் மேற்கத்திய பாணியில் குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வார இறுதியில் ஒரு நாள் வீட்டுக்கு வந்தால்கூட, ‘‘டாடி... மம்மி... என்னை கிரெச்சுக்கு நாளைக்கு அனுப்பிடுவீங்கதானே’’ என்று கேட்கும் குழந்தைகள்தான் அதிகமாகி விட்டன.  அந்த அளவுக்கு பாசத்தை அந்த பிஞ்சுகளும் இழந்து வருகின்றன. குழந்தைகள் மீதான பிணைப்பு இப்படி அறுபடுவதன் விளைவுகள் என்ன என்பதை இப்போதைக்கு யாராலும் சொல்லத் தெரியவில்லை!
யூத் தம்பதிகளின் பணக்கார வாழ்க்கையைப் பார்ப்பதை விட, அவர்களுக்கு இவ்வளவு பிரச்னைகளா என்று நினைத்தால் ஒரு பக்கம் வியப்பு, மறுபக்கம் வேதனை எழுகிறதுதானே!
மேலும் வாசிக்க... "யூத் தம்பதிகளுக்கு கவலை இல்லை இனி..."

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம்

     இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக சாதனை படைத்த கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.  இதற்கான வீடியோ ஆதாரம் போலீசில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்துகின்றனர். சல்மான் பட் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் 3&1 என்ற  கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முடிந்த கடைசி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 225 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து  அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 102 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில், 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிராட் & ஸ்டூவர்ட் ஜோடி 332 சேர்த்து உலக சாதனை படைத்தது. இந்த ஒரு போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால், தொடரை சமன் செய்திருக்க முடியும். ஆனால், இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இங்கிலாந்தின் Ôநியூஸ் ஆப் வேல்டுÕ பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. முகமது அமீர், முகமது ஆசிப் இருவரை  நோ&பால், வொய்டாக பந்து வீசுமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த சூதாட்டக்காரர் மசார் அஜித் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக அவர்களுக்கு ^1.15 கோடி பணம் கொடுத்துள்ளார். இந்த சூதாட்டத்தில் கேப்டன் சல்மான் பட்,  விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் உட்பட 7 வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட தரகர் மசார் மஜித்தை லண்டனில் கைது செய்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 வீரர்கள் பற்றி தீவிர  விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூதாட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த தரகர்களும் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரத்தை மஜித் கொடுத்துள்ளார். இந்த பிரச்னையில் மேலும் பல தரகர்களுக்கு தொடர்பு இருக்கலாம்  என்று போலீசார் கருதுகின்றனர்.பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் போலீசார் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது, வீரர்கள் சூதாட்டத்தில்ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, வீரர்களின் லேப் டாப், செல்போன், பணம் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரனை நடத்தப்பட் டதை அணி மேலாளர் யாவர் சயீத் உறுதி செய்துள்ளார்.

சூதாட்டம் நடந்த விதம் டி.வி.யில் ஒளிபரப்புலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம் எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோ ஆதராத்தை தனியார் தொலைக்காட்சிகள் நேற்று இரவு போட்டி போட்டு வெளியிட்டன. சூதாட்ட தரகர் மசார் மஜித், கட்டு கட்டாக பணத்தை வைத்திருப்பது, வீரர்களை சந்தித்து பேசுவது, கேப்டன் சல்மான் பட்டுடன் சேர்ந்து புகைப்படத்தில் இருப்பது போன்ற காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.
மேலும் வாசிக்க... "பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம்"மீண்டும் பெட்ரோல் விலை சர்ர்....சர்ர்..

      அடுத்த வாரத்தில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா முதல் 70 பைசா வரை உயர்த்த பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, ‌பெட்ரோலிய நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்‌ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ‌தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளதாகவும், இதனையடுத்து, தொடர்நது பலமுறை, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்ததாகவும், இந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை தங்களிடமே வழங்கி உள்ளதாகவும், இந்நிலையில் தங்கள் கூட்டமைப்பு, மாதத்திறகு இருமுறை, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றியமைக்க முடிவு செய்திருந்ததாகவும், ஆனால், அப்போதைய அளவில் மாற்றம் பெரிய அளவில் இல்லாததால், விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால், தற்போதைய அளவில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பெட்ரோல் விலை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளதாகவும், இதுகுறித்த முறையான அறிவிப்பு ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு வெளிவரும் என்றும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா முதல் 70 பைசா வரை விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க... "மீண்டும் பெட்ரோல் விலை சர்ர்....சர்ர்.."மனைவிக்கு சில அறிவுரைகள்

      மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.

மனைவி தன்னஅழகுப்படுத்தியும், முகமமலர்ந்துமஇருந்தாலகணவனஎதிரவீட்டஜன்னலஏறெடுத்துமபார்க்மாட்டான்.

உங்களமாமியாரநீங்களமதித்தால், உங்களுக்கவருமமருமகளுமஉங்களமதிப்பாள்.

குடும்பத்திலநடக்குமவிவகாரங்களபற்றி வெளியசென்றதூற்றுகின்பெணஆனவள், அந்வீட்டுக்கஎமனாஆகிறாள்.

நல்குணமகொண்மனைவி கிடைப்பதவிமானத்திலசெல்வதபோன்றதாகும். முரட்டமனைவி கிடைத்தாலகட்டவண்டிதானவாழ்க்கை.

கணவனஉண்டபினஉண்டு, உறங்கிபினஉறங்கி, காலையிலஅவனஎழுவதற்கமுனஎழுவார்களபதிவிரதைகள்.

முனகாலத்திலஅதிகாலையிலஎழுந்தவுடனகணவனகாலதொட்டகும்பிடுவார்களபெண்கள். இப்போதகாலதொட்டகும்பிவேண்டாம், கணவனவரும்போதநீட்டிகாலமடக்கினாலபோதும் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் த‌ற்போதைய த‌த்துவவா‌திக‌ள்.

பெ‌ண்க‌ளிட‌ம் இரு‌க்க வே‌ண்டிய குண‌ங்க‌ள் ப‌ற்‌றி ஒளவையா‌ரி‌ன் அமுத வா‌க்‌கினை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.


தாயானவ‌ள் த‌ன் குழ‌ந்தை‌யிட‌ம் எ‌வ்வாறு பாச‌ம் கா‌ட்டுவாளோ, அ‌ப்படி கணவ‌னிட‌ம் பாச‌ம் கா‌ட்ட வே‌ண்டு‌ம். ப‌ணிபு‌ரியு‌ம் வேலை‌க்கா‌ரியை‌ப் பால, ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்.

செ‌ந்தாமரை‌யி‌ல் ‌வீ‌ற்‌றி‌ரு‌‌க்கு‌ம் ல‌ட்சு‌மியை‌ப் போல ‌சி‌ரி‌த்த முக‌த்துட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். கணவ‌ன் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டாலு‌ம், பூமாதே‌வியை‌ப் போல பொறுமையாக இரு‌க்க வே‌ண்டு‌ம். படு‌க்கை அறை‌யி‌ல் கணவ‌னிட‌ம் அ‌ன்பு கா‌ட்டி அரவணை‌த்த‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தேவையான போது ம‌ந்‌தி‌ரியை‌ப் போல, ந‌ல்ல ஆலோசனைகளையு‌ம் கூற வே‌ண்டு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட குண‌ங்களை‌ப் பெ‌ற்ற பெ‌ண்ணே இ‌ல்ல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற இ‌னிய பெ‌ண்ணாக இரு‌ப்பா‌ள்.
மேலும் வாசிக்க... "மனைவிக்கு சில அறிவுரைகள்"google - தமிழில் டைப் செய்ய

      தமிழில் டைப் செய்ய தெரியலியா? கவலையை விடுங்கள். நம்ம   கூகிள் transliration இருக்குதுல.
  கூகிள் பல புதிய வசதிகளை இன்டர்நெட்டில் வழங்கி வருகிறது. தற்போது புதிதாக ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை type செய்வதன் மூலம் தமிழில் எளிமையாக எழுதலாம்.
முதலில் கூகிள் transliration - ஐ டவுன்லோட் செய்ய   இங்கே  கிளிக்கவும்.( படம்: 1 )டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்த பின்னர் task bar - இல் language tool bar - ஐ on செய்யவும். ( படம் - 2 )
படம் 2 இல் EN என்பதே language toolbaar ஆகும். EN - ஐ கிளிக் செய்து TA - ஐ கிளிக்கினால் தமிழில் எழுதலாம்.

இம்முறை மூலம் email, MS OFFICE, NOTEPAD, போன்ற  எதிலும் தமிழால் எழுதலாம்.


 உபயோகித்து பாருங்கள் கூகிள் transliration - ஐ.... உபயோகமாக இருக்கும்.


ஏதேனும் டவுட்டுனா comments - இல் கேட்டகவும்...
மேலும் வாசிக்க... "google - தமிழில் டைப் செய்ய"'விஸ்கி' போட்டால் கார் ஓடும்.

இனி காருக்கு(ம்) ஒரு பெக் விஸ்கி போட்டால் போதும். அடுத்த பெட்ரோல் பங்க் வரை பிரச்னையின்றி ஓடும். ஆம். விஸ்கியில் இருக்கும் 2 மூலப்பொருட்கள், வாகனங்களுக்கு தாவர எரிபொருளாக பயன்படுவதை ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எடின்பெர்க்கில் உள்ளது நேப்பியர் பல்கலைக்கழகம். தாவர எரிபொருள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞானி மார்ட்டின் டாங்னி தலைமையிலான குழுவினர், விஸ்கியை ஆராய்ந்தனர். அதில் உள்ள செம்பு தாதுவில் இருந்து திரவ வடிவில் எடுக்கப்பட்ட ‘பாட் ஆல்’, தானியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ‘ட்ராப்’ ஆகிய 2 மூலப்பொருட்கள் மாற்று எரிபொருளாக பயன்படும் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளுக்கு பூட்டனால் என்று பெயரிட்டுள்ளனர். அதற்கு சர்வதேச காப்புரிமையும் பெற்றுள்ளனர். விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பல்கலைக்கழகத்தின் சார்பில் புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. இதுபற்றி மார்ட்டின் டாங்னி கூறியதாவது: இந்த பயோ-ச்ட்ணீ;ப்யூயலை பெட்ரோல், டீசலுடன் 5 முதல் 10 சதவீதம் வரை கலந்து பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 5 10 சதவீதம் கலந்தாலே சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலை பெருமளவு மிச்சம் செய்ய முடியும். சுற்றுச்சூழல் மாசையும் குறைக்க முடியும். விஸ்கி தயாரிப்பில் பயன்படும் 2 மூலப்பொருட்கள் மட்டுமே இவை என்பதால் செலவும் குறைவாகவே இருக்கும்
மேலும் வாசிக்க... "'விஸ்கி' போட்டால் கார் ஓடும்."சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?

சமையல் என்பது ஒரு கலை. நாம் உணவினை பல வழிகளில் சமைக்கிறோம். கொதிக்கவைத்து, ஆவியில் வேக வைத்து, எண்ணெயில் பொறித்து என இவ்வாறு சமைக்கப்படும் உணவின் நிறத்தை, மணத்தை, ருசியை முக்கியமாக அதில் உள்ள சத்துகளை எப்படி தக்க வைத்து கொள்வது?
• காய்களை கழுவிய பின் நறுக்கவும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள்வீணாகும்.
• எண்ணெயில் பொறித்த உணவை விட வேகவைத்த உணவை உண்பது நல்லது. ஏனெனில் அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.
• அதிகமான தண்ணீரில்,அதிக நேரம் உணவு பதார்தத்தை சமைக்கும் பொழுது அதில் உள்ள சத்துகள் அதிகளவில் வீணாகிறது.ஆதலால் தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருளைப் போடவேண்டும்.
• பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது.
• பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளை நன்றாக கழுவிய பின் சாப்பிடும் பொழுது நமக்கு தேவையான சத்துகள் வீணாகமல் கிடைக்கிறது.
• காய்களை நறுக்கி உடனடியாக சமைக்க வேண்டும். இல்லையேல் நிறம் மாறி வீணாகிவிடும்.
• கீரைகளை 4-5 நிமிடங்கள் வரை மூடாமல் சமைக்க வேண்டும். பிறகு மூடிக் கொள்ளலாம்.
• உருளை, கருனை, போன்ற கிழங்குகளின் தோலைசீவி சமைக்காமல் வேகவைத்து தோலை உரித்தால் உடம்புக்கு மிகவும் நல்லது. தோலிலும் சில சத்துகள் உள்ளது.
• பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.
• முட்டையை கொதிக்கவைத்த தண்ணீரில் 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
• ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் பயன் படுத்தக்கூடாது.
• உணவை சமைத்தவுடன் சூடாக சாப்பிடுவதே நல்லது. திரும்ப திரும்ப சுடவைத்து சாப்பிடுவது கெடுதல்.
தரமான காய்கறிகளையும், தானியங்களையும் வாங்கினால் மட்டும் போதாது. அதனை முறையாக, சத்துகள் வீணாகாமல் சமைக்கவும் கற்று அனைவரும் பயனடையவேண்டும்.
மேலும் வாசிக்க... "சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?"ஆங்கிலத்தில் வீக்

  ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் இல்லாத இந்திய நர்சிங் மாணவியர், ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் நர்சுகளின் தேவை அதிகம் உள்ளது. இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நர்சிங் மாணவியர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய சென்றுள்ளனர். ஆனால், போதிய ஆங்கில அறிவு இல்லாததால், அவர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவு போதாது என்று கூறி, அந்நாட்டு அரசு, விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நர்சிங் மாணவியர் சர்வதேச ஆங்கில அறிவு பரிசோதனை முறையில் குறைந்தப்பட்சம் 6.5 புள்ளிகள் பெற வேண்டுமென நர்சிங் மற்றும் மகப்பேறு மைய வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, அம்மாணவியர் ஆங்கில பேச்சு திறமையில் அதிகபட்ச அறிவை பெற்றிருக்க வேண்டும்.இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய மாணவியர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 400 நர்சிங் மாணவியர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவியருக்கு, "ஆஸ்திரேலிய நர்சிங் கூட்டமைப்பு' ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து, அந்த கூட்டமைப்பின் செயலர் லிசா பிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், "அரசின் இந்த நடவடிக்கையால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலான இந்திய மாணவர்கள் கடன் வாங்கி தங்கள் படிப்பை முடித்து விட்டு, தங்கள் வீட்டை விற்று அந்த பணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர் என்றும், அவர்களின் ஊதியத்தின் மூலம் தான் அவர்கள் அவற்றை திரும்ப பெற முடியும்' என்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியர் கூறியதாவது:பெரும் பணத்தை செலவு செய்து நாங்கள் இங்கு வேலைக்காக வந்துள்ளோம். ஆனால், அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இந்த  நடைமுறையை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த தொடங்கியுள்ளது. நர்சாக பதிவு செய்யவும், வேலைக்காகவும் பெரும் தொகை செலவு செய்துள்ளோம். ஆனால், எங்களை பதிவு செய்யவும் இல்லை. வேலை வழங்கவும் இல்லை.இவ்வாறு மாணவியர் கூறினர்.

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பிரிட்டனும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் வசிப்பதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமென அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரிட்டனில் வேலை விசா பெறவோ அல்லது குடியுரிமை பெறவோ முடியும்.
மேலும் வாசிக்க... "ஆங்கிலத்தில் வீக்"விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Dragஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது. 

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வே���்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!
மேலும் வாசிக்க... "விமானம் பறப்பது எப்படி?"இலவசமாக பேசலாம் வாங்க !

இந்த லிங்கை பயன்படுத்துங்கள் http://evaphone.com/

உலகம் முழுவதும் இலவசமாக உரையாடலாம்,நான் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.ஆனால் அதிக நேரம் பேச முடியாது,ஏதேனும் அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 2 அழைப்புகள்தான் பேச முடியும், முயன்று பாருங்கள்
மேலும் வாசிக்க... "இலவசமாக பேசலாம் வாங்க !"பெயர்கள் உருவான பின்னணி

ஒரு நிறுவனத்தை வெற்றிக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் நிறுவனத்தின் தனித்துவமான பெயர் முக்கியமான பங்காற்றுகிறது.சில பெயர்களை வாசித்தாலே வாயிலே பூராது குண்டக்க மண்டக்கவா இருக்கும். சில நிறுவனங்களின் பெயர்கள் வரலாற்று பின்னணியை கொண்டிருக்கும்.


Skype

நிறுவனத்தின் பொருள் ஒன்று "Sky-Peer-to-Peer" என்ற பெயரில் இருந்துள்ளது. இந்த பெயரை Skyper என மாற்றி இறுதியாக Skype என உருவாக்கி உள்ளார்கள்.

Google

இந்த பெயர் மிகவும் நகைச்சுவயாக உருவாக்கபட்டது.எவ்வளவு தகவல்களை search engine தேடமுடியும். Googol -> No.1 இதனை தொடர்ந்து 100 பூச்சியங்கள் இருக்கும். இதன் ஆரம்பித்தோர் Investors ற்கு presentation செய்யும் போது இதை Google என ஆக்கி விட்டனர்.

Hotmail

Sabeer Bhatia ,Jack Smith  என்ற இருவர்  web interface ஊடாக email ஐ பார்க்கும் எண்ணம் உருவாகிய போது , ஏதாவது ஒரு பெயர் mail என்ற சொல்லில் முடிய கூடியதாக தேடியிருந்தார்கள்.இறுதியாக இவர்கள்  Hotmail  என்ற சொல்லை பெற்று கொண்டனர்.இது HTML என்ற programming language ஐ கொண்டுள்ளமை சிறப்பு அம்சமாக உள்ளது.

Coca-Cola


இந்த பெயர் மென்பானத்தை தயாரிக்க உதவும்; coca இலைகளயும்,kola எனப்படும் விதைகளையும் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.இதனுடைய உரிமையாளர் K என்ற சொல்லை C என மாற்றி Coca-Cola என்ற அழகாக உருவாக்கி உள்ளார்.

Sharp

யப்பானின் இலத்திரனியல் நிறுவனம் இந்த பயரை தமது முதலாவது பொருளான sharp pencil ஐ 1915 ல் உருவாக்கிய பின்னர் , இந்த பெயரையே வைத்து கொண்டார்கள்.

Canon

இது 1933 ம் ஆண்டில் "Precision Optical Instruments Laboratory" என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.2 வருடங்களின் பின்னர் இவர்கள் தமது முதலாவது camera வை வெளியிட்ட பின்னர் Canon என்ற பெயரை உருவாக்கி உள்ளார்கள்.

Volkswagen
 
இது பொதுவாக "மக்களுடய கார்" என கருதப்படுகிறது. அதிகமான மக்கள் கார் வைத்திருக்க வேண்டும் என்பது Adolf Hitler இன் எண்ணமாக இருந்தது. இதனால் "Volkswagen" என்ற  program ஐ ஆரம்பித்து இருந்தார். 2 பெரியவர்களும்,3 குழந்தைகளும் 62 mph ல் பயணம் செய்ய கூடிய காரை உருவாக்குவதில் Hitler ஆர்வமாக இருந்ததால் , இந்த project ஐ Porsche நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக வரலாறு.
மேலும் வாசிக்க... "பெயர்கள் உருவான பின்னணி"

நீச்சல் குளங்களில் ந��ப்பவை

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் அடிக்க விருப்பம். பல்கலைகளகங்களிலே இணைந்த ஆரம்பத்தில் தண்ணீர் இல்லாத வெறும் தரையிலே உங்களிள் Seniors இன் வேண்டுதலால் நீச்சல் அடித்திருப்பீர்கள். எங்களில் பலர் நீச்சல் குளங்களில் (Swimming Pools) நீச்சல் மட்டுமல்லாது வேறு சில நல்ல விடயங்களையும் சத்தமில்லாது செய்து வருகிறார்கள்.இவற்றால் பல நோய் கிருமிகள் பரவி கால போக்கிலே பல உயிர் கொல்லி நோய்களை உண்டாக்கின்றது.

ஐந்து பேரில் ஒருவராவது நீச்சல் குளங்களில் சிறுநீர் (Urine) அடிக்கிறாங்க.இது ஒன்றே நோய் பரப்ப முக்கிய காரணியாகிறது. 20% மக்கள் பொது நீச்சல் குளங்களின் பராமரிப்பையோ,சுத்தத்தையோ கருத்தில் கொள்வதில்லை.30% மக்கள் குளிக்காமலே நீச்சல் குளங்களிற்குள் இறங்குகிறார்கள். இவையெல்லாம் தோல் சம்பந்தமான நோய்களையும்,காதுடன் தொடர்புடைய நோய்களையும் ஏற்படுத்துகின்றது.


நீரில் தோன்றும் பக்ரீரியாக்களால் பிறப்பு உறுப்புகளை பாதிக்க செய்வதோடு மட்டுமல்லாது மிகவும் விரைவாகவே வயது முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. chlorine ஐ சேர்ப்பதற்கு முதல் புதிய நீரை மாற்றுவதற்கு நீச்சல் குளங்களை பாராமரிப்பவர்களிற்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இவர்கள் நீரை மாற்றுவதாக தெரியவில்லை.சில நீச்சல் குளங்களிற்கு சூரிய ஒளி பட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும்.இவற்றை தான் கூடிய கவனம் எடுத்து பாராமரிக்க வேண்டி உள்ளது.


சிறுபிள்ளைகளுடன் நீச்சல் குளங்களிற்கு செல்வதாயின் நீச்சல் குளங்களின் தரத்தை அறிந்த பின் செல்வதே நல்லது. சிலவற்றில் இருந்து 10 அடி தூரத்தில் நின்றாலே ஒருவிதமான மணமும்,நீர் தெளிவற்ற நிலையிலும் இருந்தால் தவிர்து கொள்வதே நல்லது.
மேலும் வாசிக்க... "நீச்சல் குளங்களில் நடப்பவை"எந்திரன் திரைப்பட இசை விமர்சனம்

பாடல்கள்- வைரமுத்து, பா.விஜய் [^], கார்க்கி
இசை- ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ் ரசிகர்கள் [^] பெரிதும் எதிர்ப்பார்த்த ரஜினி [^]யின் எந்திரன் இசை- பாடல்கள் வெளியாகிவிட்டன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வைரமுத்து, பா.விஜய், கார்க்கி பாடல் வரிகளில் ரசிகர்களுக்கு முழுத் திருப்தி கிடைத்துள்ளதா...? பார்க்கலாம்!

சி.டியில் மொத்தம் 7 பாடல்கள். இவற்றில் 6 முழு பாடல்கள். ஒன்று மட்டும் யோகி.பி, பிரவீண் மணியின் ராப் பாடல்.

'புதிய மனிதா... பூமிக்கு வா...' என்ற வைரமுத்துவின் பாடலுடன் ஆரம்பிக்கிறது ஆல்பம்.

ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மகள் கதீஜா குரல்களில் மெதுவாக ஆரம்பிக்கும் அந்தப் பாட்டு, 'நான் கண்டது ஆறறிவு, நீ கண்டது பேரறிவு...' என எஸ்.பி.பியின் குரலுக்கு தாவியதும் உச்சத்துக்குப் போகிறது, நாடி நரம்புகளை முறுக்கேற்றும் விதத்தில். முதல் முறை கேட்கும் போதே உதடுகளில் ஒட்டிக் கொள்கிறது.

அடுத்த பாடல் ஒரு அழகான டூயட். 'காதல் என்பது...' எனத் துவங்கும் இந்தப் பாடலை விஜய் பிரகாஷ்-ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும் போது பெரிதாக ஈர்க்கவில்லை!

'இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே...' பாடலை கார்க்கி எழுதியுள்ளார். இதற்குத்தான் பெரிய அளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பரவாயில்லை கேட்கலாம்....' எனும் அளவுக்குத்தான் இந்தப் பாடல் உள்ளது.

'அரிமா அரிமா...' அடுத்த அட்டகாசம். பின்னி எடுத்திருக்கிறார்கள் இசையமைப்பாளரும் பாடியவரும் எழுதியவரும். வரிக்கு வரி அசத்தல். பாடலின் கம்பீரம் மீண்டும் மீண்டும் கேடகேட்கத் தூண்டுகிறது.

'உன்னைப்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா...' என்ற வரிகளை ஹரிஹரன் பாடும் ஸ்டைல் செம கிக்.

இந்த ஆல்பத்தின் உச்சப் பாட்டு என்றால் அது கிளிமாஞ்சாரோ...தான். மனசைத் துள்ள வைக்கும் மெட்டு. அந்த மெட்டை இருமடங்கு தூக்கிக் கொடுக்கும் பா.விஜய்யின் பாடல் வரிகள். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் ஜாவேத் அலியும் சின்மயியும் பாடியிருக்கும் விதம். அட்டகாசமான, பழங்குடி டைப் பாட்டு.

இந்த ஆல்பத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இதுவே. ரசிகர்களால் அதிக அளவு காலர் ட்யூனாக தேர்வு செய்யப்பட்ட பாட்டும் இதுதான் என்பது கூடுதல் தகவல்.

கடைசி பாட்டு 'ரோ ரோ ரோபோடா...'. பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பாடல் இல்லை. வெறும் விஞ்ஞான வார்த்தைகளைப் போட்டு நிரப்பினால் மட்டும் போதாததல்லவா....

மொத்தத்தில் ஒரிரு பாடல்கள் ஏமாற்றம் தந்தாலும், கிளிமாஞ்சாரோ, அரிமா அரிமா, புதிய மனிதா போன்ற கலக்கல் பாடல்களுக்காக கட்டாயம் ஒரிஜினல் சி.டி வாங்கியே கேட்கலாம்!

source: Thats tamil
மேலும் வாசிக்க... "எந்திரன் திரைப்பட இசை விமர்சனம்"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1