CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்


வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்
சென்னை அருகே உள்ள வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டபுரம். பல்லவர்கால துறைமுக நகரம். இங்குள்ள புடைப்புச்சிற்பங்களும், கோவில்களும் உலகப்புகழ் பெற்றவை. தெய்வங்களின் உருவங்கள், புராணக்கதை காட்சிகள், சமுதாய நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
கடற்கரை கோவில்:
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும். இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
பஞ்ச ரதம்:
பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. முதலாம் மகேந்திரவர்மன், அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது. கோவில்களின் மாதிரிக்காக பஞ்ச ரதங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அர்ச்சுனன் தபசு:
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்-படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம்:
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
எப்படிப் போகலாம்?
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. 
நன்றி: குமுதம் 
மேலும் வாசிக்க... "கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்"கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்!இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,

அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்��ீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி
வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.

காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.

அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது.

இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.

100
கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால்

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.

 ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் வாசிக்க... "கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்!"

தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு

            

தேசிய பாரம்பரிய விலங்காக யானையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
எந்தவொரு மன நிலையில் இருந்தாலும் மனிதனால் வியந்து பார்க்கப்படும் விலங்கு, யானை. உருவத்தில் பெரியதாக இருந்தாலும் மனிதர்களுடன் இயல்பாக பழகும் யானை, இந்தியாவின் கலாசார வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் 25 ஆயிரம் யானைகள் உள்ளன. ஆனால், சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
             எனவே, தேசிய விலங்கான புலியை பாதுகாப்பது போலவே யானையையும் பாதுகாக்க மத்திய அரசு திட்டம் வகுத்தது. யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், யானைகள் வசிக்கும் மாநிலங்களுக்கு கடந்த 1992-ம் ஆண்டில் இருந்தே நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
               இந்த நிலையில், "யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் போலவே, தேசிய யானை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்" என்றும் யானைகள் திட்ட குழு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது. இதற்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, கடந்த 13-ந் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக, தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு"புதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து பாருங்களேன்!!!

------------------------------------------------------------------------------
நண்பர்களே! கடந்த ஒரு வாரமாக நம் தமிழ்வாசியில் இடுகைகள் வெளியிட முடியவில்லை. நான்  புதிய வீட்டிற்கு குடியேறியதால் அங்கு இன்டர்நெட் தொடர்புக்கு காலதாமதம் ஆனதே காரணம்.
------------------------------------------------------------------------------
       
வாழ்கை வண்ணமயமாக இருக்க வேண்டாமா? இந்த கேள்வியை ஒரு தேடியந்திரத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான்.ஆனால் டூப்லட் ஒன்றும் வழக்கமான தேடியந்திரம் இல்லை.அதனால் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வியக்க வைக்கிறது இந்த தேடியந்திரம். கேள்வியோடு நிற்கவில்லை. வாழ்கையை வண்ணமயமாக்க இது வழிகாட்டவும் செய்கிறது. வண்ணமயம் என்று டூப்லெட் குறிப்பிடுவது வாய்ப்புகளை.அதாவது மாற்று வாய்ப்புகளை. 

உலகின் எதற்கும் மாற்றுகளை முன் வைப்பது தான் இதன் சேவை. மாற்றுகளுக்கான தேடியந்திரம் என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் டூப்லெட்டில் எந்த தலைப்பை அடித்தாலும் அதற்கான மாற்று வாய்ப்புகளை தேடித்தருகிறது. மற்ற தேடியந்திரங்களில் குறிச்சொல்லை அடித்ததும் தேடல் முடிவுகளின் பட்டியல் வருவது போல டூப்லெட்டில் குறிச்சொல்லை அடித்ததுமே அதற்கான மாற்றுகள் வந்து நிற்கின்றன.சாப்ட்வேரில் துவங்கி கார்கள்,மருத்துவம்,கப்புரிமை குறிகள்,திரைப்படங்கள்,கலைஞர்கள்,தத்துவம் என எதைப்பற்றி வேண்டுமானாலும் தேடுங்கள்,மாற்று வாய்ப்புகளை காட்டுகிறோம் என்கிறது டூப்லெட்.

ஒரே மாதிரியான பாட்டை கேட்டு கேட்டு அலுத்து போய் வேறு வகையான பாடல் தேவை என்றாலும் சரி,இல்லை பிரபலமாக இருக்கும் விண்டோசுக்கு மாற்று இருக்கிறதா என அறிய விரும்பினாலும் சரி டூப்லெட் மாற்று வழி காட்டுகிறது. ஆனால் எல்லாவற்றுக்குமே மாற்று வாய்ப்புகள் வந்து நிற்கும் என்று சொல்ல முடியாது.பல விஷயங்களுக்கு பதில் கேட்டால டூப்லெட் கையை விரிக்கிறது.இந்த குறையை டூப்லெட்டே நன்கு உணர்ந்திருக்கிறது.இப்போது தான் துவங்கப்பட்டுள்ள சேவை என்பதால் எல்லாவற்றிற்கும் மாற்று காட்ட முடியவில்லை;

எனவே சிலவற்றுக்கு முடிவுகள் வரவிட்டால் கோபிக்காதீர்கள் என கெஞ்சும் டூப்லெட் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் இவற்றுக்கும் மாற்றுகளை தேடித்தருகிறோம் என்கிறது. அது மட்டுமல்ல;இது போன்ற தருணங்களில்,மன்னிக்கவும் மாற்று கைவசம் இல்லை,உங்களுக்கு தகுந்த மாற்று தெரிந்தால் பரிந்துரைக்கவும் என்றும் கேட்டுக்கொள்கிறது. மாற்று தேடும் போது உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று சொல்லப்படுவது முரணானது என்றாலும் பலதரப்பட்ட இணையவாசிகளின் பங்களிப்பால் மாற்று பட்டியல் பரந்து விரிய வாய்ப்பிருக்கிறது.

அதோடு நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிப்பது இணையத்தின் தனிச்சிறப்பல்லவா? மேலும் சோதித்து பார்க்கும் நோக்கத்தோடு இந்த தேடியந்திரத்தை பயன்படுத்த முயல்பவர்கள் தங்களுக்கு தெரிந்த மாற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு சோதித்து பார்க்கும் போது இந்த சேவை சுவையாகவே இருக்கிறது. விண்டோசுக்கு மாற்று என்று கேட்டால் மேக்,லைனக்ஸ்,ஆப்பில்,உபுன்டு என பெரிய பட்டியலை தருகிறது.ஒபாமாவுக்கு மாற்று என்றால் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட மெக்கெயினில் ஆரம்பித்து புஷ்,கிளிண்டன்,மெடிவிடேவ்,ஹிலாரி உள்ளிட்டோர் பெயரை பட்டியலிடுகிறது. பிரிட்னிக்கு மாற்றாக கிறிஸ்டினா,ஜெசிகா ,மடோனா,பெயர்களை முன் வைக்கிறது.எம்பி3 க்கு மாற்றாக இபாட்,எம்பி4 என பட்டியலிடுகிறது.ஐபாடுக்கு மாற்றாக ஜூன் பெயரை முதலில் சொல்கிறது. நல்ல தேடியதிரத்துக்கு அழகு பிராந்தியத்தன்ம் கொண்டிருக்க வேண்டும்.டூப்லெட் இந்த விஷயத்திலும் அசத்துகிறது. 

இந்தியா தொடர்பான தேடல்களை புரிந்து கொண்டு பதில் அழகாக சொல்கிறது.சச்சினுக்கு மாற்றாக லாரவையும் திராவிட்டையும் சொல்வதோடு விஜய்க்கு மாற்று அஜித் என்கிறது. எம்ஜிஆர்க்கு மாற்று எம் ஆர் ராதா என்றும் சிவாஜி என்றும் சொல்கிறது. சிவாஜிக்கு மாற்று கேட்டால் தசாவதாரம் என்கிறது.தமிழுக்கு மாற்றாக இந்தி,வடமொழி,தெலுங்கு என்கிறது. ஆனால் தாகூருக்கும்,பாரதிக்கும் மாற்று கேட்டால் முழிக்கிறது. மொத்ததில் புதுமையான சுவாரஸ்யமான தேடியந்திரம் தான்.
மேலும் வாசிக்க... "புதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து பாருங்களேன்!!!"தாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்: போட்டோ எடுத்து டாக்டர் சாதனை

லண்டனை சேர்ந்த லூயிஸ் என்ற கர்ப்பிணி பெண் தனது கணவர் சாம்ஹென்றியுடன் பேராசிரியர் ஸ்டூவர்ட் கேம்பெல் என்பவரிடம் “ஸ்கேன்” பரசோதனைக்கு வந்தார்.
இவர் லண்டனில் உள்ள பிரபலகிங்ஸ் கல்லூரியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ துறையின் தலைவ ராக பணியாற்றியவர்.
இவர் லூயிஸ் வயிற்றில் வளரும் கருவை “ஸ்கேன்” மூலம் பரிசோதித்தார். அப்போது கருவில் இருந்த குழந்தை அழகாக சிரித்தது. இதைப் பார்த்த டாக்டர் கேம்பல் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் அது 17 வாரமே ஆன கருவாகும்.
உடனே அக்காட்சியை அவர் போட்டோ எடுத்தார். இதற்கு முன்பு “ஸ்கேன்” செய்த குழந்தைகளிடம் இருந்து அவர் சிரிப்பை பார்க்கவில்லை. மாறாக 18 மற்றும் 19 வார குழந்தை களின் அழுகையுடன் கூடிய முகத்தை பார்த்து இருக்கிறார்.
இந்த போட்டோவை 3டி மற்றும் 4டி வசதியுள்ள “ஸ்கேனர்” மூலம் அவர் எடுத்து சாதனை படைத்துள்ளார். தான் எடுத்த போட்டோவை குழந்தையின் பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைகளின் சிரிப்பை 22 வாரங்களுக்கு பிறகுதான் பார்க்க முடியும். ஆனால் நான் 5 வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவம். இது ஒரு சாதனையாகும் என தெரிவித்தார்.
மேலும் வாசிக்க... "தாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்கும்: போட்டோ எடுத்து டாக்டர் சாதனை"

பட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்


            உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் இலங்கை, நேபாளம் மற்றும் பாகிஸ்தானை விட கீழே உள்ளது இந்தியா (67வது இடம்).
            2010-ம் ஆண்டுக்கான "உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்" திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி பேர் பட்டினியால் தவிக்கிறார்களாம். அதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்பு காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும், இன்று கிட்டதட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது.
             அதேநேரம், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதில் இன்னும் உலகம் முழுக்க போதிய விழிப்புணர்வற்ற நிலையே உள்ளதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்கள் சத்தான ���காரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையை பல நாடுகள் பின்பற்றுவதில்லை என்று வாசிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத் தலைவர் மேரி ரவுல் தெரிவித்துள்ளார்.
             இந்தப் பட்டியல்படி, பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத். இதற்கு அடுத்த இடம் மலேசியாவுக்குக் கிடைத்துள்ளது. 84 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. பட்டினி ஒழிப்பில் இலங்கை 39வது இடத்தையும், நேபாளம் பாகிஸ்தான் 57 வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவோ 67வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ஏட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இங்கே, பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவு உலகின் எடைகுறைந்த, நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இது வெறும் 5 சதவீதமாத உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65வது இடத்திலிருந்தது. இந்த ஆண்டு 67வது ஆண்டுக்கு நழுவியிருக்கிறது.
மேலும் வாசிக்க... "பட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்"அப்பாடா! ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு!!!

           ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இடம் பெற்றுள்ளது.
          ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்சு ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இவற்றுக்கு வீட்டோ அதிகாரமும் உள்ளது. அதே சமயத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள், கண்டங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. ஐ.நா.வின் நிறுவன உறுப்பு நாடான இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், 1991-ம் ஆண்டுக்கு முன்பு, 6 தடவை நிரந்தரம் அல்லாத உறுப்பினர் அந்தஸ்துடன் இடம்பெற்று இருந்தது. அதன்பிறகு, 19 ஆண்டுகளாக, இந்தியா இடம்பெற முடியவில்லை. இருப்பினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விஸ்தரிக்க வேண்டும் என்றும், நிறைய நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் இந்தியா குரல் கொடுத்து வந்தது.
          இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபை ஆண்டு கூட்டத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளின் தேர்வு நடைபெற்றது. அதில், ஆசிய நாடுகளுக்கான இடத்துக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டது. களத்தில் இருந்த கஜகஸ்தான், சில நாட்களுக்கு முன்பு விலகிக் கொண்டது. இதையடுத்து, இந்தியா போட்டியின்றி அபரிமிதமான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றது. ஐ.நா. பொதுச்சபையின் 191 நாடுகளில் 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டன. ஒரு நாடு, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
            மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த மாதம் 10 நாட்கள் நியூயார்க்கில் முகாமிட்டு இருந்தார். அப்போது அவர், ஐ.நா. பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க வந்த 56 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன் விளைவாகவே, இந்தியாவுக்கு இந்த வெற்றி கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. இதுபற்றி ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் ஹர்தீப்சிங் புரி கூறுகையில், "நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஒவ்வொரு ஓட்டையும் எங்களுக்கு ஆதரவாக திருப்பினோம்" என்றார். இந்த வெற்றியின் மூலம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பலமாக எழுப்ப வழி ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
             இதுபோல், ஆப்பிரிக்க நாடுகள் பிரிவில் தென் ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்க நாடுகள் பிரிவில் மெக்சிகோவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாடுகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்கும்.
மேலும் வாசிக்க... "அப்பாடா! ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு!!!"கணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி!!!

             கல்லறையில் பிணத்தை தோண்டி ரத்தம் குடிக்கும் காட்டேரியை பற்றி கட்டுக்கதைகள் படித்திருப்பீர்கள். ஆண் ரத்தத்தை குடிக்கும் அணங்கு என்றும் கூட சினிமாக்களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் இப்படி இந்தக் காலத்திலும் சிலர் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்.         
            ஆஸ்திரேலியாவில் ஒரு பெண், தன் அன்பை வெளிப்படுத்த உச்சகட்டமாய், கணவனின் ரத்தத்தை குடிக்கிறாள். இவளின் பெயர் கிரிஸ் பாய்சன். (பெயரிலேயே விஷம் இருக்கு...) ‘நான் என் கணவனின் அனுமதியுடன் தான் அவரது ரத்தத்தை குடிக்கிறேன். காதலன் தன் காதலியின் ரத்தத்தை குடிப்பதும், காதலன் ரத்தத்தை காதலி குடிப்பதும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உச்சகட்ட உத்தி தான். நான் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெண்கள், ரத்தம் குடிக்கின்றனர்’ என்கிறார் பாய்சன்.

           ‘விலங்கினங்களின் ரத்தத்தை குடிக்கும் வவ்வால்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதும் மனிதர்கள், தங்கள் அன்பை வெளிப்படுத்த தன் மனைவி, காதலி ரத்தத்தை குடிக்கின்றனர். அதுபோல பெண்களும் செய்கின்றனர். டிவி, இன்டர்நெட்டை பார்த்து சூப்பர்மென் போல தாங்களும் செய்யலாம் என்று நினைப்பதன் விளைவே இது; செக்ஸ் செய்கையின் உச்சம் தான் இது’ என்கிறார் சிட்னி பல்கலைக்கழக செக்சாலஜி பேராசிரியர் ஆடம்.

           ‘பயம் தான் போபியா. அதுபோல, செக்ஸ் குஷிக்காக ரத்தம் குடிப்பது என்பது ‘ரென்பீல்டு சிண்ட்ரோம்’ என்ற மனோவியாதி. பெரும்பாலும், ஆண் தான் பெண்ணின் ரத்தம் குடிப்பான். ஆனால், ஆஸ்திரேலியாவில் தலைகீழாகவும் நடக்கிறது’ என்று குயின்ஸ்லாந்து மனோதத்துவ நிபுணர் டேவிட் கீவொர்த் கூறினார்.

           சிட்னி நகரில் பல ஆண்டுக்கு முன் மோர்பஸ் என்ற சிறுவன், தன்னுடன் சண்டை போட்ட நண்பனை தாக்கி, அவன் ரத்தத்தை குடித்தான். அதன் பின் பெண்களின் ரத்தத்தை மட்டும் குடிக்க ஆரம்பித்தான். ‘பெண்ணின் ரத்தம் குடித்தால் ரொமான்சில் மிதக்கிறேன்’ என்று சொன்னான். இவனைப் போல, ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் 300 பேர் ரத்தம் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் பற்றி மனோதத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க... "கணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி!!!"தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

தேசிய அடையாள அட்டையில் இடம்பெறும் 10 இலக்க எண்ணையே செல்போன் எண்ணாக வழங்குவது குறித்து சி-டாட் பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கென தனி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் ஒரு கோடி பேர் புதிதாக செல்போன்களை வாங்குகின்றனர். இதனால் 10 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. 10 இலக்க எண்கள் முற்றிலுமாக தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடுகளை உருவாக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை சி-டாட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 11 இலக்கம் அல்லது 12 இலக்க எண்ணை ஒதுக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. அவ்விதம் ஒதுக்கினாலும் அதிகரித்து வரும் செல்போன் உபயோகிப்பால் இந்த எண்களும் தீர்ந்துவிடும் வாய்ப்புள்ளது.
எனவே ஒரே எண்ணை பல வகைகளில் பயன்படுத்தும் முறையைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சி-டாட் செயல் இயக்குநர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ளது போல சமூக பாதுகாப்பு எண், தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே எண் இருப்பது போல செல்போன் எண், ஓட்டுநர் உரிமம் அனைத்துக்கும் ஒரே எண் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தற்போது இது பரிசீலனையில் உள்ளது. இதை அமல்படுத்துவது குறித்து உரிய அனுமதி பெற்று அதன் பிறகே சோதனை அடிப்படையில் பயன்படுத்தி பின்னர் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என்றார் ஆச்சார்யா.

கடந்த மே மாதம் இது தொடர்பான கள ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு எவ்வள��ு செலவாகும் என்பதும் இறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் ஓராண்டுக்குள் இது இறுதி வடிவம் பெறும் என்றும் ஆச்சார்யா நம்பிக்கை தெரிவித்தார்.

2003-ம் ஆண்டில்தான் செல்போன்களுக்கு 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. 2030-ம் ஆண்டில் செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 75 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதே செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 44 கோடியைக் கடந்துவிட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள 10 இலக்க எண்ணுக்கு மாற்றாக கூடுதலாக எண்கள் அதாவது 11 இலக்கமோ அல்லது குறைவாக 9 இலக்கமோ உபயோகிக்க வேண்டுமென்றால், செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெருமளவு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு செல்போன் எண் முறையை சீரமைக்க அரசும் தனியார் செல்போன் நிறுவனங்களும் தீவிரம் காட்டுகின்றன.
1993-ம் ஆண்டு தொலைபேசி எண்கள் முறை வகுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவதாக 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

செல்போன் எண்கள் மாற்றப்படுவது இந்தியாவில் மட்டும் நிகழ்வதல்ல. உபயோகிப்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ற சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?"10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்

           
        ஆஸ்திரேலியாவில் வரும் பத்தாம் தேதியன்று திருமணம் செய்து கொள்ள பெரும்பாலான காதலர்கள் முடிவு செய்துள்ளனர். 10.10.10 என வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வரும் என்பது கூடுதல் சிறப்பாகும். 
          சிட்னி நகரில் 106 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைய பதிவு செய்துள்ளனர். திருமண பதிவு மிக அதிக அளவில் இருக்கும் என்று சிட்னியில் உள்ள பிறப்பு, இறப்பு, திருமண பதிவு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார். இந்த அலுவலகம் 1856 முதல் செயல்படுகிறது. ஓராண்டுக்கு முன்பாகவே அக்டோபர் 10-ம் தேதியைத் தேர்வு செய்து பதிவு செய்தவர்கள் பலர் என்றும் அவர் கூறினார்.  
         நியூமராலஜி இணையதளத்தில், அக்டோபர் 10-ம் தேதி புதிய தொடக்கம், சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டு தினமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
         திருமண பதிவு அலுவலகத்தில் 1996-ம் ஆண்டிலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலானோர் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.  இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திருமணம் செய்து கொள்ள பதிவு செய்தோர் பலர்.  
         இப்போது 10-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பலரும் திருமணம் செய்து கொள்ள பதிவு செய்துள்ளனர். சிலர் அந்த நேரம் கிடைக்காததால் 10.10-க்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க... "10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்"

பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியுமா?

           ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு என்பது தெரியவந்துள்ளது.  
           ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடல் உழைப்பு அதிகரிக்கும் போதும், வெப்பமான இடத்தில் செல்லும் போது வியர்வை வெளியேறுவது வழக்கம். உடல் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காமல் இருப்பதற்காக இயற்கையாகவே அனைவருக்கும் வியர்க்க தொடங்கி விடும்.  
          ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளர். ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
           ஒரே மாதிரியான வெப்பநிலை உள்ள இடத்தில் ஆண்களையும், பெண்களையும் தனித்தனியாக சைக்கிள்களை ஓட்டச் செய்தனர். இருபிரிவினரும் ஒரு அளவு நேரம் சைக்கிளில் சென்றபோதிலும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே வியர்வை வெளியேறியது. 
          பெண்கள் உடலைவிட ஆண்கள் உடலில் நீர்சத்து அதிகம். இதனால்தான் ஆண்களுக்கு எளிதில் வியர்த்து விடுகிறது. தவிர ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான ஹார்மோன் வேறுபாடும் இந்த வியர்வை அளவு வேறுபாட்டுக்கு ஒரு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 
           அதிக வெப்பமான இடங்களில் செல்லும் போது வியர்வை வெளியேறுவதன் மூலம் தான் உடலில் வெப்பநிலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இதுபோன்ற சமயங்களில் பெண்களுக்கு வியர்வை போதிய அளவு வெளியேறாது. இதனால் அவர்களால் வெப்பநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதனால் வெப்பநிலை அதிகமுள்ள இடங்களில் பயணிக்கும் போது பெண்கள் எளிதில் களைப்படைய வாய்ப்புகள் உள்ளன.
           பெண்கள் கடுமையாக வேலை செய்தாலும் அவர்களுக்கு எளிதில் வியர்ப்பதில்லை. ஆனால் ஆண்களாக இருந்தால் எளிதில் நெற்றி வியர்வையை நிலத்தில் கீழே விழச்செய்து தங்கள் "உழைப்பை' வெளிப்படுத்தலாம்.
மேலும் வாசிக்க... "பெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியுமா?"

மகான் - சிறுகதை

  
       ஒரு குறுநில மன்னன் தன நாட்டை நகர் வலம் வந்தான். அப்போது அங்கிருந்த பிச்சைக்காரத் துறவி ஒருவர் மன்னனிடம் பிச்சை கேட்டான். மன்னன் அவனை நோக்கி, என் அமைதியை கெடுக்காதே என சொல்லி விரட்டினார். உடனே பிச்சைக்காரத் துறவி உங்களோட அமைதி கெடகூடிய நிலையில் இருந்தால் அது அமைதியில்லை என்று கூறினான்.
     உடனே மன்னன் சுதாரித்துக் கொண்டு தன்னிடம் பிச்சை கேட்டவன் பிச்சைக்காரர் வேடத்தில் இருக்கும் ஒரு துறவி என்பதை புரிந்து கொண்டு துறவியே உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் என்னிடம் கேளுங்கள் என்று பதிலுரைத்தான். அதற்கு அந்த பிச்சைக்காரன் , நான் கேட்பதை உங்களால் கொடுக்க முடியாது என்று கூற, அதை கேட்டவுடன் மன்னனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
      மன்னன் நகர்வலத்தை நிறுத்தினான். பிச்சைக்காரனை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்பினான். இப்பொது கூறுங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்? என்றான். உடனே  பிச்சைக்காரன் தனது பிச்சை பாத்திரத்தைக் காட்டி இது நிறைய தங்கக் காசுகள் போடுங்கள் என்று கூறினான். பூ இவ்வளவு  தானா? என்று  கேட்ட மன்னன், கை தட்ட அங்கிருந்த காவலாளிகள் ஓடிவந்தனர். உடனே தாம்பாளம் நிறைய தங்கக் காசு வந்தது.
      மன்னனே தனது கையால் தங்கக் காசுகளை அள்ளி, அள்ளி பிச்சைக்காரனின் பாத்திரத்தில் போட்டான்.. ஆனால் அந்தப் பாத்திரம் நிறையவே  இல்லை. கஜானாவில் இருந்த எல்லாத் தங்கக் காசுகளையும் போட்டும், பாத்திரம் நிறையவில்லை. கடைசியில் மன்னன் அவன்கிட்ட சரணாகதி அடைந்தான். அப்ப அந்த பிச்சைக்காரத் துறவி  சொன்னான், அரசே! இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல எப்பேர்பட்ட சக்ரவர்த்திகளாலும் நிரப்ப முடியாது.
       ஏனென்றால், இது சாதாரணப் பாத்திரமல்ல, பேராசைகளோடு வாழ்ந்து, தன்னுடைய ஆசைகள் நிறைவேறாமல் செத்துப் போன ஒரு மனிதனோட மண்டையோடு. ஆக அசைகளை அடக்கி போதுமென்ற மன நிறைவோடு வாழ்பவனுக்கு பூமியே சொர்க்கம். அதேபோல் அசைகளை வென்று ஒதுக்கிய மனிதனே மகானாகிறான்.

இன்டலி மற்றும் தமிழ் 10 - இல் உங்கள் ஓட்டை பதிவு செய்து, இன்னும் நிறைய நண்பர்கள் படிப்பதற்கு உதவி செய்யுங்கள்...
மேலும் வாசிக்க... "மகான் - சிறுகதை"வாகன புகை

     
     வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையை சுவாசிப்பதால் ஆண்டுக்கு 44 லட்சம் பேர் நோய்வாய்பட்டு இறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
           வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் பிரச்னை குறித்து இரோப்பியன் ஹார்ட் ஜர்னலில் வெளியான தகவல் வருமாறு:
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் இருந்து நைட்ரோ ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வெளியாகிறது. அது காற்றில் வேகமாக கலந்து விடுகிறது. புகை கலந்த காற்றை சுவாசிக்கும் மனிதருக்கு மூளை, ரத்தநாளம் போன்றவை பாதிக்கின்றன. அடிக்கடி வாகன புகையை சுவாசிப்பவர்கள் எளிதில் நோய்வாய்படுகின்றனர்.
           இதனால் ஆண்டுதோறும் நுரையீரல், மூளை செயலிழப்பு உட்பட பல நோய்கள் தாக்கி  பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது உலக அளவில் மனிதன் இறப்புக்கு காரணமான வெளிக்காரணிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுகுறித்து 7,500 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
           மாசடைந்த காற்றை சுவாசித்ததால் ரத்த ஓட்டத்தை உடலின் பாகங்களுக்கு சீராக செல்ல விடாமல் தடை செய்து நோயில் தள்ளுவது தெரிய வந்தது. நோயாளிகளில் 21 சதவீதம் பேர் வாகன புகை சுவாசிப்பால் பாதிக்கப்பட்டதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க... "வாகன புகை"அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட விபத்தே மிகவும் கொடியது!

       
   உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிட சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம் என்று சுற்றுச் சூழல் பேராசிரியர் ஜோயல் ஷ்வார்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
           சாலை விபத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோயால் உயிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சுற்றுச் சூழல் மற்றும் தொற்றுநோய் பரவல் பிரிவு பேராசிரியரான ஜோயல், பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதலால் உயரிழப்பவர்களின் எண்ணிக்கையை விட, அன்றாடம் எதிர்கொள்ளும் சாலை விபத்து மற்றும் புற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவித்தார்.


             பயங்கரவாத தாக்குதலில் மரணமடைபவர்களை விட சாலை விபத்து மற்றும் புற்று நோயால் உயிரிழப்போர் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஓராண்டில் நிகழ்ந்த உயிரிழப்புகளை பட்டியலிட்டு, அதில் மரணத்துக்கான காரணத்தை பட்டியலிட்ட அவர், 6,700 பேரில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார் என கணக்கிட்டுள்ளார்.

             மும்பையில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து பலர் பீதியடைந்துள்ளனர். காரணம் இந்தத் தாக்குதலில் 166 பேர் உயிழந்தனர். ஆனால் மும்பையில் உள்ள 1.36 கோடி மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தோர் விகிதம் மிக மிகக் குறைவு என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 10 லட்சத்தில் ஒருவர் மட்டுமே பயங்கரவாத தாக்குதலில் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
          வீடுகளில் இருப்பவர்களுக்கு மரணம் நேரிடாது என்று கருத முடியாது. அவர்களது வீட்டின் மீது பஸ் மோதி விபத்து நேரிடலாம். அல்லது புற்றுநோயால் மரணம் சம்பவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
             510 பேரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.மாசடைந்த சுற்றுச் சூழல் காரணமாக அமெரிக்காவில் 4 சதவீதம் பேர் உயிரிழப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க நகரங்களைச் சுற்றி வருவதன் மூலம் உங்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 
          இதனுடன் ஒப்பிடுகையில் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்க... "அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட விபத்தே மிகவும் கொடியது!"

கிர்ர்ர்ரடிக்கும் "வ" குவார்ட்டர் கட்டிங்


          
          குவார்ட்டர்னு பேரு வச்சாலே ஒரு கிக்குதான் போலிருக்கு! வ என்று பெயர் மாற்றிவிட்டாலும், ரசிகனின் நாவில் நர்த்தனமாடுவது அந்த பழைய அறிவிப்புதான். அதாவது குவாட்டர் கட்டிங்! மிர்ச்சி சிவா நடித்திருக்கும் இந்த படத்தை தமிழ் படம் என்ற காவியத்தை(?) தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ்தான் தயாரித்திருக்கிறது.
           தமிழ் படத்தின் தாறு மாறான ஹிட் குவார்ட்டர் விலையையும் கன்னா பின்னாவென்று ஏற்றி விட்டிருப்பதுதான் ஆச்சர்யம். முந்தைய படத்தை போலவே இந்த படத்தையும் வெளியிடுகிற உரிமை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனத்தின் கையில்தான். விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்திற்கு இருக்கிற வரவேற்பு அளவுக்கதிமாக இருப்பதால் துரை.தயாநிதியும் அளவு கடந்த சந்தோஷத்திலிருக்கிறார்.
             கிட்டதட்ட எட்டு கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகியிருக்கிறதாம் இந்த படம். எந்திரன் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் இந்த படத்தையும் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்ட க்ளவுட் நைன் நிறுவனத்திடம், படத்தை தீபாவளிக்கு வெளியிடுங்க என்று கேட்டுக் கொண்டார்களாம் இப்படி பெரும் விலை கொடுத்தவர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பட்டாசு திருநாளில் திரைக்கு வரப்போகிறது குவார்ட்டர் கட்டிங்.
மேலும் வாசிக்க... "கிர்ர்ர்ரடிக்கும் "வ" குவார்ட்டர் கட்டிங்"சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.

  
   சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது. அவரது வேடத்தில் நடிக்கும் வித்யா பாலன், சில்க் போல இடுப்பை வளைத்து நெளித்து கிக்காக டான்ஸ் ஆட ஒரு மாதம் பயிற்சி எடுக்கிறார். தனது காந்தக் கண் கவர்ச்சியால் இளவட்டங்களை கவர்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1980களில் அவர் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்ற அளவுக்கு பெரும்பாலான படங்களில் நடித்தார். கமல், ரஜினி உள்ளிட்ட எல்லா நடிகர்களுடனும் சில்க் ஸ்மிதா நடித்திருக்கிறார்.               
         ரசிகர்களை மகிழ்வித்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. பட அதிபர்கள், நடிகர்கள், கால்ஷீட் மேனேஜர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். திடீரென்று ஒருநாள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் அவரது வாழ்க்கை கதையை படமாக்குகிறார் இந்தி படத் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். இதற்கு டர்ட்டி பிக்சர் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க பல்வேறு நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் வித்யா பாலன் பொருத்தமாக இருப்பார் என்று முடிவானது. ஸ்மிதாவின் கண், உதடு, இடுப்பை வளைத்து ஆடும் நடன அசைவு பேசப்பட்டதால் அவரைப்போலவே ஆடுவதற்காக ஒரு மாதம் தென்னிந்திய நடன இயக்குநரிடம் பயிற்சி பெறுகிறார் வித்யா. "இது கவர்ச்சி படம் என்ற நோக்கத்தில் அல்லாமல் ஒரு நடிகைக்கும், தயாரிப்பாளருக்கும் இருந்த உறவை சித்தரிக்கும் படமாகவே இருக்கும். நடிப்பு திறமை வாய்ந்த வித்யாபாலன், சில்க் வேடம் ஏற்பது பொருத்தம். இயக்குநர் மிலன் லுத்ரியாவும், நானும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம். நடன அம்சமே படத்தில் பிரதானம். இதில் நடிக்கும் கதாநாயகனை முடிவு செய்தபிறகே வித்யாபாலன் நடன பயிற்சி மேற்கொள்வார்", என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.  
மேலும் வாசிக்க... "சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது."சூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெளியிடுவது?


            சூர்யா நடித்திருக்கும் ரத்த ச‌ரித்திரம் தெலுங்கு, இந்தியில் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. தமிழில் ஒரேயொரு பாகம். ஏன் இந்த பாரபட்சம்?

            சூர்யா நடித்திருக்கும் சூ‌ி கதாபாத்திரம் முதல் பாகத்தில் மொத்தம் பத்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. இரண்டாம் பாகத்தில்தான் சூ‌ரியின் விஸ்வரூபம். சூர்யா வெறும் பத்து நிமி���ம் வரும் படத்தை எப்படி வெளியிடுவது?

         அதனால்தான் தமிழில் மட்டும் இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒரே பாகமாக வெளியிடுகிறார்கள். அப்படியானால் ஒரே டிக்கெட்டில் இரண்டு படமா என்று சிவராத்தி‌ி ஞாபகத்தில் குதிக்காதீர்கள்.
         
           முதல் பாகம், இரண்டாம் பாகம் இரண்டையும் எடிட் செய்து ஒரே பாகமாக்கியிருக்கிறார்கள்.
தீபாவளிக்கு ரத்த ச‌ரித்திரம் திரைக்கு வருகிறது.
மேலும் வாசிக்க... "சூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெளியிடுவது?"

எங்க போனாங்க பிச்சைக்காரங்க?

   
    காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு டில்லியில் இருந்து 60 ஆயிரம்பிச்சைக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

        டில்லியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் 30 சதவீதத்தினர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். 69.94 சதவீதம் ஆண்கள், 30.04 சதவீதம் பெண்களும் இதில் அடங்கும். கடந்த ஒருவாரத்துக்கு முன்பெல்லாம், கல்காஜி கோயிலில் ஒருவர் சாதாரணமாக 600 பிச்சைக்காரர்களை பார்க்க முடியும்.இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்காக 71 நாடுகளில் இருந்து டில்லி வந்துள்ள வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில், நல்ல பெயர் எடுப்பதற்காக, பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர். தவிர, பாதை ஓரங்களில் பலூன், பேனா மற்றும் பத்திரிகை போன்ற சிறு பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போன்றவர்களும், ஒரே இரவில் துரத்தப்பட்டுள்ளனர்.
         அரசின் இந்த செயலுக்கு, மனித உரிமை மற்றும் அரசு சாராத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதுகுறித்து சமூக சேவகர் பிரகாஷ் சிங் என்பவர் கூறுகையில்,"" எங்களுக்கு வந்த தகவல்கள் படி, ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் பலர் ரயில்வே ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிற மாநில நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களிடம், காமன்வெல்த் போட்டி முடிந்த பின் தான் இங்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளனர்,'' என்றார்.
மேலும் வாசிக்க... "எங்க போனாங்க பிச்சைக்காரங்க?"பி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்

              ஆளும் காங்கிரஸ் கட்சியே இப்படி சைபர்கிரைம் குற்றம் புரியலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.,வின் பெயரில் மோசடி நடந்திருப்பதாக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பா.ஜ., வின் மேலிடம். காங்கிரசுக்கும் ,பா.ஜ.,வுக்கும் இடையில் முக்கிய பிரச்னை மையமாக வைத்து பெரும் பிரச்னை இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தற்போது இரு கட்சிகள் இடையே இணயைதள விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது.

              அகிலஇந்திய காங்கிரஸ் கட்சிதான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பிஜேபி.காம் என அட்ரஸ் பாரில் அடித்து பிரவுஸ் செய்யும் போது இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்கிறது. பா.ஜ.,வின் உண்மையான முகவரி பிஜேபி.ஒஆர்ஜி ஆகும். பாரதியஜனதா கட்சியின் இணையதளத்தை பார்க்க விரும்புபவர்கள் பெரும்பாலும் பிஜேபி.காம் என டைப் செய்வர். எனவே இதனை கருத்தில் கொண்டு இவ்வாறு டொமைன் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

         இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, கட்காரி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது, பி.ஜே.பி., பெயரை தவறாக பயன்படுத்தி சைபர் குற்றம் புரிந்துள்ள காங்கிரசுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த நோட்டீசில் இது போன்ற விஷம செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் , தங்களிடம் கேட்டால் இந்த பெயரை நாங்களே தருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "பி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1