CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



விளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு


எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க உள்ளேன் என நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.
 


கமலின் பேட்டி:

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
மேலும் வாசிக்க... "விளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு"



கல்வி முறையில் மாற்றம் தேவை

பகு‌த்த‌றிவு‌ப் பகலவ‌ன் த‌ந்தை‌ப் பெ‌ரியா‌ர் விடுதலை (12.11.1954) நாளிதழில் வெளியிட்ட கட்டுரை:


நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களம்க ஆகமாட்டார்கள்.

ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.

மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள்.

ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.

நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.
மேலும் வாசிக்க... "கல்வி முறையில் மாற்றம் தேவை"



கவலைப்படாதே சகோதரா!


காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.
அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.
அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!
கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!
மேலும் வாசிக்க... "கவலைப்படாதே சகோதரா!"



நட்பா? காதலா?

     
நெருங்கிய நட்பில் காதல மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது? உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா? அதை தெரிந்து கொள்வது எப்படி? அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...

       அவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில்  தெரியும்.

      எப்போதும் உங்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவார். எபோதும் உங்களைப் பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.

      அவ்வப்போது  ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது  உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது எதையாவது அனுப்பி வைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு உணர வைக்க முயலுகிறார் என்று அர்த்தம்.

       நண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள் பால் ஈர்க்கப்படிருக்க வாய்ப்பு இருக்கிறது.

       நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து இருக்கும் பொது காரணம் என்வென்று கேட்டு துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பை தாண்டி உங்களைப் பார்கிறார் என புரிந்து  கொள்ளுங்கள்.

         நட்பிற்கும், காதலுக்கும் நுழிலை தான் வித்தியாசம், அதனால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்கு போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் பலரும் காதலை விட நட்புக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மேலும் வாசிக்க... "நட்பா? காதலா?"



3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO


இந்தியா-நியூசிலாந்து இடையே மூன்று டெஸ்ட்டுகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெடுகளையும்  இழந்து 193ரன்கள் எடுத்தது.

ஸ்கோர் போர்டு:

விடியோ பாருங்கள்:
மேலும் வாசிக்க... "3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO"

ஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME

            
  ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
        பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.  ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.





           நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.  அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.




         இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.
           அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.




            எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.  ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.



 - மீனகம்--
மேலும் வாசிக்க... "ஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME"



மகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு - (video)


தன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு மு.க.அழகிரி தனது சம்பந்தியுடன் சேர்ந்து "நீரோடும்  வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே ..." என்ற  பாடலை பாடினார்..



  மேலே உள்ள video - வை பாருங்களேன்.. video quality சுமார் தான்..

பின்னர் மற்றொரு பாடலையும் பாடினார். அவர் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடலாம் அது. இருவர் உள்ளம் படப்பாடல் கண்ணெதிரே தோன்றினாள்...

நீங்களும் ரசித்து பாருங்களேன்..



மேலும் வாசிக்க... "மகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு - (video)"



நாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்!

நீங்கள் பிரதமரானால்....



நாட்டின் பிரதமராக வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் கனவு கண்டதுண்டா. நல்லது. இதோ, அந்த பதவியில் அமர்ந்து செயல்பட உங்களுக்கு ஓர் வாய்ப்பு.

இப்போது நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். சாதாரண மக்களை பட்ஜெட் பாதிக்காத வகையில் சமாளிப்பதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவாலான பணி. அதை எப்படி சிறப்பாக செய்வது என இந்த விளையாட்டு மூலம் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

பிரதமர் மன்மோகன் சிங் ( அதாவது நீங்கள்) தாங்கி நிற்கும் இந்த பலகை மீது தான் சாதாரண மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது பொருட்கள் மீதான விலையேற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது, அந்த பொருட்க‌ள் ம‌ட்டு‌ம் கீழே விழ வே‌ண்டு‌ம். அதை தாங்கும் சாதாரண மக்க‌ள் கீழே விழுந்து விடக்கூடாது.

சாதாரண ம‌க்க‌ள் கீழே விழாமல் சமாளிப்பது உங்கள் சமர்த்து.

பலகை மீது நிற்கும் மனிதர் மீது, மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு பொருளாக இறங்கும். அ‌ப்படி அ‌ந்த பொரு‌ள் ‌விழு‌ம்போது ம‌னித‌ன் ‌நிலைதடுமாறுவா‌ன். ஆனா‌ல் அவனை நடு‌நிலையா‌க்‌கி‌வி‌ட்டு பொரு‌ட்க‌ள் ம‌ட்டு‌ம் ‌கீழே ‌விழ வே‌ண்டு‌ம். பொரு‌ள் ‌‌கீழே விழு‌ந்தா‌ல் உ‌ங்களு‌க்கு பு‌ள்‌ளிக‌ள். ஆனா‌ல் ம‌னித‌ன் விழுந்துவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும்.

இப்போது நீங்கள் விளையாட தயாரா? பார்க்கலாம் உங்கள் சாமர்த்தியத்தை!

எப்படி விளையாடுவது?

அம்புகுறியை (கர்சரை) கிடைமட்டமாக வலது, இடதாக நகர்த்தவும். உதாரணமாக:

* பலகையை வலப்பக்கம் உயர்த்துவதற்கு ---- அம்புகுறியை வலதுபுறம் நகர்த்தவும்.

*பலகையை வலப்புறம் கீழ் நோக்கி நகர்த்த-- அம்பு குறியை இடதுபுறம் நகர்த்தவும்.

த‌ற்போது நா‌ட்டி‌ல் பெ‌ரிய ‌பிர‌ச்சனையாக உருவெடு‌த்து இரு‌ப்பது ‌விலைவா‌சி உய‌ர்வு. இதை மையமாக வை‌த்து த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் ஒரு ‌விளையா‌ட்டை உருவா‌க்‌கி உ‌ள்ளது. இ‌ந்த ‌விளையா‌ட்டி‌ல் ‌‌‌நீ‌ங்களு‌ம் ப‌ங்குபெறு‌ங்களே‌ன்... 


‌விலையே‌ற்ற ‌விளையா‌ட்டு ‌விளையாட...கிளிக் செய்யுங்கள்.




நன்றி: த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்
மேலும் வாசிக்க... "நாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்!"



ஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது!





காலை ஆறரை மணி : 
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார ரயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் ஒரே திசையை நோக்கி ஒரு சேர நடந்து சென்றனர். காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருக்கிற வேலையில் இவ்வளவு மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி சென்னையிலேயே பூங்கா ரயில் நிலையத்திற்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகத்தான் இருக்க முடியும்.

அந்த அளவிற்கு வேலைக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் இப்படி அதிகாலை எழுந்து ஒரு ரயிலை பிடித்து பூங்கா வந்திறங்கி, பிறகு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடிச் சென்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் புறப்படக் காத்துக் கொண்டிருக்கும் மின் ரயிலைப் பிடிக்கச் செல்வதும், இதே போல சென்னையின் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் இருந்து அதிகாலை ரயில்களைப் பிடித்து சென்ட்ரலுக்கும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் வந்து அங்கிருந்து மற்றொரு ரயிலைப் பிடித்து அல்லது பேருந்தைப் பிடித்து தங்களுடைய பணியிடத்திற்குச் செல்வதும்....

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்தும் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்...

இப்படி 30-40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மட்டுமல்ல, வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு வரும் ஏலகிரி விரைவு ரயிலில் சில ஆயிரம் மக்கள் ஒவ்வொரு நாளும் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்....

இந்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பயணம் என்பதே ஒரு பெரும் அவஸ்தையாகும். ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்களுக்கு இந்த வதை தொடர்கிறது. இப்படி ஒரு இ��ந்திரம் போல ஒவ்வொரு நாளும் 2, 3 மணி நேரம் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பும் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையானது மட்டுமல்ல, வாழ்க்கைக்காக வேலை என்பது மாறி, வேலைக்காகவே உயிர் வாழ்வது என்றாகிவிட்டது.

பொருளாதார வாழ்க்கை என்பதே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட இந்த கால கட்டத்தில் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒரு அன்றாட இயந்திரமாகி வரும் மானுட வாழ்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் அவர்களும் தங்களை மனிதர்கள் என்று நினைத்துப்பார்க்க வாய்ப்பு அளிக்கும் ஒரே நாளாகிறது. அன்றும் அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பார்கள் என்று கூறுவதற்கில்லை.

அடுத்த ஒரு வாரத்திற்கான ஆயத்த வேலைகளுக்கே அந்த நாள் போய்விடுகிறது. வீட்டிலேயே இருக்கும் மனைவிக்கு அன்று மட்டும் வீட்டில் இருக்கும் கணவனுக்கு சமைத்துப் போடுவதில் நேரம் போய்விடுகிறது. ஆறு நாள் வேலை + களைப்பு அந்த ஒரு நாளை முற்றிலுமான ஓய்வு நாளாகவே கழிக்கச் செய்கிறது. இதில் எந்த விதத்தில் அவர்கள் அந்த நாளை விடுமுறை நாளாக கழிக்கிறார்கள். 
 
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களால் எவ்வாறு அவர்களுடைய அன்றாடப் பணிகளை (அலுவலகப் பணிகளை) செவ்வனே, திறம்படச் செய்ய முடியும். அவர்களுடைய உற்பத்தித் திறன் நிச்சயம் எதிர்பார்த்த அளவிற்கு இராது. அவர்களின் பணி தரமும் எதிர்பார்த்த அளவிற்கு கிட்டாது.

ஒரு மனிதனின் பணித் திறன், பணித் தரம் ஆகிய காரணிகளை எல்லாம் நன்கு சீர்தூக்கி பார்த்ததன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் 5 வேலை நாட்கள் கொண்ட வாரத்தை முறையாக வைத்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே `அனுபவிக்க வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட்டு, மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் கேளிக்கைகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர்.

சனிக்கிழமை அனுபவிக்கும் ஒரு நாளாகவே கருதப்படுகிறது, அவ்வாறே வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நம்மைப் போலவே அடுத்த வாரத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றனர். அந்த நாடுகளில் எல்லாம் வேலையை வாங்குவதும் சரி, பெறப்படும் வேலை அதற்குரிய மதிப்புடன் இருப்பதை உறுதி செய்வதிலும் சரி பெருவெற்றி பெறுகின்றனர். தரமும் சிறப்பாக உள்ளது.

இதற்குக் காரணம், நன்கு ஓய்வெடுத்த உடலும், புத்துணர்வு பெற்ற உள்ளமும், அந்த இரண்டு நாள் விடுமுறையில் கிடைத்துவிடுகிறது. எனவே திறனும் தரமும் எதிர்பார்த்த அளவிற்கு அங்கு பெற முடிகிறது.

ஆனால், நமது நாட்டில் ஒரு பணியை முடிப்பதற்கான ஆட்கள் எண்ணிக்கைதான் இன்றளவும் பெரிதாக கவனிக்கப்படுகிறதே தவிர, திறனும், தரமும் கவனிக்கப்படுவதுமில்லை, பொருட்படுத்தப்படுவதுமில்லை. சில ஏற்றுமதி தொடர்பான பணிகளை மட்டும் விதிவிலக்காகக் கொள்ளலாம். மற்றபடி நமது பணி வாழ்க்கையில் திறனுக்கும், தரத்திற்கும் குறைவான இடமே உள்ளது. அதனை வற்புறுத்திப் பெற முடியாது. காரணம் இயந்திரத் தனமான ஒரு வேலைக் கட்டமைப்பை நாம் வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறோம்.

அரசுப் பணியானாலும் தனியார் பணியானாலும் திறனை, தரத்தை முக்கிய அம்சமாக மதிப்பிடப்படுவதில்லை. இதனால் குறித்த நேரத்தில் பணிகளும் முடிக்கப்படுவதில்லை. அதில் இருக்க வேண்டிய அளவிற்கு தரமும் இருப்பதில்லை. இதற்கெல்லாம் மிக அடிப்படையானது பணியில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் மன, உடல் நிலைதான்.

வலிமையான, நலமான உடல், உற்சாகத்தின் ஊற்றாக மனம், திறம்பட வேலையை செய்து முடிப்பதற்கான பணியிட கட்டமைப்பு ஆகிய 3 அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் இந்த ஆறு நாட்கள் கொண்ட வேலை வாரத்தை பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக - சட்டம் போட்டாவது - அகற்றிட வேண்டும்.

ஐந்து நாட்கள் கொண்ட வேலை வாரத்தை அறிமுகம் செய்ய வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்களாக இருந்தால் பணிக்காக மட்டுமே மக்கள் பயணம் செய்யும் நிலை மாறி, தங்களது கேளிக்கை, பொழுதுபோக்கு, வாங்கல், உறவினர்களை சந்தித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் ஒரு நெகிழ்ந்த உற்சாகமான ஒரு சூழல் நிலவும்.

பணி வாழ்வில் நாம் கடைபிடிக்கும் இயந்திரத் தனம் ஒழிய வேண்டும். அதற்கு அடிப்படையானத் தேவை 5 நாள் கொண்ட வேலை வாரம்.
மேலும் வாசிக்க... "ஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது!"



கார்ப்பரேட் சுதந்திரம் (சிறுகதை)


`எலே, என்னல செய்த? அங்க பார், அவுகளுக்கு என்னவேணும்னு கேப்பியா?' - மளிகைக்கடை அண்ணாச்சி பாலுவைப் பார்த்து பொறிந்தார்.

``இந்த வந்துட்டேங்க -'' என்றவாறே சிந்தனையைக் கலைத்து விட்டு பாலு அன்றைய வாடிக்கையாளர்களின் சாமான்களுக்கு கம்ப்யூட்டர் பில்லைப் போட எத்தனித்தான்.

ஆம். ஊரில் அப்படித்தான் அவன், சொல்லி வைத்திருந்தான். கணினி முன்தான் தனக்கு வேலை என்றும், தனக்காக 1 முதல் 10ஆம் தேதி வரை நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருப்பார்கள் என்று.


ஓஹோ, அப்படியா ராசா - என்றவாறு, மூக்கில் விரலை வைத்து தனது தாய், கேட்பதை பார்த்திருக்கிறான் பாலு.

என்ன செய்வது, பி.எஸ்சி. கணினி அறிவியலில், பட்டத்தைப் பெறுவதற்கு இந்த ஆங்கிலம் - அந்நிய மொழியில் மட்டும் தேற வேண்டியுள்ளதே.

முதலாமாண்டில் ஃபெயில் ஆனது, பட்டப்படிப்பு 3 ஆண்டு முடித்து வெளியே வந்ததும், தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில், எப்படியும் வேலைபார்த்துக் கொண்டே அந்த பேப்பரை எழுதி பாஸ் செய்து விடலாம் என்ற நினைப்பில், ஊரில் வீட்டிற்கு அருகேயிருந்த நண்பர் மூலமாகக் கிடைத்த மளிகைக் கடை வேலையில் சேர்ந்து கொண்டான்.

தங்குவதற்கு இடம், சாப்பாடு போட்டு ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறதே, இந்தப் பணத்தையாவது வீட்டிற்கு அப்படியே அனுப்பலாம் என்றெண்ணிய பாலு, சென்னைப் பட்டணம் வந்து ஓராண்டு ஓடி விட்டது.

வாரத்திற்கு ஒருநாள் அண்ணாச்சி சினிமாவிற்காக தரும் 50 ரூபாயை பாலு, பிரவுசிங் சென்டருக்குப் போய் வேலைக்குப் பதிவு செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.

எப்படியும், இங்கிலீஷ் பேப்பர் (அரியர்) ரிசல்ட் ஓரிரு மாதத்தில் வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம், தனி மனிதனுக்கு சிந்திக்கக் கூட சுதந்திரம் அளிக்க விரும்பாத, இந்த அண்ணாச்சியை என்று மனதில் நினைத்துக் கொண்டே அன்றிரவு தூங்கிப் போனான்.

அடுத்நாள் ஊரில் இருந்து போன்.

``ஹலோ, மினி டெமரிஸ்-ங்களா, மூலக்கரைப்பட்டில இருந்து பேசறோம். பாலுகிட்ட குடுங்க அண்ணாச்சி''.

``எல, இந்தா பாலு, வேலைக்கு வந்தவுடனே போன், இந்தால பேசு. ஊரில இருந்து பேசறாக '' - அண்ணாச்சி.



ரிஸிவரை வாங்கிப் பேசிய பின் போனை வைத்தவன் முகத்தில் பேயறைந்தது போல் இருந்தது.

``எல, என்னா, எதாவது சொல்லு'' - அண்ணாச்சி.

`இல்ல, அண்ணாச்சி, அம்மாவ ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காகளாம் - நான் உடனே போகணும்''

``சரில, அதுக்கென்ன, இந்தா பணத்தைப் பிடி'' என்று கூறி ஐயாயிரம் ரூபாயை பாலுவிடம் கொடுத்து, ``போய்ட்டு வா,'' என்றார்.
மேலும் வாசிக்க... "கார்ப்பரேட் சுதந்திரம் (சிறுகதை)"



திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்


வைகுண்ட ஏகாதசி ராபத்து நாட்களில் மட்டுமே பக்தர்கள் பார்வையிட திறக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம், ஆண்டுமுழுவதும் பார்வையிடும் வகையில் நேற்று திறக்கப்பட்டது.வெளிநாட்டினர், பக்தர்கள் பார்வையிட வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் நேற்று முதல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள கலை சிற்பங்கள், கட்டிட கலை ஆகியவற்றை பார்வையிட தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருகின்றனர்.

இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே சேஷராய மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களை மட்டுமே பக்தர்களும், பயணிகளும் இதுவரை பார்த்து சென்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியின்போது 10 நாட்களுக்கு மட்டுமே ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். அப்போதும் மண்டபத்தின் உள்ளே உள்ளூர் பக்தர்கள்தான் அனுமதிக்கப்படுவர்.

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த 10 நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் ஆயிரம்கால் மண்டபம் மூடப்பட்டிருக்கும்.
கடந்த மார்ச் மாதம் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பக்கம் மணல்வெளியில் உள்ள 3 நான்கு கால் மண்டபத்தின் தரை தளத்தை காண மணல்களை அகற்றியபோது, ஆயிரங்கால் மண்டபத்தில் முகப்பில் 11 படிகளும், 2 அடி உயரமுள்ள நடன சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிற்பங்களை பாதுகாக்க 6 அடி அகலம், 140 அடி நீளத்தில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டது.


கடந்த வாரம் ஆயிரங்கால் மண்டபத்தில் மேற்கு திசையில் நிரம்பி இருந்த மணல்களை அகற்றியபோது, பெருமாளின் திருவடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கிரில்கேட், பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் மண்டபத்தை பார்வையிட வசதியாக நேற்று அகற்றப்பட்டது. மொத்தம் 800 அடிநீள மண்டபத்தில் திருமாமணி மண்டபம் வரை 200 அடி உள்ளேசென்று அழகிய தூண்களை நேற்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

இனி தினமும் மண்டபத்தை பார்வையிட பக்தர்கள், வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்"



கண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்! - டாக்டர் அப்துல் கலாம்

    விண்ணில் செயற்கைக்கோளை கொண்டு சேர்ப்பது ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
  1980ல் எஸ்.எல்.வி., 3 ராக்கெட் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய போது அவர் அடைந்த அதே மகிழ்ச்சியை - இன்று இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சாதனைகள் புரிந்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார். தன் எண்ணங்களை இளைஞர்களுக்காக வண்ணம் தீட்டித் தருகிறார்....

படித்து முடித்து மாணவர்கள் வெளியில் செல்லும் போது, அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நமது கல்வித் திட்டம் ஐந்து அறிவுகளை வளர்க்க வேண்டும். ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.

2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வேறு துறைகளில் உள்ள அறிவுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் தகவல்தொடர்பு மூலம் எடுத்துரைக்க வேண்டும்.

3. கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.

4. மரியாதைக்குரிய மனம்: மனிதர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.

5. அறவழியிலான மனம்: குடிமகனாகவும் பணியாளராகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.

இந்த குணாதிசயங்களை பெறுவதற்குயாரும் பாடத்திட்டத்தையோ அல்லது படிப்பையோ மாற்ற வேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின்
நோக்கமும், ஆசிரியரின் நடத்தையும் சரியாக இருந்தாலே போதுமானது.


இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,)அக்னி திட்டம் மற்றும் நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிக்கும் புரா திட்டம் ஆகியன கனவுகளாக இருந்து லட்சியங்களாக மாறி நனவானவை.

1.எவையெல்லாம் கனவு காண்பவைகளாக உள்ளனவோ அவையெல்லாம் லட்சியங்களாக மாறி பின்னர் செயல்திட்டங்களாக உருவெடுக்கின்றன.
2.கனவுகளை செயல்திட்டங்களாக மாற்ற உயர் அளவிலான சிந்தனை மிக அவசியம்.
3.எல்லாதரப்பிலிருந்து அறிவை தேடிப் பெறுவது அவசியம்.
4.கனவுகள் கைவரப் பெற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்.
5.தோல்விகள் ஏற்படும் போது அதை தனக்குரியதாக தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வெற்றி ஏற்படும் போது அதை தனது அணிக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.


நமது விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கின்றனர். சந்திரயானை ஏவியது, அதன் சுற்றுப்பாதையை உயர்த்தியது, மூன் இம்பாக்ட் பிராப் எனும் சந்திரனில் மோதி ஆய்வு செய்யும் கலனை அனுப்பியது என்று பல்வேறு விஷயங்களில் இஸ்ரோ தனது திறமையை நிரூபித்துள்ளது.

குறுகிய காலத்தில் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பிற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளார்கள். இது பிற்காலத்தில் பூமி - சந்திரன் - செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

பூமிக்கும் செவ்வாய்க்கும் 5 கோடியே 50 லட்சம் முதல் 40 கோடி கி.மீ., வரை தூரம் உள்ளது. இது இரண்டு கோள்களும் தங்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். கடந்த சில ஆண்டுக்கு முன் நான் கிரீஸ் சென்றிருந்தேன். அங்கிருந்த அக்ரபோலிஸ் நினைவிடத்தில் கிரீஸ் நகரத்தை சேர்ந்த மாணவர்களை சந்தித்தேன்.

சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் உருவான நாடு அது. பிளேட்டோ சொன்ன வரிகள் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாட்டின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் சந்தோஷத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எல்லோருடைய ஒட்டுமொத்த மிகச்சிறந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்’ என்று கூறினார்.

இதையே நம் வள்ளுவரும் கூறியிருக்கிறார்.

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து’


நோயில்லாத, நல்ல வருவாய் ஈட்டக்கூடிய, உயர் உற்பத்தி செய்யக் கூடிய, இசைவான சூழலில் வாழக்கூடிய மற்றும் நல்ல பாதுகாப்பில் இருக்ககூடியதுதான் ஒரு நாடு என்று வள்ளுவர் கூறினார்.

இந்த எண்ணங்களுடன் கிரீஸ் மாணவர்களுக்கு நான் என்னுடைய வழக்கமான மாணவர்களுக்கான உறுதிமொழியை ஏற்க வைத்தேன் அவர்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கூட, அந்த உறுதிமொழியை திரும்பக்கூறி மகிழ்ந்தனர். இந்த பூமியில் மிக உயரிய சக்தி என்பது, இளைஞர்களின் சக்திதான். இளைஞர்களின் சக்தியை சரியான பாதையில் திருப்பினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணலாம்.

- மீண்டும் சந்திப்போம்
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...


- டாக்டர் அப்துல் கலாம் -

இக்கட்டுரை இணைய தளத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்தது...
மேலும் வாசிக்க... "கண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்! - டாக்டர் அப்துல் கலாம்"



கணக்குல புலியாகனுமா? கரண்ட் ஷாக் கொடுங்க....

      

    மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடமாக,  லேசாக மின்சாரம் பாய்ச்சப்பட்டால் கணித அறிவு தூண்டப்படுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
         (பிள்ளைகளே, இதைப் படித்துவிட்டு நேரடியாக பிளக்கிலிருந்து மின்சாரத்தை தலையில் பாய்ச்சி விஷப் பரிசோதனை செய்ய வேண்டாம், மேற்கொண்டு படியுங்கள்).
             கணிதம் படிப்பதில் மந்தமாக இருக்கும் 15 மாணவர்களை (வயது 20 முதல் 21 வரை) குழுவாகத் தேர்வு செய்து, புதிய கணிதக் குறியீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடம் செல்லும் வகையில் லேசாக மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். பிறகு குறியீடுகளைக் கொண்டு விடை அளிக்குமாறு சில புதிர் கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தார்கள். 


                 அவர்கள் வெகு விரைவாகவும் சரியாகவும் அந்த கணக்குகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்தார்கள்.அதே வேளையில் அந்தக் குழுவிலேயே மற்றொரு பகுதியினருக்கு மூளையின் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக மின்சாரம் செல்லுமாறு செலுத்தினார்கள். பிறகு அவர்களுக்கும் அதே கணக்குப் புதிர்களைக் கொடுத்தார்கள். அவர்களால் வேகமாகவோ துல்லியமாகவோ கணக்குப் போட முடியவில்லை. 
               அவர்களுடைய கணித ஆற்றல் 6 வயதுக் குழந்தைக்குச் சமமாகவே (குறைவாக) இருந்தது. அவர்களுக்கு ஸ்ட்ரூப் சோதனையும் நடத்தினார்கள்.அதாவது சிவப்பு என்ற வண்ணத்தை பச்சை மையில் எழுதிக் காட்டி வாசிக்கச் சொல்வார்கள். பெரிய மதிப்புள்ள எண்களை மிகச் சிறிய வடிவிலும் சிறிய மதிப்புள்ள எண்களை மிகப் பெரிய எழுத்துகளிலும் எழுதிக்காட்டி விடை கேட்பார்கள். (சுருக்கமாகச் சொன்னால் குழப்புவார்கள்). 
                 மின்சாரத்தை வலமிருந்து இடமாகச் செலுத்தியவர்களின் கணித ஆற்றல் 6 மாதங்களுக்கு அப்படியே நீடித்தது. (கேரண்டி அவ்வளவுதான் போலிருக்கிறது!)இதிலிருந்து மூளை சிறப்பாக இயங்க மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். 
             மூளையின் ஒரு பகுதி கணித அறிவுக்கு ஏற்றது, அதை சரியான வகையில் தூண்டிவிடலாம் என்பதே ஆய்வின் முடிவு. இந்த ஆய்வு தொடர்கிறது, அதுவரை வாய்ப்பாடுகளை ஒழுங்காகப் படித்து கணக்கு போட்டுக்கொண்டிருங்கள்.


மேலும் வாசிக்க... "கணக்குல புலியாகனுமா? கரண்ட் ஷாக் கொடுங்க...."



முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா? கவலை வேண்டாம்...



நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக்கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..

பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.
 
நமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும். 

அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...
இதில்  அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...


இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து  Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா  சாப்ட்வேர்  நம்ம  computer  - இல் இன்ஸ்டால் ஆகும்..


  Ninite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...
 
மேலும் வாசிக்க... "முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா? கவலை வேண்டாம்..."



தீபாவளி என்பதிலேயே...

 தமிழ்வாசியின்


தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.


     சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.







எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.


தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.


நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.


தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.


அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.





கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.


நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ண��்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.


ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
மேலும் வாசிக்க... "தீபாவளி என்பதிலேயே..."



அட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலையில் ரொம்ப சிம்பிளா இருக்காரு...

இங்கு படங்கள் மட்டுமே... 











எப்படி நம்ம எந்திரன் ஹீரோ...
மேலும் வாசிக்க... "அட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி"

வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்!



விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.

வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.

இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.

அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.

கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.

பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள். 

உதாரணமாக Tata என்பதை " Tata Group of Industries Limited" என்றோ அல்லது "Samsung Electronics India Ltd" என்றோ பெயரில் பொடி வைத்து அனுப்பப்பட்டிருக்கும்.அதை பார்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.

அடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும்.

அடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் "டுபாக்கூர்" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).

ஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HR பிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.
உதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

எனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள் !

நன்றி: tamil webdunia
மேலும் வாசிக்க... "வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்!"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1