சித்ரா அக்கா பேச ஆரம்பிக்கும் போது பதிவர்களிடையே சிரிப்பலை எழுந்து அவரை திக்கு முக்காட வைத்தது. இம்சை அரசன் பாபு அவர்கள் தமிழ்மணத்தின் மணி மகுடமே என வாழ்த்தினார். உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அவ்வளவு ஓட்டுகளும், கருத்துகளும் வருகிறதோ...என கலாய்த்தார். அதற்கு சித்ரா அக்கா எல்லோருக்கும் கமென்ட் போடுவேன், அவர்களை உற்சாகபடுத்துவேன். அவ்வளவு தான். அதோடு தான் தந்தையின் வழியில் திசை மாறாமல் செல்வதாகவும் சொன்னார்.
இம்சை அரசன் பாபு தன் பதிவுகளை பற்றி சொல்லும் போது தன் மகளே பதிவுகளுக்கு கருவாக இருந்தாள் என பேசினார். மகளிடம் நிறைய பல்பு வாங்கியதாக நகைச்சுவையாக பேசினார்.
ஷர்புதீன் - ரசிகன் அவர்கள் பேசிய போது, அவர் ஒரு மாத இதழுக்கு பொறுப்பாக இருப்பதாகவும், தற்சமயம் பொறுப்பெடுத்து நடத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் ஆதங்கப்பட்டார். யாரேனும் பொறுப்பெடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தார்.
பெசொவி பேசிய போது தன் பெயரை ..... என சொன்னார். அவர் தன் பெயரை ஏன் வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதை குறிப்பிட்டார். நான் சொல்ல மாட்டேன் அவருடைய பெயரை...வெரி சீக்ரெட்...
ஸ்டார்ஜன் அவர்கள் பேசிய தமிழ் மிக வித்யாசமாக இருந்தது. பதிவு எழுதுபவர்கள் தாங்கள் சொல்ல வந்த கருத்தை பிறருக்கு பாதகம் ஏற்படாமல் சொல்ல வேண்டும் என்றார்.
கௌசல்யா அக்கா அவர்கள் கழுகு என்ற இணையதளத்தை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். அந்த இணையதளத்துக்காக பிரபல பதிவர்களின் பேட்டி, கட்டுரைகள் தேவை என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
சகோதரி ஜோஸபின் பாபா அவர்கள் ஈழ தமிழர்கள் வலைப்பூவை எப்படி தாங்கள் ஊடகமாக, செய்திகளை தெரிவிக்கும் பத்திரிக்கையாக பயன்படுத்துகிறார்கள் என்பதை பற்றி சுமார் ஒரு வருட காலம் வரை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை சமர்திருப்பதாக சொன்னார்.
இது பற்றிய லிங்க்: தமிழ் ஈழ ���லைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு
சகோதரி கல்பனா அவர்கள் தன் பதிவை பற்றி சிறப்பாக எடுத்து சொன்னார். அதோடு அறிவியல் சம்பந்தமாக ஒரு வலைப்பூவும் வைத்திருப்பதாக சொன்னார். இவருக்கும், பாபுக்கும் இடையே கருத்து மோதல்கள் அடிக்கடி வருமாம். சண்டை போடாத குறை தானாம். நல்ல வேளை இந்த சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்த சமயங்களில் இருவரும் பேசி சமாதானம் அடைந்ததாக சொன்னார். உதவியவர் டெர்ரர் பாண்டியனாம்.
நாய்க்குட்டி மனசு ரூபினா மேடம் அவர்கள் அப்பாவுக்கு அஞ்சலி என்ற தன் பதிவை பற்றி மிகவும் சிலாகித்து பேசினார்.
கந்தசாமி ஐயா அவர்கள் தான் பதிவுகளில் ஏன் கமென்ட் பகுதி வைப்பது இல்லை என்பதை விளக்கினார். கமென்ட் வர வர நமக்கு பொறுப்பு கூடுகிறது என பேசினார்.
நம்ம சி.பி தான் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தார். ஆமா தூங்கிகிட்டு இருந்த சிங்கத்தை காபி பேஸ்ட் ஆளுன்னு நம்மாளுக சீண்டி விட சிங்கம் சீறு கொண்டு எழுந்து பேச தொடங்கியது. தான் அனுமதி வாங்கியே அந்த பதிவுகளை காபி பேஸ்ட் செய்வதாகவும், பத்திரிக்கை உலகில் நிறைய ஆண்டுகள் உள்ள பழக்கத்தால் அந்த ஆசிரியர்களிடம் அனுமதி வாங்கியே தன் பதிவுகளில் செய்திகளை பதிவதாக சொன்னார். பதிவின் கீழே நன்றி என போடுகிறேனே எனவும் இதனால் ஒரு பிரச்சனையும் இல்லை எனவும் சொன்னார். அப்புறம் அவரின் தலைப்புகள் பற்றி எல்லோரும் கலாயத்தார்கள். கில்மா, காமடி கும்மி போன்ற தலைப்புகள் அவசியமா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சி.பி ஒரு பதிவு நிறைய நண்பர்களை சென்றடைய வேண்டுமானால் தலைப்பு ரொம்ப முக்கியம் என்று சொன்னார். இந்த விஷயத்தை நானும் ஆமோதித்தேன். சுமார் 50 பதிவுகள் வரை ட்ராப்டில் வைத்திருப்பதாக சொன்னார்.
ஒரு சமூக சேவையில் பங்களிக்கலாம் என எல்லோரும் முடிவு செய்து தங்களால் முடிந்த பண உதவி செய்தோம். இது பற்றிய விளக்கமாக சங்கரலிங்கம் சார் பதிவிடுவார்.
எல்லோரும் தாங்கள் அனுபவங்களை பகிர்ந்த பின்னர் மதிய உணவு சாபிட்டோம். நல்ல ருசியான உணவு பஃபே முறையில் பரிமாறப்பட்டது. முதலில் சூப், பின்னர் இனிப்புக்கு அல்வா, ரொட்டி நான், பன்னீர் மசாலா , பிரைடு ரைஸ், சாதம், ரசம், தயிர், பொரியல், அப்பளம், ஐஸ் கிரீம், பீடா என மதிய உணவு அருமையான ஏற்பாடாக இருந்தது.
உணவு முடிந்த பின்னர் எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டனர். அந்த குருப் போட்டோ எடுக்க எங்களை நிக்க வைக்க போடோகிராபர் பட்ட பாடு இருக்கே, பாவம்யா அவர், அங்க தான் நிப்பேன், இங்க தான் நிப்பேன் என நம்மவர்கள் கலாய்க்க, இம்சை அரசனும் கொஞ்சம் இம்சை செய்தார். ஒரு வழியா போட்டோ எடுத்துக் கொண்டோம்.
குற்றாலம் போக வேண்டிய ஆட்கள் ஆள் சேர்த்து கொண்டிருந்தார்கள். எனக்கு வேலை இருந்ததால் செல்லவில்லை.
இந்த பதிவர் சந்திப்பை மிக சிறப்பாக ஏற்பாடு செய்த உணவுலகம் சங்கரலிங்கம் அவர்களுக்கும், ஏற்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த சித்ரா அக்கா. கௌசல்யா மேடம், இம்சை அரசன் பாபு, இன்னும் ஏற்பாட்டுக்கு பங்களித்த அனைவருக்கும் எங்கள் கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.
புகைப்படங்கள்:
எங்களை ஏமாற்றிய மனோ அப்படின்னு போன பகுதியில் முடித்திருந்தேனே... அது என்னான்னா... ஆமாங்க, நான் ஆர்வமா எதிர்பார்த்த லேப்டாப்பை மனோ கொண்டு வரவில்லை. அது பற்றிய ஒரு பதிவு தேத்தலாம்னு இருந்தேன், அதுவும் போச்சு.
நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்த சகோ நிரூபன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இணைய இணைப்பு சதி செய்ததால் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. சகோ மன்னியுங்கள்.
26 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - பரவால்ல - ஒரு இடுகை தேத்தியாச்சு - நல்லாவே வந்துருக்கு - வாழ்க வளமுட்ன - நட்புடன் சீனா
நேரில் பார்த்தது போல் இருந்தது.. அழகான தொகுப்பு.. நன்றி :)
என்னை கோர்த்து விடலைன்னா தூக்கம் வராதே உமக்கு ஹா ஹா
கௌசல்யா அக்கா அவர்கள் அப்பாவுக்கு அஞ்சலி என்ற தன் பதிவை பற்றி மிகவும் சிலாகித்து பேசினார்.//
அது கௌசல்யா இல்ல பிரகாஷ், மீ chella நாய்க்குட்டி மனசு - ரூபினா .ஒரு முழுமையான பதிவு. அல்வாவை விட்டுட்டீங்களே?
இடுகைகள் தொடர வாழ்த்துக்கள்.
மச்சான்! அந்த பன்னீர் மசாலாவை விட்டுட்டியே ?
@cheena (சீனா)
நன்றி ஐயா
@Ananthi (அன்புடன் ஆனந்தி)
தங்கள் கருத்துக்கு நன்றி.
@சி.பி.செந்தில்குமார்
நீர் இல்லாம பதிவுலகமே இல்லையே சி.பி.
@நாய்க்குட்டி மனசு
சகோதரி... திருத்தி விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.
@இராஜராஜேஸ்வரி
இடுகைகள் தொடர வாழ்த்துக்கள்.>>>
ம்ம்ம்... பார்க்கலாம் தொடருதான்னு.
@ஷர்புதீன்
மச்சான்! அந்த பன்னீர் மசாலாவை விட்டுட்டியே ?>>>
இப்ப சேர்த்துட்டேன் மச்சி... நீங்க பன்னீர் மசாலா மட்டுமே மூன்று முறை வாங்கி சாப்பிடிங்கள்ள,
பிரகாஷ் அனைவரை பற்றியும் அழகாக சொன்னீங்க நன்றி.
Thanks for sharing, Prakash
கடைசியா குடுத்த அல்வாவை விட்டு விட்டார் ஷருபுதீன் சார் ....
பதிவு அருமை ( சகோ நீங்க குடுத்த சாக்லேட் க்கு இவ்வளவு தான் சொல்ல முடியும் அவ்வ்வ்வ் )
அருமையா இருக்கு............
பதிவர் சந்திப்பு வர்ணனை அமர்க்களம்.
எங்களுக்கெல்லாம் எப்போதான் சந்தர்ப்பம் அமையுமோன்னு நினைக்க வச்சுட்டீங்க.
யோவ் அப்போ நீர் பதிவர் சந்திப்புக்கு வரலையாக்கும்...? என் லேப்டாப்பை பார்க்கவா வந்தீர் ம்ஹும்....?
அப்படி என்னதான்யா இருக்கு அந்த லேப்டாப்ல? ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் வச்சிருக்காரா? கிடைச்சா எனக்கு ஒரு சிடி பார்சல்!
டிஸ்கி: நெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய பதிவுகள் தொடர்ந்தாலும் தொடரலாம்.-- ada paavame???
மாப்ள சூப்பர்யா!
பதிவு மிக அருமை.
நாங்களும் நேரில் கலந்து கொண்டது போல ஒரு திருப்தி ஏற்பட்டது.
நன்றி.
ஹி ..ஹி ...நல்லா எழுதி இருக்கீங்க .கலக்குங்க கலக்குங்க
சுவாரஸ்யாமாகத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க சகோ.
எல்லோருமே மனோ, சிபியை ஒரு போட்டுத் தாளிக்க வேண்டும் எனும் உயர்ந்த நோக்கோடு தான் இருக்கிறீங்க.
அருமையான தொகுப்பு கலந்து கொள்ளவிட்டாலும் உங்கள் பதிவை படித்தபோது ஒரு நிறைவு
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.