கவிஞர் வைரமுத்து தன் அம்மாவை பற்றி முதன் முதலாக எழுதிய கவிதை வரிகளை அவரே வாசித்து காட்டுகிறார். அந்த வரிகள் உங்களுக்காக இங்கே ஒலி இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் இந்த கவிதை வரிகளை உங்கள் தாயாரிடம் போட்டு காட்டுங்களேன். மிகவும் அருமையான வரிகள்.
அவரே சொல்கிறார்......
23 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - அருமையான கவிதை - வைர வரிகள் - மிக மிக இரசித்தேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சகோ, 2002ம் ஆண்டில் வைரமுத்துவின் கவிதையே பாடலாக இறு வட்டினூடாக இந்தக் கவிதையினைப் பார்த்தேன். தனது சிறு வயது வாழ்வினையும், தன் தாயாரின் பெருமையினையும் வைரமுத்து உணர்ச்சி பெருக்கெடுத்தோடும் வார்த்தைகளூடாக வெளிப்படுத்தியிருந்தார் சகோ.
மீண்டும் அக் கவிதையினைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்த உங்களுக்கு நன்றி சகோ.
வீடியோ பார்க்க முடியாதவர்களுகாக இங்கே வைர முத்துவின் கவிதை வரிகளைப் பகிர்கிறேன்.
ஆயிரம் தான் கவி சொன்னேன்
//கவி பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்//
ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??
பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………
கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,
தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..
வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,
பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,
பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..
கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..
படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,
வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????
.
அருமையான கவிதை. பாராட்டுக்கள். வைரமுத்துவின் வைர வரிகள் வரியெங்கும் மிளிர தாய்மையின் பெருமை தலை நிமிர்கிறது.
வைரமுத்துவின் வைர வரிகள்...
அவருடைய வைர குரலில்....
ரசித்தேன்..
கவிதை... கவிதை....
சபாஷ்...
அன்பின் நிரூபன் - பகிர்வினிற்கு நன்றி. சில பிழை திருத்தங்கள்
தேவன் பெற்ற = தேவன் பெத்த
வயிற்று வலி = இடுப்பு வலி பொறுத்தவளே !
தரணி ஆள வந்த - தரணி ஆள வந்திருக்கும்
கலி = களீ
கருவாட்டில் - கருவாடு தேன் ஒழுகும்
வலி தாங்க மாட்டான் அவன் = வலி தாங்கமாட்டாம
வல்லூறும் சேர்ந்தெழுக - சேர்ந்தழுக
கைபிடியாய் சேர்த்து வந்து = கைப்பிடியாய்க் கூட்டி வந்து
தாயும் உண்டா - தாயிருக்கா
சில சொற்கள் பிழையுடன் இருந்ததைச் சுட்டிக் காட்டி இருக்கிறேன். அவ்வளவுதான்
நட்புடன் சீனா
great
பாராட்டுகள் மாப்ள ..
வைரமுத்து எப்பவுமே கிரேட் தான்..
அவரின் கவிதைகள் மட்டுமல்ல குரலுக்கும் ரசிகன் நான்.
வைரமுத்துவின் வைர வரிகள் என் மனதை மிகவும் நெகிழச்செய்தது.
நிரூபன் அவர்கள் கவிதையை எழுத்தில் வெளியிட்டது, மிகவும் நல்லது.
அதையும் பார்த்து மனதால் படித்துக்கொண்டே பாடலை கேட்டு ரஸிக்க நன்கு புரியக்கூடியதாக இருந்தது.
இருவருக்கும் என் நன்றிகள்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
மாப்பு நல்ல கவிதை..கவிதை வரிகளையும் பதிவுல போட்டிருக்கலாம்ல?..நிரூவிற்கும் நன்றி.
அருமை ...அருமை ...
இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்
///
வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????
//
அருமையான வரிகள்
Thanks for sharing
வைரமுத்துவுக்கு நிகர் வரைமுத்துவே. கவிதை அருமை. தாய்ப்பாசம் சொன்னவிதம்
அருமையிலும் அருமை. பகிர்வுக்கு நன்றி.
சரி, சரி, நாளை நெல்லைக்கு வாங்க, நேரில் பாராட்டுகிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் வைரமுத்து.இந்தப் பகிர்வைத் தந்ததற்கு மிக்க நன்றி சகோ.
எனது வலைப்பகுதியில் உங்களுக்காக ஒரு விருந்து காத்திருக்கின்றது சென்று அனுபவியுங்கள்.
வாழ்த்துக்கள் சகோதரரே!....
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.