CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



தனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து...!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
கோபாலு: அண்ணே! அண்ணே! ஏண்ணே சோகமா இருக்கீங்க... அண்ணி உங்கள திட்டிடாங்களா?

தனபாலு: அடேய்.... எப்ப பாரு... அண்ணிய என்கூட சிண்டு முடிஞ்சு விடாம இருக்க மாட்டியே.... என் சோகத்துக்கு காரணம் வேறடா....

கோபாலு: சரிண்ணே... அண்ணிய பத்தி பேசல.... உங்க சோகத்துக்கு வேற என்ன காரம்ண்ணே....

தனபாலு: எல்லாம் எம்பய படிப்பு பத்தி தான் கவலைப்படுறேன்...

கோபாலு: உம்பயலுக்கு என்னண்ணே... ராஜா வீட்டு கன்னுக்குட்டி...


தனபாலு: டேய்.... ஓவரா புகழாத....

கோபாலு: சரி... உங்க கவலையை சொல்லுங்க..

தனபாலு: ஸ்கூலு ஆரம்பிச்சு ஒரு வாரம் முடிஞ்சிருச்சு. இன்னும் எம்பய ஒரு பாடத்த கூட படிக்காம இருக்கான்.... அவன் கிட்ட கேட்டா இன்னும் பாடம் நடத்த ஆரம்பிக்கலன்னு சொல்றான். இப்பவே ஒரு மாசம் ஓடிப் போச்சு. எப்படி படிக்க போறான்னு தெரியல.

கோபாலு: அண்ணே! சமச்சீர் கல்வி கேஸு இன்னும் முடியாம இருக்கு. இன்னும் ரெண்டு வாரத்துல ஒரு முடிவு தெரிஞ்சிரும்னு சொல்றாங்க.  அதுக்கப்பறம் உங்க மகன் படிக்க ஆரம்பிச்சுருவான். 

தனபாலு: சரிடா.... வேறென்ன சொல்லு.... ஆமா, ஏதோ உனக்கு கல்யாணம் கில்யாம்னு கேள்வி பட்டேன் உண்மையாடா?

கோபாலு: ஆமாண்ணே! கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன். நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க. 

தனபாலு: சொல்றேன்....சொல்றேன்... இப்ப ஏண்டா அவசரப்படுற? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே... நீயும் ஊர சுத்தாம ஒரு வேலைக்கு போடா... அப்புறமா பொண்ணு பாக்கறேன்.

கோபாலு: பொண்ணு பாக்க சொன்னா பொண்ணு மட்டும் பாருங்க.... அட்வைஸ் பண்ணாதிங்க... தங்கம் விலை ஏறிட்டே போகுது. அப்புறம் பொண்ணு வீட்டுக்காரங்க சீரை கொறச்சிட போறாங்க?

தனபாலு: டேய்... கல்யாணத்த பத்தி பேசினா திடீர்னு தங்கத்த பத்தி பேசுற... 

கோபாலு: அண்ணே! உங்களுக்கு ஒண்ணுமே புரிய மாட்டிங்குது. தங்கம் விலை எவரெஸ்ட் மலை மாதிரி ஏறிட்டே போகுது.  போற போக்க பாத்தா எவனும் பொண்ணு கூட பொன் தர மாட்டாங்க. அதான் இப்பவே முந்திக்கிட்டோம்னா ஏதோ கொஞ்ச நஞ்ச நகைகளாவது பொண்ணு கூட போடுவாங்க. இல்ல வெறும் கையால பொண்ணு கொடுக்கற காலம் வந்திரும்.

தனபாலு: எலேய்... உன்ன சின்ன பையன்னு நெனச்சிட்டு இருந்தேன். ம்ஹும்... நீ தெளிவானவன்டா...

கோபாலு: ம்ம்ம்... புரிஞ்சா சரி... ஆமா அம்மா கவர்மேன்ட்டுல பேக்கேஜ் தராங்களாம். அப்படின்னா என்னான்னே?

தனபாலு: அடேய் பையா... அது இலவச சாமான்கள். அம்மா தேர்தல் வாக்குறுதியா மிக்சி, கிரைண்டர், பேன் தர்றதா சொன்னாங்கள்ல. அத மொத்தமா மூனு பொருளையும் சேர்த்து தர்றதுனால பேக்கேஜ்ன்னு பேர் வச்சுட்டாங்க.

கோபாலு: அண்ணே! நமக்கும் தருவாங்களா?

தனபாலு: ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் இருக்கு. கவலைப்படாத....

கோபாலு: இந்த பம்பர கட்சி நாஞ்சில் இருக்காரே... அவரு ரொம்ப தான் காமெடி பண்றாரு.

தனபாலு: என்ன சொல்றாரு. இன்னமுமா அவரு இருக்காரு?

கோபாலு: அண்ணே! தேர்தல் முடிஞ்சும் தேர்தல்ல நிக்காம்லே அவங்க கட்சி இன்னைக்கும் நிலைச்சு இருக்காம். இப்ப தான் மக்கள் அவங்க கட்சியை திரும்பி பார்க்க ஆரம்பிசிருக்காங்கலாம். ஹா....ஹா.... என்னா காமெடி?

தனபாலு: ஹா...ஹா... வுடு.... வுடு.... காமெடியன் சொல்றத கண்டுக்கராத... டேய்.... உனக்கு விஷயம் தெரியுமா? 

கோபாலு: சொன்னா தானே தெரியும்? சொல்லுங்க....

தனபாலு: வெளிநாட்டு லேடி ஒருத்தரு இங்க தேக்கடிக்கு வந்திருக்காங்க. அவங்க யானை பாகனா இருக்க ஆசைப்பட்டு ப்ராக்டிஸ் எடுத்திட்டு இருக்காங்க.

கோபாலு: வெளிநாட்டுகாரங்கன்னா....வெளிநாட்டுகாரங்க தான். ரொம்ப ஆசையா கத்துக்கறாங்க போல...

தனபாலு: டேய்... அடுத்த மாசம் நம்ம தலையில மூணு இடி விழ போகுதுடா.

கோபாலு: அண்ணே! எப்பண்ணே பின்னாடி நடக்ரத முன்னாடியே சொல்ல தெரிஞ்சுக்கட்டிங்க?

தனபாலு: அடேய்.... நானே நொந்து பேசிட்டு இருக்கேன்.. உனக்கு நக்கலா இருக்கா?

கோபாலு: நக்கலு இல்லை... விவரமா சொன்னாதானே புரியும்?

தனபாலு: அடுத்த மாசம் டீசல், கேஸ், மண்ணெண்ணெய் இது மூணும் தங்கமா மாறப் போகுது. ஆமாடா.... ரேட்டு கூட்ட போறாங்களாம்.

கோபாலு: ஓ... இது தான் உங்க தலையில விழுற இடியா? ஹா...ஹா... மூணு இடி இல்லைண்ணே, நாலு இடி...

தனபாலு: என்னது நாலு இடியா...? 

கோபாலு: ஹா...ஹா... ஆமாண்ணே! பெட்ரோலும் சேர்ந்து விலை கூட போகுது.

தனபாலு: சரி.....சரி.... எல்லாம் நம்ம தலையெழுத்து. பாவம்டா, திகார் ஜெயிலுல ஒருத்தரோட தலையெழுத்தே மாறிப்போச்சு.

கோபாலு: திகார்ல ஆயிரம் பேரு இருக்காங்க, அந்த ஒருத்தர் யாரண்ணே?

தனபாலு: எல்லாம் நம்ம அய்யாவோட புதல்வி தான். அங்க ரொம்ப போர் அடிக்குதாம். அதனால டயத்தை யூஸ்புல்லா இருக்கற மாதிரி மெழுகுவத்தி செய்ய பழகுராங்கலாம்.

கோபாலு: பழகட்டும், நல்ல விஷயம் தானே...

தனபாலு: ரஜினி தன் ரசிகர்களுக்கு எழுதினதா போன வாரம் ஒரு லெட்டர் வெளியாச்சுல... அந்த லெட்டர் ரஜினி எழுதுனது இல்லையாம்...

கோபாலு: அய்யோ... யார் எழுதினதாம்?

தனபாலு: யார் எழுதினாங்கன்னு தெரியல. ஆனா அவரு எழுதல... ஏன்னா? அவருக்கு தமிழ் பேச, படிக்க முடியுமாம், ஆனா எழுத அவ்வளவா தெரியாதாம்.

கோபாலு: யார் எழுதினா என்னண்ணே! அவரு குணமாகி வந்தாலே போதும்.

தனபாலு: நடிகர் விஜய் தன் பிறந்த நாளை விமர்சையா கொண்டாடுனார்... ஆனா மக்கள் கொந்தளிச்சுட்டாங்க.

கோபாலு: அதான் ஊரே பேசுதே... ட்ராபிக் போலிஸ் எம்புட்டு கண்ட்ரோலா இருந்தும் சாலி கிராமத்துல ரெண்டு மணி நேரம் ட்ராபிக் ஜாம் ஆயிருச்சு. இந்த திடீர் டிராபிக்கில தளபதி உச்சி குளிர்ந்துச்சாம்.

தனபாலு: இன்னைக்கு தேதில அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்ன்னு தெரியுமா?

கோபாலு: ஆமா... குவிஸ் போட்டி நடத்தறாரு? போங்கண்ணே நீங்களும் உங்க கேள்வியும்?

தனபாலு: தெரியலைன்னா, சமாளிக்காத.... நடிகை அனுஷ்கா தான் ஒன்னரை கோடிக்கும் மேல ஒவ்வொரு படத்துக்கும் ரேட்டு வாங்கறாங்க. 

கோபாலு: அண்ணே! இப்ப ஒரு சினிமா காதல் ஜோடி யாருக்கும் தெரியாம ஊரை சுத்திக்கிட்டு இருக்கு. எங்க போனாலும் கார்ல செல்ப் டிரைவிங் தான்.

தனபாலு: யாருல, அந்த லவ்ஸ் ஜோடி...?

கோபாலு: அஞ்சாதே படத்துல ஓடாத வாட்ச் கட்டியிருப்பாரே அவரும், வசூல் ராஜா படத்துல டாக்டருக்கு படிப்பாரே அந்த நடிகையும் தான். லவ்ஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டுதாம்.

தனபாலு: டேய், அங்க பார்ரா... உங்க அப்பா கல்யாண ப்ரோக்கரோட வராரு?

கோபாலு: அப்படியா. இன்னைக்கு தான் என் அப்பா நல்ல காரியம் பண்ணியிருக்காரு.  ப்ரோக்கரோட வராரு... நிறைய பொண்ணுங்க போட்டோ இருக்கும், ஒண்ணொண்ணா லுக் விடலாம். அண்ணே! உனக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொன்னேலே, கிளம்பு.... கிளம்பு.....

தனபாலு: அடேய், திமிரா உனக்கு, உன் வாய்க்கு பூட்டு போடற பொண்ணு தான் உனக்கு பொண்டாட்டியா வரணும், அப்ப தான் நீ அடங்குவ....

கோபாலு: சரி.. சரி.... அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாக்கலாம், இப்ப நான் பொண்ணுகள பாக்கணும். நீ கிளம்பு....


தனபாலு வீட்டுக்கு நடையை கட்டுகிறார்.


டிஸ்கி: மேலே உள்ள படங்களில் நகைகளை மட்டும் பார்க்கவும்.


36 கருத்துரைகள்:

கூடல் பாலா said... Best Blogger Tips

இப்போதைக்கு வடை மட்டும் ...

Unknown said... Best Blogger Tips

அண்ணே அண்ணே கலக்கல்னே!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>விக்கியுலகம் said...

அண்ணே அண்ணே கலக்கல்னே!

டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா உதை விழும்டா ராஸ்கல்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@koodal bala
இப்போதைக்கு வடை மட்டும் ...>>>>

அப்புறமா போண்டாவா?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கியுலகம்
அண்ணே அண்ணே கலக்கல்னே!>>>>

என்னத்த கலக்குனேன்?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா உதை விழும்டா ராஸ்கல்>>>>

விக்கியாவது டெம்ப்ளேட் கமென்ட் போட்டிருக்காரு.... நீங்க அதுகூட போடலியே!

கூடல் பாலா said... Best Blogger Tips

நாட்டு நடப்புக்களை சுவையாக கொடுத்துள்ளீர்கள் .......பாராட்டுக்கள் ....

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

இந்த தனபாலும், கோபாலும் அடிக்கர லூட்டி தாங்கலியே. எல்லா விஷயத்தைப்பத்தியும் விலாவாரியா
அலசுராங்களே. நன்னாதான் இருக்கு.

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

தனபாலு : கனிமொழி மெழுகுவர்த்தி செய்து எரியவைத்து தமிழகத்தை இருளிலிருந்து மீட்பாங்களா அண்ணே??

கோவாலு: எட்ரா தீப்பெட்டியை. மெழுவர்த்தி மண்டையா...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Lakshmi
கருத்துக்கு நன்றி அம்மா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி
தனபாலு : கனிமொழி மெழுகுவர்த்தி செய்து எரியவைத்து தமிழகத்தை இருளிலிருந்து மீட்பாங்களா அண்ணே??

கோவாலு: எட்ரா தீப்பெட்டியை. மெழுவர்த்தி மண்டையா...>>>>>

அட.... இதுவும் நல்லாயிருக்கே...

sathishsangkavi.blogspot.com said... Best Blogger Tips

அண்ணே பின்னீட்டீங்க...

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

ஜாலியா பலவிஷயங்களைச் சொல்லிருக்கீங்க; நடுவிலே இலவச இணைப்பு போல ஃபிகர்கள் இணைச்சுக்கொடுத்து கண்களை குளுமையா ஆக்கிட்டீங்க.

//இராஜராஜேஸ்வரி said...
தனபாலு : கனிமொழி மெழுகுவர்த்தி செய்து எரியவைத்து தமிழகத்தை இருளிலிருந்து மீட்பாங்களா அண்ணே??

கோவாலு: எட்ரா தீப்பெட்டியை. மெழுவர்த்தி மண்டையா...//

இது படு சூப்பராக இருக்கு.

voted in Indli

cheena (சீனா) said... Best Blogger Tips

நல்லா இருக்கு பிரகாஷ் - நெரெய தக்வல்கள் - டிஸ்கி வேற - நான் நகைய மட்டும் தான் பாத்தேன் - வேற ஒன்னுமே பாக்க்கல் - சரியா - நட்புடன் சீனா

Mahan.Thamesh said... Best Blogger Tips

ஜாலியான உரையாடல் மூலம் பலவிடயங்களை சொல்லி இருக்கீங்க கலக்கல் அண்ணே கலக்கல்

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

உன் வாய்க்கு பூட்டு போடற பொண்ணு தான் உனக்கு பொண்டாட்டியா---
அது தானே இப்ப நடந்துட்டு இருக்கு,,

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

புஸ்தகம் இல்லாம வாத்திக பக்கத்து டீச்சர் கிட்ட கடலை போட்டுட்டு இருகாங்க -- (சிலர்)
-- பப்ளிக்..பப்ளிக்..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சங்கவி
அண்ணே பின்னீட்டீங்க...>>>

ஆமாண்ணே! இப்பதான் ஒரு கூடை பின்னி முடிச்சேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@வை.கோபாலகிருஷ்ணன்
நடுவிலே இலவச இணைப்பு போல ஃபிகர்கள் இணைச்சுக்கொடுத்து கண்களை குளுமையா ஆக்கிட்டீங்க.>>>>

சார், டிஸ்கி படிக்கலையா... நகையை மட்டும் பார்க்கணும்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@cheena (சீனா)
நான் நகைய மட்டும் தான் பாத்தேன் - வேற ஒன்னுமே பாக்க்கல் - சரியா >>>>

டிஸ்கியை கரெக்டா பாலோ பண்ணின சீனா ஐயா... வாழ்க,

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@Mahan.Thamesh
கலக்கல் அண்ணே கலக்கல்>>>>>

திரும்ப சொல்றேன்... நான் கலக்கல... கலக்கல....

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
புஸ்தகம் இல்லாம வாத்திக பக்கத்து டீச்சர் கிட்ட கடலை போட்டுட்டு இருகாங்க -- (சிலர்)>>>>

சிலர் இல்ல ரெண்டு பேரு, ஒண்ணு கருன், இன்னொருத்தர் சௌந்தர்.
பப்ளிக்....பப்ளிக்.... ஹா...ஹா..

சசிகுமார் said... Best Blogger Tips

கோபாலுக்கு பொண்ணா இல்ல உங்களுக்கா? சரி சரி சீக்கிரம் வந்து எங்க சங்கத்துல உறுப்பினர் ஆகிடுங்க #சமையல், துணி துவைத்தல் வேலைகளை கற்றுகொள்வோர் சங்கம்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@சசிகுமார்
சீக்கிரம் வந்து எங்க சங்கத்துல உறுப்பினர் ஆகிடுங்க>>>>

உங்க சங்கத்துல சேர்ந்து மூணு வருசமாச்சு.

cheena (சீனா) said... Best Blogger Tips

மூணு வருசம் ஆகியும் இன்னும் கத்துக்கலியா நீ ........பிரகாசு

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

என்னய்யா ஒரே நகைக்கடை போட்டோவா இருக்கு...?

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

கல்க்கு தல கலக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

//////
தனபாலு : கனிமொழி மெழுகுவர்த்தி செய்து எரியவைத்து தமிழகத்தை இருளிலிருந்து மீட்பாங்களா அண்ணே??

கோவாலு: எட்ரா தீப்பெட்டியை. மெழுவர்த்தி மண்டையா...
/////////

ஏதோ பிழைக்க ஒரு தொழில் கத்துகிட்டுஇருக்காங்க அது பிடிக்கலையே உங்களுக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said... Best Blogger Tips

நிறைய பொண்ணுங்க போட்டோ இருக்கும், ஒண்ணொண்ணா லுக் விடலாம்.//
எப்படி இருக்குது? பார்த்தா அப்பிராணி (அது யார் ராணின்னு கேக்கப்படாது ) மாதிரி இருந்துக்கிட்டு செய்யற வேலையைப் பாரு ?

vidivelli said... Best Blogger Tips

கலக்குங்க...........
நாட்டு நடப்பு நல்லாயிருக்குங்க.........




!!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..!!

Unknown said... Best Blogger Tips

அம்மாடி கலந்துரையாடலூடு எத்தனை விடயங்கள் வாசி அண்ணே தமிழ் வாசி தான்
!!

Unknown said... Best Blogger Tips

ஹிஹி நகை மட்டும் தான் பார்த்தோம்!!

பிரபாஷ்கரன் said... Best Blogger Tips

தங்கம் விலை ஏறிக்கிட்டு இருக்கு நீங்க தங்கத்தோட தங்க சிலைகளை போட்ருகிங்க இம் காமேடியோடு தகவலும் சூப்பர் ,பிகர்ஸ் இம் சூப்பர்

மதுரை சரவணன் said... Best Blogger Tips

kalakkal uraiyaakal... vaalththukkal

செங்கோவி said... Best Blogger Tips

//அவருக்கு தமிழ் பேச, படிக்க முடியுமாம், ஆனா எழுத அவ்வளவா தெரியாதாம்.// அவருக்குத் தமிழ் எழுத்த் தெரியும்னு தான் நினைக்கேன்..பெரியார் படம் வந்தப்பவும், இன்னும் சில படங்களுக்கும் தன் கைப்பட பாராட்டுக் கடிதம் எழுதுனாரே..

நிரூபன் said... Best Blogger Tips

சமகால அரசியல், சினிமா, இரண்டையும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறீங்க..

சுவாரஸ்யமான அரட்டை பாஸ்..

ஆனால் டிஸ்கி தான் உதைக்குது,
நகைகளை மட்டும் பார்ப்பதா அல்லது நடிகைகளை மட்டும் பார்பதா;-))

ஹி...ஹி...

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1