முதல் பாகம்:
"தீபாவளி" வந்தாச்சு... கணவர்களே கவனம்!
சென்ற பாகத்தில்:
எல்லோருக்கும் ட்ரெஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோம். அப்ப மனைவிகிட்ட இருந்து ஒரு வேண்டுகோள் வரும் பாருங்க, வேறென்ன வேண்டுகோள்?
நீங்க யூகிச்சதே தான்....
அதன் தொடர்ச்சி....
"நல்ல ஹோட்டலா பார்த்து வண்டிய விடுங்க, ரொம்ப பசிக்குது. குழந்தைகள் பசியில வாடுது". இன்னும் வீட்டுக்கு போயி சமைச்சு சாப்பிட ரொம்ப நேரமாயிரும். டிபனுக்கு தேவையானது வீட்டுல வேற இல்லை. அதனால ஹோட்டலுக்கு போங்கன்னு சொல்லிருவாங்க. ம்ஹும், நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போடும். அப்புறம் என்னங்க? சொன்ன பட்ஜெட்டை தாண்டி ட்ரெஸ் எடுத்திருக்காங்க. அதுல இப்பிடி ஹோட்டலுக்கு போன கொறஞ்ச பட்சம் ஐநூறு ரூவா செலவாகும். அதெல்லாம் யோசிக்றதே இல்லை... ஹி...ஹி... நாம இப்ப யோசிச்சு என்ன பண்றது? வேற வழி இல்லாம ஹோட்டலுக்கு போனோம்னா ஆர்டர் பண்ணுவாங்க பாருங்க, விதவிதமான அய்ட்டமா ஆர்டர் பண்ணுவாங்க, வீட்டுல இட்லி, தொசைன்னு சாப்பிடுறவங்க அந்த மாதிரி ஒரு அய்ட்டமே இல்லாத மாதிரி புதுசு புதுசு அய்ட்டமா ஆர்டர் பண்ணுவாங்க. எல்லாமே ரொம்ப காஸ்ட்லியா வேற இருக்கும். ம்ஹும், நாம ஜாடைமாடையா சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க சாப்பிடுறத பார்த்து நமக்கும் நல்லா பசிக்க ஆரம்பிச்சிரும். வேறவழி நாமளும் நிறையவே சாப்பிட்டருவோம். குழந்தைகளும் அவங்களுக்கு பிடிச்சதுன்னு நல்லா சாப்பிடுவாங்க. ஆக மொத்தம் எல்லோருமே காசை பற்றி கவலைப்படாம சாப்பிட்டருவோம். பில்லு வரும் பாருங்க ஆயிரத்தை தொட்டிருக்கும். ஆக இப்படியே தீபாவளி ட்ரெஸ் முதல் நைட் டிபன் வரை செலவு நாம போட்ட பட்ஜெட்டை தாண்டி இருக்கும்.
வீட்டுக்கு வந்து எல்லோர் கிட்டயும் எடுத்த துணிகளை காட்டி பெருமை பட்டுக்கிருவாங்க. அப்புறம் சொல்வாங்க பாருங்க டயலாக், நான் வேணாம் வேணாம்னு தான் சொன்னேன், இவரு தான் நல்லா காஸ்ட்லியா எடுத்துக்க சொன்னாருன்னு நம்ம மேல பழியை போட்டிருவாங்க. நாமளும் அதை ஆமோதிச்சுதான் ஆகணும்.
ரெண்டு மூணு நாள் போனதுக்கு அப்புறம் என்னங்க, என்னங்க அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிப்பாங்க. என்னன்னு கேட்டோம்ன்னா வீட்டுல இருக்கிறப்போ போட சாதா சேலையே இல்லை. கொஞ்சம் ரேட் கம்மியா ஒரு ரெண்டு மூணு சேலை வாங்கணும், அதனால கொஞ்சம் பணம் கொடுங்கன்னு கேட்பாங்க. வேறவழி, தந்துதான் ஆகணும் பணத்தை. அதுக்கு வேற ஒரு முறை கடைக்கு கூட்டிட்டு போகணும். அப்புறம் போன பாகத்தில் நான் சொன்னேனே, அதெல்லாம் தவறில்லாம நடக்கும். அந்த சாதா சேலைகள் எடுக்க ஒரு நாள் காலி தான்...
அப்பாடி ஒரு வழியா துணிமணிகள் எடுத்தாச்சு. இனி நிம்மதிதான்னு நெனச்சிட்டு இருப்போம். என்னங்க.... என்னங்க... அப்படின்னு ஒரு பீடிகை போடுவாங்க. நமக்கு இன்னும் என்ன செலவு வரப்போகுதோன்னு அடிவயிறு கலக்கும். ஆமாங்க, நம்ம வீட்டுக்கு தான் செலவு பண்றோம். தப்பில்லை. அதுக்காக ஒரு அளவு வேணும்ல... ஹி..ஹி... சரி.. சரி... என்ன பீடிகைன்னு கேட்கங்களா? வேறென்ன? சேலை சுடிதாருக்கு ஏற்ற மாதிரி வளையல், பொட்டு, கவரிங் டிஸைன் நகைகள் என வாங்கி தர்றதுக்கு தான் அந்த பீடிகையே... வேற வழி அவங்க கேட்குற எல்லாத்தையும் வாங்கித் தந்திரனும். இல்லையினா எப்படி எப்படியெல்லாம் பழி வாங்க முடியுமோ வாங்குவாங்க. ஹி..ஹி... நமக்கு நல்ல சாப்பாடு, சுத்தமான டிரஸ் போட்டுக்கிற வேணும்ல. அப்ப வாங்கிக் கொடுதிரனும்.
அப்புறம் ஒரு வழியா எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்த நிம்மதியில இருப்போம். தீபாவளி வர நாலு நாள் இருக்கும் போது மறுபடியும் "என்னங்க" அப்படின்னு ஆரம்பிப்பாங்க. ஐயோ மறுபடியும் என்னங்கவா?என்ன செலவு வைக்க போறாங்களோன்னு மறுபடியும் உள்ளுக்குள்ள கலக்கம். என்ன "என்னங்கம்மா" என்ன விஷயம்னு கேட்ட உடனே அவங்க சொல்வாங்க. தீபாவளிக்கு ஸ்வீட் காரம் எல்லாம் செய்யணும். அதுக்கு மளிகை சாமான்கள் வாங்கணும். நான் லிஸ்ட் தரேன். கடைக்கு போய் வாங்கிட்டு வந்திருங்கனு சொல்வாங்க. வேற வழி அவங்க தர்ற லிஸ்ட்டை வாங்கி பொருட்கள் வாங்கித் தந்திரனும். அப்புறம் அவங்க சமையல் புக், பக்கத்து வீட்டு பெண்கள் சொன்ன பலகாரங்கள் என செலக்ட் பண்ணி இனிப்பு மற்றும் கார வகைகளை செஞ்சிருவாங்க.
அப்புறம் பட்டாசு வாங்கணும். நம்ம குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்க பயம் இருக்கும். ஆனாலும் அதையும் காட்டிக்காம நிறைய பட்டாசுகள் வேணும்னு அடம் பிடிக்குங்க. மனைவியும் தீபாவளிக்கு இவ்ளோ செலவு செஞ்சீங்க. குழந்தைகளை அழ வைக்காதிங்க. அவங்க கேட்கறத வாங்கிக் கொடுங்கன்னு மனைவியும் சொல்வாங்க. நாம மனைவி பேச்சை தட்டாம இருப்போமா? குழந்தைகளை கூட்டிட்டு அவங்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவங்களையும் சந்தோசப்படுத்தி நமக்கும் உள்ளுக்குள்ள ஒரு மகிழ்ச்சி.
இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.
தொடர்ந்தாலும் தொடரும்...
டிஸ்கி:
மேற்கண்ட கருத்துக்களை என் பார்வையில் பதிவிட்டிருக்கிறேன். எதிர்மறையான கருத்துகளுக்கு நீங்களே பொறுப்பு.
38 கருத்துரைகள்:
போனஸ் பணத்தை காலி பண்றதுன்னா இப்படி தானா
//இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்ரதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.//
அழகா சொல்லியிருக்கீங்க.
அருமை.
தீபாவளி கவுன்ட்டவுன் நல்லாவே இருக்கு ....
பொண்டாட்டி ஆசைப்பட்ட புடவை
பையன் ஆசைப்பட்ட ஜீன்ஸ் டி-ஷர்ட்
பொண்ணு ஆசைப்பட்ட ஸ்கர்ட் / கவுன்
அப்பறம் ஹோட்டல்ல டின்னெர்
ஒரு 5000 ரூவாக்கு பட்டாசு
இந்த கணக்கெல்லாம் விட இதை வாங்கி குடுத்தா அவங்க படுற சந்தோசம் முக்கியம் இல்லையா பிரகாஷ் ?
மாப்ள ரைட்டு.,
தீபாவளி வந்தா பர்ஸ் காலி ஆனாலும் நம்ம ஆளுங்களை சந்தோசப்படுத்தி பாக்கிறதுல உள்ள சந்தோசத்துக்கு ஈடாகுமா.
பிச்சிட்டீங்க போங்க!!நிசமாலுமே உண்மை தான்!
அட...இப்படியெல்லாம் இருக்கா?
அப்படியே என் அனுபவமும் இதுதான் மனதில் உள்ளதை தைரியமா சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
தீபாவளி என்பது செலவாளிகளின் விழா
நமக்கு வயிறு கலக்கும்
புடவைக்குத் தகுந்தாற்போல மேட்ச் ப்ளெளஸ் பிட் தேடித்தேடி வாங்குவது அதை தையற்காரரிடம் தைத்து வாங்குவது, உள்ளாடைகள் வாங்குவது போன்றவற்றையும் சுவையாக எழுதியிருக்கலாம்; ஏனோ விட்டுப்போய் விட்டது.
மேட்ச் ப்ளெளஸ் பிட் சரியாக அமையாமல் போவது. அமைந்த அந்த பிட்டுக்கு தகுந்தாற்போல புடவையை மாற்றுவது அல்லது உபரியாக ஒரு புடவை எடுப்பது. அல்லது ரெடிமேட் ரவிக்கைகள் சிலவற்றை உபரியாக எடுத்து வருவது என மேலும் சில விஷயங்களை சுவைபட கொண்டு வந்திருக்கலாம்.
தீபாவளி வந்தாலே இதுபோல அமர்க்களங்கள் யாவும் எல்லா வீடுகளிலும் நடப்பது தான். அவற்றை சுவையாக எழுதி அசத்தி விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.vgk
தீபாவளி கொண்டாட்டம் இப்பவே ஆரம்பிச்சாச்சா?
மைனஸ் ஓட்டு ஒன்னுகூட விழலியே..
இந்த என்னங்க இருக்கே
அதுக்குள்ள சக்தி!
சொல்லித் தெரிவதில்லிங்க
அனுபவிச்சா தான தெரியும்
புலவர் சா இராமாநுசம்
தமிழ்மணத்தில் மைனஸ் ஒட்டு போட்ட அந்த நல்ல மனிதருக்கு முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்.
எப்பிடியோ உங்கள் பணம் காலியாச்சா இல்லையா ,ஹா ஹா ஹா
அழகா சொல்லியிருக்கீங்க...
//இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.
தொடர்ந்தாலும் தொடரும்..//
இந்த சந்தோஷம் கண்டிப்பா தொடரனுமுங்க....அருமையா பதிவு பண்ணி இருக்கீங்க...
எல்லோரையும் சந்தோஷப்படுத்துவது தான் வீட்டுத் தலைவி/தலைவர் களுக்கு "தீபாவளி"!
///இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.//
அருமையான ஆழமான வரிகள். தொடரு���்கள்.
//அப்புறம் ஒரு வழியா எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்த நிம்மதியில இருப்போம். தீபாவளி வர நாலு நாள் இருக்கும் போது மறுபடியும் "என்னங்க" அப்படின்னு ஆரம்பிப்பாங்க. ஐயோ மறுபடியும் என்னங்கவா?என்ன செலவு வைக்க போறாங்களோன்னு மறுபடியும் உள்ளுக்குள்ள கலக்கம்.//
ஏற்படு கலக்கம் முற்றிலும் உண்மை நண்பரே..
ரொம்ப கலங்கிட்ட மாதிரி தெரியுதே?
இதுக்கும் மைனஸ் ஓட்டா? வரவர மக்களோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு.......
அண்ணே நீங்க எங்கையோ போட்டீங்க
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கும் மைனஸ் ஓட்டா? வரவர மக்களோட கடமை உணர்ச்சிக்��ு அளவே இல்லாம போச்சு.......//
இது யாரோ பெண் பதிவர் தான். ஹீ ஹீ
// இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.//
பிரகாஷ்,
வட்டிக்காரானிடம் கையேந்தாமல் செஞ்சா என்னமோ உண்மையான தீபாவளி தான்...
இதுக்கும் மைனஸ் ஓட்டா? வரவர மக்களோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போச்சு.......
மாப்ள நீங்க சொன்ன விஷயங்களை அச்சு அசலா பின்பத்துரவங்கள House Hus bend ன்னு சொல்வாங்களா டவுட்டு!
குடும்பம்னா சும்மாவா??
தீபாவளி நெருங்க நெருங்க இன்னு என்னென்ன ஆகப்போகுதோ?
நச்சுன்னு சொல்லிட்டீங்க...
//இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி. // - அப்பா பிரகாசு - இப்பவாச்சும் புரிஞிக்கிட்டீயே சரி - இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - நட்பூடன் சீனா
http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.html - நேரம் கிடச்சாப் படி.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அழகா சொல்லியிருக்கீங்க.
அவங்க இப்ப எங்கேயோ advanced ஆகப் போய் இருப்பாங்க.
ரைட்டு மாப்ள...
@ezhilan
நாம மனைவி பேச்சை தட்டாம இருப்போமா? குழந்தைகளை கூட்டிட்டு அவங்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவங்களையும் சந்தோசப்படுத்தி நமக்கும் உள்ளுக்குள்ள ஒரு மகிழ்ச்சி.
இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.///
இந்த வரிகளை படிக்கவில்லையா நண்பரே,,,
நண்பரே, உங்கள் பதிவை நீங்களே இரண்டொருமுறை திருப்பி திருப்பி படியுங்கள்.அதில் நீங்க்ள் படுகின்ற வேதனை புரியும்..துணிமணிகள் வாங்கியதையும், ஓட்டலில் சாப்பிட்டதையும்,மற்றும் பட்டாசு வாகுவதையும்,யாருக்கோ செய்வதைப் போல வயிற்றெரிச்சலுடன் கூறியுள்ளது,வேதனை தருவதாக உள்ளது.தீபாவளி நிகழ்ச்சிகளை நீங்கள் கூறியுள்ளது வர்வேற்க தக்கதுதான்.ஆனால் கூறியுள்ள விதம் சரியில்லையே.முதலில் எதிமறை விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.நன்றி.
என்ன இருந்தாலும் அப்பா காசுல தீபாவளி கொண்டாடின சந்தோசம் எதிலையும் வராது தெரியுமா ?
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
அவர் காசில் ஊசி பட்டாசு வாங்கி போட்ட சந்தோசம்
வெடி கடையில் வெடியை ஆட்டையை போட்டது
முந்தின நாள் இரவில் விடிய விடிய ஊர் சுற்றியது
வெடி குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து நம் வீட்டு வாசலில் போட்டு நாம்தான் நிறைய வெடி போட்டதாக பந்தா காட்டியது
வெடிக்காத வெடிகளை கலெக்ட் செய்து மொத்தமாக கொளுத்தி போட்டு அதில் வரும் சிறு சிறு புஷ் மத்தாப்பு மற்றும் திடிர் என்று வெடிக்கும் சிறு சத்தம் ஒரு சந்தோசம்
நமக்கு பிடிக்காதவன் வீட்டு வாசலில் வெங்காய வெடி போட்டது
ஒருவனையும் நிம்மதியா தூங்கவிடாமல் பண்ணியது
இதுதான் நிஜ தீபாவளி தெரியுமா
என்ன இருந்தாலும் எங்க மதுரைக்காரங்கே deepavali மாதிரி வருமா
சிந்த்யுங்கள் தோழர்களே தோழியர்களே
அருமை நண்பரே! கடைசியில் கலக்கல் வசனம்... வாழ்த்துக்கள்.