நண்பர்களே,
1. கவிதைப் போட்டி
2. கதைப் போட்டி
3. கட்டுரைப் போட்டி
4. நகைச்சுவைப் போட்டி
5. அனுபவங்களைப் பகிரும் போட்டி
6. ஹைக்கூ போட்டி
7.புகைப்படப் போட்டி
8. பின்னூட்டங்களால் படைப்புகளுக்கு மகுடம் சூட்டும் போட்டி
9. சமையல் போட்டி
10. அதிக பதிவுகளால் தோட்டம் சிறக்கவைத்தவர் போட்டி
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
உங்களுக்கு இலக்கியத்தில் ( இலக்கியம்னு பார்த்ததும் ஓடிராதிங்க, நகைச்சுவை, சமையல் ஆர்வமா) ஆர்வமா? உங்களிடம் நிறைய படைப்பு திறமை இருக்கிறதா? உங்கள் திறமையை காட்ட போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? அதற்கான போட்டிகள் எங்கே நடக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இதோ இங்கே நடக்கிறது.
தமிழ்த்தோட்டம் என்ற குழும தளத்தில் உங்களுக்கான போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த தளத்தில் உறுப்பினரானால் மட்டுமே இந்த போட்டியில் பங்கு கொள்ள முடியும். இன்றே உறுப்பினர் ஆகுங்கள். சுமார் பத்து பதிவுகளை உங்கள் பெயரில் வெளிட்டாலே போதும். போட்டியில் பங்குபெற நீங்கள் தகுதி ஆனவராவிர்.
போட்டியின் விவரங்கள்:
7.புகைப்படப் போட்டி
போட்டி நிபந்தனைகள்:
- நமது தமிழ்த்தோட்டத்தில் 10 பதிவிற்கு மேல் பதிவிட்ட எல்லா உறுப்பினர்களும் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
- படைப்புகளின் தலைப்பு அவரவர் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யலாம்.
- மொத்தப்படைப்புக்களிலிருந்து 'கவிதை’ 'கட்டுரை’ 'கதைப்’ பிரிவில் மூன்று பேரும், இதர பிரிவுகளில் ஒருவர் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவர்.
- தேர்வு செய்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்தும் சான்றிதழும் வழங்கப்படும்.
- தேர்வு முடிவுகள் தமிழ்த்தோட்டத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு உட்பட்டது. நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
- படைப்புகள் புதியவனவாகவும் வேறு தளங்களில் வெளியிடாததாகவும் இருத்தல் சிறப்பு.
- படைப்புகள் சுயமாக படைக்கப்பட்டிருக்க வேண்டும். பிறர் படைப்புகளை அனுப்புவதெனில் அதே படைப்பாளியின் பெயரில் அனுப்பலாம். சான்றிதழ் அவர் பெயருக்கே அனுப்பிவைக்கப்படும்.
- எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், ஒரே தலைப்பைச் சார்ந்து எத்தனை படைப்புகளை வேண்டுமோ யார் வேண்டுமாயினும் அனுப்பலாம், எத்தனைப் படைப்புகளை அனுப்பினாலும் அந்தந்த துறை சார்ந்து ஒருவரின் ஒரு படைப்பே தேர்ந்தெடுக்கப்படும்.
- படைப்பினை அனுப்புகையில் அவரின் முழுப் பெயரும், உடன் "தமிழ்த்தோட்டத்து உறுப்பினர் பெயரும் மற்றும் பதிவு எண்ணிக்கையும் நிச்சயம் குறிப்பிட்டிருத்தல்
வேண்டும். அங்ஙனம் இல்லாதார் படைப்புகள் மற்றும் குறைந்தது பத்து பதிவேனும் நம் தளத்தில் இட்டிருக்காதோர் படைப்புக்கள் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும். - படைப்புக்களை மின்னஞ்சல் மட்டுமே செய்தல் வேண்டும். போட்டிக் காலம் முடிந்ததும் அனைத்துப் படைப்புகளும் நம் தமிழ்த்தோட்டத்தில் வெளியிடப் படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected]
- படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் :30-11-2011
- போட்டி முடிவுகள் 15.12.2011- ற்குள்ளாக அறிவிக்கப்படும்.
தமிழ்தோட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாபெரும் இலக்கியப் போட்டி - 2011
இது நம்மை நாமே வளர்த்துக் கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை...
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் நன்றி!!!
நன்றி: தமிழ்த்தோட்டம்
டிஸ்கி:தமிழ்த்தோட்டம் தள அனுமதியுடன் இங்கே பகிரப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
34 கருத்துரைகள்:
நமது தோட்டத்து போட்டியை உறவுகளுக்கு அறிவித்தமைக்கு நன்றி நண்பரே,
உங்களின் சேவை என்று தொடரட்டும் என்று வாழ்த்துகிறோம்
என்றும் அன்புடன்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
ஏற்கனவே நம் வலைப்பூக்களில் படைக்கப் பட்ட பதிவுகளை அனுப்பலாமா?
வாழ்த்துக்கள்...அழைப்புக்கு நன்றிங்க மாப்ள!
போட்டிதானே? ஹா ஹா இதொ வர்றேன்
போட்டி சம்பந்தமான மேலதிக தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு போட்டி நிபந்தனைகளை பார்க்கவும்.
நன்றி...
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!
போட்டியா?
போய் ஒழுஞ்சுக்கங்க மக்கா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்.......
தமிழ்த் தோட்டம் வளமாக தமிழ்ச்சிந்தனைகளால் தண்ணீர் ஊற்றுவோம் வாங்க...
நானும் ரெடி வந்துக்கிட்டே இருக்கேன்
போட்டியா? விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.
தகவல் அறிந்தேன் நண்பரே ,கலந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன் .
சூரிய ஜீவா போட்டி குறித்த நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ள http://www.tamilthottam.in/t20084-2011 இந்த சுட்டியில் பாருங்க
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
பகிர்வுக்கு நன்றி. கலந்துகொள்ள இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி நண்பரே.
கலந்துகொள்வோம்.
தகவலுக்கு நன்றி பாஸ் எங்கள் தளங்களில் ஏற்கனவே வெளியிட்ட பதிவுகளை அனுப்பலாமா?
முதல்ல தமிழ்த்தோட்டத்துல ரெஜிஸ்டர் ஆகவே மாட்டேங்குதே ஏன்????
@K.s.s.Rajh
போட்டி குறித்த நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ள http://www.tamilthottam.in/t20084-2011 இந்த சுட்டியில் பாருங்க
நடுவரா கலந்துக்க நான் ரெடி பிரகாஷ்.
//செங்கோவி said... Best Blogger Tips [Reply To This Comment]
நடுவரா கலந்துக்க நான் ரெடி பிரகாஷ். ////
எதிர்பாத்தேன் அப்பு!
காரணம் தெரியும்தானே?
#ஹி ஹி ஹி...
@செங்கோவி
வாங்க செங்கோவி...
தகவலுக்கு நன்றி.
என்னது போட்டியா? நான் போய் ட்ராக் ஷூட்டும், ஷூவும் ரெடி பண்ணி வெக்கிறேன்......
//////செங்கோவி said...
நடுவரா கலந்துக்க நான் ரெடி பிரகாஷ்./////
அப்போ கப்பு எனக்குத்தானே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது போட்டியா? நான் போய் ட்ராக் ஷூட்டும், ஷூவும் ரெடி பண்ணி வெக்கிறேன்......
//
நானும் வரேன் வெயிட் பண்ணுங்க!
பத்து பதிவு போட்டிருக்கனும்னு சொல்றாங்க!இப்பல இருந்து பத்து பதிவு இணைசுட்டு அப்பறம் போட்டியில கலந்துக்கலாமா?
பகிர்வுக்கு நன்றி பிரகாஸ்
கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்,போட்டியில்/
வாழ்த்துக்கள்...அழைப்புக்கு நன்றி பிரகாஸ்...
கலந்துரவேண்டியது தான்
பகிர்வுக்கு நன்றி நண்பா
வணக்கம் சகோ,
இலக்கியப் படைப்பாளிகளுக்கு விருந்தளிக்கும் நல்லதோர் செய்தி.
பகிர்விற்கு நன்றி தல.
நல்ல செய்திக்கு வாழ்த்துக்கள் பிரகாஷ்.
கலக்குங்கள்.
பார்க்கிறேன் சகோதரா...