நண்பர்களே,
உங்கள் அறிவுக்கு ஓர் சவால். கீழ்க்கண்டவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.
மலை ஏறி தாள் பறித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து
பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. அது என்ன?
கழுத்துண்டு; கையில்லை
நாக்குண்டு; பேச்சில்லை
வாயுண்டு; அசைவில்லை
தொப்பி உண்டு; தலைமுடியில்லை. அது என்ன?
சிமிழிலே தண்ணீர்
தண்ணீர் மேலே தனிக்கொடி
கோடி மேலே சூரியன். அது என்ன?
பூவாமல் காய்ப்பது என்ன காய்? அது
புண்ணின்றிப் புழு புழுக்கும். அது என்ன?
வந்தாரு திரும்பி வந்தாரு
சொல்லுமிடம் வச்சாரு. அது என்ன?
நிறங்கறுத்த அழகி நான்;
நித்தம்நித்தம் வேண்டும் அழகி நான்;
ரச அழகி நான்; ருசி அழகி நான். அது என்ன?.
ஆட்டமும் பாட்டமும் அதனாலே
தோட்டமும் ஊட்டமும் அதனாலே
கூட்டமும் நாட்டமும் அதனாலே. அது என்ன?
வாய் இல்லை; வார்த்தைகள் சொல்வேன்
உயிர் இல்லை; ஊருக்குப் போவேன்
கால இல்லை; வீட்டுக்கு வருவேன். அது என்ன?
மூக்கனுக்கு மூன்று முழ நீளம்
மூக்கன் பொண்டாட்டிக்கு
முளைத்தது அகிலம் அதிகம். அது என்ன?
மஞ்சள் பூக்கையிலே
மாட்டேன் என்று சொன்னீரே
பிள்ளை பெற்று கையில் கொடுத்தால்
முத்தமிட வந்தீரே. அது என்ன?
டிஸ்கி:
மேற்க்கண்ட விடுகதைகளின் விடைகள் அடுத்த இடுகையில் வெளிவரும்.
41 கருத்துரைகள்:
//பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. //
இரண்டு நாளா காய்ச்சல்னு கஞ்சி தான்யா ஊத்துறாங்க...
Eenpa tamila poduppa....
ஸலாம் சகோ.பிரகாஷ்.
//எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?//
நிபந்தனையை ஏற்பதா வேண்டாமா என்று நான் முடிவு செய்ய வேண்டும்..!
சரி... சரி... உங்கள் சொத்து என்ன அதை முதலில் சொல்லிவிடுங்கள் சகோ..!
@செங்கோவி
இரண்டு நாளா காய்ச்சல்னு கஞ்சி தான்யா ஊத்துறாங்க...//
அட பாவமே, தொட்டுக்க ஊறுகா கூட இல்லையா?
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
விடைகளை கூற இரண்டு நாள் அவகாசம் வேண்டும் ...
@koodal bala
விடைகளை கூற இரண்டு நாள் அவகாசம் வேண்டும் ...//
அண்ணே அடுத்த இடுகை வருவதற்குள் சொல்ல வேண்டும், அதான் அவகாசம்
பிரகாஷ், நான் முயற்சி பன்றேன்.
1) மழை
2)பேனா
3)
4)அத்திப்பழம்
5)
6)திராட்சை
.
.
.
.
ம்ம்ம்ம்ம்ம்ம்....முடியல!
விடைக்கு வேற காத்திருக்கணுமா...
மச்சி எப்படி இதெல்லாம்?
/////மலை ஏறி தாள் பறித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து
பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. அது என்ன?/////
சுண்டக்கஞ்சியா...?
///நிரங்கறுத்த அழகி நான்;
நித்தம்நித்தம் வேண்டும் அழகி நான்;
ரச அழகி நான்; ருசி அழகி நான். அது என்ன?./////
தங்கர்பச்சான் படம்தானே?
/////வாய் இல்லை; வார்த்தைகள் சொல்வேன்
உயிர் இல்லை; ஊருக்குப் போவேன்
கால இல்லை; வீட்டுக்கு வருவேன். அது என்ன?/////
பேய்யி.....
/////ஆட்டமும் பாட்டமும் அதனாலே
தோட்டமும் ஊட்டமும் அதனாலே
கூட்டமும் நாட்டமும் அதனாலே. அது என்ன?/////
டாஸ்மாக் பார்....
@சத்ரியன்
அண்ணே ரெண்டு விடைகள் தான் சரியானவை
@பன்னிக்குட்டி ராம்சாமி
அண்ணே, எல்லாமே தப்பு தப்பு தப்பு....
இன்னிக்கு உங்களுக்கு நல்லா பொழுது போகும்...
அப்படியே இந்த இம்சை அரசன் படத்தில ரெண்டு விடுகதை கேப்பாங்களே அதையும் சேர்த்திருக்கலாம்..
பிரகாஷ் முதல்ல உன் சொத்து எவ்வளவு தேறுனு சொல்லு அப்புரமா பதில் பத்தி யோசிக்கலாம்.
சகோதரம் சூப்பர் பதிவு ரொம்ப ரசிச்சன்
முடிஞ்சா எனது eயாழ்ப்பாணம் பதிவையும் பாருங்க உங்க கருத்துகளை சொல்லுங்க
சார் எங்களுக்கு அந்த காலத்திலிருந்தே பதில் சொல்ல பிடிக்காது!!
ஹலோ ... கேள்விக்கு ஒரு இடுகை ... அப்புறம் பதிலுக்கு ஒரு இடுகை ... என்ன சீக்கிரம் 100 வது இடுகை அப்படின்னு ஒரு இடுகை போடலான்னு நினைப்பா ...?
அப்படின்னு நான் கேட்கல அண்ணன் ... நான் ரொம்ப நல்லா பையன். விடையெல்லாம் எனக்கு தெரியாது ...அப்படி தெரிஞ்சிருந்தா ஒழுங்கா பரிச்சையில எழுதியிருப்போமே அப்படின்னு சொல்லுற அநேகரில் நானும் ஒருவன் .. ஹி ..ஹி
(மண்டைய சொரியுறேன்)
நான் உங்க அளவுக்கு ஒஸ்தி இல்லைங்கோ ங்கே ங்கே....
ஓட்டைகளை ஸாரி ஓட்டுகளை போட்டுட்டு வெயிட் பண்றேன் அடுத்தப் பதிவுக்கு ஹி ஹி...
அண்ணே ஓட்டுமட்டும் போட்டுட்டு கெளம்பிறேன்
மலை ஏறி தாள் பறித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து
பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. அது என்ன?
>>>
மழை
வாய் இல்லை; வார்த்தைகள் சொல்வேன்
உயிர் இல்லை; ஊருக்குப் போவேன்
கால இல்லை; வீட்டுக்கு வருவேன். அது என்ன?
>>>>
தபால்
//பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. //
>>>
மழை
சின்னக்குழந்தையிலிருந்தே பதில்சொல்ல பிடிக்காமல்தான் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்கியதில்லை...நீங்க வேற இப்ப கேள்விகேட்டு டார்ச்சர் பண்றீங்களே சகோ???
உங்க சொத்து பல்லு எனக்கு வேண்டாம் நண்பா அதனால நான் விடை சொல்ல வில்லை ஹிஹி
பில்கேட் சொத்தைத்தாறதா சொன்னால் பதிலை சொல்லிடலாம் பிரகாஸ் "என்னோட சொத்தே இந்த தமிழ்வாசி Blog தான் வச்சுக்கைய்யா" என்று சொல்லிட்டால் அப்புறம் அதைவச்சிட்டு நா���் என்னப்ண்ணுறது.
அட போப்பா.. நாமெல்லாம் எப்ப யோசிச்சு
மண்டை காய வைக்கிறீங்க.
ரூம் போட்டு யோசிச்சும் முடியல!
மனசாட்சியே இல்லையா? இதெல்லாம்....ரொம்ப ஓவர்...
கண்ணா கட்டினாலும் பறுவாயில்ல but என்று யோசிச்சேன் இது தலையெல்லாம் கிர் என்குதே...
என்ன கொடும சகோ... இது.. உங்களுக்கே எங்கள பார்த்தா பாவமா தெரியல்லையா?
பதிலைத்தான் சொல்லுறது...
நண்பா ... உங்க சொத்தெல்லாம் வேணாம் ... சீக்கிரம் விடையை சொல்லுங்க ... இப்பவே கண்ண கட்டுதே ...
இப்ப எல்லாரும் விடுகதை போட ஆரம்பிச்சாச்சு... ஆரம்பிச்சு வச்ச அண்ணா மனோ அவர்கள் பதிலைச் சொல்ல வரவும்.
http://spoofking.blogspot.com/2011/10/blog-post_30.html
enakku theriyavillai
~*~டிஸ்கி:மேற்க்கண்ட விடுகதைகளின் விடைகள் அடுத்த இடுகையில் வெளிவரும்.~*~
உங்களோட இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு....
மச்சி, முடியலை.