முந்தைய பாகங்களுக்கு...
டிஸ்கி:
இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி
கடந்த பாகங்களில் ABSOLUTE மற்றும் INCREMENTAL METHOD பற்றி பார்த்தோம். அவைகளின் நன்மை தீமைகளை இங்கே பார்ப்போம்.
ABSOLUTE CO-ORDINATE METHOD நன்மை தீமைகள்:
1. ஒரு பொதுவான புள்ளியே origin ஆக வைக்கப்படுகிறது.
2. இந்த முறை மூலமே அதிக PROGRAMS எழுதப்படுகிறது.
3. இந்த முறையில் எழுதப்பட்ட PROGRAMஇல் ORIGIN எந்த இடத்தில வைக்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
4. இந்த முறை PROGRAMஇல் தவறு ஏற்பட்டால் எளிதாக கண்டறியலாம்.
5. CUTTER RADIUS COMPENSATION (ITHAI PROGRAMகளுக்கு மிக எளிமையானது.
6. இந்த முறை SUBPROGRAMகளுக்கு குறைந்த அளவிலேயே ஒத்துழைக்கும்.
INCREMENTAL CO0ORDINATE METHOD நன்மை தீமைகள்:
1. ஒவ்வொரு புள்ளிக்கும் அதற்கு முந்தய புள்ளி ORIGINஆக வைக்கப்படுகிறது.
2. REPEATED PROGRAMS, SUB PROGRAMS ஆகியவற்றுக்கு இந்த முறையே எளிது.
3. இந்த முறை PROGRAM எழுத ஈசியா இருக்கும். ஆனால் இந்த முறையை தேவைப்படும் இடத்தில மட்டுமே யூஸ் செய்தால் நல்லது.
4. இந்த முறையில் ஒரு இடத்தில தவறு ஏற்பட்டாலும் PROGRAM முழுவதுமே தவறாகிவிடும்.
5. CUTTER RADIUS COMPENSATION PROGRAMஇல் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தவறு ஏற்பட்டு விடும்.
6. இந்த முறை PROGRAMஇல் ORIGIN எங்கே உள்ளது என கண்டுபிடிப்பது சற்று சிரமமான விஷயம்.
நண்பர்களே, மேலே ABSOLUTE மற்றும் INCREMENTAL METHOD இரண்டுக்குமுள்ள நன்மை தீமைகளை குறிப்பிட்டு உள்ளேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். அப்டேட் செய்து கொள்கிறேன்.
வழக்கம் போல கீழே வீடியோஸ் உள்ளது. தவறாமல் பாருங்கள்,
THANKS: YOUTUBE
13 கருத்துரைகள்:
மாணவர்களுக்கு பயனுள்ளது ....தொடருட்டும் ...
மாப்ள பகிர்வுக்கு நன்றி...உன் சேவை போற்றுதலுக்குரியது!
தொடருங்கள், நிறையப் பேருக்கு பயன்படக்கூடிய ஒன்று!
உபயோகமான பதிவு பலருக்கும் சென்றடையட்டும்.....
//இந்த முறையில் ஒரு இடத்தில தவறு ஏற்பட்டாலும் PROGRAM முழுவதுமே தவறாகிவிடும்.//
உண்மை தான்யா.அது தான் பெரிய பிராப்ளம்..எங்க விட்டோம்னு கண்டுபிடிக்கமுன்னே, தாவு தீர்ந்திடும்.
அருமையான பதிவு நண்பரே
அறிய முற்படுபவர்க்கும் ,அறிந்துகொள்ள நினைப்பவர்க்கும் நிறைவாகவே பயன் தரக்கூடிய பதிவு நண்பரே.
நேசமுடன்
ரமேஷ்
ரைட்டுங்க அண்ணே!
அருமையான மா���வர்களுக்கு பயனுள்ள தொடர்
இன்று என் வலையில்
தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
பயன்படக்கூ���ிய ஒன்று.
தொடருங்கள்.
நல்லதோர் முயற்சி பாஸ்,
தொடர்ந்தும் பதிவிடுங்கள்.
BOSS videos removed by user nu varuthu so please replace a other new video...