CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பதிவுகள்

நண்பர்களே,
             இந்த வருடம் ஒவ்வொரு மாதமும் நான் எழுதிய பதிவுகளில் அதிகம் விமர்சித்த,கருத்துரைகள் வாங்கிய பதிவை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்.
டிசம்பர்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:
ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...
அனைவருக்கும் வணக்கம்,
வலைபதிவர்கள், முகநூல், டிவிட்டர் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி மகிழ கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நேற்று மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். சந்திப்பு பற்றிய நினைவுகளை இனி சில இடுகைகள் மூலம் உங்களிடம் பகிர்கிறேன்.
**********************************************************************
நவம்பர்: 63 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

      தமிழ் பேரன்ட்ஸ் வலை நண்பர் சம்பத்குமார் அவர்கள் எனக்குள் நான் என்ற தொடர்பதிவில் என்னையும் தொடர்பதிவிட மிரட்டல் விடுத்திருந்தார். அவர் மிரட்டலை தட்ட முடியாமல் ஏதோ எழுதி இருக்கேன். கண்டிப்பா படிச்சிருங்க.
**********************************************************************
அக்டோபர்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!

        மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.  
**********************************************************************
செப்டம்பர்: 65 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

மங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு

மங்காத்தா படத்தில் நடித்த அனுபவம் மற்றும் வாய்ப்பு பற்றி அஞ்சலி பேட்டி வீடியோ பாருங்கள்.

**********************************************************************
ஆகஸ்ட்: 81கருத்துரைகள் வாங்கிய பதிவு:

பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...

அடர்கூந்தலிலும், தோளிலும் தவழும்
மல்லிகையின் மனமும்....

சட்டென திரும்பி பார்க்கும் 
தாவணி உடுப்பும்....
**********************************************************************
ஜூலை: 124 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

அட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)

   இன்றைய பேட்டியில் நாம் பேச இருப்பது வலையுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு சி. பி. செந்தில் குமார் அவர்களை தான். அவர் எழுதும் வலைப்பூ அட்ரா சக்க. அவரைப் பற்றிய அறிமுகம் அவசியம் சொல்லனுமா? உங்களுக்கு தெரியாததா அவரை பற்றி....ஹி..ஹி... அவர் வலைப்பூ படிச்சிங்கன்னா தெரிஞ்சுக்கலாம். 
**********************************************************************
ஜூன்: 42 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

லேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்றிய மனோ...


"எலேய் சி.பி எப்படிடா இருக்க... நாளைக்கு பக்ரைன்ல பிளைட் ஏறுறேன். பிளைட் சென்னைக்கு வருது... என்னை பிக்கப் பண்ணிகிறையா... நாளை சாய்ந்தரமா அஞ்சு மணிக்கு சென்னை வந்திருவேண்டா மாப்ளே...""டேய் மனோ மாமு.... நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு... வர முடியாதடா..." நீ ரெண்டு நாளுக்கு முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா..."
**********************************************************************
மே: 70 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

ப்ளாக் திடீரென தடை செய்யப்பட்டால்? அய்யய்யோ!!

நாஞ்சில் மனோ:
இவர் தான் ப்ளாக் - இல் பதிவெழுதுவதில் காட்டும் அக்கறையை விட மற்ற ப்ளாக் - இல் மொத ஆளா கமென்ட் போடுவதில் தான் காட்டுவார். எப்படின்னா? வடை, போண்டா, வெட்டு, குத்து, ரத்தம் இந்த ரேஞ்சில் தான் கமென்ட் போடுவார். ப்ளாக் தடை பண்ணிட்டாங்கன்னா இவரோட ஊசி போன வடை, பஜ்ஜில இருந்து நாம தப்பிச்சிருலாம். பாவம் மனோ, ஒத்த ஆளா ரூம்ல உட்கார்ந்து ஊசி போன வடை, பஜ்ஜிய சாப்பிட்டு இருப்பார். ஹி...ஹி...ஹி...
**********************************************************************
ஏப்ரல்: 59 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!

        உணவுகள் தயாரிப்பில் உயர்ந்த தொழில்நுட்பம், நவீன வசதிகள் எவ்வளவு தான் வந்தாலும் நம்ம மக்கள் விலை குறைந்த உணவு பொருட்களையே நாடி செல்கிறார்கள். விலை குறைந்த உணவுகளை உட்கொள்வதால் பலவித நோய்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவோ மிக அதிகம்.
**********************************************************************
மார்ச்: 48 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

           வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் பிரகாஷின் அன்பான வணக்கங்கள். ஒரு வழியா 150 இடுகைகள் வரை போட்டாச்சு. இவையெல்லாம் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவால் மட்டுமே சாத்தியமாயிற்று. ஒவ்வொரு இடுகைக்கும் நேர் / எதிர் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன். 
**********************************************************************
பிப்ரவரி: 26 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....

     ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. 
**********************************************************************
ஜனவரி: 21 கருத்துரைகள் வாங்கிய பதிவு:

சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்


              சர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.
**********************************************************************
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
மேலும் வாசிக்க... "2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பதிவுகள்"

புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா? சில காரணங்கள்

நண்பர்களே, 
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இந்த தருணத்தில் பணத்தை செலவு செய்து கொண்டாடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமில்லை என வலியுறுத்தி இந்த இடுகையில் ஐந்து காரணங்களை பகிர்ந்துள்ளேன். வாசித்து தங்கள் கருத்துகளை பகிரவும்.

1. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்பை மீறி அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அப்படி செயல்பாட்டுக்கு வந்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு பெரும் சேதங்கள் நடந்தால் அந்த மக்களின் நிலை என்னாவது? கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் உயிருக்கு உத்திரவாதம் தேவை என போராடிக்கொண்டு இருக்கையில் நமக்கு புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

2. தென்னக தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணைக்கு கேரளா பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையில் விரிசல் மற்றும் அதிக நீர் தேக்கம் என சில பொய் காரணங்கள் கூறி, அதனால் கேரளாவின் சில மாவட்டங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அணையை தகர்க்க முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களை எதிர்த்து ஐந்து மாவட்ட மக்களும் சேர்ந்து பெரும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஒரு வேளை கேரளாவுக்கு சாதகமாக சூழ்நிலை உருவானால் நமது மக்கள் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்துக்கு எங்கே போவார்கள்? அதன் விளைவுகள் எப்படி கடுமையானதாக இருக்கும்? சற்று சிந்தித்து பாருங்கள். அவர்கள் அங்கே தண்ணீர் கேட்டு போராடிக் கொண்டிருக்கையில் நமக்கு புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

3. மிழகத்தில் ஐயா அவரது குடும்பத்துக்கு மட்டுமே முதல்வரா இருந்த காரணத்தினால் அவருக்கு பதிலாக அம்மாவை கொண்டு வந்து நம் தலையில் நாமளே மண்ணை வாரி போட்டுக் கொண்டோம். கடுமையான விலை���ாசி உயர்வை தான் குறிப்பிடுகிறேன். நினைத்து பார்க்க முடியாத விலையேற்றத்தை தமிழக மக்கள் தலையில் சுமத்தி மக்களின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தினார். பஸ் கட்டணம், நுகர்வோர் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் விலையேற்றம் என எல்லாவற்றிலும் பொருளாதார கஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

4. சாமானிய மக்களும் வாங்க முடியாத அளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் விலை உயர்வு. சாதாரண கூலித் தொழிலாளி டீ குடிக்க கூட முடியாத அளவுக்கு கடுமையான விலையேற்றம், மின்சார பாதிப்பால் அதிகரித்து வரும் தொழிற்சாலை மூடல், அதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பு. நாட்டின் பண வீக்கம் அதிகமாக வீங்கி வருவதால் ஏற்படும் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பு என எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்க்களுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் பணத்தால் விளையாடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

5. கொண்டாட்டங்கள் நடத்தும் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் சங்கங்களில் அதிக பணம் கொடுத்து விரும்பத்தகாத நிகழ்வுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் அவசியமும் சில நேரங்களில் வந்து விடுகிறது. இதற்கு உதாரணம், கடந்த வருடம் சென்னையில் ஒரு கேளிக்கை விடுதியில் கொண்டாட்டத்திற்கான போடப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்ததில் உயிர் சேதங்கள் ஏற்பட்டதை சொல்லலாம். சிறப்பு விருந்தினர்களாக வரும் பிரபலங்களை பார்க்கும் ஆசையால் அவதிக்குள்ளாவதும், மேலும் அவர்கள் தரும் சைவ, அசைவ வகைகளை சாப்பிடவும், சுமார் ஐந்தாறு மணிநேரங்கள் தன்னை மறந்து ஆட்டம் போடவும், பணத்தை செலவழிக்க தயாராக இருக்கிறோம். அப்படிப்பட்ட செலவு மிக அவசியமா என சற்று யோசித்து பாருங்கள். அந்தப் பணத்தில் நம் குடும்பத்தாருடன் சந்தோசமாக அருமையாக கொண்டாடலாம் புத்தாண்டை. அதை விடுத்தது குடித்து கும்மாளமிடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்��ங்கள் அவசியமா?

டிஸ்கி: மேற்கண்ட பகிர்வு என் பார்வையில் பகிர்ந்துள்ளேன். அவ்வளவே.... படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.


மேலும் வாசிக்க... "புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா? சில காரணங்கள்"ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன?

      ஈரோடு வலைப்பதிவர் குழுமம் நடத்திய சங்கமத்தில் விழா சிறப்புத் தலைவராக திரு. ஸ்டாலின் குணசேகரன் அய்யா அவர்கள் பங்கேற்று உரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே பகிரப்பட்டுள்ளது. 
      நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட பதினைந்து பதிவர்களை பாராட்டி பேசினார். அவர்களது திறமையை அங்கே காட்டப்பட்ட ஸ்லைடுகள் மூலம் தெரிந்து கொண்டதாகவும், நல்ல திறமைசாலிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் பங்கு கொண்டிருப்பதாகவும் பெருமையாக சொன்னார். இன்றைய காலகட்டத்தில் பதிவர்கள ஊடகங்களுக்கு போட்டியாக வளர்ந்து வருவதாகவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பத்திரிக்கை துறைகளை நாடாமல் தாங்களாகவே ஒரு தளம் தொடங்கி அதில் பதிவிட்டு வருவது நல்ல விஷயம் தான் என சொன்னார்.
        அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி சில மணித்துளிகள் கழித்தே தீவிரவாதிகளின் தாக்குதல் என ஊடகங்களில் வெளியானாலும் அந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் சிலர் சம்பவத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் அந்த சம்பவத்தின் அடிப்படை காரணத்தை, அதாவது விபத்து அல்ல தாக்குதல் என அறிய வைத்தார்கள். அந்த அளவுக்கு இன்றைய மக்கள் தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். இந்த மாதிரி தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதால் புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள். இவர்களால் சிறந்த படைப்புகள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.இதற்கு தொழில் நுட்பமும் பெரும் உதவியாய் உள்ளது. 
       மேலும் இந்த மாதிரியான பதிவர்கள், படைப்பாளிகள் சந்திப்பால் பலருக்கும் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து இவர்கள் இங்கே ஒன்று கூடி இருப்பதால் இந்த சங்கமம் நிகழ்ச்சிக்கான அர்த்தம் உண்மையாகி உள்ளது. வெறும் சம்பிராதய நிகழ்ச்சியாக இல்லாமல் எல்லோரும் ஒன்று கூடி இந்த சந்திப்பை மறக்க முடியாத தருணமாக மாற்றியிருக்கிறார்கள். பொது விஷயங்கள் மட்டுமின்றி இணைய நுட்பங்களின் சிறப்புகளையும் இவர்கள் பகிர்கிறார்கள். 
இவ்வாறு நிகழ்ச்சி தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அய்யா அவர்கள் பேசினார்.

சங்கம நிகழ்ச்சியில் பாலபாரதி சொன்ன குட்டிக்கதை....
    ஒரு பெற்றோர் தங்கள் மகனை, சிறந்த கல்வியை தரும் பிரபலமான  பள்ளியில் அதிக கட்டணம் கொடுத்து சேர்த்தார்கள். அந்த பையனும் படிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தான். இருந்தாலும் ஒரு முறை அந்தப் பெற்றோருக்கு, தங்கள் மகன் எந்த அளவுக்கு பாடம் படித்துள்ளான் என சோதித்து பார்க்க விரும்பினார்கள். மகனைக் கூப்பிட்டு A, B, C, D.... சொல்லு பார்ப்போம் என சொன்னார்கள். மகனும் A சொன்னான். ஆனால் அடுத்து B, C.. என சொல்லவில்லை. பெற்றோர்கள் திரும்பவும் A, B, C, D.... சொல்லு பார்ப்போம் என சொன்னார்கள். ஆனால் அப்போதும் அவன் A மட்டுமே சொன்னான். அந்த பெற்றோர்களுக்கு கோபம் வந்துவிட்டது. அதிக கட்டணம் கொடுத்து பள்ளியில் சேர்த்தால் ஒரு A, B, C, D.... கூட சொல்லத் தெரியவில்லையே என கவலைப்பட்டனர். இது சம்பந்தமாக பள்ளி ஆசிரியர்களிடம் கலந்து பேச வேண்டும் என அவர்கள் முடிவு செய்து தங்கள் அலுவகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு பள்ளிக்கு சென்றார்கள்.
பள்ளியில் முதல்வர் அறையில் பையனுக்கு பாடங்கள் சொல்லித்தரும் ஆசிரியர்கள் அனைவரும் கூடினார்கள். அந்த பெற்றோர் என் மகனுக்கு A, B, C, D.... கூட சொல்லத் தெரியவில்லை. இவ்ளோ காசு கட்டியும் பிரயோஜனம் இல்லாமல் இருக்குதே என ஆசிரியர்களிடம் கேட்டார்கள். ஆசிரியர்களும் தாங்கள் நன்றாக பாடம் சொல்லித் தருவதாகவும் பையனும் படிப்பில் நல்ல முனேற்றம் அடைந்து வருவதாகவும் சொன்னார்கள். ஆனால் அந்த பெற்றோர் அதை நம்பவில்லை. எங்கே A, B, C, D.... சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் என்றார்கள்.
பையனின் வகுப்பு ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு எங்கே A, B, C, D.... சொல்லு என சொன்னார்கள். பையன் A என சொன்னான். ஆசிரியர்  "உம்"   என சொன்னார். அடுத்து பையன் "B" சொன்னான். ஆசிரியர்  "உம்"   என சொன்னார். அடுத்து பையன் "C" சொன்னான், ஆசிரியர்  "உம்"   என சொன்னார். இப்படியே அவன் ஒவ்வொரு எழுத்தாக சொல்லச் சொல்ல ஆசிரியர் "உம்" சொன்னார். பையன் முழுவதும் சொல்லி முடித்ததும் ஆசிரியர்கள் பையன் சரியாகத்தான் சொல்கிறான் என அந்த பெற்றோரிடம் சொன்னார்கள். உடனே அவனின் தந்தை பையனிடம் A, B, C, D... சொல்லு என கேட்டார். அவன் "A" சொன்னான். தந்தை "உம்" என சொன்னார். உடனே பையன் "B" சொன்னான். தந்தை "உம்" என சொன்னார். இப்படியே பையன் சொல்லச் சொல்ல அவர் "உம்" சொன்னார். அப்போது தான் அவருக்கு புரிந்தது. A,B,C,D க்கு "உம்" போட்டால் தான் பையன் அடுத்த எழுத்து சொல்கிறான் என்றே. 

சங்கம நிகழ்ச்சியை இனிதே நடத்திய ஈரோடு வலைப்பதிவு குழுமத்தினர் அனைவருக்கும், கலந்து கொண்ட அனைத்து பதிவர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முற்றும்...
டிஸ்கி: 
    தலைவர் உரையும், பாலபாரதியின் குட்டிகதையும் என் நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

டிஸ்கி: தமிழ்வாசி பேனர் உதவி "வீடு" சுரேஷ்குமார்.மேலும் வாசிக்க... "ஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அய்யா பேசியது என்ன?"

செங்கலால் ஏற்பட்ட மனிதாபிமானம்

         அவன் ஒரு பெரிய வேலையில் இருக்கும் இளைஞன். ஒரு தடவ அவன் ஊரைத் தாண்டி ஒரு ரோட்டில் காரில் போயிட்டு இருந்தான். ரோடு வெறிச்சோடி இருந்துச்சு. அப்போ திடீர்னு ஒரு செங்கல பறந்து வந்து அவன் காரில் பட்டது. பெரும் கோபத்துக்கு ஆளான அவன் காரை நிறுத்திட்டு சுத்திமுத்தி பார்த்துட்டு "யாரது" என கத்தினான்.

         "நான் தான் செங்கலை எறிந்தேன். எல்லா வண்டிகளும் நாங்க நிறுத்த சொல்லியும் நிறுத்தாம போயிட்டே இருக்கு. உங்க வண்டியை நிறுத்த எனக்கு வேற வழி தெரியல. அதான் செங்கலை எறிஞ்சேன்" என சொல்லிட்டே ஒரு சிறுவன் வந்தான்.

    "எதுக்காக வண்டிய நிறுத்தின?" என இளைஞன் கேட்டான். "என் தம்பியால் நடக்க முடியாது. அவன ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி வந்தேன். அவனோ தடுமாறி விழுந்துட்டான். அவன என்னால தனியா தூக்கி உட்கார வைக்க முடியவில்லை. அதான் உங்களை உதவிக்கு கூப்பிட்டேன்" என்றான் சிறுவன்.

அப்புறம் இருவரும் சேர்ந்து அவனது தம்பியை தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தார்கள். இளைஞனுக்கு நன்றி சொல்லிட்டு நாற்காலியை உருட்டிட்டு போனான் சிறுவன். அதன் பிறகு செங்கலால் அடிபட்ட தனது கார் கண்ணாடியை சரி செஞ்ச அவன் கதவில் கீறிய அடையாளத்தை மட்டும் சரி செய்யவில்லை. 

         "ஏன்?" என அவன் நண்பர்கள் கேட்டார்கள்.

         "நம் வண்டியை நிறுத்த யாராச்சும் செங்கல எடுத்து எறியிற அளவுக்கு நாம மனிதாபம் இல்லாம வண்டியில போகக் கூடாது என்பதை இந்த கீறல் எனக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்கும்" என சொன்னான்.

அவன் நண்பர்கள் திகைத்தார்கள்.


மேலும் வாசிக்க... "செங்கலால் ஏற்பட்ட மனிதாபிமானம்"பிரதமர் வந்தாரா? கூடங்குளத்துக்கா? இல்ல முல்லைப் பெரியாறுக்கா? மாக்கானின் பார்வை

          நம்ம சாதனை(பேசுவதில்) பிரதமர் மன்மோகன்சிங் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்தார், ரெண்டு நாள் தங்கினார், அப்புறம் திரும்பி போயிட்டார். என்ன பிரதமர் இங்க வந்தாரா? கூடங்குளம் பிரச்சனைக்கா? இல்ல முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கா? அங்க வந்தது மாதிரி தெரியலையேன்னு டவுட் படுறிங்களா? அந்த பிரச்சனைக்காக அவரு வரலைங்க. நம்ம அம்மா கிட்ட பத்துபதினஞ்சு மனுக்கள் வாங்கவும், நம்ம ஐயா கிட்ட பத்துபதினஞ்சு மனுக்கள் வாங்கவும் வந்திருக்காரு. அப்படியே சென்னையில நடக்கற கணக்குல மேதையான ராமானுஜரின் விழாவுக்கு போயிட்டு வந்திருக்காரு. அப்புறமா காரைக்குடியில நடக்கிற பல்கலைகழக விழா, தனியாரு ஆஸ்பத்திரி திறப்பு வுழான்னு ரொம்ப முக்கியமான விழாக்கள் கலந்துகிட்டார். 
       அப்புறமா நம்ம அம்மா அவர சந்திச்சு பேசியிருக்காங்க. அப்படியே நம்ம ஐயாவும் பிரதமர சந்திச்சு பேசியிருக்காங்க. அவங்க என்ன பேசியிருப்பாங்கன்னு நாம அவசியம் தெரிஞ்சுக்கனுமா? கண்டிப்பா வேணாம். ஆமா, இப்போ நடக்கிற பிரச்னையை பத்தி பேசியிருப்பாங்கன்னு சொல்றிங்களா? இருக்கலாம். ஆனா அதை நம்ம பிரதமர் காதுல வாங்கியிருப்பார்ன்னு நினைக்கிறீங்களா? அப்படியே காதுல வாங்கினாலும் ஏதாவது வாய தொறந்து பேசுவாரா? அல்லது பேசியிருப்பாரா? சரி, அத பத்தி பேச வேணாம். தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியுதவியை சரியா தரல. அதையாவது கொஞ்சம் தர்றேன்னு பேசியிருக்கலாம். விலைவாசிகளை கட்டுப்படுத்தற வழிவகைகளை பத்தி பேசியிருக்கலாம். அத பத்தி எதுவுமே பேசல. 
          அவர் வந்த நோக்கம் ரெண்டு  விழால கலந்துக்கணும். அந்த விழா பத்தி நாலஞ்சு வார்த்தை பேசணும். அப்புறம் போட்டோஸ்க்கு போஸ் தரனும். தமிழ்நாட்டுக்கு ரெண்டு நாள் வந்த அடையாளத்தை பத்திரிகைகளுக்கு காட்டனும். அவ்ளோதான். யாருமில்லாத டீக்கடையில டீ ஆத்துற மாதிரி கூட்டமே இல்லாத விழாவா நடந்திருக்கு இந்தியாவின் பிரதமர் கலந்துகிட்ட விழா. ஒரு ஆர்வத்துல கலந்துக்க வந்தவங்க கிட்டேயும் இன்விடேஷன் இல்லைன்னு அனுமதிக்கலையாம் நம்ம தலைசிறந்த காவல்துறையினர்... அவங்க வேலையை அவங்க சரியா பார்த்திருக்காங்க.
     ஆக, பிரதமர் தமிழ்நாட்டுக்கு ரெண்டுநாள் பயணமாக வந்தார். விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்படின்னு எல்லா பேப்பர்களிலும் கொட்ட எழுத்தில வந்திருச்சு. அது போதும் அவருக்கும், தமிழக காங்கிரஸ்க்கும். முக்கியமா சிதம்பரத்துக்கு இதுவே ரெண்டு மூணு போதும். இத வச்சே தமிழகத்துல காலத்த ஓட்டிருவாரு.....
மேலும் வாசிக்க... "பிரதமர் வந்தாரா? கூடங்குளத்துக்கா? இல்ல முல்லைப் பெரியாறுக்கா? மாக்கானின் பார்வை"இரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது...

     நீங்கள் உங்களது ரத்தத்தை தானம் செய்பவரா? உங்கள் ரத்த வகை எந்தெந்த ரத்த வகையோடு சேரும் என உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.


இரத்த வகைகள்


எந்த வகையினருக்கு தரலாம்?
எந்த வகையினரிடமிருந்து பெறலாம்?
A+
A+, AB+
A+, A-. O+, O-
O+
O+, A+, B+, AB+
O+, O-
B+
B+, AB+
B+, B-, O+, O-
AB+
AB+
எந்த வகையினரிடமிருந்தும் பெறலாம்
A-
A+, A-, AB+, AB-
A-, O-
O-
எந்த வகையினருக்கும் தரலாம்
O-
B-
B+, B-, AB+, AB-
B-, O-
AB-
AB+, AB-
AB-, A-, B-, O-
This table was created with Compare Ninja.
நண்பர்களே, மேற்கண்ட அட்டவணையை குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவலாம்.மேலும் வாசிக்க... "இரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது..."நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்

 நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள் உள்ளன. விடைகளை நீங்களே சொல்லுங்கள்.
1. பொது இடங்களிலோ அல்லது சாதாரணமாகவோ நகத்தைக் கடிக்கும் பழக்கம் இருக்குதா?


2. பலரின் முன்னிலையில் பல் குத்தும் பழக்கம் இருக்குதா?


3. சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் அருந்தும் போதோ, அருவருப்பான சத்தத்தை ஏற்படுத்தும் பழக்கம் இருக்கா?


4. பொது இடத்தில மூக்கு நோண்டும் பழக்கம் இருக்கா?


5. பொது இடத்தில சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா?


6. பொது இடத்தில எச்சில் துப்பும் பழக்கம் இருக்கா?


7. மொபைல் அல்லது தொலைபேசியில் பேசும் பொது, பிறருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் மிகவும் சத்தமாக பேசும் பழக்கம் இருக்கா?


8. சாலையை நினைத்த இடத்தில் கடக்கும் பழக்கம் இருக்கா?


9. ஒருவர் அமர்ந்திருக்கையில் அவருக்கு முதுகு காட்டி அமரும் பழக்கம் இருக்கா?


10. அலுவலக மேசையின் மீது அமர்தல் பழக்கம் இருக்கா?


11. பெண்கள் முன்பாக இரட்டை அர்த்த விஷயங்கள் மற்றும் நகைச்சுவையாக பேசும் பழக்கம் இருக்கா?


12. ஒருவரின் உடல் ஊனம் அல்லது அறியாமையை பார்த்து கிண்டலடிபீர்களா?


13. பூங்கா போன்ற இடங்களில் புல் மீது நடப்பீர்களா?


14. ஒரு தெருவில் அல்லது பலர் வரும் வழியில் நண்பர்களுடன் நடந்து போகும் பொது பிறரைப் பற்றிக் கவலைப்படாமல் பாதையை ஆக்ரமித்துக் கொண்டு செல்லும் பழக்கம் இருக்கா?


15. வரிசை இருக்கும் இடத்தில் அதை மதிக்காமல் நடந்து கொள்வீர்களா?


16. ஒரு கலந்துரையாடலில், பிறரை பேசவிடாமல், தானே முந்திக் கொண்டு பேசுவீர்களா?


17. ஒரு பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்யும் போதோ, வயதானவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு எழுந்து இடம் விடாமல் அமர்ந்திருப்பீர்களா?


18. தடை செய்யப்பட்ட இடத்தில் மற்றும் பிறருக்கு தொந்தரவான பொது இடத்தில் புகை பிடிப்பீர்களா?


19. பிறரின் அறை அல்லது வீட்டினுள் அனுமதியின்றி நுழைவீர்களா?


20.வீண் வதந்தியைப் பரப்புவீர்களா?

     இப்படி பல கேள்விகளை அடுக்கி கொண்டே போகலாம். இந்த மாதிரியான கேள்விகளை உங்கள் மீது ஏற்படாமல் பார்த்துக் கொண்டீர்களானால் சமூகம் விரும்புவர்களாக நீங்கள் இருப்பீர்கள். மேலும் வாசிக்க... "நீங்க மனுஷனா இல்லையா? தெரிஞ்சுக்க 20 கேள்விகள்"கோபம் கொண்டால்? - குறுங்கதை

       ஒரு சிறுவன் சரியான முன் கோபக்காரனாக இருந்தான். அவனை கண்டிக்க நினைத்த அவனது தந்தை அவனை அழைத்து மகனே, இதோ இந்த வெள்ளைச் சுவற்றைப் பார்! நீ ஒவ்வொரு தடவையும் கோபப்படும் போதும் இந்த சுவற்றில் ஒரு ஆணியை அடிக்கப் போகிறேன் என்று சொன்னார். அதிலிருந்து அந்த சி��ுவன் ஒவ்வொரு முறை கோபப்ப்படும் போதும் அந்த சுவற்றில் ஆணி அடித்தார் அந்த தந்தை. கொஞ்ச நாளில் அந்த சுவர் முழுசும் ஆணிகளால் நிரம்பியது. அதை பார்த்த சிறுவனுக்கு தனது குற்றம் என்ன என்று புரிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சியால் கூனிக் குறுகி நின்றான்.
     அவனாக தந்தையிடம் அப்பா. நான் இனி கோபப்பட மாட்டேன், ஒழுங்காக இருக்கிறேன் என சொன்னான். அவனை பாசத்துடன் அனைத்து நீ கொபப்பட்டதால் நான் சுவற்றில் அறைந்த ஆணிகளை நீயே பிடுங்கி எடுத்து விடு என சொன்னார். அவனும் நாள் முழுசும் கஷ்டப்பட்டு அந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கினான். ஆனால் அந்த சுவர் முழுசும் அந்த ஆணிகள் அறைந்த தழும்புகள் அப்படியே இருந்தன. அந்த சிறுவன் சுவற்றின் தழும்புகளை தந்தையிடம் காட்டி அழுதான். ஆணிகளை பிடுங்கி விட்டேன். ஆனால் அதன் அடையாளம் இருகிறதே என வருத்தத்துடன் சொன்னான். அவனது தந்தை, கோபமும் இதைப் போல தான் மகனே, கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும், அதன் விளைவுகளை நம்மால் அழிக்க முடியாது என்றார். 
நீதி: கோபத்தின் விளைவுகள் பயங்கரமானது. எனவே கோபம் கொள்ளுதல் கூடாது.


மேலும் வாசிக்க... "கோபம் கொண்டால்? - குறுங்கதை"முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பா?

     முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா மாநில அரசு மற்றும் அந்த மாநில மக்களின் ஒரு தலைபட்சமான முடிவு மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளால் தமிழகம் பொங்கி எழுந்துள்ளது. முல்லை பெரியாரால் பயனடையும் மாவட்டங்கள் அனைத்தும் சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் ஒற்றுமை நிலைப்பாட்டையும் அணையின் உரிமை மீட்பு போராட்டத்திலும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறது. இந்த மக்களின் அதரவாக பல கட்சியினரும் பாகுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் கேரளா அரசுக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்தி எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
    தேனியில் நேற்று கேரளா சாலையை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். மேலும் எல்லா தரப்பு மக்கள்களும் முல்லைப்பெரியாறு போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்கள். 
  முல்லைப்பெரியாறு போராட்டதிற்கு ஆதரவாக தேனியில் தீக்குளித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் உயிர் மருத்துவமனையில் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. இவரின் இந்த செயலால் கேரளா அரசுக்கு எதிராக  தென்தமிழகமே பொங்கி எழுந்துள்ளது. கோவை, தேனி, கம்பம், செங்கோட்டை, களியக்காவிளை, திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற கேரளா செல்லும் பல வழிகள் முற்றுகை செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டங்கள் நடந்து வருகிறது. 
      இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் முழுதும் கடையடைப்பு போராட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் களத்தில் குதித்துள்ளது. இன்று காலை முதல் எல்லா கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் கேரளா ��ரசை எதிர்த்து பேனர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சியோ அல்லது எதிர் கட்சியோ ஒரு பிரச்னையை முன்னிறுத்தி கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் எழும். கட்சிகள் அழைப்பு விடும் பந்தின் போதும் பாதி கடைகள் ஆங்காங்கே திறந்திருக்கும். 
        ஆனால் முல்லைப்பெரியாறு உரிமை மீட்பு போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து  இன்று காலை முதல் நான் பார்த்த வரையில் சிறிய பெட்டிக்கடை கூட திறக்கவில்லை. ஆட்டோக்கள் ஸ்டாண்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது.மேலும் வாசிக்க... "முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பா?"ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

நாய்நக்ஸ் நக்கீரர்
            சனி நைட் பதினொரு மணி வாக்கில் எனக்கு ஒதுக்கப்பட்ட ரூமுக்கு போனேன்.  கதவு மூடியிருந்துச்சு. தட்டினேன்...  டாக்.... டாக்.... .டாக்.... டாக்..... என்னது டாக்.. டாக்.. அப்படின்னு கேட்குது... எப்பவும் டொக்...டொக்...டொக்...டொக்... அப்படித்தான கேட்கும்? டாக... டாக்... அப்படி கேட்கறப்பவே உசாராயிட்டேன்... ரூமுக்குள ஏதோ ஒன்னு இருக்குன்னு... ரூம் கதவு தொறந்துச்சு... என் மூஞ்சிக்கு முன்னாடி ஒரே புகை மண்டலம்... அந்த புகை விலக கொஞ்ச நேரம் ஆச்சு. தமிழ்வாசி நான்தான் நக்கீரன் அப்படின்னு ஒருத்தர் சொன்னார். நக்கீரனா அப்படினா யாருன்னு கேட்டேன். அதான்யா நக்ஸ்.... நாய்நக்ஸ்... அப்படின்னு ஒண்ணு இருக்குல அது நான்தான் ஸ்டைல்லா சொன்னார். அதானே பார்த்தேன், கதவ தட்றப்பவே உள்ள நாய்நக்ஸ் இருக்காருன்னு சிம்பாலிக்கா சத்தம் கேட்டுச்சோ? 
பிரபா. செந்தில்
     அப்புறமா அங்கிட்டு ஒருத்தர் படுத்திருந்தாரு... அவரு யாருன்னு கேட்கறதுக்கு முன்னாடியே நான் செந்தில் அப்படின்னு சொன்னார். செந்திலா? யாருனே தெரியலையேன்னுனேன். நான் தான் ஆரூர் மூனா செந்திலுன்னு சொன்னார், உங்க அடையாள தாடி எங்க அப்படின்னு கேட்டதுக்கு வீட்டுல கழட்டி வச்சிட்டு வந்துட்டேன்னு சொன்னார். அதாங்க உங்க அடையாளமே, அத கழட்டி வச்சா எப்படி? அடுத்ததா அழகா நீள முடி வச்சிருந்த தத்துவ ஞானி(பிலாசபி). அவரது அடையாளமே அவர் பதிவுலகில் தத்துவஞானி என காட்டியது. அவரது பதிவில் வரும் ஒயின்ஷாப் அங்க பக்கத்துல இருந்துச்சு. ரைட்டு, நமக்கு வேணாம்னு ஒதுங்கிட்டேன். அப்படியே நாலு பெரும் பேசிட்டு இருந்தோம். என் மொபைல் அலறுச்சு.... யாருன்னு பார்த்தா கவிதவீதி. அட்டென்ட் பண்ணி பேசுனேன். மனுஷன் அங்க கொலைவெறியில இருந்தாரு. அவரு ஊர்க்காவல் படையில இருக்றதுனால நைட் டூட்டியாம். நான் தூங்காம இருக்கணும்னா உங்கள யாரையும் தூங்க விடமாட்டேன்னு சபதம் போட்டார். என்ன செய்ய இம்சையை தாங்கி தானே ஆகணும். வேறவழி, சௌந்தர் பக்கத்துல இருந்தா போட்டு மிதிக்கலாம். ஆனா சந்திப்புக்கு வராம டேக்கா தந்திட்டு சின்சியரா வேலை பார்த்துட்டு இருக்காரு.     
பிரபாவுக்கு யாராச்சும் பொண்ணு பாருங்க
   செந்தில் ரயில்வேயில் வேலைக்கு சேர போறாராம். அதனால நைட்டு தூங்குறப்போ ரயில் இன்ஜின் சவுண்டு வரும். கொஞ்சம் பொறுத்துக்கங்கனு சொன்னார். நானும் நக்கீரரும் டெர்ரர் ஆயிட்டோம். வேற வழி காதை மூடிட்டு தூங்க வேண்டியது தான். அப்பப்ப நக்கீரன் தன் ப்ளாக் பேரை பிரபலப்படுதனும்னு ரொம்ப வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார். பிலாசபி அவர் வேலையை சரியா பார்த்துட்டு இருந்தார். அதான் டிவி சேனலை மாத்திட்டே இருந்தார். அப்படியே எல்லோரும் தூங்கிட்டோம். கொஞ்ச நேரத்துல மொபைல் அலறுச்சு. எடுத்து பார்த்தா சௌந்தர்... இவருக்கு வேற வேலை இல்லைன்னு நெனச்சிட்டு அட்டென்ட் பண்ணல. அப்புறம் நாலஞ்சு வாட்டி சௌந்தர் கிட்ட இருந்து போன் வந்துச்சு. நான் வேணும்னே அட்டென்ட் பண்ணல. தூங்குற மாதிரி பாவ்லா செய்தேன். நம்ம நக்ஸ் தான் அட்டென்ட் பண்ணி சௌந்தரை காய்ச்சிட்டு இருந்தார். காலையில எந்திரிச்சு மொபைல பார்த்தா பத்து கால்ஸ் சௌந்தர்கிட்ட இருந்து. பாவம் நம்ம நக்ஸ். தூங்கவே இல்லையாம். காலையில மனுஷன் பொலம்பி தள்ளிட்டார். 
சம்பத், சிவா, மணிவண்ணன்
      அப்புறம் மெட்ராஸ்பவன் ரூமுக்கு போனோம்.என்னை அடையாளம் கண்டுகிட்ட மெட்ராஸ்பவன் சிவா நைட் தனியா ஒரு ரூம்ல இருந்திங்களாமேன்னு கேட்டார். இல்ல சிவா பிரபா ரூம்ல தான் இருந்தேன்னு சொன்னேன். அங்க மெட்ராஸ்பவன் சிவா, கேஆர்பி, வீடு திரும்பல் ஆகியோர் இருந்தாங்க. அவங்கள இப்போ தான் மொத தடவையா பார்கிறேன். நானும் சிவாவும் ரொம்ப சீக்கிரமே நண்பர்களாயிட்டோம். சந்திப்பை எத்தன பேர் எத்தன பதிவு போட்டு தேத்த போறாங்கன்னு நக்கல் செய்தார். அப்புறமா ஒவ்வொருத்தரும் கிளம்பி நிகழ்ச்சி நடக்கிற இடத்துக்கு போனோம். அப்ப தான் நம்ம தமிழ்பேரன்ட்ஸ் சம்பத்தும், வீடு சுரேஷ்ம் வந்தாங்க. சிபிக்கு போன் செய்தா வர அரைமணி நேரம் ஆகும்னு சொன்னார். 
அப்புறம் விழா ஆரம்பிச்சு முடியற வரை தனி பதிவு போடலாம்னு இருக்கேன். அதனால நிகழ்ச்சியை ஸ்கிப் பண்ணிட்டேன்.
வீடு சுரேஷ், குணசீலன், நான், சம்பத்
         நிகழ்ச்சி முடிஞ்சு சாப்பிட வந்தோம். சிபியும் அங்க இருந்தார். வாங்க சிபி நான்வெஜ் சாப்பிடலாம்னு கூப்பிட்டேன். இல்லையில்ல நான் வெஜ்ன்னு சொன்னார். அதான் சிபி நானும் சொல்றேன் நான்வெஜ் சாப்பிடலாம்னு. இல்ல பிரகாஷ், மீ வெஜ் அப்படின்னு சொன்னார். அப்போ தான் எனக்கு புரிஞ்சுச்சு.  நம்ம சம்பத் பழனிக்கு மாலை போட்டிருந்தார். அதனால அவரு வெஜ் பக்கம் போயிட்டார். நான் நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்தேன். அப்போ சிபி வெஜ் பக்கம் உட்கார்ந்திருந்தார் வெறும் இலையோட, அண்ணே சாப்பிடிங்களா?ன்னு கேட்டதுக்கு இல்லைய்யா வெறும் இலைதான்.. இனிமே தான் சாப்பிடனும்னு சொன்னார். 
ஒரு பதிவரை அடிக்க முற்படும் சிவா
        சிவகுமார், பிலாசபி, செந்தில், நக்ஸ் என ஒரு கூட்டமே அரட்டை அடிச்சுட்டு இருந்துச்சு. இப்படியே பேசிட்டு இருக்கும் போது நம்ம மெட்ராஸ்பவன் சிவா கோவப்பட்டு ஒரு பதிவரை அடிக்க கை ஓங்கினார். அந்த நேரம் பார்த்து நான் போட்டோ க்ளிக்கிட்டேன். சிவா அத பார்த்துட்டு வேகமா என் பக்கத்துல வந்து போட்டோவை டெலீட் செய்ய சொன்னார். நான் பதிவு தேத்தனும்னு சொன்னேன். அவரும் சரி போட்டுக்க அப்படின்னு பெருந்தன்மையா சொன்னார். அவரும் நிகழ்ச்சியில போட்டோ எடுக்கும் போதெல்லாம் முகத்தை மறச்சுகிட்டார். அந்த முகத்துல அப்படி என்ன இருக்குன்னு தெரியல. அப்படியிருந்தும் சில போட்டோஸ் எடுத்தாச்சு. 
வீடு சுரேஷ், அரசு ஓட்டுனர், நான் 
       இதுக்கு நடுவுல கஸாலி போன் பண்ணி நக்கீரன் கிட்ட பேசினார். அப்போ நம்ம பிலாசபி இங்க நிகழ்ச்சியே முடியல அங்க கஸாலி பதிவு போட்டு ஹிட்ஸ் வாங்கிட்டார்ன்னு மொபைல்ல பார்த்துட்டே சொன்னார். உடனே எல்லோரும் நக்கீரன் கிட்ட கஸாலி கிட்ட பேச வேணாம். அவரு நீங்க பேசுறதை அப்படியே டைப் பண்ணி பதிவா போட்டுட்டு இருக்கார்ன்னு சொனதுக்கப்புறம் போனை கட் பண்ணினார். ஆக அவர் புண்ணியத்தில் கஸாலி ஒரு பதிவு தேத்திட்டார் போல......  நான், சம்பத், சுரேஷ், குணசீலனும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். குணசீலன் இரண்டாவது தடவையா ஈரோடு சந்திப்புக்கு வந்ததா சொன்னார்.  தண்ணி குடிக்க டைனிங் ஹாலுக்கு போனேன். அப்பவும் சிபி பந்தியில உட்க்கார்ந்திருந்தார். அண்ணே எத்தனையாவது ரவுண்டுன்னு கேட்டேன்.இதான் பர்ஸ்டும், லாஸ்ட்டும்ன்னு சொன்னார்.
      இப்படியே பல சுவாரஸ்யங்கள் இந்த சந்திப்பில் இருந்துச்சு. அப்படியே ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பினோம். ஆனா எங்கள விட சிபி தான் வேகமா வீட்டுக்கு கிளம்பினார். அப்பவே புரிஞ்சிருச்சு பதிவு தேத்த தான் இம்புட்டு அவசரம்ன்னு. 
இன்னும் வரும்...
டிஸ்கி:

ஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...


மேலும் வாசிக்க... "ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை..."பிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்

         இந்த வருடம் முடிய இன்னும் பதினொரு நாட்களே உள்ளன. அடுத்த வருடம் தொடங்கவும் பதினொரு நாட்களே உள்ளன. ஹி..ஹி.. ரெண்டும் ஒன்னு தான்னு சொல்றிங்களா? சரி... சரி... விஷயத்துக்கு வருவோம்.... புது வருட கொண்டாட்டங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ஆரம்பிச்சு வாழ்த்துக்கள் பரிமாறிட்டு அமர்க்களமா போயிட்டு இருக்கும். நம்ம ப்ளாக் மூலமும் புது வருட கொண்டாட்ட வாழ்த்தை தெரிவிக்கும் பேனர் எப்படி இணைப்பது என பார்க்க போகிறோம்.

டெமோ பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்.

1. GO TO DASHBOARD > DESIGN > ADD A GADGET

2. SELECT HTML/ JAVA SCRIPT

3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்தாலே போதும்.

கீழே இரண்டு விதமான பேனருக்கு நிரலிகள் தரப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்த பேனரை இணைத்துக் கொள்ளவும்.

<div style='position: fixed; bottom: 0%; right: 0%;'/>
<a href="/" target="_blank"><img alt="BlogTips"src="http://i1187.photobucket.com/albums/z386/prakashin/happynewyear.gif"/></a></div>
-------------------------------------------------------------------------------------------------------------------------<div style='position: fixed; top: 0%; right: 0%;'/>
<a href="/" target="_blank"><img alt="BlogTips"src="http://i1187.photobucket.com/albums/z386/prakashin/happynewyear2012BANNER.jpg"/></a>
</div>4. பின்னர் GADGETஐ SAVE செய்யவும். பின்னர் உங்கள் பிளாக்கை ரிப்ரெஷ் செய்து பாருங்கள். முதல் பேனரை நீங்கள் தேர்வு செய்திருந்தால் பிளாக்கின் வலது கீழ் மூலையில் அழகான வாழ்த்து பேனர் இருக்கும்.  இரண்டாவது பேனரை தேர்வு செய்திருந்தால் பிளாக்கின் வலது மேல் மூலையில் அழகான பேனர் இருக்கும்.உங்கள் பிளாக்குக்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லுங்கள்.
மேலும் வாசிக்க... "பிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப்படி? ப்ளாக் டிப்ஸ்"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1