CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பிளாக் முகவரி மாற்றத்தால் காணாமல் போன FOLLOWERS GADGET-ஐ மீண்டும் இணைப்பது எப்படி?

     நண்பர்களே, இன்று முதல் கூகிள் தனது பிளாக்கர் வசதியில் யாருக்கும் அறிவிக்காமல் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. முதல் பிரச்சனை அலாஸ்கா தற்போதைய ரேங்க் மாறி புதிய ரேங்க் காட்டுகிறது. அடுத்து சிலரது பிளாக்கில் பாலோயர்ஸ் (FOLLOWERS GADGET) மறைந்து விடுகிறது. அவ்வாறு மறைந்த பாலோயர்ஸ் gadget-ஐ GOOGLE FRIEND CONNECT ஐ பயன்படுத்தி மறுபடியும் நமது தளத்தில் எப்படி இணைப்பது என பார்ப்போம்.

1. முதலில் www.google.com/friendconnect/ இந்த இணைப்பில் சென்று உங்கள் பிளாக் முகவரி கொடுத்து லாகின் ஆகுங்கள்.


2. பின்னர் கீழே படத்தில் உள்ளது போல ஒரு WINDOW OPEN ஆகும்.

அதில் ADD THE MEMBERS GADJET CLIK செய்ய வேண்டும்.


3. கீழே படத்தில் உள்ளது போல ஒரு WINDOW OPEN ஆகும்.


அதில் உங்கள் பிளாக்குக்கு தக்கவாறு அகலம் மற்றும் பாலோயர் படங்களின் வரிசையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழே CREATE HTML CODE என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. CREATE HTML CODE என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஒரு HTML BOX ஓபன் ஆகும்.

இந்த HTML BOXஇல் உள்ள எல்லா CODINGஐ COPY செய்ய வேண்டும்.


5. பின்னர் உங்கள் பிளாக்கர் முகவரியில்  DASHBOARD > DESIGN > ADD A GADGET செல்லுங்கள்


6. அங்கே HTML/ JAVA SCRIPT என்பதை தேர்ந்தெடுங்கள். COPY செய்த CODINGஐ PASTE செய்தால் போதும். உங்கள் தளத்தை ஒரு முறை REFRESH செய்து பாருங்கள். உங்களது பழைய பாலோயர்ஸ்(FOLLOWERS GADGET) உள்ள GADGET இணைந்திருக்கும்.


டிஸ்கி: இம்முறையின் மூலம் FOLLOWERS GADGET-ஐ புதிய வலைப்பூ தளங்களிலும் இணைக்கலாம்.


பிளாக்கர் டொமைன் மாற்றம் பற்றிய நண்பர்களின் பதிவு:

வந்தேமாதரம் சசி: பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி

பிளாக்கர் நண்பன்: தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்

தமிழ்மணம் திரட்டியில் இணைக்கும் முறையை பொன்மலர் தளத்தில் பார்க்க,


மேலும் வாசிக்க... "பிளாக் முகவரி மாற்றத்தால் காணாமல் போன FOLLOWERS GADGET-ஐ மீண்டும் இணைப்பது எப்படி?"



குழந்தைகளுக்கு இசைபயிற்சி அவசியமா? கட்டுரை

     இசைக்கும் மயங்காதவர்கள் உண்டோ? இந்த பரபரப்பான வாழ்க்கையில், நமக்கு பிடித்தமான இசையை நாம் கேட்டோமானால் நமது மனதும் சூழ்நிலையும் லேசாகிறது. இத்தகைய இசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின் IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
       சிறுவயதில் பியானோ, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளை பயிற்சி பெரும் குழந்தைகள், வயதான காலத்திலும் நல்ல புத்திக் கூர்மையுடன் இருப்பதாக வல்லுனர்கள தெரிவிக்கிறார்கள். சாதாரண இசையை கற்காத குழந்தைகள் விட நன்கு இசையை கற்ற குழந்தைகள வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இசையை கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம், மூளையின் இடது, வலது பாகங்களை ஒரு சேரப் பயன்டுத்தும் ஆற்றல சாதாரணக் குழந்தைகளை விடவும் இசையை கற்ற குழந்தைகளுக்கு அதிகமாக இருப்பதாக வல்லுனர்களின் ஆராய்ச்சி சொல்கிறது.
இளவயதில் மேற்கொள்ளும் இசைப்பயிற்சி வயதான காலத்தில் மூளை நரம்புகளில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள உதவுகிறது. சிறுவயது இசைப்பயிற்சி மூளையை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால், மற்றவர்களை விட இசையை கற்றவர்கள் அறிவு நுணுக்கத்துடன் செயல்படுவதைக் காண முடிகிறது, என வல்லுனர்கள் கருத்து சொல்கிறார்கள்.
     மனதுக்கு இதம் அளித்து பட்டதைக் குறைக்க உதவும் இசை, ஆழ்ந்த தூக்கத்தை இரவில் பெறவும் உதவுகிறது. மெல்லிய இசை நரம்புகளை நெகிழ்வடையச் செய்து உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது. இது மட்டுமில்லாமல், மூளை நரம்புகள், மிகச் சிறப்பாக செயல்படவும் உதவும் இசையை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். குழந்தைகள் சிந்திக்க தூண்டும் இசையை கற்க உங்கள் குழந்தைகளை இசைப்பயிற்சிக்கு இன்றே சேர்த்து விடுங்கள், என்கிறார்கள் ஆராய்ச்சி வல்லுனர்கள்.

ஒரு கட்டுரை வாயிலாக இவ்விசயத்தை அறிந்தேன். ஆகையால் பகிர்ந்துள்ளேன்.

.
மேலும் வாசிக்க... "குழந்தைகளுக்கு இசைபயிற்சி அவசியமா? கட்டுரை"



யார் ஏழை? சிறுவனின் பார்வை!

    ஒரு ஊரில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவருக்கு ஒரே மகன். மிகவும் செல்லமாக அவன் வளர்க்கப்பட்டான். பருவ வயது வந்தது அவனுக்குப் பொறுப்புத் தர எண்ணினார் அவர்.
    ஆனால் மகனுக்கு உலக வாழ்க்கை இன்னதென்று விளங்கவில்லை. அவன் உலகத்தைத் தெரிந்த பின்பு அவருக்குப் பொறுப்புத் தரலாம் என்று எண்ணினார்.
    அவனை ஒரு மாத காலம் சேரி மக்கள் வாழ்கின்ற பகுதியில் அந்த மக்களோடு மக்களாகத் தங்கி வாழ்ந்து பின்வருமாறு பணித்தார்.
       ஒரு மாதம் ஆனபின்பு மகன் வீட்டுக்கு வந்தான். தந்தை கேட்டார் என்ன மகனே வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டாய் என்றார்.
நிறைய அவர்களிடம் அறிந்து கொண்டேன் அப்பா. அவர்கள் நம்மை விட பணக்காரர்களாகவும், சுதந்திர மானவர்களாகவும், சு��மாகவும், பயமற்றும் வாழ்கிறார்கள் என்றான்.
       தந்தை எப்படிச் சொல்கிறாய் என கேட்டார்.
நாம் இங்க அலங்கார செயற்கை விளக்குகள் ஏற்றி வாழ்கிறோம். அவர்களோ நட்ச்சதிரங்களையே விளக்குகலாகக் கொண்டு வாழ்கிறார்கள்.
     நாம் நமக்கான உணவையே விலை கொடுத்து வாங்கி உண்கிறோம். அவர்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே உற்பத்தி செய்கிறார்கள்.
நான் அறைகளுக்குள் வாழ்கிறோம். அவர்களோ சுதந்திரமாக சந்தோசமாக பரந்த வெளியில் வாழ்கிறார்கள்.
       இப்பொழுது சொல்லுங்கள் தந்தையே அவர்களை ஏழை என்கிறார்கள்.
      சுதந்திரமாகவும், சந்தோசமாகவும், தன் உணவைத் தாங்களே உற்பத்தி செய்பவராகவும், உறவுகளோடு ஒன்றி மகிழ்பவர்களாகவும் இருப்பவர்களை ஏழைகள் என்று எப்படி சொல்ல முடியும்? இவைதான் நான் அவர்களிடமிருந்து கற்றது என்றான்.
  எனவே வாழ்க்கை என்பது சுதந்திரத்திலும் உறவுகளிலும் மலர்ந்திருக்கிறது.

.
மேலும் வாசிக்க... "யார் ஏழை? சிறுவனின் பார்வை!"



நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

      ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா? 

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.
Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.
4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.
-tips and tricks-
நண்பகளே, error இப்போ வராது.... சிரமத்திற்கு மன்னிக்கவும்.....
.
மேலும் வாசிக்க... "நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK"



பஜார் கடை பஞ்சர் ஆன கதை



அந்த ஊர் ரொம்ப பேமசான ஓரளவு பெரிய ஊர். சுத்துபதினெட்டு ஊர் மக்களும் அந்த ஊருக்கு தான் எந்த சாமான்கள் வாங்கனும்னாலும் வந்து போவாங்க. அந்த ஊரோட பஜார்ல கிடைக்காத பொருளே இல்லை. அந்த பஜார்ல விதவிதமான கடைகள் விதவிதமான பொருட்கள் இருக்கும். அதனால ஊர் மக்கள் எல்லோரும் அவங்களுக்குன்னு பரிச்சியமான கடைகளை பழகி வச்சிருந்தாங்க. 

அதே போல பஜார் கடைகளும் மக்களை கவர போட்டி போட்டுட்டு விளம்பரங்கள், இலவச இணைப்புகள், கவர்ச்சித் திட்டங்கள் என பல யுத்திகளை செய்துட்டு வந்தாங்க. மளிகை சாமான்களுக்கு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், துணிமணி வகைகளுக்கு  என மக்கள் தகுதிக்கு ஏற்ப பெரிய கடையில் இருந்து சின்ன கடைகள் வரை அந்த பஜாரில் பரவலா இருந்துச்சு. நிறைய கடைகள் இருந்தாலும் சில கடைகளே மக்களுக்கு பேவரிட்டாக இருந்து வந்துச்சு. மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் என எல்லா வகையான மக்களும் அந்த பஜார் கடையையே நம்பி இருந்தாங்க.

இப்படி இருக்கறப்ப ஒரு கடையில திடீர்னு அதன் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைய ஆரம்பிச்சுச்சு. அந்த கூட்டம் எல்லாம் வேற வேற கடைகளுக்கு போக ஆரம்பிச்சாங்க. அந்தக் கடையோட கூட்டம் குறைய என்ன காரணம்னு விசாரிச்���ப்ப கலப்பட பொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமில்லாம கவர்ச்சியான திட்டங்களில் சேர்ந்த மக்களை கொஞ்சம் கொஞ்சமா ஏமாற்றியதா தெரிய வந்திச்சு. இப்படி இருந்தாலும் அந்த கடைக்காரன் கொஞ்சம் முதலீடெல்லாம் போட்டு என்னென்னவோ திட்டமெல்லாம் போட்டு பார்த்தான். ம்ஹும்... கூட்டம் மறுபடியும் வந்த பாடில்லை. அப்படியே கூட்டம் வந்தாலும் சும்மா சுத்தி பாத்துட்டு போனாங்களே தவிர பொருட்களை வாங்க யாருமே முன்வரல. 

கடைக்காரன் தலையில அடிச்சுக்கிட்டான். ச்சே..ச்சே... எப்படி பொருட்கள் இருந்தாலும் வர்ற கூட்டம் கண்டிப்பா வரும்னு கொஞ்சம் கலப்படமும், போலி பொருட்களையும் உள்ள விட்டா அது நமக்கே ஆப்பாயிருச்சே, என அவனோட வீட்டுல, நண்பர்கள் கிட்ட புலம்ப ஆரம்பிச்சுட்டான் அந்த ஜால்ரா நண்பர்கள் கூட்டமும் கலப்பட, போலிகளை உலாவ விட்டாச்சு. அது தீரும் வரைக்கும் நாம சரக்கை மாத்த முடியாது. அதுக்காக போட்ட காசெல்லாம் வீணா போயிரும்னு அந்த கடைக்காரனை மேலும் குழப்பினார்கள். இருந்தாலும் அந்த கடைக்காரன் என்ன முடிவெடுக்கரதுன்னே தெரியாம முழிக்க, ஒருவழியா அவனே சமாளிச்சு மறுபடியும் புது சரக்கெல்லாம் வாங்கி புதுப்புது விளம்பரம் செய்ய ஆரம்பிச்சான். 

ஆனா அதுக்குள்ளே அவனோட பழைய மக்கள் கூட்டமெல்லாம் வேற வேற கடைகளுக்கு வாடிக்கையாளரா மாறியிருந்தாங்க. என்ன செய்ய? கூட்டத்தை நம்பி மக்களை ஏமாற்ற நெனச்ச அவனுக்கு மக்கள் சரியான ஆப்பு வச்சுட்டாங்க. மிச்ச சொச்ச கூட்டமும் படிப்படியா குறையாமலா போகும்? ஆக, மக்களே மக்களை ஏமாற்ற நெனச்சவன் ஏமாந்து போவான் என்பதை இக்கருத்துகள் உணர்த்துகிறது.
மேலும் வாசிக்க... "பஜார் கடை பஞ்சர் ஆன கதை"



ட்ரம்ஸ் வாசிக்க ஆசையா? மவுஸும், உங்க பிளாக்கும் இருந்தாலே போதும்!

      என்னங்க, தலைப்பை பார்த்துட்டு நமக்குதான் ட்ரம்ஸ் வாசிக்க தெரியாதே. மவுஸும் பிளாக்கும் இருந்தாலே போதும்ன்னு போட்டிருக்கே, எப்படி முடியும்னு நினக்கறிங்களா? ரொம்ப ஈஸிங்க. உங்க பிளாக்குல கொஞ்சம் இடமும் உங்க கம்ப்யுட்டர் மவுஸும் இருந்தாலே போதும். ஈசியா ட்ரம்ஸ் வாசிக்கலாம். சரி, இந்த வசதியை எப்படி நம்ம பிளாக்குல இணைக்றதுன்னு பாக்கலாமா?

வழிமுறை:
1. உங்கள் பிளாக்கரில் DASHBOARD > DESIGN > ADD A GADGET செல்லுங்கள்
2. அங்கே HTML/ JAVA SCRIPT என்பதை தேர்ந்தெடுங்கள்.
3. பின்னர் கீழே உள்ள படத்தில் get this என்ற இடத்தில் கிளிக் செய்தால் படம் 2 இல் உள்ளது போல ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே blogger என்பதை கிளிக் செய்தால் இன்னொரு பாக்ஸ் ஓபன் (பார்க்க படம் 3) ஆகும். அங்கே கீழே embed code என்ற பகுதியில் உள்ள html codeகளை copy செய்து ஓபன் செய்து வைத்துள்ள HTML/ JAVA SCRIPT இல் paste செய்து விடுங்கள். அவ்வளவு தான்.

டெமோ பார்க்க கீழே படத்தில் மவுஸ் கர்சரை வச்சு வாசியுங்க

மேலே உள்ள படத்தில் get this என்பதை கிளிக் செய்யவும்.

படம் 2
படம் 3
       இப்ப இந்த டிப்ஸ்க்கான ப்ரிவியு பாக்கணுமா? மேலே ட்ரம்ஸ் படம் இருக்குல. அங்க  ஒவ்வொரு ட்ரம்ஸ் மேலேயும் உங்க மவுஸ் வச்சு நகர்த்தி நகர்த்தி செய்தாலே போதும். உங்க நகர்த்தலுக்கு ஏற்ப ட்ரம்ஸ் அதிரடியாக வாசிக்கும். அப்புறம் மறக்காம உங்க ஸ்பீக்கர் ஆன் செய்து வால்யூமை அதிகமா வச்சிருங்க. அப்புறம் பாருங்க உங்க கணினியே அதிரும் வகையில் ட்ரம்ஸ் ஒலியை ரசிக்கலாம்.

.
.
மேலும் வாசிக்க... "ட்ரம்ஸ் வாசிக்க ஆசையா? மவுஸும், உங்க பிளாக்கும் இருந்தாலே போதும்!"



வீடியோ, ஆடியோக்களை தேவையான FORMAT-க்கு மாற்ற சிறந்த இலவச இணையதளங்கள்

    இன்றைய காலத்தில் நமக்கு தேவையான அனைத்து மென் பொருட்களும் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை அனைத்தையும் நமது கணினியில் ஏற்றி வைத்தால் நமது கணினி வேகம் குறையவும வாய்ப்பு உள்ளது இதனால் மிக முக்கியமான மென்பொருட்களை மட்டும் கணினியில் ஏற்றி வைத்துவிட்டு ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தும் வகையில் இருக்கும் மென்பொருட்களை இணைய வழியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அவ்வகையில் வீடியோ, ஆடியோ, இமேஜ், டாக்குமென்ட் என நமக்கு தேவையானவற்றை நமக்கு வேண்டிய format-க்கு மாற்ற ஆன்லைனில் வசதி உள்ளது. சில தளங்களில் உள்ள மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கணினியில் install செய்தும் உபயோகப்படுத்தும் வகையில் உள்ளது. அவ்வகையான சில தளங்களை இங்கே பார்ப்போம்.


Flvto.com
இந்த தளத்தில் எல்லாவகை யூட்யூப் வீடியோகளை எளிதாக MP3 FORMAT மாற்றலாம். வீடியோக்களின் அளவு சற்று அதிகமாக இருந்தாலும் விரைவாக MP3 FORMATகளாக மாற்றலாம். மேலும் இந்த தளம் மூலமாக முதன்மை வீடியோ SHARE தளங்களான Veoh, Dailymotion, Facebook, Metacafe, Vimeo ஆகியவற்றில் எளிதாக SHARE செய்யலாம்.


Vixy.net
இத்தளமானது WINDOWS XP, VISTA, WINDOWS 7 என எல்லாவகை WINDOWS இல் எளிதாக இயங்குகிறது. இந்த தளமானது பல வீடியோ தளங்களில் இருந்து MP3, AVI, WMV, MP 4 மற்றும் மொபைல் FORMAT களாக மாற்ற எளிதான தளமாக உள்ளது. இந்த மென்பொருள் தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தும் வகையில் உள்ளது. 


mediaconverter.org
உங்களது ஆடியோ மற்றும் வீடியோக்களை தேவையான FORMAT மாற்ற சிறந்த தளம் இது.  இத்தளத்தின் மூலமாக 3gp, Asf, AVI, MP4, MKV, MP3 என எல்லா வகையான FORMAT மாற்றலாம். ஆனால் ப்ரீமியர் பயனாளிகளாக இருந்தால் ஒரு நாளில் ஐந்து முறை வரை FORMAT மாற்றத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அத்தளம் தெரிவித்துள்ளது.

youconvertit.com
     இந்த தளமானது ஆடியோ மற்றும் வீடியோ format மாற்றம் செய்வதற்கு பயன்படுவது மட்டுமில்லாமல் image file-களை BMP, GIF, JPEG என பல formet-களாக மாற்றம் செய்யவும் உதவுகிறது. அதோடு மட்டுமில்லாமல் text file-களை DOC, HTML, TXT, PDF என்ற format-களாக மாற்றவும் உதவியாக உள்ளது.

movavi.com
     இந்த தளத்தில் உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் உள்ளது.இந்த மென் பொருளானது வீடியோக்களை YouTube, AVI, MP4, DVD, HD, FLV, 3GP, iPod, iPad, iPhone, DivX, Flash, மற்றும் பல formatகளாக மாற்ற பெரும் உதவியாக இருக்கும் என அத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மென்பொருள் மூலமாக photo editing, Screen Capture மற்றும் screenshots எடுக்கவும் பயன்படுகிறது.

zamzar.com
      இத்தளம் உபயோகப்படுத்துவதற்கு மிக எளிதான தளம். இத்தளம் மூலம் video, audio, image, document, E-book மற்றும் mobile formats என கிட்டத்தட்ட எல்லா வகையான format-களாக மாற்றலாம்.
மேலும் வாசிக்க... "வீடியோ, ஆடியோக்களை தேவையான FORMAT-க்கு மாற்ற சிறந்த இலவச இணையதளங்கள்"



வேலை கிடைச்சிருச்சு - சிறுகதை (மீள்பதிவு)

          "டேய் பொறம்போக்கு, எலேய் விடிஞ்சு ஒம்போது மணி ஆச்சு. இன்னும் என்னடா தூக்கம், எந்திரிடா... வெட்டி களைச்சு போன ஆபீசரு தூங்கறாரு பாரு... எந்திரிடா வேலை வெட்டி இல்லாதவனே.." என் அப்பாவிடம் தினந்தோறும் வாங்கும் வசவுகள் இவை. இது ஒரு சாம்பிள் தான். இன்னும் பயங்கர வார்த்தைகள் வந்து விழும். ஏனோ, இன்னைக்கு கொஞ்சம் கம்மியா திட்டறாரு. "மூர்த்தி, எந்திரிப்பா.. கடைக்கு போய் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும், சீக்கிரம் எந்திரிப்பா.." இது என் அம்மா. என்னிடம் பாசம் காட்டும் ஒரே ஜீவன். அம்மாவுக்காக எந்திரிச்சேன். பல்ல விளக்கிட்டு, அம்மா கொடுத்த டீயை குடிச்சிட்டு லிஸ்ட்டை வாங்கி கடைத்தெருவுக்கு போனேன்.

     என்னைப் பத்தி சொல்லி விடுகிறேனே, என் பெயர் மூர்த்தி, கம்பியூட்டரில் முதுநிலை பட்டப்படிப்பு படிச்சுட்டு வேலை ���ேடும் ஒரு சராசரி இளைஞன். வெறும் எட்டாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு வரும் வேலையில் சேர என் மனம் இடம் கொடுக்க வில்லை. சேர்ந்தால் பெரிய நிறுவனத்தில் ஓரளவு நல்ல தகுதியான சம்பளத்தில் சேர வேண்டும் என்பதே என் ஆசை. அப்பா வெங்கடாசலம் ரிட்டயர்டு பேங்க் கேஷியர்.அவர் எப்பவுமே சிடுசிடு தான். சின்ன வயசிலே இருந்தே அவரை அப்படித்தான் பாக்கிறேன். பாசம்னா எவ்வளவு என கேட்பவர் அவர். அம்மா பாக்கியம். வீட்டில் அப்பாவுக்காகவும், எனக்காகவும் வாழும் ஜீவன். என்மேல அவங்க வச்சிருக்கிற பாசத்தை வார்த்தையில சொல்லிற முடியாது. சரிங்க என் புராணம் போதும். ரெகுலரா வாங்கற கடைக்கு போனேன். லிஸ்ட்டை கொடுத்திட்டு போட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து ரோட்டை வேடிக்கை பார்த்தேன். 

"தம்பி மூர்த்தி, என்னப்பா வேலைக்கு போறியா? இல்லை இன்னமும் வீட்டுல அப்பா கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கியா" என நக்கலாக கேட்டார் கடைக்கார அண்ணாச்சி. "இல்ல அண்ணாச்சி, இன்னமும் வேலை கிடைக்கல. நல்ல வேலை வரும்னு எதிர் பார்த்திட்டு இருக்கேன்" என மனசுக்குள் அவரை திட்டிட்டு பதில் சொன்னேன். இப்படித்தான் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க ரொம்ப பாவமா விசாரிக்கர்த்த கண்டா எனக்கு கோவம் தான் வரும். யாரும் வேலைக்கு உதவி செய்றது கிடையாது. சும்மா வெறும் பேச்சு மட்டும் தான்.   

     சாமான்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். எனக்கு பிடிச்ச இடியாப்பம், தேங்காய்பால் செஞ்சு வச்சிருந்தாங்க. நல்லா சாப்பிட்டு பேப்பரிலும் நெட்டிலும் வேலை வாய்ப்பை தேட ஆரம்பித்தேன். ஏதாவது பெரிய நிறுவனம் கூப்பிட்டிருக்குமா என ஆசையில் மெயில்களை செக் செய்தேன். ம்ஹும், எப்பவும் போல கன்சல்டன்சிகளே அதிகமாக என மெயில் இன்பாக்ஸ்ஐ நிரப்பி இருந்துச்சு. இந்த கன்சல்டன்சி மூலமா சில இன்டெர்வியு போயிருக்கேன். ரெண்டு மூணு வருஷம் பான்ட், வெறும் எட்டாயிரம், பத்தாயிரம் என சம்பளம், மொத மாச சம்பளத்தை அவங்களுக்கு கொடுக்கணுமாம் இப்படி ஏக கண்டிஷன்ஸ். எனக்கு பிடிக்கவில்லை. எனக்கேற்ற ஒரு நாள் வரும். அதுவரை அப்பாவின் வசவுகளை வாங்க வேண்டும். அவர் வசவுகள் வாங்காம இருக்கணும்னா கிடைக்கிற வேலையில் சேர வேண்டியது தானே என சொல்றிங்களா? நீங்க சொல்றது வாஸ்தவம் தான். எனக்கு வேலை கிடச்சவுடன் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் முடிச்சு வைக்க போறதா பெத்தவங்க பிளான் பண்ணியிருக்காங்க. அதனால தான் நல்ல வேலையில சேரணும்னு ஆசைப்படறேன். பெரிய நிறுவனங்கள் நேரடியாக வேலைக்கு கூப்பிடாதா? என கனவு கண்டுட்டு இருந்தேன்.   

        அப்படியே ஒரு மாசம் ஓடியது. அப்பாவின் திட்டுகள், அம்மாவின் பாசம் ரெண்டும் மாறி மாறி கெடச்சுச்சு. எனக்கு எப்படியாச்சும் நல்ல வேலை கிடைக்கனும்னு அம்மா வேண்டாத கோயில்கள் இல்லை. அவங்களுக்கு திருப்பதிக்கு ஒரு தடவ போய் தரிசனம் பண்ணிட்டு வரணும்னு ஆசை. அவங்க ஆசையை அப்பா கிட்ட சொன்னாங்க. அப்பாவும் திருப்பதிக்கு போயிட்டு வரலாம் என சொன்னார். அடுத்த ஒரு வாரத்தில் கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் திருப்பதி போகனும்னு சொன்ன நேரம் எனக்கு ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனில இருந்து வேலைக்கான இன்டெர்வியுக்கு கூப்பிட்டிருந்தாங்க. அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம், மகனுக்கு வேலை கிடைக்கணும்னு இங்க இருந்தே திருப்பதி சாமியை கும்பிட ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு புதன் கிழமை, அப்பாவும், அம்மாவும் திருப்பதி கிளம்புனாங்க. மூணு நாள் பிளான். பக்கத்துல இருக்கற கோயில்களையும் பார்த்துட்டு வர்றதா பிளான். அவங்களை ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு வந்து இன்டர்வியுக்கு தேவையான பாடங்களை ஒரு ரிவியு செஞ்சேன். அடுத்த நாள் வியாழன், இன்டெர்வியு அன்னைக்கு தான். சாமி கும்பிட்டுட்டு அம்மாவையும் நெனச்சிட்டு அந்த சாப்ட்வேர் கம்பெனிக்கு போனேன். எவ்ளோ பெரிய நிறுவனம். இங்கே வேலை கிடச்சா எப்படி இருக்கும்? அப்படியே எனக்குள்ளே ஒரு கனவு சினிமாவே ஓடுச்சு. 

         கரெக்டா பத்து மணிக்கு ஆரம்பிச்சாங்க. மொத்தம் சுமார் நாற்பது பேராவது வந்திருப்பாங்க. மொத்தம் பத்து சீட் தான் வேலை காலியா இருக்கறதா அங்க தெரிஞ்சுகிட்டேன்.  நானும் அந்த பத்து பேர்ல ஒருத்தனா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிட்டேன். ஒவோருத்தரா இன்டெர்வியு ஹாலுக்கு போனாங்க. முடிவும் அன்னைக்கு மதியமே சொல்லப் போறாங்கனு அங்க சொன்னாங்க. நான் பதினஞ்சாவது ஆளு. எனக்கான முறை வந்துச்சு. உள்ளே போனேன். இன்டெர்வியு ஆரம்பிச்சுச்சு. அவங்க கேட்ட கேள்விகளுக்கு ஓரளவு சரியாவே சொன்னேன். ஒரு பத்து நிமிஷம் கேள்விகள் கேட்டாங்க.  வெளியில வெய்ட் பண்ணுங்க என சொன்னாங்க. இன்டெர்வியு முடிஞ்சவங்க எல்லோரும் தனியா ஒரு இடத்துல வெய்ட் பண்ணினோம். மதியம் ஆச்சு, கையில் ஒரு பேப்பருடன் ஒரு ஆள் வந்தார். எனக்குள் ஆர்வம் தொத்திக் கொண்டது. அவர் ஒவ்வொரு பேரா வாசிக்க ஆரம்பிச்சார். பேர் வாசிக்றவங்களை அங்க இன்டெர்வியு ஹால்ல உட்கார சொன்னார். என் பெயரையும் வாசிச்சார். எனக்குள் சந்தோசம். 
         
          மொத்தம் இருபது பேர் அந்த ஹாலில் இருந்தோம். பெயர் வாசிச்சவர் வந்தார். இன்னொரு இன்டெர்வியு இருக்கு. ஒவ்வொருத்தரா கூப்பிடுவாங்க என சொன்னார். ஒவ்வொருத்தரா கூப்பிட்டாங்க. அப்பவே முடிவும் சொல்றதா இன்டெர்வியு முடிஞ்சு வெளியே வந்தவர் சொன்னார். அவர் செலக்ட் ஆகல என சொன்னார். என் முறை வந்திச்சு. உள்ளே போனேன். என்னிடம் மேலும் சில கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொன்னேன். அவங்களுக்குள்ள டிஸ்கசன் பண்ணினாங்க. அப்புறம் நடுவுல இருந்தவர் "தம்பி மூர்த்தி உங்களை நாங்க செலக்ட் பன்னி இருக்கோம். உங்களுக்கு மாசம் முப்பதாயிரம் சேலரி போட்டிருக்கோம். நீங்க அடுத்த வாரமே வேலைக்கு ஜாயின் பண்ணிக்கலாம்" என வேலை அழைப்புக்கான லெட்டரை கொடுத்தாங்க. வர்றப்ப இந்த லெட்டரை கொண்டு வாங்க என சொன்னாங்க. எனக்குள் சந்தோசம். இன்டெர்வியு ஹாலை விட்டு வெளியே வந்தேன். 

         மழை பெய்து குளுகுளு என இருந்துச்சு. என் மனசும் குளிர்ந்து இருந்துச்சு. அம்மாவுக்கு இந்த நல்ல விஷயத்தை போன் பன்னி சொல்லலாம்னு மொபைலை ஆன் செய்தேன். ஆன் செய்த அடுத்த நொடி ஒரு நம்பரிலிருந்து ஒரு போன் வந்துச்சு. ஹலோ சொன்னேன். அந்தப் பக்கம் சொன்ன விஷத்தை கேட்டு இடிஞ்சு போனேன். எனக்கு கை கால் நடுங்கியது. முகம் வியர்த்தது. அந்த பக்கம் நபர் சொல்ல சொல்ல எனக்கு பேச்சு வர வில்லை. என் அப்பா அம்மா திருப்பதிக்கு போயிட்டு கீழே இறங்கும் போது பஸ் மலையில் இருந்து கவிழ்ந்து இறந்து விட்டார்கள் என அவர் சொன்னதும் எனக்குள் நான் செத்து போனேன். ஐயோ அனாதையாயிட்டேனே... வேலை கிடச்ச சந்தோசத்தை அவங்க அனுபவிக்கலையே. திருப்பதிக்கு உடனே கிளம்பினேன் சில உறவினர்களும் வந்தாங்க. அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் அப்பா அம்மாவை வச்சிருந்தாங்க. அவங்களை பார்த்து மயங்கினேன். யாரோ என்னை தாங்கி பிடிப்பது தெரிந்தது. முழித்து பாத்தேன். உறவினர் ஒருவர் தம்பி, நீங்க தைரியமா இருக்கணும், இனி நடக்க வேண்டியதை பார்ப்போம் என சொன்னார். ஆம்புலன்சில் ஊருக்கு எடுத்து வந்தோம். தெருவே சோக மயமானது. செய்ய வேண்டிய காரியம் செய்தோம். உறவினர் ஒவ்வொருவராக எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு கிளம்பினார்கள். எல்லாம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு. என் நண்பர்கள் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. அப்பா அம்மாவை நெனச்சு அழுதிட்டு இருந்தேன். இனி எனக்கு யார் இருக்கா? உலகமே வெறுமையாய் தெரிந்தது. 

          ஒரு பெண்ணும், ஆணும் வீட்டுக்குள் வந்தாங்க. அந்த பெண்ணை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரி போட்டது. அவள் கார்த்திகா. அவளுடன் வந்தது அவளின் அப்பா. கார்த்திகா கல்லூரி நாட்களில் நான் ஒரு தலையாய் காதலித்த பெண். ரொம்ப தீவிரமா காதலித்தேன். ஆனால் அவள் காதலிக்கவில்லை.
  "படிச்சு முடிச்சு நல்ல வேலையில் சேர்ந்திட்டு உன் காதலை சொல்லு. அப்ப உன்னை பிடிச்சா உன்னை காதலிக்கிறேன்" என சொன்னவள் இன்று என்னைத் தேடி வந்திருக்கிறாள். அவள் பேச ஆரம்பித்தாள். 
  "மூர்த்தி பெத்தவங்கள இழந்துட்டு இருக்கற உனக்கு நான் இருக்கிறேன், அப்போ படிக்கறப்போ உன் காதல் எனக்கு புரியல. காலேஜ் முடிச்ச பிறகு தான் உன் காதலை என்னால் உணர முடிஞ்சது, உனக்காக நான் இருக்கேன்".
 "அப்பா சொலுங்க அப்பா... அவருக்கு துணையா நான் இருக்கேன்னு சொல்லுங்கப்பா"

டிஸ்கி: இணைய தொடர்பு சரியில்லாத காரணத்தால் மீள்பதிவு.


,
மேலும் வாசிக்க... "வேலை கிடைச்சிருச்சு - சிறுகதை (மீள்பதிவு)"



உங்கள் அகல கணினி திரைக்கு ஏற்ற வால்பேப்பர்கள் வைக்க (wide screen wallpapers for desktop)

       நமது டெஸ்க்டாப் கணினியிலோ, லேப்டாப் கணினியிலோ கணினி திரையின் முகப்பு பக்கத்தில் (desktop background) அழகான வால்பேப்பர்கள் வைத்திருப்போம். நமக்கு பிடித்த மாதிரியான வகையில் போட்டோக்கள், அழகிய டிஸைன்கள், இயற்கை படங்கள் என வால்பேப்பர்களை தேர்ந்தெடுப்போம். இதோ இங்கே சில வால்பேப்பர்களை உங்களுக்காக தொகுத்துள்ளேன். பிடித்திருந்தால் உங்கள் கணினியில் வைத்து அழகுபாருங்கள்.

        உங்களுக்கு பிடித்தமான வால்பேப்பரின் மீது கிளிக் செய்தால் புதிய பேஜ் ஓபன் ஆகும். அங்கே படத்தின் அருகே download image என இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய வால்பேப்பரை பெறலாம். சில வால்பேப்பரில் download image என இல்லையெனில் அந்த படத்தின் மீது ரைட் கிளிக் செய்து save image கொடுத்ததும் உங்கள் கணினியில் save செய்யலாம்.  பின்னர் save செய்த படத்தின் மீது ரைட் கிளிக் செய்து set us desktop background என்ற optionஐ யூஸ் செய்து உங்கள் கணினி திரைக்கு வால்பேப்பர் அமைக்கலாம்.


















மேலும் வாசிக்க... "உங்கள் அகல கணினி திரைக்கு ஏற்ற வால்பேப்பர்கள் வைக்க (wide screen wallpapers for desktop)"



படத்துடன் கூடிய அண்மைய கருத்துரைகள் விட்ஜெடை (recent comment widget) பிளாக்கில் நிறுவுவது எப்படி?


    நமது பிளாக்கில் இடுகையின் கமென்ட் பகுதியில் கமென்ட் இடுபவரின் ப்ரொபைல் படம் தெரியுமாறு நாம் வைத்துள்ளோம். ஆனால் ரீசன்ட் கமென்ட் விட்ஜெட் வசதியில் கமென்ட் இடுபவரின் ப்ரொபைல் படம் தெரியாது. ப்ரொபைல் படம் அங்கே தெரியும்படி செய்ய இப்போது வசதி வந்துவிட்டது. அந்த வசதியை நமது பிளாக்கில் எப்படி கொண்டுவருவது என பார்ப்போமா?


1. உங்கள் பிளாக்கரில் DASHBOARD > DESIGN > ADD A GADGET செல்லுங்கள்

2. அங்கே ADD HTML/ JAVA SCRIPT என்பதை தேர்ந்தெடுங்கள்.

3. அந்த பக்கத்தில் கீழே உள்ள நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்து தங்கள் பிளாக்கின் வசதிக்கேற்ப ஏற்ப ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்தாலே போதும்.


<style type="text/css">
ul.w2b_recent_comments{list-style:none;margin:0;padding:0;}
.w2b_recent_comments li{background:none !important;margin:0 0 6px !important;padding:0 0 6px 0 !important;display:block;clear:both;overflow:hidden;list-style:none;}
.w2b_recent_comments li .avatarImage{padding:3px;background:#fefefe;-webkit-box-shadow:0 1px 1px #ccc;-moz-box-shadow:0 1px 1px #ccc;box-shadow:0 1px 1px #ccc;float:left;margin:0 6px 0 0;position:relative;overflow:hidden;}
.avatarRound{-webkit-border-radius:100px;-moz-border-radius:100px;border-radius:100px;}
.w2b_recent_comments li img{padding:0px;position:relative;overflow:hidden;display:block;}
.w2b_recent_comments li span{margin-top:4px;color: #666;display: block;font-size: 12px;font-style: italic;line-height: 1.4;}
</style>
<script type="text/javascript">
//<![CDATA[
// Recent Comments Settings
var
numComments = 5,
showAvatar = true,
avatarSize = 60,
roundAvatar = true,
characters = 40,
defaultAvatar = "http://www.gravatar.com/avatar/?d=mm",
hideCredits = true;
//]]>
</script>
<script type="text/javascript" src="http://bloggerblogwidgets.googlecode.com/svn/trunk/w2b-recent-comments-w-gravatar.js"></script>
<script type="text/javascript" src="/feeds/comments/default?alt=json&callback=w2b_recent_comments&max-results=5"></script>

      மேலே உள்ள நிரலிகளை பேஸ்ட் செய்து SAVE செய்யவும். இதில் ஒரே ஒரு மாற்றம் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது என்னவெனில் src="/feeds/comments/default? என்ற வரியில் ஹைலைட் காட்டியுள்ள URLஐ நீக்கி விட்டு உங்கள் பிளாக் URLஐ இணைக்கவும். அப்போதுதான் உங்கள் பிளாக்கின் கருத்துக்கள் காட்டும்.

கோடிட்ட URLஐ நீக்கி உங்கள் பிளாக்கின் URL இணைக்கவும்
மேலும் சிலவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி நீங்களே மாற்றியமைக்கலாம். அவை என்னென்ன?


மேலே படத்தில் அம்புக்குறியிட்ட இடங்கள் எவற்றை குறிக்கின்றன என பார்ப்போமா?
1. numcomments = 5; என்பது அண்மைய ஐந்து கருத்துகளை காட்டும். இதனை உங்கள் தேவைக்கு தகுந்தவாறு கருத்துகளின் எண்ணிக்கையை கொடுத்துக் கொள்ளலாம்.

2. showavatar = true; இங்கே trueக்கு பதிலாக false என கொடுத்தால் படம் காட்டாது.

3. avatarsize = 60; இங்கே 60 என்பது படத்தின் அளவை குறிக்கிறது. படத்தின் அளவு குறைக்க விரும்பினால் 60ஐ விட குறைந்த எண்ணை தரவும். கூட்ட விரும்பினால் 60ஐ விட அதிக மதிப்பு எண்ணை தரவும்.

4. roundavatar = true; இங்கே trueக்கு பதிலாக false என கொடுத்தால்படம் வட்ட வடிவில் காட்டாது. 

5. characters = 40; இங்கே 40 என்பது காட்டப்படும் எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. இதனையும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.

     நண்பர்களே, மிக எளிமையான முறையில் உங்கள் பிளாக்கில் அண்மைய கருத்துரைகள் (recent comment box) விட்ஜெட்ஐ நிறுவுங்கள்.
source:  way2blogging

மேலும் வாசிக்க... "படத்துடன் கூடிய அண்மைய கருத்துரைகள் விட்ஜெடை (recent comment widget) பிளாக்கில் நிறுவுவது எப்படி?"

தொடர்புக்கு: [email protected]
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1