1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....
3. கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: திரவம்
4. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.
5. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?
6. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.
7. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.
8. கேள்வி: ஒரு கையால் யானையை எப்படி தூக்க முடியும்?
பதில்: ஒரு கை தான் என யானைக்கு தெரியாதே.
9. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.
10. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.
11. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.
12. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்.
25 கருத்துரைகள்:
தமாசு... தமாசு...
ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடியல அவ்வ்வ்வ்வ்வ்.....
ஹஹஹ....பதிவு எழுதற பையனுக்கு இப்புட்டு அறிவான்னு பொறாமையில பெயில் பன்னிருப்பாங்க....இதுக்கு நான் போடுற மார்க் 100/100
சிறப்பான வினாக்கள் தொடர்க...
எவ்ளோ அருமையா பதில் சொல்லியிருக்கீங்க... இதுக்கு முட்டை மார்க் போட்டவன் எவன்???
//கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.//
அட.. அட.. இந்த பதிலுக்கே ஆயிரம் மார்க் குடுக்கலாமே தலைவா...
ஹா ஹா என்ன இடக்கு மடக்கான பதில்கள். இதுக்கு ஜீரோ மார்க்கே அதிகம் தான்.
நான் ரசித்தது..
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....
புது வருசத்தில எல்லோரையும் பழி வாங்கிட்டே...
நல்லா இருந்தது கேள்விபதில்
தலையைப் பிச்சுக்கலாம் போல இருக்கு.
ஹி ஹி ஹி.. சூப்பர்.. பதினோராவது கேள்வி இன்னும் சூப்பர்.. ஹி ஹி ஹி
மொக்கை - தாங்க முடியல; சிரிப்பு இன்னும் முடியல
very good answers.. good keep it up..
மூணாவது முதல்ல புரியல.அப்புறம் யோசிச்சதுல மாநிலம் (state) அப்படின்னு புரிஞ்சது.
அப்புறம் முட்டைய என்ன பண்ணீங்க,ஆம்லேட்டா ஆப்பாயிலா?
நல்ல மாநிலம்.....
வணக்கம் பிரகாஷ்!அருமையான கேள்வி பதில்.முட்டை கொடுக்காமல் கோழியாகவே கொடுத்திருக்கலாம். ஹி!ஹி!ஹி!
////கோகுல் said...
மூணாவது முதல்ல புரியல.அப்புறம் யோசிச்சதுல மாநிலம் (state) அப்படின்னு புரிஞ்சது.
அப்புறம் முட்டைய என்ன பண்ணீங்க,ஆம்லேட்டா ஆப்பாயிலா?////
இல்ல உடச்சி அப்படி��ே வாய்ல ஊத்திக்கிட்டாராம்......
0/200 அப்படின்னா இது +2 வா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
0/200 அப்படின்னா இது +2 வா? ///அது கூட "பெரிய" படிப்புத் தானேங்க????
////Yoga.S.FR said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
0/200 அப்படின்னா இது +2 வா? ///அது கூட "பெரிய" படிப்புத் தானேங்க????////////
ரொம்ப பெரிய படிப்பு, அது இல்லாம எந்தக் காலேஜ்லயும் சேத்துக்க மாட்டாங்க.....!
அச்சச்சோ...அப்புறம்
//நான் ஏன் பரிட்சையில் முட்டை வாங்கினேன்?//
வேற எதுக்கு ஆம்லட் போடத்தான்.
சத்தியமா பாஸ் எனக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது.
எல்லாமே அருமை...
//கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.//
இதான் டாப்பு!!
அப்புறம், இது சரியா படலையே??
//கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: திரவம்//
திரவம் என்பது நிலை (State) தானே? மாநிலமா?
இப்படி யோசித்தால்
எப்படி அறிவு வரும்
இப்படி எழுதினால்
எப்படி படிப்பது ....
உண்மையில் அறிவை வளர்க்கும் கேள்விகள் கொடுத்த நண்பருக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம் ( வானில் பறக்க விட
:) nice