ஒரு கட்டுரை எழுத நினைக்கும் போது நாம் என்ன செய்வோம்? நமக்கு தெரிந்த விஷங்களை எழுதுவதோடு மட்டும் இல்லாமல், நூலகம் சென்று தேடி குறிப்புகள் எடுத்து கட்டுரையை உருவாக்குவோம். இன்றைய காலகட்டத்தில் நூலகமே இணையத்தில் வந்துவிட்டது. நமக்கு தேவையான கட்டுரை குறிப்புகளை இணையத்தில் தேடுவது தவறா? நமது பாரம்பரிய பண்டிகைகள் பற்றியும் நாம் எல்லாம் தெரிந்து வைத்திருப்பது இல்லை.
அப்படியே தெரிந்து வைத்திருந்தாலும் மேலோட்டமான வரலாறே அறிந்து வைத்திருப்போம். ஆழமான வரலாறு வேண்டுமானால் நூலகம் செல்லலாம், அல்லது பெரியவர்களிடம் கேட்கலாம். இன்று அதையே இணையத்தில் தேடுகிறோம்.
சரியான குறிச்சொல்லை கொடுத்தால் ஆயிரக்கணக்கான குறிப்புகள் இணையத்தில் கிடைக்கும்,. அவற்றில் எது நமக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்பதை நாம் முடிவு செய்து அதை குறிப்பெடுத்துக் கொள்கிறோம்.
நாம் எந்த சமயத்தை சார்ந்தவராக இருந்தாலும், அவர்களது சமயம் சார்ந்த புத்தகங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் அவசியம் இருக்கா? இங்கே நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில் அனைவரும் அட்டை டூ அட்டை அறிந்து வைத்திருக்க மாட்டார்கள் (ஒரு சிலரை தவிர). முக்கியமான வரிகளை மட்டுமே பெரும்பாலோனோர் அறிந்து வைத்திருப்பார்கள். அவைகள் எல்லோராலும் உச்சரிக்கப்படும் முக்கியமான வரிகளாக இருந்திருக்கலாம்.
அதே போல அவர்களது விழாக்கள் பற்றிய முழுமையான வரலாறும் குழந்தை பிறந்த உடனேயே எல்லோருக்கும் தெரிந்து விடாது. அவர்கள் வளர வளர பெரியவர்கள் சொல்லக் கேட்டு, புத்தகங்கள் வாசித்து, அனுபவ பூர்வமாக அறிந்து வந்திருந்தால் ஓரளவு முழுமையான தெரிந்து கொள்ளலாம்.
இன்றோ இயந்திர உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நாம் பழகி விட்டோம். இந்நிலையில் இன்றைய குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க நமக்கு தெரிந்த விசயத்தை மட்டும் சொல்லாமல் நாமளே அக்கறை எடுத்து அந்த வரலாற்றை ஓரளவு அறிந்து சொல்வதில் தவறில்லையே. இது ஒன்றும் அவலமான நிலை இல்லையே.
எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக நாம் தான் உள்ளோம். அவர்கள் நம்மை சார்ந்தே இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் எங்கே வேண்டுமானாலும் தேடலாம். ஆங்கிலம், தமிழ் என்ற பாகுபாடு இல்லாமல் எந்த புத்தகங்களும் வாசிக்கலாம். அடுத்தவரிடம் கேட்டு சொல்லலாம். இது கேவலமான நிலை இல்லையே. இன்றைய தொழில்நுட்ப உலகில் இணைய தேடுதலும் அவசியமே என்பது என் கருத்து. இத்தகைய தேடுதலினால் நான் "தமிழன்" இல்லாமல் "டமிலன்" ஆகிவிட மாட்டேன்.
கொசுறு: மேற்கண்டவை என் சொந்த கருத்துகளே,
26 கருத்துரைகள்:
மாப்ள யார் அந்த நல்ல மனுசன் ஒரு அமைதி பயல..புயலாக்குனது!
தமிழனோ அல்லது டமிலனோ வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கு தேடுதல் என்பது மிக அவசியம் மதுரை நண்பரே
தேடலே வாழ்க்கை!
வொய் திஸ் கொலைவெறி மாப்பு... நால்லா தானே இருந்தே....
தேடுதல் என்ற ஒன்னு இருந்தாதான் வாழ்க்கையே ருசிக்கும், விறுவிறுப்பா இருக்கும்.
தேடுதலே வாழ்க்கை அதை எங்கும் எங்கேயும் தேடலாம்
டென்ஷன் ஆக்காதீங்க. சில விஷயங்கள் குழப்பினால்தான் தெளிவு ஆகும். டமிலன் என்று ஒரு வார்த்தை நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறதல்லவா? அந்தவகையில் நல்லதுதான்.
இணையத்தில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் உண்மை என்று எடுத்துக்கொள்ள இயலாது. நிறைய முறை சிந்தித்து அதன் பிறகு ஏற்றுக்கொள்ளலாம்
டமிலன் ஹா.ஹா.ஹா வை திஸ் கொலை வெறி
//இன்றோ இயந்திர உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நாம் பழகி விட்டோம்//
பொங்கல் அன்று கூட எந்திரன் பார்க்கும் அளவிற்கும் பழகி விட்டோம். எந்திர வாழ்க்கை :)
வணக்கம் டமிழ்வாசி!!!அட...பெருமாளே! தமிழ் திருக்குறளை வெள்ளைக்காரன் மொழிபெயர்த்து படிக்கும் போது...அது தமிழ் அதையே நாம ஆங்கிலத்துல விக்கிபீடியா (விக்கியுலகம் அல்ல )படிச்சா நாம் டமிழனா....புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி....
வணக்கம் பிரகாஷ்!என்ன ஆச்சு ??????கூல்!!!!!
WAITING FOR ....??????!!!!!
SEKKIRAM VANGAPPA.....
WITH SNAKES,,WATER- ETC....
ALL R WAITING .....
என்ன திடீர்னு இவ்வளவு உணர்ச்சிவசம். நாம் தமிழர்கள் தான். உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பிரகாஷ்! என்ன திடீருன்னு கொதிச்சுட்டீங்க! கூல்!
என்னாச்சு?? தேடுதல் நல்ல விசயம் தானே??
அறிவுதாகத்தைத் தீர்க்க எங்கு குறிப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லையே?? இதில் மொழிபாகுபாடு பார்த்துக்கொண்டிருந்தால் நம் மனமும் அறிவும் வளராமல் அப்படியே இருக்கவேண்டியதுதான்.
நல்லதை தேடுவதற்கு கட்டுப்பாடுகள் எதற்கு? எங்கு கிடைக்கிறதோ அங்கு தேடி பயன் பெறுவது என்பது ஒன்றும் இழுக்கு இல்லையே..தமிழை அரிச்சுவடிகளில் தான் தேடினால்தான் தமிழனா இணையத்தில் தேடினால் டமிலனா? யார் சொன்னார்கள்?
தமிழ்வாசி பிரகாஷ் said...
@கோவிந்தராஜ்,மதுரை.
///ராஜி said...
தமிழர் திருநாளாம் பொங்கலை பற்றி இணையத்தளத்தில் தேடி படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் நம் எதிர்கால சந்ததியா?//
தமிழன் டமிலன் ஆகிவிட்டான்
அதன் விளைவு !///
ஆக, நான் இணையத்தில் தேடி எடுத்ததால் டமிலன் என சொல்றிங்க????
January 10, 2012 2:44 PM
பதிவர் மஹா ஜனங்களே இந்தபதிவுக்கும் எனக்கும் எந்த சமந்தமும் இல்லீங்கோ!
வாழ்க தமிழன்
எல்லோருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@கோவிந்தராஜ்,மதுரை.
பதிவர் மஹா ஜனங்களே இந்தபதிவுக்கும் எனக்கும் எந்த சமந்தமும் இல்லீங்கோ!///
கொசுறு: மேற்கண்டவை என் சொந்த கருத்துகளே,
சார், பதிவு கொசுறு படிக்கலையா????
veedu said...
வணக்கம் டமிழ்வாசி!!!அட...பெருமாளே! தமிழ் திருக்குறளை வெள்ளைக்காரன் மொழிபெயர்த்து படிக்கும் போது...அது தமிழ் அதையே நாம ஆங்கிலத்துல விக்கிபீடியா (விக்கியுலகம் அல்ல )படிச்சா நாம் டமிழனா....புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி....
புருஞ்சுபோச்சு
ரைட்டு...
நல்லவற்றை எங்கும் தேடலாம்;எடுத்துக் கொள்ளலாம்.சரியே.
நான் தமிழனா? இல்ல, டமிலனா?
>>>
சங்கம் வளர்த்த மதுரையில் இருந்துக்கிட்டு இப்படி சந்தேகப்படலாமா?
யாருய்யா அவன், இப்படி கேள்வி கேட்டவன்?
நல்ல கருத்து.