ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.
அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.
தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படி���ே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.
நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.
21 கருத்துரைகள்:
நான் சொல்லலீங்கோ
அன்பின் பிரகாஷ்
நீதி நன்று . கழுதையும் இப்பொழுதெல்லாம் சிந்திக்கத் துவங்கி விட்டது. மனிதனை ஏமாற்றி கிணற்றில் இருந்து தப்பி விட்டது. நல்ல முடிவு- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஹா ஹா ஹா ரொம்ப புத்திசாலிக் கழுதை போலிருக்கும் போல! நல்ல கதை பிரகாஷ்!
நல்ல கழுதை.
அட....
NICE...
:)
// வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.
//
1000% உண்மை
உங்களுக்காக ...
நண்பன் : திரை விமர்சனம்
சிறப்பான நீதிக்கதை.
நன்றி,பகிர்வுக்கு.
எங்கயோ போய்ட்டீங்க போங்க கதை அதன் நீதி கலக்கல்
நல்ல க(ழு)தை!
வணக்கம் பிரகாஷ்!அருமையான நீதியுடன்,கழுதையின் சாமர்த்தியத்தையும் எழுத்தில் வடித் திருக்கிறீர்கள்!வாழ்த்துக்கள்!!!!
ஒரு வாழ்வியல் தத்துவத்தை இந்த கழுதை கதை விளக்கியது..கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.
அருனையான நீதிக்கதை பிரகாஷ்.
வணக்கம் பாஸ் எம்மாம் பெரிய தத்துவத்தை கழுதை கதையை வைத்து சொல்லியிருக்கீங்க அருமை
நல்ல கழுதை கதை சொல்றீங்க....சூப்பரு
வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.
கழுதயிடம் மனிதன் கற்று கொள்ளவேண்டிய செய்தி
ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !
அது நான் இல்லைங்கோ..
சேகர் said...
அது நான் இல்லைங்கோ///அது தெரிந்தது தானே?இல்லையென்றால் இங்குவந்து கமென்ட் போட்டுக் கொண்டிருப்பீர்களா????
மாப்ள கொன்னுட்ட போ!
நண்பரே!
சோதனைகளை நமக்கு சாதனை புரிய
ஒரு வாய்ப்பாக எண்ணி உண்மையான
முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என உணர்த்தியது உங்கள் இடுகை