வீரர்களை எதிர்த்து விளையாடும் காளை |
அலங்காநல்லூர் காளியம்மன், முனியாண்டி கோவில் திருவிழாவில் நடக்கும் ஜல்லிக்கட்டு, உலக பிரசித்தி பெற்றது. அவனியாபுரம், பாலமேடை தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதி ஜல்லிக்கட்டு என்பதால், அலங்காநல்லூரில் கூட்டம் அலைமோதியது.
போட்டிக்கு, 464 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில், 17 காளைகள் நீக்கம் செய்யப்பட்டன. 559 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ததில், போதை பொருள் பயன்படுத்திய ஐந்து பேர், நீக்கப்பட்டனர். சிலர் வராததால், 493 பேர் களத்திற்கு வந்தனர். காலை 9.15 மணிக்கு, சுவாமி மாடுகளுக்கு பூஜை செய்த பின், மாடுபிடி வீரர்கள், களத்திற்கு அழைக்கப்பட்டனர். அனைவரும் வெள்ளை நிற, "டி ஷர்ட்' அணிந்திருந்தனர்.
மாடுகள் முட்டியதில், 36 வீரர்கள் காயம் அடைந்தனர். நான்கு பேர், படுகாயங்களுடன் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மதியம், 3.50 மணிக்கு, ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.
வீடியோ தொகுப்பு - 1
வீடியோ தொகுப்பு - 2
வீடியோ தொகுப்பு - 3
thanks: Dmax, dinamalar
தொடர்புடைய இடுகை:
10 கருத்துரைகள்:
பல சல சலப்புக்கு நடுவே வெற்றியோடு முடிந்தது வீர விழா.. கிரிகெட்ல என்ன சுவாரசியம் இருக்கு, நேத்து நடந்த காளை விரட்டு நொடிக்கு நொடி விறு விறுப்பு என்று தான் சொல்ல வேணும், அதே நேரத்தில் காயம் அடைந்த வீரர்களுக்கு நடைபெற்ற தூரித சிகிச்சைக்காண ஏற்பாடும், திரு,சகாயம் அவர்களின் பங்கும் பாரட்டுக்குரியது சகோ...
@ரேவா
உண்மைதான் ரேவா...
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை விட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக இருந்தது. காளைகள் நன்றாக பாய்ந்து வீரர்களுக்கு போக்கு காட்டியது...
கலக்டர் திரு. சகாயம் பங்கும் சிறப்பானது....
நான் மாட்டை அடக்குற காட்சிய காணுமே....
@! சிவகுமார் !
ஹா ஹா இது வேறயா?....
@! சிவகுமார் !
நான் மாட்டை அடக்குற காட்சிய காணுமே..//
ஏம்ப்பா சிவா, முதல் காளையை பார்த்துட்டு களத்தை விட்டு மொத ஆளா ஓடினது மறந்து போச்சா?
வணக்கம் நண்பா,
நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
எமது கலாச்சார விழாக்களுள் ஒன்றான காளையை அடக்கும் நிகழ்வினை வீடியோ தொகுப்பாக பகிர்ந்திருப்பதற்கு நன்றி.
நலமா அண்ணா .நேற்று தொலைக்காட்சியில் நேரலையில் ஜல்லிக்கட்டு பார்த்தேன் ...பிரமிப்பு !
திரும்ப திரும்ப இதே போல போடுரே நீ..ஹிஹி!
பிரகாஷ் நீங்க எதுல இருக்கீங்க....?
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Desktop Showrooms in Chennai
Printer prices in chennai
Buy Tablets online chennai
Laptop stores in chennai
Projectors price in Chennai
Buy pendrive online India
External hard disk price in Chennai
Laptop accessories online chennai
Best laptops in Chennai
Tablet showroom in Chennai
Inverters dealers in Chennai
Server dealers in Chennai