அந்த ஊர் ரொம்ப பேமசான ஓரளவு பெரிய ஊர். சுத்துபதினெட்டு ஊர் மக்களும் அந்த ஊருக்கு தான் எந்த சாமான்கள் வாங்கனும்னாலும் வந்து போவாங்க. அந்த ஊரோட பஜார்ல கிடைக்காத பொருளே இல்லை. அந்த பஜார்ல விதவிதமான கடைகள் விதவிதமான பொருட்கள் இருக்கும். அதனால ஊர் மக்கள் எல்லோரும் அவங்களுக்குன்னு பரிச்சியமான கடைகளை பழகி வச்சிருந்தாங்க.
அதே போல பஜார் கடைகளும் மக்களை கவர போட்டி போட்டுட்டு விளம்பரங்கள், இலவச இணைப்புகள், கவர்ச்சித் திட்டங்கள் என பல யுத்திகளை செய்துட்டு வந்தாங்க. மளிகை சாமான்களுக்கு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், துணிமணி வகைகளுக்கு என மக்கள் தகுதிக்கு ஏற்ப பெரிய கடையில் இருந்து சின்ன கடைகள் வரை அந்த பஜாரில் பரவலா இருந்துச்சு. நிறைய கடைகள் இருந்தாலும் சில கடைகளே மக்களுக்கு பேவரிட்டாக இருந்து வந்துச்சு. மேல்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் என எல்லா வகையான மக்களும் அந்த பஜார் கடையையே நம்பி இருந்தாங்க.
இப்படி இருக்கறப்ப ஒரு கடையில திடீர்னு அதன் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைய ஆரம்பிச்சுச்சு. அந்த கூட்டம் எல்லாம் வேற வேற கடைகளுக்கு போக ஆரம்பிச்சாங்க. அந்தக் கடையோட கூட்டம் குறைய என்ன காரணம்னு விசாரிச்சப்ப கலப்பட பொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமில்லாம கவர்ச்சியான திட்டங்களில் சேர்ந்த மக்களை கொஞ்சம் கொஞ்சமா ஏமாற்றியதா தெரிய வந்திச்சு. இப்படி இருந்தாலும் அந்த கடைக்காரன் கொஞ்சம் முதலீடெல்லாம் போட்டு என்னென்னவோ திட்டமெல்லாம் போட்டு பார்த்தான். ம்ஹும்... கூட்டம் மறுபடியும் வந்த பாடில்லை. அப்படியே கூட்டம் வந்தாலும் சும்மா சுத்தி பாத்துட்டு போனாங்களே தவிர பொருட்களை வாங்க யாருமே முன்வரல.
கடைக்காரன் தலையில அடிச்சுக்கிட்டான். ச்சே..ச்சே... எப்படி பொருட்கள் இருந்தாலும் வர்ற கூட்டம் கண்டிப்பா வரும்னு கொஞ்சம் கலப்படமும், போலி பொருட்களையும் உள்ள விட்டா அது நமக்கே ஆப்பாயிருச்சே, என அவனோட வீட்டுல, நண்பர்கள் கிட்ட புலம்ப ஆரம்பிச்சுட்டான் அந்த ஜால்ரா நண்பர்கள் கூட்டமும் கலப்பட, போலிகளை உலாவ விட்டாச்சு. அது தீரும் வரைக்கும் நாம சரக்கை மாத்த முடியாது. அதுக்காக போட்ட காசெல்லாம் வீணா போயிரும்னு அந்த கடைக்காரனை மேலும் குழப்பினார்கள். இருந்தாலும் அந்த கடைக்காரன் என்ன முடிவெடுக்கரதுன்னே தெரியாம முழிக்க, ஒருவழியா அவனே சமாளிச்சு மறுபடியும் புது சரக்கெல்லாம் வாங்கி புதுப்புது விளம்பரம் செய்ய ஆரம்பிச்சான்.
ஆனா அதுக்குள்ளே அவனோட பழைய மக்கள் கூட்டமெல்லாம் வேற வேற கடைகளுக்கு வாடிக்கையாளரா மாறியிருந்தாங்க. என்ன செய்ய? கூட்டத்தை நம்பி மக்களை ஏமாற்ற நெனச்ச அவனுக்கு மக்கள் சரியான ஆப்பு வச்சுட்டாங்க. மிச்ச சொச்ச கூட்டமும் படிப்படியா குறையாமலா போகும்? ஆக, மக்களே மக்களை ஏமாற்ற நெனச்சவன் ஏமாந்து போவான் என்பதை இக்கருத்துகள் உணர்த்துகிறது.
26 கருத்துரைகள்:
வணக்கம் பிரகாஷ்!அருமையான ஒரு நீதிக் கதையை காலையில் தந்திருக்கிறீர்கள்.நன்றியும் வாழ்த்துக்களும்!
கலப்படம் செய்தவனை ஆபீசரிடம் ஏன் காட்டிகொடுக்கவில்லை என்பதை கேட்டு விட்டு இதை வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி....!!!
அருமையான நீதி கதை மக்கா வாழ்த்துக்கள்...!!!
அருமை...
[im]http://lenagold.ru/fon/clipart/s/smil/smail84.jpg[/im]
அந்த வியாபாரி இப்படி ஆனார் ஹிஹி
புரிந்தது...
:)))))))))))))))
"மக்களை ஏமாற்ற நெனச்சவன் ஏமாந்து போவான்" என்பதை தாங்கி வந்திருக்கிற ஒரு நீதிக் கதையை கொடுத்திருக்கிறீர்கள்..பகிர்வுக்கு நன்றி..
கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா நெஜத்துல நம்மூர்ல இப்படி நடக்க இன்னும் நாளாகும் போல....!
யோவ் மாப்ள இது யாருக்கு ஹிஹி!
விக்கியுலகம் said...
யோவ் மாப்ள இது யாருக்கு ஹிஹி!//
ஹா ஹா ஹ ஹா கொய்யால உனக்கும் இது யாருக்குன்னு புருஞ்சுருச்சா இனி வெளங்கிரும் ஹி ஹி...
// MANO நாஞ்சில் மனோ said...
கலப்படம் செய்தவனை ஆபீசரிடம் ஏன் காட்டிகொடுக்கவில்லை என்பதை கேட்டு விட்டு இதை வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி....!!!//
இதோ புறப்பட்டு விட்டேன். எடுங்க மனோ அந்த அருவாளை.
நான்கூட ஏதோ நீதிக்கதை. மக்களுக்கே விழிப்பணர்வுவந்தால்தான் கலப்பட வியாபாரிகள் திருந்துவார்கள்னு கமெண்ட் போடலாமனு நினைச்சேன்.
கடைசியில மனோசார், விக்கிசார் கமெண்ட்ட பார்த்தால்????
@Yoga.S.FR
வணக்கம் பிரகாஷ்!அருமையான ஒரு நீதிக் கதையை காலையில் தந்திருக்கிறீர்கள்.நன்றியும் வாழ்த்துக்களும்!///
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
@MANO நாஞ்சில் மனோ
கலப்படம் செய்தவனை ஆபீசரிடம் ஏன் காட்டிகொடுக்கவில்லை என்பதை கேட்டு விட்டு இதை வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி....!!!//
ஆபீசரிடம் சொல்லி விட்டேன் மக்கா
@veedu
அந்த வியாபாரி இப்படி ஆனார் ஹிஹி///
நல்லவேளை மக்கள் அப்படி ஆகாம இருந்தாங்களே...
@NAAI-NAKKS
புரிந்தது...////
இப்படி ஒத்த வார்த்தையில் கமென்ட் போட்டா என்னான்னு புரிஞ்சுக்க? :)))))
@மதுமதி
"மக்களை ஏமாற்ற நெனச்சவன் ஏமாந்து போவான்" என்பதை தாங்கி வந்திருக்கிற ஒரு நீதிக் கதையை கொடுத்திருக்கிறீர்கள்..பகிர்வுக்கு நன்றி..//
ஆம்.. தோழா! வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
@பன்னிக்குட்டி ராம்சாமி
கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா நெஜத்துல நம்மூர்ல இப்படி நடக்க இன்னும் நாளாகும் போல....!///
இப்போ மக்கள் ரொம்ப தெளிவு அண்ணே...
@விக்கியுலகம்
யோவ் மாப்ள இது யாருக்கு ஹிஹி!///
கலப்பட கடைக்காரருக்கு....
@MANO நாஞ்சில் மனோ
விக்கியுலகம் said...
யோவ் மாப்ள இது யாருக்கு ஹிஹி!//
ஹா ஹா ஹ ஹா கொய்யால உனக்கும் இது யாருக்குன்னு புருஞ்சுருச்சா இனி வெளங்கிரும் ஹி ஹி..///
மக்களும் புரிஞ்சுக்கிட்டாங்க...
@FOOD NELLAI
// MANO நாஞ்சில் மனோ said...
கலப்படம் செய்தவனை ஆபீசரிடம் ஏன் காட்டிகொடுக்கவில்லை என்பதை கேட்டு விட்டு இதை வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி....!!!//
இதோ புறப்பட்டு விட்டேன். எடுங்க மனோ அந்த அருவாளை.///
ஆபீசர் கேட்கறாரு... கொஞ்ச நாளுக்கு அருவாள கொடுத்திடுங்க...
@கடம்பவன குயில்
நான்கூட ஏதோ நீதிக்கதை. மக்களுக்கே விழிப்பணர்வுவந்தால்தான் கலப்பட வியாபாரிகள் திருந்துவார்கள்னு கமெண்ட் போடலாமனு நினைச்சேன்.
கடைசியில மனோசார், விக்கிசார் கமெண்ட்ட பார்த்தால்????///
பார்த்தால்?????///
கதை கேட்டாச்சு . தூங்கலாமா??
அருமை.
வாழ்த்துகள் பிரகாஷ்.
நல்லா இருக்கு நண்பரே ! நன்றி !
நல்ல நீதிக்கதை.